புதன், டிசம்பர் 23, 2009

அவ்வையாரின் மூதுரை

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்' என்ற வரி நினைவுக்கு வந்தது. முழுப்பாடலையும் இணையத்தில் தேடிய போது கிடைத்தது
http://kuralamutham.blogspot.com/2009/08/80.html

பள்ளியில் படித்ததில் கருத்து மட்டும் நினைவிலிருந்திருக்கிறது. கருத்தைச் சொல்ல வந்த புலவர் அதற்கு உவமானமாக சொன்னவை மனதைச் சிலிர்க்க வைக்கின்றன.

'நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்கிறது' என்று திகட்டும் அளவிலான சிறப்பையும்
'முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்' என்று முகத்தில் அறையும் ஏளனமும், அம்மம்மா!

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணவில்லை!

10 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\கற்றாரைக் கற்றாரே காமுறுவர் \\

அவ்வைத்தாயின் கருத்துகளை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

மா சிவகுமார் சொன்னது…

நிகழ்காலத்தில்,
வணக்கம்.
அவ்வைத்தாயின் கருத்துக்களை குழந்தைகளாக படித்த நாம் கொடுத்து வைத்தவர்கள்.

அன்புடன்
மா சிவகுமார்

Vassan சொன்னது…

சிவகுமார்

தமிழறிவு பற்றாகுறை அளவு கிடந்த நிலையில் எனக்கு செய்யுளின் முழு பொருள் புரியவில்லை; பொழிப்புரை கொடுத்து ஐயம் தெளியுங்கள்.

நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வாசன்,

அன்னப் பறவைகள், தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் குளத்தில்தான் வசிக்க விரும்பும். அதைப் போல, கற்று தேர்ந்த பெரியவர்கள் தம்மைப் போன்ற பெரியவர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவார்கள்.

இழிந்ததையே நாடும் காக்கைகள், சுடுகாட்டில் பிணங்களைக் கொத்திக் கொண்டிருப்பதைப் போல சோம்பித் திரியும் இழிகுணத்தினர், தம்மைப் போன்ற இழிகுணத்தினரையே நட்பாக சேர்ந்திருப்பார்கள்.

அன்புடன் - மா சிவகுமார்

மாதேவி சொன்னது…

படிக்கும் போது விரும்பிப் படித்தது ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் மாதவி,

இந்த ஆரம்பக் கல்வி செய்யுள்கள் குறைவாகவே பரவியிருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் என்ன நிலைமை என்று நினைத்துப் பார்த்தால் கவலையாகத்தான் இருக்கிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

Vassan சொன்னது…

நன்றி சிவகுமார்.

Vassan சொன்னது…

நன்றி சிவகுமார்.

பெயரில்லா சொன்னது…

Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.

நாள் போகப் போக தரம் அதிகமாகியிருக்கிறது என்று நீங்கள் கருதுவதற்கு மிக்க நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்