இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
ஞாயிறு, ஜனவரி 30, 2011
சனி, ஜனவரி 29, 2011
கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் - புறக்கணிப்பு.
1980களில் பிடித்த கிரிக்கெட் பைத்தியம் குறைந்தாலும் டெண்டூல்கரின் மாயம் இன்றைக்கும் ஈர்க்கிறது. ஆனாலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிக்கிறேன்.
http://allinall2010.blogspot.com/2011/01/blog-post_29.html

குறிச்சொற்கள்
#tnfisherman,
இந்தியா,
ஈழம்
வெள்ளி, ஜனவரி 28, 2011
தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு
http://www.savetnfishermen.org/
அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாகப் போயிருக்கின்றன.
இந்திய மத்திய அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1. தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீனவர்களின் கடலில் மீன்பிடிக்கும் உரிமை நாட்டு எல்லைகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.
2. இந்திய கடற்படை மூலமாக, பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
3. கச்சத் தீவை இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசில் வற்புறுத்தி, தமிழர் நலன்களை பாதுகாக்கும்படி இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்

அரசியல்,
இந்தியா,
தமிழ்,
தமிழ்நாடு
To : Dr. Manmohan Singh - Prime Minister of India
http://www.savetnfishermen.org/
Dear Prime Minister,
More than 500 Tamil Nadu fishermen were killed by Sri Lankan navy in the past 20 years. Attack on the fishermen by Sri Lankan navy is a frequent occurrence.
Your government fails to take any action to stop these attacks and killings.
We request you to
a. Warn SriLankan government to stop attacking Indian fishermen. In our opinion, fishermen have right to fish in sea regardless of international boundaries.
b. Ensure adequate patrolling of Palk Straits by Indian Navy to provide protection to Tamil Nadu fishermen.
c. Take steps to get back Katchatheevu from Sri Lanka which is an important landing point for Tamil Nadu fishermen in their day to day fishing activities.
Tamil Nadu and tamils are also part of India. Your policies towards SriLanka blatantly disregard Tamil sentiments. We request you to correct your policies taking Tamil sentiments and welfare into account.
Best regards,
Ma Sivakumar
குறிச்சொற்கள்
#tnfisherman,
அரசியல்,
இந்தியா,
தமிழ்,
தமிழ்நாடு
செவ்வாய், ஜனவரி 18, 2011
ஜெயமோகனின் இடம்
'இவங்க எல்லாம் ஒரு வித்தையைக் கைகொண்டிருக்காங்க அவ்வளவுதான். நன்றாக எழுதுவது என்பது நன்றாக களைக்கூத்தாடுவது போன்றது. பொறுமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் உள்ள யாருக்கும் கைவந்து விடும். '
'அந்த வித்தையை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவர் பிரபல எழுத்தாளர் என்பதாலேயே அவரை பெரிய சிந்தனையாளராகப் போற்ற வேண்டியதில்லை'
நண்பர் கல்வெட்டு எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து இது.
சுஜாதா எனக்கும் மானசீகக் கடவுள். சுஜாதா எழுதிய எதையும் படித்து விடுவேன். படிப்பவர்களுக்கு மனமகிழ்வைத் தந்தவர் என்ற முறையில் அவர் ஒரு great entertainer.
சுஜாதா அரசியல், தத்துவ விஷயங்களில் தனது ஆளுமையைப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்றவற்றில் கலைத் துறை பற்றிய தனது கருத்துக்களை மட்டும் சொல்லியிருந்தார். அதைப் படிக்கும் போது 'அது ஒரு தனி மனிதரின் கருத்து, ஆராய்ந்து வெளிப்படும் தத்துவ வெளிப்பாடு இல்லை' என்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

எழுத்து வித்தையைக் கைப்படுத்திக் கொண்ட ஒரு எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்துத் திறமையால் பல நூறு பக்கங்களுக்கான கதைகளை எழுதியிருக்கிறார். இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பல ஆயிரக்கணக்கான வாசகர்களையும் பெற்றிருக்கிறார்.
நான் அவரது நூல்கள் எதையும் வாங்கியதில்லை.

1. இணையத்தில் அவர் வெளியிட்ட கதைகளில் முதல் இரண்டை ஓசியில் படித்திருக்கிறேன். மத்தகம் , ஊமைச் செந்நாய் இரண்டையும் முழுமையாக, ஒரே மூச்சில் படித்து முடித்து விடும் என் வழக்கப்படி படித்தேன்.
அவை தந்த அனுபவங்கள் என்னால் தாங்க முடியாதபடி இருந்தன. அதற்குப் பிறகு இணையத்தில் வெளியான கதைகளையோ புத்தகமாக வாங்கியோ அவரது கதைகளைப் படிக்க மனம் செல்லவில்லை. (இன்னும் வயதாகி பக்குவப்பட்ட பிறகு படிக்க முடியலாம்).
2. நான் மிகவும் ரசிப்பது அவர் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகள். வழி, அச்சுப்பிழை, வாடிக்கையாளர்கள், குஷ்பு குளித்த குளம், யாப்பு, அமிர்தாஞ்சன் கீரை மிக்சர் இன்னும் பல.
3. அவரது அரசியல் கருத்துக்கள், சமூக சிந்தனைகள், பல்வேறு மனிதர்கள் பற்றிய அவரது மதிப்பீடுகள் எல்லாம் ஜெயமோகன் என்ற தனிமனிதரின் கருத்து மட்டுமே. ஆயிரக்கணக்கான பதிவர்கள், பஸ்ஸர்கள், டுவீட்டர்கள் போன்று இன்னொரு மனிதரின் கருத்து என்று மட்டும் அதைக் கருத்தில் எடுத்துக் கொள்கிறேன்.
அவர் வெளிப்படையாக எழுதியிருக்கும் அவரது வாழ்க்கைப் பின்னணியையும், போராட்டங்களையும், பயணங்களையும், நெறிகளையும் வைத்துப் பார்க்கும் போது அவரது கருத்துக்களுக்கு மிகக் குறைந்த மதிப்பே கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் பெரிதும் மதிக்கும் கொள்கையாளர்கள் பாலபாரதி, ஸ்ரீராமதாஸ். அவர்கள் எழுதும்/சொல்லும் கருத்துக்கு 100 மதிப்பெண்கள் கொடுத்து உள்வாங்கிக் கொள்கிறேன், ஜெயமோகனின் கருத்துக்களுக்கு 5 மதிப்பெண்கள் கொடுத்துக் கொள்கிறேன்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)