வியாழன், டிசம்பர் 06, 2007

நரேந்திர மோடி என்ற கிரிமினல்

Addressing an election meeting at Mangrol in South Gujarat yesterday, Modi questioned the crowd as to what should have been done to a man who dealt with illegal arms and ammunition, to which it shouted back "kill him".

குஜராத்தின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், திறமையான நிர்வாகம் என்ற பசுத் தோல்களைப் போர்த்திக் கொண்டு வந்த ஓநாயின் காதுகள் வெளியே தெரிகின்றன.

சமூக சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் கூட்ட நீதி (mob justice) கலாச்சாரத்தில் கொடுமைகள் நிகழ்த்தும் மோடியின் கொட்டம் அடங்க வேண்டும்.

மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட்டு சாகும் வரை சிறைச்சாலையில் வாட அல்லது நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் மோடி போன்ற அரசியல்வாதிகள்.

74 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட்டு சாகும் வரை சிறைச்சாலையில் வாட அல்லது நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் மோடி போன்ற அரசியல்வாதிகள்.//

இதை நான் வெறித்தனமாக வழிமொழிகிறேன்.

பெயரில்லா சொன்னது…

புனித பிம்பத்திற்கு நல்ல உதராணமாகும் பதிவு...

கோவி.கண்ணன் சொன்னது…

அந்த கேடிக்கு நம்ம ஊர் இல.கனேசன் ஐயா 'பிரச்சாரம்' பண்ணப் போறாராம், அதற்கு பதிலாக...


எரிச்சலாகத்தான் வருது.

முரளிகண்ணன் சொன்னது…

it is a shame for us to live in a country where modi like persons are still CM.

வஜ்ரா சொன்னது…

வயித்தெரிச்சலுக்குச் சிறந்த மருந்து எது ?


அ. ஜெலூசில்
ஆ. ஈனோ
இ. புதீன் ஹரா
ஈ. டைஜீன்
உ. தற்கொலை

பெயரில்லா சொன்னது…

முதலில் தன் நாட்டு மக்களைக் கொன்ற மனித குல விரோதிகளைக் கிரிமினல் என்றுச் சொல்லிப் பதிவு போடவும்.


பதிவுகளின் தலைப்புகள் இவ்வாராக இருக்கலாம்.


ஸ்டாலின் என்ற கிரிமினல்
போல் போட் என்ற மனித விரோதி
லெனின் என்ற கோலைவெறியன்


இவர்களெல்லாம், தன்னை விமர்சனம் செய்யும் செய்தித் தாள்களை அடித்துத் துரத்தினர். இதுவரை கண்டிராத அளவு விமர்சனத்தைப் பெரும் தலைவர் மோடி. அவர் எந்தச் மீடியா மக்களையும் விரட்டியடிக்கவில்லை.

க்மோடியின் மேல் வைக்கப்படாத விமர்சனம் இல்லை.




மோடி கிரிமினல் என்றால் அவரைத் தூக்கில் போடவும்.

பிறைநதிபுரத்தான் சொன்னது…

மோடியின் வெறித்தனமான பேச்சில் இருக்கும் விஷத்தைவிட - அவரின் ஒவ்வொரு பேச்சையும் கேட்டு - கூடியிருக்கும் கும்பல் ஆரவரத்தோடு போடும் 'பாரத் மாதா கீ ஜே' என்று விண்ணதிர போடும் கோஷம் இர்ருக்கிறதே அது மோடியின் பேச்சை விட மிகமிக மோசம் - கேவலம்.

பெயரில்லா சொன்னது…

உடனடியாக, "மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்" என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படவில்லை எனில் பயங்கரவாதி மோடியை என்ன செய்ய வேண்டும்?

அ. கண்டந்துண்டமாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக வீசி எறியப்பட வேண்டும்.

ஆ. அக்கிரமம் இழைக்கப்பட்ட மக்கள் முன்னிலையில் இழிவுபடுத்தப்பட்டு, மொட்டையடித்துத் தலையில் "மனித குல விரோதி" என எழுதி ஊர்வலமாகக் கொண்டு போய் ஊர் எல்லையில் வைத்து "பிஞ்சு குழந்தையை வயிற்றிலிருந்து வெட்டி எடுத்து எரித்துக் கொல்வது எவ்வளவு கொடியது" என்பதை உணர்த்தும் விதத்தில் உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் தீயில் சுட்டு இறுதியில் அரிவாளால் தலையை சீவி எறிய வேண்டும்.

3. போனால் போகட்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் முன்னிலையில் தூக்கிக் கொல்ல வேண்டும்.

வஜ்ராவுக்கு எது சரி எனப்படுகிறது?

இறை நேசன்.

வஜ்ரா சொன்னது…

//
it is a shame for us to live in a country where modi like persons are still CM.
//

Feel free to leave to which ever country you like to. My humble suggestion is North korea or better even Saudi arabia.

பெயரில்லா சொன்னது…

//
உடனடியாக, "மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்" என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படவில்லை எனில் பயங்கரவாதி மோடியை என்ன செய்ய வேண்டும்?
//

பயங்கரவாதத்தையே மதம் என போதிக்கும் மனித குலவிரோதிகள் எல்லாம் இங்கே என்ன செய்கிறார்கள் ?

பெயரில்லா சொன்னது…

//

"நரேந்திர மோடி என்ற கிரிமினல்"

//

நீ என்ன கோர்ட்டா ?


ஜட்ஜ்மெண்ட் பாஸ் பண்ற...ஆறிவாளி. அவ்வளவு கோபம் இருந்தா கேஸ் போட்டு அவன உள்ள தள்ளிரு பார்போம்.


உன் பப்பு எல்லாம் கோர்ட்டுல வேகாது. அது தெரிஞ்சதுனாலத்தான் இந்த மாதிரி உன் வயிற்றுப் போக்கை வலைப்பதிவு செய்யுற...?


உன்ன மாதிரி இந்தியால ஒரு லாரிக்கூட்டம் கூட இல்ல. நீங்க செய்யுற அலும்பு தாங்க முடியல டா சாமி.

வஜ்ரா சொன்னது…

//

இதை நான் வெறித்தனமாக வழிமொழிகிறேன்.

//


வெறியர்கள் யார் ?

koothanalluran சொன்னது…

மோடியை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. பார்த்துக்கொண்டிருங்கள் மீண்டும் அவர் ஜெயித்து வரப்போகிறார். கடவுளாக தண்டனை கொடுத்தால்தான் உண்டு

வஜ்ரா சொன்னது…

//
கடவுளாக தண்டனை கொடுத்தால்தான் உண்டு
//

கடவுள் இல்லாத கம்யூனிஸ்டுகளுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை ஏற்படச் செய்த அன்னல் மோடி வாழ்க. :D

பெயரில்லா சொன்னது…

//Feel free to leave to which ever country you like to. My humble suggestion is North korea or better even Saudi arabia.//

முதலில் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த கும்பல்களை விரட்டிவிட்டு அப்புறம்தானே மற்றவர்கள் அதைப் பற்றி யோசிக்கவேண்டும்..

மா சிவகுமார் சொன்னது…

கருத்துக்களைச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

கூடுதலாக நான் சேர்க்க விரும்புவது,

"சட்டப்படி ஆட்சி" என்று உருவான நாடான இந்தியாவில், கூட்டத்தினரின் வெறியைத் தூண்டி விட்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயலும் யாருமே குற்றவாளிகள். இந்துத்துவா இயக்கத்தினர் கையில் எடுத்துள்ள இந்த முறை நாடு உருவான அடிப்படையையே அழித்து விடும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

மோடியின் ஒரு பக்கம் தவறாகத் தெரிந்தாலும், இன்னொரு பக்கம் ஒரு இந்திய தேசபக்தனாக தெரிகிறது. முஸ்லீம்களின் ஊடுருவலைத் தடுக்க மோடியின் பணி அவசியம். 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய எல்லையில் மோடிகள் ஆட்சியில் இருந்திருந்தால் பாகிஸ்த்தான்/ வங்காளதேசம் உருவாக வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இன்றும் ஆக்கிரமிப்பு வெறியில் இருக்கும் பாகிஸ்த்தான் வெறியர்களைக்காட்டிலும் மோடி மோசமான ஒருவராகப்படவில்லை.
இன்று மோடிகள் தூங்கினால், நாளை இந்திய அரபுக் குடியரசில்தான் வாழவேண்டியிருக்கும்.

வஜ்ரா சொன்னது…

//
இன்று மோடிகள் தூங்கினால், நாளை இந்திய அரபுக் குடியரசில்தான் வாழவேண்டியிருக்கும்.
//

அரபுகளுக்கு குடியரசு/மக்களாட்சி/ஜனநாயகம் அரசியலில் நம்பிக்கையில்லை.


அவர்கள் நம்பிக்கையெல்லாம் மன்னர் தலமையில் ஷரியத் சட்டப்படி நடக்கும் ஆட்சி. அதன் பெயர் கலீஃபா.

பெயரில்லா சொன்னது…

//

முதலில் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த கும்பல்களை விரட்டிவிட்டு அப்புறம்தானே மற்றவர்கள் அதைப் பற்றி யோசிக்கவேண்டும்..

//


ரொம்ப ரொம்பச் சரி.


கைபர் பொலான் கணவாய் வழியாக வராவிட்டாலும் அதன் வழியே வந்ததாகக் கூறிக் கொண்டு குல்லா போட்ட முல்லாக்கள் முதலில் இந்தியாவை விட்டுத் துரத்தப்படவேண்டும்.


பின்னர் அவர்களை ஆட்டு மந்தைகள் போல் நம்பி செயல்படும் முஸ்லீம்கள் அதே கைபர் பொலான் கணவாய் வழியாக அரேபியாவிற்கு அனுப்பப் படவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

//

கூட்டத்தினரின் வெறியைத் தூண்டி விட்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயலும் யாருமே குற்றவாளிகள். இந்துத்துவா இயக்கத்தினர் கையில் எடுத்துள்ள இந்த முறை நாடு உருவான அடிப்படையையே அழித்து விடும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

//



கூட்டத்தின் வெறியில் குளிர் காயும் இஸுலாமிய அடிப்படைவாதியின் கு#$யை நக்கும் நீ யெல்லாம் நரேந்திர மோடியைப் பற்றி பேசலாம் என்ற உரிமையை இந்துத்துவம் பறிப்பதில்லை.


பொதுவாக இஸுலாமிய நாடுகளில் இஸுலாமிய அடிப்படை வாத அரசை எதிர்த்துப் பேசினால் நடக்கும் கதி என்ன என்பதை அறிந்தால் நரேந்திர மோடியெல்லாம் தெய்வமாகிவிடுவார் மா. சி யின் கண்களில்.

மா சிவகுமார் சொன்னது…

//மோடியின் ஒரு பக்கம் தவறாகத் தெரிந்தாலும், இன்னொரு பக்கம் ஒரு இந்திய தேசபக்தனாக தெரிகிறது.//

//இஸுலாமிய நாடுகளில் இஸுலாமிய அடிப்படை வாத அரசை எதிர்த்துப் பேசினால் நடக்கும் கதி என்ன என்பதை அறிந்தால் நரேந்திர மோடியெல்லாம் தெய்வமாகிவிடுவார//

குளிர் காய்வதற்காக வீட்டின் கூரைக்குத் தீ வைக்கும் முட்டாள்தனத்தை செய்து வருகிறார்கள் மோடி கூட்டத்தினர். இந்தியா என்ற நாட்டின் அடிப்படையையே தகர்த்து விடும் இவர்கள் தேச பக்தர்கள்!!!!

ஓகை சொன்னது…

//குஜராத்தின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், திறமையான நிர்வாகம் என்ற பசுத் தோல்களைப் போர்த்திக் கொண்டு வந்த ஓநாயின் காதுகள் வெளியே தெரிகின்றன.//

குஜரத்தின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களும், அங்கிருந்து வரும் மக்கள் கருத்தும், என் மாற்றுக்கட்சி நன்பர்களும் கூட சொல்லும் கருத்துகளும் முற்றிலும் பொய்யில்லை நண்பரே! பசுந்தோல்... உவமையின் உண்மையான பொருளை அறிந்துதான் சொல்கிறீர்களா?

//சமூக சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் கூட்ட நீதி (mob justice) கலாச்சாரத்தில் கொடுமைகள் நிகழ்த்தும் மோடியின் கொட்டம் அடங்க வேண்டும்.//

மோடியின் கொட்டம்?

//மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட்டு சாகும் வரை சிறைச்சாலையில் வாட அல்லது நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் மோடி போன்ற அரசியல்வாதிகள்.//

குற்றம் சாட்டுங்கள். நீதியின் முன் நிறுத்துங்கள். ஆனால் நீங்கள் தீர்ப்பையல்லவா சொல்கிறீர்கள்! அப்சல் வழக்கில் நீதி மன்றம் சொல்லிய தீர்ப்பு படாத பாடு படுகிறதே!

பெயரில்லா சொன்னது…

\\குற்றம் சாட்டுங்கள். நீதியின் முன் நிறுத்துங்கள். ஆனால் நீங்கள் தீர்ப்பையல்லவா சொல்கிறீர்கள்! அப்சல் வழக்கில் நீதி மன்றம் சொல்லிய தீர்ப்பு படாத பாடு படுகிறதே//

You dont have any rights to talk about Afsal. Soon he will be awarded with some Ratna for his service to India and people like Ma. Sivakumar are ready to accept it.

பெயரில்லா சொன்னது…

Exit polls predicted that modi will be back to power. I dont think people of Gujarath are fool/dumb enough to elect modi again. There must be some reason that people like in modi.

பெயரில்லா சொன்னது…

Ma. Sivakumar,

Did you write similar articles when Congress gundas killed Sikhs and Southen TN dhadha killed 3 innocents? Or, atleast did you show your anger when JJ's gundas burnt three poor girls alive?

I have never seen you writing anything against TN politicians but you always blame politicians in other states. It it because of you fear of anything (to your business/life) by these politicians?

If you want to project yourself as a neutral person, please be so and write about everything that is against human beings and humanity.

பெயரில்லா சொன்னது…

இலவசம் என்கின்ற பெயரில், மக்களை ஆட்டுமந்தைச் சோம்பேறிகளாக்கவில்லை மோடி. இப்படிச் செய்யமுயன்ற காங்கிரஸ்-சை குஜராத் மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள் / யடிப்பார்கள். அவர்கள் சூடு, சுரணை உள்ள முன்னேற்றச் சிந்தனையில் ஆழ்த்தியவர் மோடி.
மின் வெட்டு என்கிற பெயரில் ஊரை இருளில் மூழ்கிக் சாகடிக்கவில்லை மோடி.
மணல் மேடுகளாகவும், சேற்றுக் கால்வாய்களையும் ரோடு என்ற பெயரில் தன் மாநிலத்தவருக்குத் தரவில்லை மோடி.
குல்லாப் போட்டு கஞ்சி குடிப்பது மட்டுமே சமூக சீர்திருத்தமென்றும், கோவிலுக்கு செல்பவன் கோமாளி என்றும் புகழ வில்லை மோடி.
அரிசி விலையைக் குறைத்து தன் கட்சிக்காரர்களின் பைகளை நிரப்பவில்லை மோடி.
தன் கடைக்கோடி பேரனையும் மத்திய மந்திரியாக்கி குடும்பத்தினை பெருக்கவில்லை மோடி.
13 மத்திய மந்திரிகள், 40 MPக்கள் என்று எல்லாவித பின்புலங்களைப் பெற்றிருந்தும், தன் மாநிலத்தை எல்லா விதங்களிலும் சீரழிப்பவர்களைப் போலல்லாமல், எல்லாவித எதிர்ப்புகளையும் மீறி குஜராத்தை முன்மாதிரி, முதல் மாநிலமாகவே மாற்றிக்காட்டியவர் மோடி.
தீவிரவாதிகளுக்கு புகழஞ்சலி செலுத்தி தன் துயரைத் தெரிவிக்காமல், தீவிரவாதி என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரையும் பேடிகாளாக்கி சுட்டுப் பொசுக்கியவர் மோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரவாதிகளால் குஜராத்தில் பலி என்பது கிடையாது. கோவையில் குண்டு வெடித்தவனின் கோவணத்தைத் துவைக்கும் ஆட்சி நடத்தவில்லை மோடி.
எதிர்கட்சிக்காரனையும், தன்னை எதிர்த்து நடக்கும் தன் கட்சிக்காரர்களையும் கூலிப்படை கொண்டும், வெடிகுண்டு கொண்டும் கொல்லவில்லை மோடி.
வற்றா ஜீவ நதிகளை வற்றவிட்டு, மணல் கொள்ளையில் சரித்திரம் படைத்து, எதிர்த்தவரை லாரி ஏற்றிக் கொன்று, சாராயத்தை வெள்ளமென ஓட விட்டு, குவாட்டரும் பிரியாணியுமே வாழ்க்கை என்று இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கவில்லை மோடி.

இப்படியெல்லாம் இல்லாத ஒரு நிம்மதியான ஆட்சி கொடுத்தால் மாசி போன்ற அறிவு ஜீவிகளுக்கும், குஞ்சுகளுக்கும் எப்படி பொறுக்கும்? தங்களுடைய மேதாவிலாசத்தை இப்படிப் பட்ட பதிவு போட்டு வெட்டவெளிச்சமாக்குவார்கள்.

பெயரில்லா சொன்னது…

முதலில் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த கும்பல்களை விரட்டிவிட்டு அப்புறம்தானே மற்றவர்கள் அதைப் பற்றி யோசிக்கவேண்டும்.......


Yes... we will do like....starts with who came last (so they didnot have big impact)
1.Christians (latest addition)
2.Muslims
3.Pappans (oldest addition)

பெயரில்லா சொன்னது…

குஜராத் மாநிலத்தில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களின் வாக்குக்கணிப்பு முடிவுகள் (எக்ஸிட்-போல்) தெரிவிக்கின்றன.......


So all you guys are clever enough...The people who vote for like in crores are fools!!!!!!!......


BIGGGGGGG JOKE you guys are craking......

பெயரில்லா சொன்னது…

//முதலில் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த கும்பல்களை விரட்டிவிட்டு அப்புறம்தானே மற்றவர்கள் அதைப் பற்றி யோசிக்கவேண்டும்.......


Yes... we will do like....starts with who came last (so they didnot have big impact)
1.Christians (latest addition)
2.Muslims
3.Pappans (oldest addition)...///

அட அட அடா...இதிலும் பார்ப்பார "மனு" நீதிதானா?...

முதலில் ஆடு மாடுடன் வந்தவன்தானே,
முதலில் ஓடவேண்டும்...:)

நரேந்திர மோடியைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். உலகில் ஒவ்வொரு காலகாட்டத்திலும் ஒரு கும்பலின் அழிவுக்கு அதே கும்பலில் ஒரு கொடியவன்தான் காரணமாயிருந்திருக்கிறான். ஹிட்லர், முசோலினி, ஜார் etc., etc.,

இப்போது கா(லி)விக் கும்பலுக்கு அந்த புண்ணியத்தை ஸ்ரீமான் மோடி செய்து கொடுத்திருக்கிறான்.

சீனு சொன்னது…

அனானி,

//இலவசம் என்கின்ற பெயரில், மக்களை ஆட்டுமந்தைச் சோம்பேறிகளாக்கவில்லை மோடி

.....................

இப்படியெல்லாம் இல்லாத ஒரு நிம்மதியான ஆட்சி கொடுத்தால் மாசி போன்ற அறிவு ஜீவிகளுக்கும், குஞ்சுகளுக்கும் எப்படி பொறுக்கும்? தங்களுடைய மேதாவிலாசத்தை இப்படிப் பட்ட பதிவு போட்டு வெட்டவெளிச்சமாக்குவார்கள்.//

நீங்கள் சொல்வதில் நானும் உடன்படுகிறேன். ஆனால், ஒரு விஷயம். இன்று குஜராத் முஸ்லீம்கள் பயத்துடனே வாழ்கிறார்கள். இது யாருக்கும் நல்லதற்கல்ல. அவர்கள் பயத்தை போக்கி அவர்களையும் இந்நாட்டின் குடிமக்கள் தான் என்பதை சொல்லவேண்டும். கோத்ரா நாயகருக்கு(?) இது புரியுமா?

பெயரில்லா சொன்னது…

//
நீங்கள் சொல்வதில் நானும் உடன்படுகிறேன். ஆனால், ஒரு விஷயம். இன்று குஜராத் முஸ்லீம்கள் பயத்துடனே வாழ்கிறார்கள். இது யாருக்கும் நல்லதற்கல்ல. அவர்கள் பயத்தை போக்கி அவர்களையும் இந்நாட்டின் குடிமக்கள் தான் என்பதை சொல்லவேண்டும். கோத்ரா நாயகருக்கு(?) இது புரியுமா?
//

அடிப்படை உண்மை 1

அடிப்படை உண்மை 2

பெயரில்லா சொன்னது…

//
நீங்கள் சொல்வதில் நானும் உடன்படுகிறேன். ஆனால், ஒரு விஷயம். இன்று குஜராத் முஸ்லீம்கள் பயத்துடனே வாழ்கிறார்கள். இது யாருக்கும் நல்லதற்கல்ல. அவர்கள் பயத்தை போக்கி அவர்களையும் இந்நாட்டின் குடிமக்கள் தான் என்பதை சொல்லவேண்டும். கோத்ரா நாயகருக்கு(?) இது புரியுமா?
//

  கஷ்மீரில் இந்துக்கள், பொவுத்தர்கள் வாழும் நிலை பற்றியும் இதே கருத்தினைச் சொல்லலாம்.


இசுலாமியர்கள் மற்றவர்களுக்குச் செய்வதை அவர்கள் குஜராத்திலாவது அனுபவிக்கட்டுமே!


நாடு முழுவதும் இதே போல் அவர்கள் பயத்தில் திம்மிகளாக வாழ்ந்தால் கூட ஒரு தப்பும் இல்லை. நாடு சுபிக்ஷமடையும்.

பெயரில்லா சொன்னது…

//
நரேந்திர மோடியைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். உலகில் ஒவ்வொரு காலகாட்டத்திலும் ஒரு கும்பலின் அழிவுக்கு அதே கும்பலில் ஒரு கொடியவன்தான் காரணமாயிருந்திருக்கிறான். ஹிட்லர், முசோலினி, ஜார் etc., etc.,

இப்போது கா(லி)விக் கும்பலுக்கு அந்த புண்ணியத்தை ஸ்ரீமான் மோடி செய்து கொடுத்திருக்கிறான்.
//

ஒசாமா பின் லாடன் தான் உங்கள் லிஸ்டில் முதலில் வர வேண்டும். அவனும் அவன் கூட்டமும் சீக்கிரம் அழிய வேண்டும் என்பது தான் நாரேந்திர மோடிக்களின் அவா.


ஹிட்லர் முசோலினி, ஜார் மன்னர்கள் எல்லாம் தங்களை எதிர்த்தவர்களை ஒடுக்கினார்கள் என்பது உண்மை. ஆனால் கடந்த சில மாதங்கள் செய்திகளில் நீங்கள் நரேந்திர மோடி என்று கூகிள் தேடல் மேற்கொண்டாலே தெரியும். அவரை திட்டாத பத்திரிக்கைகள் இல்லை, செய்திச் சேனல்கள் இல்லை. இந்தியாவிலேயே அதிகம் திட்டு வாங்கிய அரசியல் வாதி என்று கூட அவரைச் சொல்லலாம்.


காவிக்கும்பல் அழிந்தால் இந்தியா என்று ஒன்று இருக்காது, சில பல குட்டி பாகிஸ்தான்களும், வங்க தேசங்களுமே மிஞ்சியிருக்கும்.


அப்போது தமிழ் வலைப்பதிவுகளெல்லாம் தடை செய்யப் பட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். மா. சிவக்குமார் போன்றோரையெல்லாம் முஹம்மத் சித்திக் பாஷாக்களாக மாற்றியிருப்பார்கள்.

பெயரில்லா சொன்னது…

// what should have been done to a man who dealt with illegal arms and ammunition, to which it shouted back "kill him"//

பின்ன இம்மாதிரி நாய்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்யணுமா? என்ன எழவு லாஜிக் ஐயா இது?. என்னைக் கேட்டால் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பவனையும் அதை வாங்கி தீய செயல்களுக்கு உபயோகிப்பவனையும் அந்த ஆயுதத்தைக் கொண்டே குஞ்சில் சுடவேண்டும்.

மோடி என்ன தர்மசீலர்களைக் கொல்லவேண்டும் என்றா சொன்னார்.

அதுசரி மோடி கோடியெல்லாம் கிடக்கட்டும். Mr. Blogger, what do you think we should have been done to a man who dealt with illegal arms and ammunition??

தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு (அவர்களின் குஞ்சை) நசுக்க வேண்டும் -அப்போதுதான் குற்றம்புரிய அஞ்சுவார்கள். இதையெல்லாம் வழக்கு, நீதிமன்றம் என்று கையாண்டால் - ஆள்பர்களுக்குக் குஞ்சு இல்லை என்று அர்த்தம்.

பாராளுமன்றத் தாக்குதல்களில் பலியானவர்களின் குடும்பத்தினரின் கதறல் யாருக்காவது கேட்கிறதா? போனவாரம் நடந்த (எழவு) விழாவில் ஒரு விதவை பிரதமர் முன்பே - 'எங்களுக்குச் செய்வதாகச் சொன்ன எதையுமே இன்னும் செய்யவில்லை' என்று கதறித் தீர்த்தாரே - அது காதில் விழவில்லையா? பெட்ரோல் பங்க் நடத்த லைசென்ஸும் நிலமும் வழங்குவதாக உறுதியளித்து அதைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள்.

இதையெல்லாம் விட்டுவிட்டு 'சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தவனைக் கொல்' என்று சொன்னவரைக் குற்றவாளி என்று பதிவு போட்டு ஜல்லியடித்துக்கொண்டு..

ச்சீ!

பெயரில்லா சொன்னது…

//it is a shame for us to live in a country where modi like persons are still CM.//

come on, all of us shall apply for green card.

பெயரில்லா சொன்னது…

//ஒசாமா பின் லாடன் தான் உங்கள் லிஸ்டில் முதலில் வர வேண்டும//

//காவிக்கும்பல் அழிந்தால் இந்தியா என்று ஒன்று இருக்காது, சில பல குட்டி பாகிஸ்தான்களும், வங்க தேசங்களுமே மிஞ்சியிருக்கும். //

//Mr. Blogger, what do you think we should have been done to a man who dealt with illegal arms and ammunition??//

இந்தப்பதிவின் தலைப்பே "நரேந்திர மோடி என்ற கிரிமினல்" என்றுதான். அதனால் தான் நரேந்திர மோடி என்ற கிரிமினலைப் பற்றி பேசுகிறோம்.

இப்படி பூச்சாண்டி காட்டியே கணவாய் வழியாக வந்தவன் வக்கிரம் பிடித்த வர்ணாசிரமத்தையும், சாக்கடை தத்துவங்களையும் கொடுத்து மண்ணின் மைந்தனை அடிமைப்படித்தினான்.

இப்போது இன்னொரு பூச்சாண்டி. ஆனால் என்ன , இந்தப்பூச்சாண்டியெல்லாம் இப்போது வேலைக்காவாது.

வேதாந்தி எங்கோ வாய்திறந்தால் இங்கு காவிக்கும்பலுக்கு "பூசை" செய்யப்படுகிறது.

குஜாராத்தில் நரமாமிசம் சாப்பிட்ட இந்துதுவ வியாதிகள் வைத்துக்கொண்ட ஆயுதங்களுக்கு அண்டார்டிக்காவிடமா உரிமம் வாங்கினார்கள்?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஓகை,

//குஜரத்தின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களும், அங்கிருந்து வரும் மக்கள் கருத்தும், என் மாற்றுக்கட்சி நன்பர்களும் கூட சொல்லும் கருத்துகளும் முற்றிலும் பொய்யில்லை நண்பரே! பசுந்தோல்... உவமையின் உண்மையான பொருளை அறிந்துதான் சொல்கிறீர்களா?//

நன்கு அறிந்துதான் சொல்கிறேன் ஐயா! நாட்டின், சமூகத்தின் அடிப்படையையே தகர்த்து விட்டு பொருளாதாரம் முன்னேற்றம் என்று கதைத்து கண்காட்டு வித்தை செய்கிறார்கள் என்றே நம்புகிறேன்.

//குற்றம் சாட்டுங்கள். நீதியின் முன் நிறுத்துங்கள். ஆனால் நீங்கள் தீர்ப்பையல்லவா சொல்கிறீர்கள்! //

அரசியல் கூட்டத்தில், கூடியிருப்பவர்களின் வெறியைத் தூண்டி முழங்கும்படி செய்பவர் அடிப்படையிலேயே குற்றவாளிதான். சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர் மீது குற்றம் சாட்டி, நீதி மன்றத்தில் நிறுத்து தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் அமைப்பு. அதை விட்டு அடிப்போம் கொல்வோம் என்று கூட்டத்தைத் தூண்டி விடுவது சட்ட விரோதமானது.

//அப்சல் வழக்கில் நீதி மன்றம் சொல்லிய தீர்ப்பு படாத பாடு படுகிறதே!//

மோடி தூண்டிய படுகொலைகளுக்கு நீதிமன்றத்திலேயே நிறுத்தப்படவில்லையே!

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//Exit polls predicted that modi will be back to power. I dont think people of Gujarath are fool/dumb enough to elect modi again. There must be some reason that people like in modi.//

போன நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா வளர்ந்து விட்டது, ஒளிர்கிறது' என்று நடந்த பிரச்சாரம் நினைவுக்கு வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

வெறி, பய உணர்வுகளைத் தூண்டி விட்டு வாக்குகளை திரட்டும் இந்துத்துவா கூட்டத்தின் உத்திகளை அறிந்தவர்களுக்கு மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது வியப்பாக இருக்காது.

//Did you write similar articles when Congress gundas killed Sikhs and Southen TN dhadha killed 3 innocents? Or, atleast did you show your anger when JJ's gundas burnt three poor girls alive?//

சீக்கியர்கள்்க காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட போதும், JJ குண்டர்கள் மாணவிகளை உயிரோடு எரித்து கொன்ற போதும் நான் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்திருக்கவில்லை.

மு க அழகிரியின் குண்டர்கள் மூன்று பேரைக் கொன்றதும் கடுமையான கண்டனத்துக்குரியது.

மோடியின் விஷயத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியிருப்பதற்கு காரணம், அவர் செய்வதை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்வது. மோடி கும்பலின் குற்றங்களுக்குப் ஆழமான கொள்கை பின்புலம் இருக்கிறது. அதை எதிர்த்து நம்முடைய சின்னக் குரலைக் கூட எழுப்பா விட்டால், நாடே சுடுகாடாகி விடும் அபாயம் இருக்கிறது.

//It it because of you fear of anything (to your business/life) by these politicians?//

இல்லை. சோ ஒரு முறை சொன்னது போல, உயிர்க்கொல்லி நோய் இருக்கும் போது, தலை வலியையும் கால் வலியையும் கண்டு கொள்ளாமல் விடலாம். ஆனால் அவை வலி இல்லை என்று கிடையாது. கவனம் குறைவு அவ்வளவுதான்.

//இப்படியெல்லாம் இல்லாத ஒரு நிம்மதியான ஆட்சி கொடுத்தால் மாசி போன்ற அறிவு ஜீவிகளுக்கும், குஞ்சுகளுக்கும் எப்படி பொறுக்கும்? தங்களுடைய மேதாவிலாசத்தை இப்படிப் பட்ட பதிவு போட்டு வெட்டவெளிச்சமாக்குவார்கள்.//

குண்டர்களை ஏவி விட்டு ஒரு பிரிவு மக்களை குழந்தைகள், பெண்கள், முதியோர், அப்பாவிகள் என்று பார்க்காமல் கொன்று குவிக்க அனுமதித்த நிர்வாகத்தின் தலைவராக 2002ம் ஆண்டிலேயே சிறைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியவர் எப்படி முதலமைச்சராக அனுமதிக்கப்பட்டார்?

அப்போது நடந்ததுதான் சரி என்றும் இன்னும் அதே முறையில் ஆட்சி நடத்துவோம் என்று நிற்பவர்கள் அடிப்படையிலேயே தவறிழைப்பவர்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//குஜாராத்தில் நரமாமிசம் சாப்பிட்ட இந்துதுவ வியாதிகள் வைத்துக்கொண்ட ஆயுதங்களுக்கு அண்டார்டிக்காவிடமா உரிமம் வாங்கினார்கள்?
//

அவர்களையும் குஞ்சில் சுடுங்கள்!

குற்றம்புரிய அஞ்சும் வண்ணம் குற்றவாளிகளுக்குத் (விரைவில்) தண்டனை கொடுத்தால்தான் நாடு தப்பிக்கும். இல்லாவிட்டால் கேஸ்தானே போட்டா போட்டுக்கோ என்று சிரித்துக்கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சகலவசதிகளுடன் சிறைக்குச் சென்று சில நாளில் திரும்ப வெளியில் வந்து குற்றங்களைத் தொடருவார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். குற்றவாளிகளைத் தண்டிப்பதில் கடுமைகாட்டாதவரைக்கும் குற்றங்கள் தொடரும். கோர்ட் கேஸ் என்று தீவிரவாதத்தைக் கையாண்டால் நீதிமன்றத்தின் மீதே குண்டு போடுவார்கள்.

எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தைச் சாரக்கூடாது. சிலவற்றை இரும்புக்கரம் கொண்டுதான் அடக்கவேண்டும். அப்படி தீவிரமாகச் செயலாற்ற அசைந்துகொடுக்காத மனம்கொண்ட ஆட்சியாளர்கள் வேண்டும்.

மோடி வென்றால் ஓட்டுப்போட்டவர்கள் எல்லாரும் இந்துத்வ வெறியர்கள் என்று சொல்வீர்களா?

அவர் கிரிமினல் என்பதை நீதிமன்றம் நிரூபிக்கட்டும். மத்தியில் காங்கிரஸ்தானே ஐயா ஆள்கிறது? மோடியை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை நடத்தி உண்மையைக் கண்டுபிடித்து அவர் குற்றவாளி என்று நிரூபிக்கட்டுமே! அதுவரை அவர் குற்றம் சாட்டப்பட்டவரே - குற்றவாளியல்ல!

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகளல்ல. வெளியில் இருப்பவர்கள் அனைவரும் நிரபராதிகளல்ல.

உங்கள் வழியில் பார்த்தால் வீரப்பன் மீதும் வழக்கு நடத்தி அவன் இயற்கையாகச் செத்தபின்பு தீர்ப்பு வரும்வரைக் காத்திருக்கச் சொல்வீர்கள் போலிருக்கிறது.

அப்படியே எல்லையைக் காத்துநிற்கும் ராணுவவீரர்களிடமும் 'ஐயா, ஊடுருபவர்களைச் சுடாதீர்கள். அவர்கள் உங்களைச் சுட்டாலும் குண்டுபோட்டாலும் நீங்கள் செத்தாவது அவர்களை உயிருடன் பிடியுங்கள் - அவர்கள் மீது குற்றம் சாட்டி, நீதி மன்றத்தில் நிறுத்து தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் அமைப்பு.' என்று சொல்வீர்களா மா.சி.?

தேசவிரோதிகள், சட்டவிரோதிகள் உள்நாட்டவர்களாக இருந்தாலும் வெளிநாட்டவர்களாக இருந்தாலும் 'போட்டுத் தள்ளுவது'தான் சரியான செயல்.

Justic delayed is justice denied.

//இப்படி பூச்சாண்டி காட்டியே கணவாய் வழியாக வந்தவன் வக்கிரம் பிடித்த வர்ணாசிரமத்தையும், சாக்கடை தத்துவங்களையும் கொடுத்து மண்ணின் மைந்தனை அடிமைப்படித்தினான்.

இப்போது இன்னொரு பூச்சாண்டி. ஆனால் என்ன , இந்தப்பூச்சாண்டியெல்லாம் இப்போது வேலைக்காவாது.

வேதாந்தி எங்கோ வாய்திறந்தால் இங்கு காவிக்கும்பலுக்கு "பூசை" செய்யப்படுகிறது.
//

இப்படி சம்பந்தா சம்மந்தமில்லாமல் ஜல்லியடித்தே இன்னும் எத்தனை நாட்கள் ஓட்டுகிறீர்கள் என்று பார்ப்போமே!

மா சிவகுமார் சொன்னது…

//இன்று குஜராத் முஸ்லீம்கள் பயத்துடனே வாழ்கிறார்கள். இது யாருக்கும் நல்லதற்கல்ல.//

இந்திய நாட்டையே உருக்குலைத்து விடும் சூழல் அது. நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரும் கவலை கொள்ள வேண்டிய சூழல் அது.

//அவர்கள் பயத்தை போக்கி அவர்களையும் இந்நாட்டின் குடிமக்கள் தான் என்பதை சொல்லவேண்டும். கோத்ரா நாயகருக்கு(?) இது புரியுமா?//

அந்தப் பயத்தை உருவாக்கி அதுதான் குஜராத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை என்று பெருமை அடித்துக் கொள்பவர்கள் எதில் சேர்க்க!

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இசுலாமியர்கள் மற்றவர்களுக்குச் செய்வதை அவர்கள் குஜராத்திலாவது அனுபவிக்கட்டுமே!

நாடு முழுவதும் இதே போல் அவர்கள் பயத்தில் திம்மிகளாக வாழ்ந்தால் கூட ஒரு தப்பும் இல்லை. நாடு சுபிக்ஷமடையும்.//

You sire, is an anti-national, anti Indian. If you have the courage to own up your statement publish your identity, for everyone to know your true face.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//காவிக்கும்பல் அழிந்தால் இந்தியா என்று ஒன்று இருக்காது, சில பல குட்டி பாகிஸ்தான்களும், வங்க தேசங்களுமே மிஞ்சியிருக்கும்.//

காவிக் கும்பலே இல்லாமல்தான் இந்தியா என்ற தேசம் உருவானது. அதைப் பாதுகாக்க அந்தக் கும்பலின் கைவண்ணம் தேவையே இல்லை. தேங்க்ஸ்.

//அப்போது தமிழ் வலைப்பதிவுகளெல்லாம் தடை செய்யப் பட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம்.//

The irony of it!!!

//மா. சிவக்குமார் போன்றோரையெல்லாம் முஹம்மத் சித்திக் பாஷாக்களாக மாற்றியிருப்பார்கள்.//

காவிக் கும்பல்கள் தாம் நினைப்பதை சாதிக்க முனைந்து இந்து மதத்தை 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலக் கொண்டு போக முயன்றால், மா சிவகுமார் முகம்மத் சித்திக் பாஷாவாக இந்து மதத்தை ஒழுகுவதே சிறந்ததாக இருக்கும்.

//Mr. Blogger, what do you think we should have been done to a man who dealt with illegal arms and ammunition??//

(சட்ட விரோதமாக ஒரு வரலாற்றுச் சின்னத்தை இடிக்கத் தூண்டிய தலைவர்களை சுதந்திரமாக விட்டு வைத்திருப்பது போலில்லாமல்,)

கைது செய்து வழக்கு போட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கொடுக்க வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்

வெத்து வேட்டு சொன்னது…

Modi should become Indian Priminister then only these muslim/christian terroists can be controlled..
Long Live Modi..India's true Son..
Man with back bone and guts
Man who doesn't bend and smell muslim ass like MK

மா சிவகுமார் சொன்னது…

armstrong,

1. அயோத்தியில் வரலாற்றுச் சின்னத்தை இடித்துத் தகர்த்த கும்பலை வழி நடத்திய அத்வானி முதலான தலைவர்கள்

2. கோத்ரா தீ விபத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் அப்பாவிகளைக் கொன்று குவித்த கொடுங்கோலர்களை அடக்க முடியாமல் கை கட்டியிருந்த (திறமையான நிர்வாகி) மோடி

இவர்கள்தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள், கொலையாளிகள்.

அப்சல் குருவின் தண்டனை உரிய அரசியலமைப்பு வழியில் கையாளப்பட்டு வருகிறது. வேண்டுமென்றால் மோடிக்கும் தூக்குத் தண்டனை கிடைத்த பிறகு ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டு விட்டுக் காத்திருக்கச் செய்வோம்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//Modi should become Indian Priminister then only these muslim/christian terroists can be controlled..//

அந்தத் திருநாள் வரும் நாளில் எப்படிப்பட்ட நாட்டை அவர் ஆளுவார் என்று கற்பனை செய்து பார்க்கவும் அஞ்சுகிறேன் :-(

வெத்து வேட்டு சொன்னது…

M.Sivakumar: if you believe Kothra train fire was an accident then
All muslim terrorists will be angels and Modi like people will be demons in your view..so Sorry

பெயரில்லா சொன்னது…

மா.சி.

முன்பு சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏன் அத்வானி, மோடி ஆகியோரைக் கைது செய்யவில்லை? ஏன் வழக்கை விரைவாக நடத்தவில்லை?. திங்கட்கிழமை பந்த்திற்கு சனிக்கிழமை கோர்ட்டைத் திறந்து வழக்கு நடத்தி தீர்ப்பு சொல்லும் வீரமும் வேகமும் ஏன் இம்மாதிரி தேசிய அளவிலான பிரச்சினைகளில் காட்டப்படுவதில்லை.?

மோடியோ, கேடியோ, தாடியோ - நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை.

ஆனால் தீவிரவாதத்தையும் நீதிமன்றம் மூலமாகத்தான் அணுகவேண்டும் என்ற உங்கள் கருத்தை எதிர்க்கிறேன்.

கோர்ட் கேஸ் என்பதையெல்லாம் வேறு எதற்கு வேண்டுமானாலும் வைத்துக்கொண்டுவிட்டு, வெளிநாட்டவர்களின் ஊடுருவல், தீவிரவாதம் போன்றவற்றிற்கு இரும்புக்கரத்தால் 'நசுக்கும்' வழியைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

நான் கேட்ட எல்லையில் ஊடுருவல்காரர்களையும் உயிருக்கு அஞ்சாமல் தீவிரவாதச் செயல்களைப் புரிபவர்களையும் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர் செய்யவேண்டுமா என்பதற்கும் பதில் இல்லை.

நீங்கள் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருப்பது மோடி சட்டவிரோத ஆயுததாரிகளைக் கொல்லச் சொன்னதை - அதை மோடி சொல்லியிருந்தாலும் முஸல்மான் சொன்னாலும் நான் ஆதரிக்கிறேன்.

மோடியைக் கிரிமினல் என்று குறிப்பிடுவதற்கு நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள அவரது பேச்சு வலுவான காரணமாக இல்லை என்பதே நான் சொல்லவந்தது.

அவ்வளவுதான் மேட்டர்.

எந்த ஆட்சியாளராக இருந்தாலும் தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து நசுக்க வேண்டும். அப்படி நசுக்கப்படுபவர்களுக்கு எந்த அனுதாபமும் காட்டக்கூடாது. அவர்களையும் மதரீதீயாக அடையாளம் பிரித்து 'சிறுபான்மைக்கு எதிராக செய்யும் அநீதி' என்று குரல் கொடுப்பது மதியீனம்.

இனிமேல் சொல்ல ஒன்றுமில்லை.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

//கைது செய்து வழக்கு போட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கொடுக்க வேண்டும்//

இது மோடிக்கும் பொருந்தும் அல்லவா? பின் எப்படி அவரை மட்டும் 'குற்றவாளி' என்று முத்திரை குத்துகிறீர்கள்?

ஒரு கண்ணில் பால் - மறுகண்ணில் சுண்ணாம்பு - உங்களால் நியாயத்தைப் பார்க்கமுடியாது.

பெயரில்லா சொன்னது…

துக்ளக்ல நா எழுதிருந்ததை நீங்கள்ளாம் படிச்சேளான்னு தெரியலை. இங்க அதை எடுத்துப் போடுறேன். படிச்சுட்டு வழக்கம்போல 'பாப்பானோட பார்ப்பனீயச் சிந்தனை'னு என்னைத் திட்டி உங்க அரிப்பைத் தீர்த்துக்குங்கோ. ஆனா பாவம் 'கொண்டையை மறைங்கோ'ன்னும் யாரும் என்னைச் சொல்லிடமுடியாதேன்னு நெனச்சாத்தான் நேக்கு வருத்தமா இருக்கு.

*********
குஜராத்தில், தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையவரும், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தவருமான ஷோரபுதீன் என்பவர் "என்கௌன்டர்' என்ற பெயரில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டது – ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் முன்பு இருக்கிற விவகாரம். அது போலீஸார் செய்த சட்டவிரோதமான செயல் என்று குஜராத் அரசே, நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.

ஆனால் இப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நரேந்திர மோடி, "ஷோரபுதீன்
சந்தித்த முடிவு, அவருக்கு வேண்டியதே' என்று பேசி, போலீஸாரால் ஷோரபுதீன் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி இருக்கிறார் – என்று, ஒரு ஆங்கிலப்
பத்திரிகையில் செய்தி வெளியாகியது; அப்பத்திரிகை வெளியிட்ட, (மோடியின் குஜராத்தி மொழியில் அமைந்த பேச்சினுடைய) அதே ஆங்கில மொழிபெயர்ப்புடன், டெலிவிஷன்களிலும் மோடியின் பேச்சு ஒளிபரப்பாகியது; இந்தச் செய்தியை ஒட்டி, குஜராத் அரசின் வக்கீலே கூட முதல்வரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, காங்கிரஸும் மற்ற பல எதிர்க்கட்சிகளும், "மோடியின் பேச்சு காரணமாக, அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டார்; தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவர் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும்' என்று கோரியிருக்கின்றன.

மோடி, தான் பத்திரிகைச் செய்தியில் வெளியாகிய மாதிரி பேசவே இல்லை – என்று மறுத்திருக்கிறார். ஒரு வாதத்திற்காக, அவர் அவ்வாறுதான் பேசினார் என்று வைத்துக்கொண்டால் – அந்தப் பேச்சு, குஜராத் அரசு, நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ள கருத்துக்கு எதிரானது; ஆகையால் அது ஒரு முரண்பாடு. தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள், தீர்த்துக்கட்டப்படுவதை ஒரு குடிமகன் பேசலாம், ஆதரிக்கலாம்; அது அவன் விருப்பம். ஆனால் ஒரு மாநில முதல்வர், இப்படிப் பேசினால், சட்டத்தின் வழிமுறையை அவர் நம்பவில்லை என்று ஆகிறது.

"குற்றம்சாட்டப்பட்டவனுக்கும், சட்டரீதியான வழிமுறைகளின் பயன் கிட்ட வேண்டும்' என்ற தத்துவத்திற்கு இது விரோதமானது. ஆனால் இப்படி ஒரு கருத்தைத் தெரிவிப்பது, சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகிவிடாது. சம்பந்தப்பட்ட முதல்வர் பற்றி, மக்கள்தான், தங்கள் கருத்தை வகுத்துக்கொள்ளலாமே தவிர, இதில் சட்டம், செய்வதற்கு எதுவுமில்லை.

அவர் அவ்வாறு பேசியிருந்தால் கூட, அது ஒரு தேர்தல் குற்றமும் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டத்தில், எவையெல்லாம் ஒருவரை தேர்தலில் போட்டியிடுகிற தகுதியை இழக்க வைக்கும் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தகுதியின்மையைத் தருகிற அவ்விஷயங்களில், எந்த வகையில் பார்த்தாலும்,
மோடியின் பேச்சை (அவர் அப்படிப் பேசியிருந்தால் கூட) சேர்க்க முடியாது. அந்தப் பேச்சில் மதரீதியான கருத்து எதுவுமே தெரிவிக்கப்படவில்லை எனும்போது – அதற்கு மதவெறிச் சாயம் பூசுவதும், அர்த்தமற்றது.

மோடி அரசின் போலீஸார் செய்தது, அங்கே பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றது; அதனால் மோடி பேசியதாகக் கூறப்படுகிற கருத்து, இப்போது மக்களிடையே எதிர்ப்பைத் தோற்றுவிக்கவில்லை.

பத்திரிகை மற்றும் டெலிவிஷன் சானல்கள் வெளியிட்ட – மோடி மறுத்துள்ள
– மோடியின் பேச்சு காரணமாக, அவருக்கு இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை, சட்டரீதியான சிக்கல் அல்ல; பிரச்சார ரீதியான சிக்கல். ஏற்கெனவே பா.ஜ.க. வில் இருந்த அதிருப்தியாளர்கள், காங்கிரஸுடன் கைகோர்த்து நிற்கிறார்கள்; உடனிருந்தே கொல்கிற நோய் போல, கேசுபாய் பட்டேல், கட்சியில் இருந்துகொண்டே மோடியை எதிர்க்கிறார்; மோடிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, காங்கிரஸும், சரத்பவார் கட்சியும் ஒத்துழைக்கின்றன; டெலிவிஷன் சேனல்களும், பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு மோடியை விரட்ட முனைந்திருக்கின்றன.

ஆனால் குஜராத் வாக்காளர்கள் அவருடைய பேச்சு பற்றி வெளியாகிய செய்தியைக் கேட்டுக் கொதித்துப் போய்விடவில்லை என்பது ஒரு நல்ல செய்தி. மோடியை, "மரணத்தின் தூதுவர்' என்று சோனியா காந்தி வர்ணித்தது உண்மைதான். ஊழலுக்கும், தேசவிரோத நடவடிக்கைகளுக்கும், பின் தங்கிய நிலைமைக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும், தீவிரவாதத்திற்கும், சமூகவிரோதச் செயல்களுக்கும் – மரணத்தின் தூதுவராகத்தான் மோடி திகழ்ந்திருக்கிறார்.இந்தத் தேர்தலில், அவர் வெற்றி காணப்போகிறாரா இல்லையா, என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் வெற்றிகண்டு, மீண்டும் ஆட்சி அமைத்தால், அது குஜராத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே கூட நல்லது.

என்கௌன்டர் விவகாரங்களைப் பொறுத்த வரையில், நமது கருத்தை, சுமார்
ஏழு மாதங்களுக்கு முன்பாகவே (16.5.2007), ஒரு தலையங்கத்தில் நாம் தெரிவித்திருக்கிறோம் :

அப்பாவிகளையோ, ஆட்சியாளர்களின் அரசியல் எதிரிகளையோ, போலீஸுக்கு வேண்டாதவர்களையோ – போலீஸார் இப்படி "என்கௌன்டர்' என்று சொல்லித் தீர்த்துக்கட்டினால் – அவர்கள் கொலைக் குற்றம் செய்தவர்களே; சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே.

ஆனால், தேசத்திற்கே ஆபத்து விளைவிப்பவர்கள்; மக்களுக்கு பெரும் தொல்லை விளைவிப் பவர்கள்; பல குற்றங்களைப் புரிந்துள்ளவர்கள்; தங்களுக்கு எதிராக யாரும் சாட்சியம் அளிக்காத வகையில் எல்லோரையும் அச்சுறுத்தி வைத்திருப்பவர்கள் – என்கௌன்டர்களில் போலீஸாரால் கொல்லப்படுகிறபோது, அது உண்மையான என்கௌன்டரா அல்லது போலி என்கௌன்டரா – என்ற விசாரணைக்கு இடமில்லாமல் பார்த்துக்கொள்வது, நிர்வாகத் திறன் உடைய ஒரு அரசின் கையில் இருக்கிறது. இப்படிச் சொல்வது கொடுமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நிர் வாகத்தில், கொடுமை காட்டப்பட வேண்டியவர்களிடம் கொடுமை காட்டப்படா விட்டால், அந்த நிர்வாகம் குறை உடையதாகவே இருக்கும்.

இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிற – நடந்திருக்கிற
– என்கௌன்டர்களில், எத்தனை போலீஸாரால் நடத்தப்பட்டவை? அதாவது போலி என்கௌன்டர்கள் எத்தனை? இதை, முழுமையாக ஆராய்ந்தால், என்கௌன்டர்கள் எல்லாமே – ஒரு சிலவற்றைத் தவிர – போலி என்கௌன்டர்களே என்பது தெரிய வரும். ஆகையால் போலி என்கௌன்டர் என்று வருகிற செய்திகள், ஒரு வகையில் போலிச் செய்திகளே! என்கௌன்டர் என்றாலே அநேகமாக அது போலிதான். அநேகமாக எல்லாமே போலி எனும்போது ஒரு சிலவற்றை மட்டும் போலி எனக் கூறுவது, போலித்தனம் அல்லவா? இந்த போலி என்கௌன்டர்கள் நடக்கவே இல்லை என்றால், மக்களுக்கு "போலி பாதுகாப்பு'தான் கிடைக்கும்.

டெல்லியில், ஒரு பகுதியில் சென்ற 6ஆம் தேதியன்று "பாபர் மசூதியை
மீண்டும் கட்ட வேண்டும்' என்ற கோரிக்கையுடன், சில முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஊர்வலம் நடத்தினர். அதே சமயத்தில், அதே இடத்தில், பாபர் மசூதி இடிப்பை "ஒரு வெற்றி' என்று கோஷமெழுப்பி, சிவசேனையைச் சார்ந்தவர்களும் ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர். மோதல். கல் வீச்சு. சின்ன கலவரம். பலர் காயம்.

இந்த மாதிரியான இரு ஊர்வலங்களை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நடத்த போலீஸார் எப்படி அனுமதித்தார்கள் என்பது புரியவில்லை; முதல் தவறு அவர்களுடையது. இஸ்லாமிய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை, அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளக் கூடியதே. அதில் "தூண்டுதல்' எதுவும் இல்லை.

ஆனால் சிவசேனைக்காரர்கள் நடத்திய வெற்றி ஊர்வலம், நடந்த குற்றத்தை நியாயப்படுத்தி, வெறியைத் தூண்டக்கூடியது; ஆட்சேபிக்கத் தகுந்தது. அந்த ஊர்வலத்தை போலீஸ் அனுமதித்திருக்கக்கூடாது.

பெயரில்லா சொன்னது…

அனைத்து இந்து உள்ளம் கொண்ட தேச பகர்களுக்கு,


மா. சி. போன்றோர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையே இந்திய இசுலாமியர்கள் சொல்வது போல் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று சொல்லி 2006 ஆம் ஆண்டிற்கான தலை சிறந்த திம்மி விருதினை வாங்கியிருக்கிறார் என்பதை மறவாதீர்.

பெயரில்லா சொன்னது…

//
1. அயோத்தியில் வரலாற்றுச் சின்னத்தை இடித்துத் தகர்த்த கும்பலை வழி நடத்திய அத்வானி முதலான தலைவர்கள்
//
வரலாற்றின் அவமானச் சின்னம் அழிக்கப்பட்டுவிட்டதை எண்ணி சந்தோஷப்படுங்கள்.

வரலாற்றில் ஏகப்பட்ட சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாபர் மசூதி என்று சொல்லப்படும் இடத்தைத் தோண்டி கோயில் இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்லியே விட்டார்கள்.


மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்வதனால் உண்மையாகாது மா. சி.


//

2. கோத்ரா தீ விபத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் அப்பாவிகளைக் கொன்று குவித்த கொடுங்கோலர்களை அடக்க முடியாமல் கை கட்டியிருந்த (திறமையான நிர்வாகி) மோடி
//

தீ! விபத்தா ?

//


இவர்கள்தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள், கொலையாளிகள்.
//

பயங்கர வாதிகள் தீவிரவாதிகள் எல்லாம் யார் என்று எல்லோருக்கும் தெரியும். இப்படி அத்வாணி, மோடி எல்லாம் பயங்கரவாதி என்று சொல்லும் மர மண்டைகளாக இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே!

//


அப்சல் குருவின் தண்டனை உரிய அரசியலமைப்பு வழியில் கையாளப்பட்டு வருகிறது. வேண்டுமென்றால் மோடிக்கும் தூக்குத் தண்டனை கிடைத்த பிறகு ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டு விட்டுக் காத்திருக்கச் செய்வோம்.
//


அவன் தூக்கில் சாகவேண்டுமா வேண்டாமா என்று ஒரு தீர்ப்பு தரவும், மோடியை கிரிமினல் என்று தீர்பு சொல்லிய தீர்க தரிசியே!!


(அப்சல் தூக்கில் சாகவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, மோடி குற்றவாளி என்று ஒரு கோர்ட்டில் கூட நிரூபிக்கப்படவில்லை)

பெயரில்லா சொன்னது…

//
நன்கு அறிந்துதான் சொல்கிறேன் ஐயா! நாட்டின், சமூகத்தின் அடிப்படையையே தகர்த்து விட்டு பொருளாதாரம் முன்னேற்றம் என்று கதைத்து கண்காட்டு வித்தை செய்கிறார்கள் என்றே நம்புகிறேன்.
//

உலகம் தட்டை என்று ஒரு சிலர் இன்னும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்காக உலகம் தட்டையாகிவிடாது.


நீங்கள் எதை வேண்டுமானாலும் நம்பலாம் அது உங்கள் இஷ்டம். ஆனால் உண்மை என்றுமே ஒன்று தான்.

பெயரில்லா சொன்னது…

//

வெறி, பய உணர்வுகளைத் தூண்டி விட்டு வாக்குகளை திரட்டும் இந்துத்துவா கூட்டத்தின் உத்திகளை அறிந்தவர்களுக்கு மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது வியப்பாக இருக்காது.

//


மோடி தோற்றால் தான் வியப்பு என்பதை மறக்காதீர்கள் மா. சி.


//

அந்தத் திருநாள் வரும் நாளில் எப்படிப்பட்ட நாட்டை அவர் ஆளுவார் என்று கற்பனை செய்து பார்க்கவும் அஞ்சுகிறேன் :-(

//

மன்மோகன் சிங் போன்ற சோனியாவுக்கு சிங்கி அடிக்கிம் பிரதமர் எல்லாம் பார்த்து இன்னும் இந்தியா இருக்கிறது. மோடிக்கூட PM ஆனா ஒரு தப்பும் இல்லை.


மா. சி.யின் வாழ்நாளிலேயே இது போன்ற ஒரு நல்ல காரியம் இந்தியா வுக்கு நடப்பதை பார்த்தாகவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


ஆனா, ஒண்ணு, ப.ஜ.க ஆட்சி அமைக்கும் போதுகூட இதே தான் சில பல LL வகுப்பினர் (limousine liberals) சொன்னார்கள்.

பெயரில்லா சொன்னது…

//

காவிக் கும்பலே இல்லாமல்தான் இந்தியா என்ற தேசம் உருவானது. அதைப் பாதுகாக்க அந்தக் கும்பலின் கைவண்ணம் தேவையே இல்லை. தேங்க்ஸ்.

//


இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியதில் விவேகாநந்தர், அரவிந்தர், சாவர்கர் போன்றோரின் பங்கு மகத்தானது. செங்கொடி தாங்கிகள் வெள்ளையனுக்கு உளவு வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இந்தியா பூரண சுவராஜ்ஜியம் அடையவேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதை கடமையாகச் செய்தனர் நீங்கள் சொல்லும் காவிக் கும்பல்.


சும்மா ஒரு கோட்சே செய்ததை வைத்து எவ்வளவு நாள் உண்மையை மறைக்க முடியும் ?

பெயரில்லா சொன்னது…

//

போன நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா வளர்ந்து விட்டது, ஒளிர்கிறது' என்று நடந்த பிரச்சாரம் நினைவுக்கு வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

//


போன நாடாளுமன்றத் தேர்தலில் அதிக சீட்டு வாங்கிய கட்சி ப.ஜ.க தான். மெஜாரிட்டி இல்லை.


தேர்தலில் காங்கிரசை எதிர்த்துவிட்டு பா.ஜ.க ஆட்சி வரக்கூடது என்ற ஒரே காரணத்துக்காக முதுகெலும்பில்லாத காங்கிரசை ஆதரிக்கின்றனத் கம்யூனிஸ்டுகள்.


அவர்கள் தேர்தல் வாங்குறுதியில் காங்கிரஸை எதிர்த்து எழுதிய வாசகங்கள் இன்னும் இருக்கும்.


மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர் காங்கிரஸ்காரர்கள்.


பெரும்பான்மை பா.ஜ.க வுக்குக் கிடைக்காமல் போனதற்கு சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா தோல்விகள் முக்கிய காரணம்.

பெயரில்லா சொன்னது…

மற்றொரு அனானி நண்பர் கேட்டிருந்த இந்த கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை மாசி? ஒரு கொளுகை விளக்கப் பதிவாவது போடவும்.

//இலவசம் என்கின்ற பெயரில், மக்களை ஆட்டுமந்தைச் சோம்பேறிகளாக்கவில்லை மோடி. இப்படிச் செய்யமுயன்ற காங்கிரஸ்-சை குஜராத் மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள் / யடிப்பார்கள். அவர்கள் சூடு, சுரணை உள்ள முன்னேற்றச் சிந்தனையில் ஆழ்த்தியவர் மோடி.
மின் வெட்டு என்கிற பெயரில் ஊரை இருளில் மூழ்கிக் சாகடிக்கவில்லை மோடி.
மணல் மேடுகளாகவும், சேற்றுக் கால்வாய்களையும் ரோடு என்ற பெயரில் தன் மாநிலத்தவருக்குத் தரவில்லை மோடி.
குல்லாப் போட்டு கஞ்சி குடிப்பது மட்டுமே சமூக சீர்திருத்தமென்றும், கோவிலுக்கு செல்பவன் கோமாளி என்றும் புகழ வில்லை மோடி.
அரிசி விலையைக் குறைத்து தன் கட்சிக்காரர்களின் பைகளை நிரப்பவில்லை மோடி.
தன் கடைக்கோடி பேரனையும் மத்திய மந்திரியாக்கி குடும்பத்தினை பெருக்கவில்லை மோடி.
13 மத்திய மந்திரிகள், 40 MPக்கள் என்று எல்லாவித பின்புலங்களைப் பெற்றிருந்தும், தன் மாநிலத்தை எல்லா விதங்களிலும் சீரழிப்பவர்களைப் போலல்லாமல், எல்லாவித எதிர்ப்புகளையும் மீறி குஜராத்தை முன்மாதிரி, முதல் மாநிலமாகவே மாற்றிக்காட்டியவர் மோடி.
தீவிரவாதிகளுக்கு புகழஞ்சலி செலுத்தி தன் துயரைத் தெரிவிக்காமல், தீவிரவாதி என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரையும் பேடிகாளாக்கி சுட்டுப் பொசுக்கியவர் மோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரவாதிகளால் குஜராத்தில் பலி என்பது கிடையாது. கோவையில் குண்டு வெடித்தவனின் கோவணத்தைத் துவைக்கும் ஆட்சி நடத்தவில்லை மோடி.
எதிர்கட்சிக்காரனையும், தன்னை எதிர்த்து நடக்கும் தன் கட்சிக்காரர்களையும் கூலிப்படை கொண்டும், வெடிகுண்டு கொண்டும் கொல்லவில்லை மோடி.
வற்றா ஜீவ நதிகளை வற்றவிட்டு, மணல் கொள்ளையில் சரித்திரம் படைத்து, எதிர்த்தவரை லாரி ஏற்றிக் கொன்று, சாராயத்தை வெள்ளமென ஓட விட்டு, குவாட்டரும் பிரியாணியுமே வாழ்க்கை என்று இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கவில்லை மோடி.

இப்படியெல்லாம் இல்லாத ஒரு நிம்மதியான ஆட்சி கொடுத்தால் மாசி போன்ற அறிவு ஜீவிகளுக்கும், குஞ்சுகளுக்கும் எப்படி பொறுக்கும்? தங்களுடைய மேதாவிலாசத்தை இப்படிப் பட்ட பதிவு போட்டு வெட்டவெளிச்சமாக்குவார்கள்//

சீனு சொன்னது…

/////
//அப்சல் வழக்கில் நீதி மன்றம் சொல்லிய தீர்ப்பு படாத பாடு படுகிறதே!//

மோடி தூண்டிய படுகொலைகளுக்கு நீதிமன்றத்திலேயே நிறுத்தப்படவில்லையே!
/////

அப்ப இதையே காரணம் காட்டி அப்சலை விட்டுறலாம்ங்கறிங்களா?

//அப்படியே எல்லையைக் காத்துநிற்கும் ராணுவவீரர்களிடமும் 'ஐயா, ஊடுருபவர்களைச் சுடாதீர்கள். அவர்கள் உங்களைச் சுட்டாலும் குண்டுபோட்டாலும் நீங்கள் செத்தாவது அவர்களை உயிருடன் பிடியுங்கள் - அவர்கள் மீது குற்றம் சாட்டி, நீதி மன்றத்தில் நிறுத்து தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் அமைப்பு.' என்று சொல்வீர்களா மா.சி.?//

சொன்னாலும் சொல்வார். அப்படி செய்ததால் தானே கந்தகாரில் மௌலானா மசூத் அசார் போன்ற தீவிரவாதியை விடுவிக்க முடிந்தது? அதற்கப்புறம் L-e-T செய்தவை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன், 13/12 உட்பட.

(விடுவிக்கப்பட்டது பா.ஜ.க ஆட்சியில் தானெ என்று அந்டோனியோ போல அடுத்த கேள்வி கேட்காதீர்கள். விமானம் சிறைபட்டது ஆப்கானில் உள்ள கந்தகாரில். 200 சொச்சம் உயிர்களுக்காக வேறு வழியில்லாமல் தான் விடுவிக்கப்பட்டான் மௌலானா மசூத் அசார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பொழுது ரமலான் மாதம் அதனால் இரத்தம் சிந்த கூடாது என்று ஆப்கான் தாலிபான்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவிடவில்லை!!!)

//அப்சல் குருவின் தண்டனை உரிய அரசியலமைப்பு வழியில் கையாளப்பட்டு வருகிறது.//

ஜோக் அடிக்காதீங்க சார்! சிரிப்பு சிரிப்பா வருது :)

பெயரில்லா சொன்னது…

//
You sire, is an anti-national, anti Indian. If you have the courage to own up your statement publish your identity, for everyone to know your true face.
//

யார் இந்திய தேசிய எதிரி ?


தீவிரவாதிகளுக்கு மனித உரிமை என்ற பெயரில் விடுதலை வாங்கும் உன்னைப் போன்ற தீவிரவாத B team களா இல்லை, தீவிரவாதிகளை உண்டு இல்லை என்று செய்யும் நரேந்திர மோடிக்களா இல்லை அவரது ஆதரவாளர்களா ?


இசுலாமியர்கள் பயத்தில் வாழ்கிறார்கள் என்றால் அது அவர்களாகவே அவர்களுக்குத் செய்து கொள்வது. அதற்காக மற்றவர்களை குறை கூட முடியாது ?


விட்டால், இசுலாமியப் பெண்களெல்லாம் புர்கா அணிவது இந்து அரசியல்வாதிகள் சொல்லித்தான் என்று கூட சொல்வீர்கள் போல!


அவர்களாக ghetto மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டு நரேந்திர மோடி மீது பழி போடுகிறார்கள். அதையும் வந்து உன்னைப் போன்ற underground தேச விரோதிகளின் over ground ஆதரவாளர்கள் பதிவ் போட்டு மற்றவர்களை தேச விரோதிகள் என்று சொல்கிறீர்கள்.


தேசியத்தில் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகளெல்லாம் தேச விரோதம் பற்றிப் பேசலாமா ?

பெயரில்லா சொன்னது…

//
நன்கு அறிந்துதான் சொல்கிறேன் ஐயா! நாட்டின், சமூகத்தின் அடிப்படையையே தகர்த்து விட்டு பொருளாதாரம் முன்னேற்றம் என்று கதைத்து கண்காட்டு வித்தை செய்கிறார்கள் என்றே நம்புகிறேன்.
//

துலுக்கனுக்குத்தான் முதல் பங்கு எல்லாவற்றிலும் என்ற சமூக அடிப்படையைத் தானே சொல்கிறீர்கள் ?

மா சிவகுமார் சொன்னது…

//if you believe Kothra train fire was an accident//
நான் எதை நம்புகிறேன் என்பது முக்கியமில்லை. தமக்குத் தாமே கதை கட்டிக் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கட்டிக் காப்பதாக பதவிப் பிரமாணம் எடுத்த முதலமைச்சர் ஒருவர், சட்டத்துக்கு விரோதமாக கைகட்டி உட்கார்ந்து/வன்முறை கும்பலைத் தூண்டி விட்டது சரியா தவறா என்று நினைத்துப் பாருங்கள்.

//தீவிரவாதத்தையும் நீதிமன்றம் மூலமாகத்தான் அணுகவேண்டும் என்ற உங்கள் கருத்தை எதிர்க்கிறேன்.//

தீவிரவாதம் எது என்று யார் தீர்மானிப்பது? மோடி குறிப்பிட்ட மதத்தினர் அனைவரும் தீவிரவாதிகள் என்று தீர்மானித்து குண்டர்களை ஏவி விடுவதுதான் தீர்வு என்று சொல்கிறீர்களா?

//மோடியைக் கிரிமினல் என்று குறிப்பிடுவதற்கு நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள அவரது பேச்சு வலுவான காரணமாக இல்லை என்பதே நான் சொல்லவந்தது.//

துக்ளக்கில் சோ எழுதியது போல, ஒரு மாநில முதல்வர் சட்டத்துக்கு புறம்பான செயல்களை ஆதரித்துப் பேசுவது, கூட்டத்தினரைத் தூண்டி விட்டு சமூகத்தை பிளவு படுத்த முயல்வது கிரிமினல் என்று குறிப்பிடுவதற்கான போதுமான காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

//இது மோடிக்கும் பொருந்தும் அல்லவா? பின் எப்படி அவரை மட்டும் 'குற்றவாளி' என்று முத்திரை குத்துகிறீர்கள்?//

நான் முத்திரை குத்துவதால் அவருக்கு சிறை வாசம் கிடைத்து விடப் போவதில்லை. இவ்வளவு நடந்த பிறகும் கண்ணை மூடிக் கொண்டு மத வெறியால் அவரை ஆதரிக்கும் போக்கை எப்போது விடப் போகிறோம்?

//மா. சி. போன்றோர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையே இந்திய இசுலாமியர்கள் சொல்வது போல் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று சொல்லி 2006 ஆம் ஆண்டிற்கான தலை சிறந்த திம்மி விருதினை வாங்கியிருக்கிறார் என்பதை மறவாதீர்.//

வஜ்ரா, Strawman argument என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நான் சொன்னதை நீங்கள் தவறாக நினைப்பதால் அது தவறாகி விடாது.

15 கோடிக்கும் அதிகமான இசுலாமியர்களும் வசிக்கும் இந்த நாட்டின் கொள்கைகள், உலகில் இசுலாமிய நலன்களை பாதிக்கும் கூறுகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்னும் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் உரக்கக் கூறுவேன்.

//மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்வதனால் உண்மையாகாது மா. சி.//

அது பொய்யென்றால் நீதி மன்றத்தில் நிரூபித்து அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாற்றங்களை செய்திருக்க வேண்டும்.

நாடெங்கிலிருமிருந்து கும்பலைத் திரட்டிக் கொண்டு போய், போன இடத்திலெல்லாம் மதக் கலவரத்தை பரப்பி விட்டு கடைசியில் எந்த சட்டத்தையும் மதிக்காமல் அழிவுச் செயலில் ஈடுபட்ட அத்வானி தலைமையிலான கூட்டம் கிரிமினல்கள்தான். அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுவதுதான் அவமானம்.

//இந்தியா வுக்கு நடப்பதை பார்த்தாகவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

இறைவன் உங்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கக் கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்!

//இந்தியா பூரண சுவராஜ்ஜியம் அடையவேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதை கடமையாகச் செய்தனர//

அவர்கள் போக்கில் சுயராஜ்ஜியம் கிடைத்திருந்தால், இந்தியா என்று ஒரு நாடு உருவாகியிருக்காது. நூற்றுக் கணக்கான தங்களுக்குள் போரிட்டிக் கொண்டிருக்கும் குறுநில மன்னர்கள்தான் இருந்திருப்பார்கள்.

//போன நாடாளுமன்றத் தேர்தலில் அதிக சீட்டு வாங்கிய கட்சி ப.ஜ.க தான். மெஜாரிட்டி இல்லை.//

அதே கதை குஜராத்தில் நிகழ வேண்டும் என்று ஆசை.

//மற்றொரு அனானி நண்பர் கேட்டிருந்த இந்த கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை //

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவாரோ! அடிப்படை அமைப்புகளை குலைத்து விட்டு முன்னேற்றம் நிர்வாகம் என்று கதைத்தால் சில ஆண்டுகளில் எல்லாம் உடைந்து போய் விடும்.

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அப்ப இதையே காரணம் காட்டி அப்சலை விட்டுறலாம்ங்கறிங்களா?//

விட வேண்டாம் சீனு. அவரது வழக்கு குடியரசுத் தலைவர் கருணை மனுவின் மூலம் முடிவுக்கு வரட்டும். மோடியை என்ன செய்ய வேண்டும்?

//சிரிப்பு சிரிப்பா வருது :)//

சிரிப்புதான் வரும் உங்களுக்கு. இதே சட்டம் ஒழிந்த நிலைமை நாடெங்கும் பரவும் போது என்ன வரும் என்பதை கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
15 கோடிக்கும் அதிகமான இசுலாமியர்களும் வசிக்கும் இந்த நாட்டின் கொள்கைகள், உலகில் இசுலாமிய நலன்களை பாதிக்கும் கூறுகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்னும் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் உரக்கக் கூறுவேன்.

//

what about the rest of 80 crore people ? are they idiots ?

You have every right to speak what your dhimmi mind tells you to. But, indian national interest cannot be surrendered to whims of a few fundamentalist morons who pray 5 times daily and believe in creation myth.

For the sake of argument if your view point is accepted as right, tomorrow the fundamentalist muslim organization controlling the islamic people of india asks to vote in a referendum to give away territories to pakistan, will you concede ?

Lunatic leftists like you would even think of giving away territories in exchange of petro dollors!

வஜ்ரா சொன்னது…

//
15 கோடிக்கும் அதிகமான இசுலாமியர்களும் வசிக்கும் இந்த நாட்டின் கொள்கைகள், உலகில் இசுலாமிய நலன்களை பாதிக்கும் கூறுகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்னும் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் உரக்கக் கூறுவேன்.
//

With people like you inside india, why do we need pakistan ?

பெயரில்லா சொன்னது…

//
15 கோடிக்கும் அதிகமான இசுலாமியர்களும் வசிக்கும் இந்த நாட்டின் கொள்கைகள், உலகில் இசுலாமிய நலன்களை பாதிக்கும் கூறுகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்னும் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் உரக்கக் கூறுவேன்.
//

With people like you inside india, why do we need pakistan ?

வஜ்ரா சொன்னது…

The comment about 2006 best dhimmi is not mine.

Nevertheless i would take the pain to answer the straw man argument.

Wiki says, A straw man argument is an informal fallacy based on misrepresentation of an opponent's position.

Now whose position is at false ?

Your argument/Judgement on Narendra modi being a criminal is more of a straw man argument than your "indian external affairs should be directed by islamic interest" stupidity!

Narendra modi is being projected as anti-muslim by you, grossly over stating his position this is by all means informal fallacy by misrepresenting the opponent's (Modi) position.

பெயரில்லா சொன்னது…

பீசெக்குகளின் திலகமே,

//// "சட்டப்படி ஆட்சி" என்று உருவான நாடான இந்தியாவில், கூட்டத்தினரின் வெறியைத் தூண்டி விட்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயலும் யாருமே குற்றவாளிகள்.////

மோடி எந்த கூட்டத்தைத் தூண்டிவிட்டு சொரபுத்தீன் என்கிற ஜந்தை கொன்றார்?

மற்றவர்களைக் கொல்வதையே வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பவர்களை உங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக அழைக்கலாமே. ஆனால், எங்கள் மோடி செய்ததுதான் நியாயம்.

உங்களுக்கும், உங்கள் வீட்டிலுள்ளோருக்கும் நாளைக்கு ஏதேனும் வியாதி வந்தால் டாக்டரிடம் போய்விடாதீர்கள்.

பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் டாக்டர்கள் கொன்றுவிடுவார்கள்.

அது சரி பீசெக்கு பீதாம்பரம் அவர்களே,

மோடியின் பேச்சிற்கு உடனடியாக பத்தி பத்தியாய் எழுதினீர்களே.

சம்பந்தமில்லாத இரண்டு இளைஞர்களை தினகரன் பத்திரிக்கை எதிர்ப்பின்போது கொன்று தின்ற கருணாநிதியையும், அவனது தறுதலை பிள்ளையான மாண்புமிகு அழகிரி அவர்களையும் நீங்கள் கிரிமினல் என்று எழுதியுள்ள பதிவின் உரலைத் தர முடியுமா?

கோயம்புத்தூரில், என் சொந்த அக்காள் மகளின் ஒரே குழந்தையை குண்டுவைத்துக் கொன்றானே மதானி, அவனை கிரிமினல் என்று நீங்கள் எழுதியுள்ள உரலைத் தர முடியுமா?

தன் மகனைக் கொன்ற மதானியை குளிப்பாட்டி, சீராட்டி, பாராட்டும் வேலையைக் கொடுத்த தமிழக அரசை கிரிமினல் என்று நீங்கள் எழுதிய உரலைத் தர முடியுமா?

இந்துவாக பிறந்ததால் தன் மகனைக் கொன்றவனுக்கு எந்த வெறுப்பும் இல்லாமல் வேலை செய்த அந்த புனிதரின் எதிர்காலத்தை கெடுத்தவர்களைக் கிரிமினல் என்று நீங்கள் எழுதிய உரலைத் தரமுடியுமா?

"என் மகனை ஏன் கொன்றாய்?" என்ற அவரின் கேள்விக்கு, மதானி தன் வாயாலேயே, "நான் (வெடி)மருந்து கொடுத்தேன்.ஆனால், இவர்கள் இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை" என்று சொன்னானே அந்த இஸ்லாமியனை கிரிமினல் என்று நீங்கள் எழுதிய உரல் தர முடியுமா?

நான் சொன்ன அத்தனை சம்பவங்களுக்கும் நான் உரல் தருகிறேன். போய்ப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=VzHbyvejy0I

http://www.youtube.com/watch?v=2WFqxnvBvk0

http://www.youtube.com/watch?v=h1MjvhrebAo

http://www.youtube.com/watch?v=Oqjl_FGdC7A&feature=related

http://www.youtube.com/watch?v=sJ8Rg-rRWes

http://www.youtube.com/watch?v=CsBXDH0hKco



இந்தப் பின்னூட்டத்தை வெளியிட மனசாட்சி வேண்டும். உங்களுக்கு இருந்தால் வெளியிடுங்கள்.

பெயரில்லா சொன்னது…

//'பாரத் மாதா கீ ஜே' என்று விண்ணதிர போடும் கோஷம் இர்ருக்கிறதே அது மோடியின் பேச்சை விட மிகமிக மோசம் - கேவலம்//

பிறைந்திபுரத்தான்னு ஒரு முண்டம் தன் பேரை வைத்திருக்கிறதே.அது கேவலம் இல்லையா?

சீனு சொன்னது…

//விட வேண்டாம் சீனு. அவரது வழக்கு குடியரசுத் தலைவர் கருணை மனுவின் மூலம் முடிவுக்கு வரட்டும். மோடியை என்ன செய்ய வேண்டும்?//

கருணை மனுவே காலம் தாழ்த்த ஒரு ட்ரிக் தானே? என்றைக்கு முடிவுக்கு வரும்? ஒரு வேளை குடியரசு தலைவர் தூக்குல் போடலாம்ன்னு சொல்லிட்டா காங்கிரஸ் அரசு அப்சலை தூக்கில் போட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

//சிரிப்புதான் வரும் உங்களுக்கு. இதே சட்டம் ஒழிந்த நிலைமை நாடெங்கும் பரவும் போது என்ன வரும் என்பதை கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்.//

"அப்சல் குருவின் தண்டனை உரிய அரசியலமைப்பு வழியில் கையாளப்பட்டு வருகிறது."-ன்னு நீங்க சொன்னதுக்கு தான் நான் சிரிப்பு சிரிப்பா வருதுன்னு சொன்னேன். சன் டி.வி., ஜெயா டி.வி. மாதிரி நியூஸ எடிட் பன்னாதீங்க சார்...

பெயரில்லா சொன்னது…

//
பீசெக்குகளின் திலகமே
//

பீசெக்கு : etymology; Pseudo-secular., சுருக்கமாக p-sec. அதன் தமிழ் transliteration பீசெக்கு.

மா சிவகுமார் சொன்னது…

கேள்விகளுக்கு என் விடைகள்:

1. காங்கிரஸ் அரசு ஏன் மோடி/அத்வானியின் மீது வழக்கு போடவில்லை?

அது நம்முடைய அமைப்பின் குறைபாடு. ஏன் சிறையில் இருந்து கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நபர்களும் பீகாரில் இருக்கிறார்கள். அந்தக் குறைபாட்டைக் களைய வேண்டும்.

2. மோடி குஜராத் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறாரே?

நாடு செயல்படும் அடிப்படையையே தகர்த்து விட்டு வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுவது எந்த பலனையும் தராது. சில ஆண்டுகள் நோக்கில் ஆதாரம் செல்லரித்துப் போன நிலை சமூகத்தையே அழித்து விடும். அப்போது இந்த வளர்ச்சிகள் எதுவும் உதவிக்கு வராது.

3. //15 கோடிக்கும் அதிகமான இசுலாமியர்களும் வசிக்கும் இந்த நாட்டின் கொள்கைகள், உலகில் இசுலாமிய நலன்களை பாதிக்கும் கூறுகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்னும் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் உரக்கக் கூறுவேன்.//

With people like you inside india, why do we need pakistan ?

நிச்சயமாக பாகிஸ்தான் தேவையேயில்லை. அப்படித்தான் பல மதத்தினரும் சேர்ந்து வாழும் இந்தியா என்ற நாடு 1947ல் உருவானது. சேர்ந்து வாழும் முறையை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களால் பாகிஸ்தான் உருவானது.

அப்படி சேர்ந்து வாழும் முறையைக் குலைப்பவர்களின் (இந்துத்துவா கும்பல்) கை ஓங்கினால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு வந்து விடும்.

4. //சம்பந்தமில்லாத இரண்டு இளைஞர்களை தினகரன் பத்திரிக்கை எதிர்ப்பின்போது கொன்று தின்ற கருணாநிதியையும், அவனது தறுதலை பிள்ளையான மாண்புமிகு அழகிரி அவர்களையும் நீங்கள் கிரிமினல் என்று எழுதியுள்ள பதிவின் உரலைத் தர முடியுமா?//

கருணாநிதியும் அழகிரியும் குற்றவாளிகள் என்பதில் நானும் உடன்படுவேன். ஆனால் அவர்களில் யாருமே அந்த செயலை தாம் தூண்டி விட்டதாகவும். அந்த அலுவலக இளைஞர்களுக்கு சரியான தண்டனை கிடைத்தது என்றும் மார் தட்டிக் கொள்ளவில்லை.

அப்படி மார் தட்டிக் கொள்ளும் மோடியும், இந்துத்துவா கும்பல்களும் அபாயமானவர்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
அப்படி சேர்ந்து வாழும் முறையைக் குலைப்பவர்களின் (இந்துத்துவா கும்பல்) கை ஓங்கினால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு வந்து விடும்.
//

சுத்தப் பேத்தல்.


இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கும் கூட்டம் நம்மிடையே உலவிக் கொண்டு இருக்கிறது.


யார், பிரிந்து வாழவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தான் அத்தகய துரோகச் செயலைச் செய்யக்கூடியவர்கள்.


இந்துக்கள், இந்துத்வாவாதிகள் பிரிவினைவாதிகள் அல்லர். மாறாக பிரிவினைவாதிகளை ஒடுக்க வந்தவர்கள். உம்மைப் போன்றவர்கள் பிரிவினைவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து உண்மையான ஒற்றுமை உள்ளம் கொண்டவர்களை தீவிரவாதி போல் சித்தரிக்கிறீர்கள்.


//

ஆனால் அவர்களில் யாருமே அந்த செயலை தாம் தூண்டி விட்டதாகவும். அந்த அலுவலக இளைஞர்களுக்கு சரியான தண்டனை கிடைத்தது என்றும் மார் தட்டிக் கொள்ளவில்லை.

//


மோடி மார்தட்டிக் கொண்டாரா ? ஆதாரம் இருக்கா உம்மிடம் ?

//
நாடு செயல்படும் அடிப்படையையே தகர்த்து விட்டு வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுவது எந்த பலனையும் தராது. சில ஆண்டுகள் நோக்கில் ஆதாரம் செல்லரித்துப் போன நிலை சமூகத்தையே அழித்து விடும். அப்போது இந்த வளர்ச்சிகள் எதுவும் உதவிக்கு வராது.
//

நாடு செயல்படுக் அடிப்படை எது ?


துலுக்கனுக்குத் தூக்கிக் கொடுப்பதா ? அப்படி ஒரு அடிப்படை இருப்பின் அது தகர்தெறியப் படவேண்டிய ஒன்றே.

பெயரில்லா சொன்னது…

//
நாடு செயல்படும் அடிப்படையையே தகர்த்து விட்டு வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுவது எந்த பலனையும் தராது. சில ஆண்டுகள் நோக்கில் ஆதாரம் செல்லரித்துப் போன நிலை சமூகத்தையே அழித்து விடும். அப்போது இந்த வளர்ச்சிகள் எதுவும் உதவிக்கு வராது.
//



Good to see self proclaimed liberals like you making "prophecies" like this.

This indicates one thing.

Out and out Gujarati people have rejected the moronic dhimmitude projected as secularism by the chattering class idiots.

This is the first signs of recovery from a grave viral disease of socialism and secularism.

The Left projected Sec-socialism is being thrown to the dust bins. And its so good and feels so nice to see prophets of Secular socialism crying loud to their believers..."no no do not leave your faith, its a bad outside world"....

பெயரில்லா சொன்னது…

Hindutva and radical islam: Where the twain do meet

What more is needed to stoke reaction ?

மா சிவகுமார் சொன்னது…

//இந்துக்கள், இந்துத்வாவாதிகள் பிரிவினைவாதிகள் அல்லர். மாறாக பிரிவினைவாதிகளை ஒடுக்க வந்தவர்கள். உம்மைப் போன்றவர்கள் பிரிவினைவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து உண்மையான ஒற்றுமை உள்ளம் கொண்டவர்களை தீவிரவாதி போல் சித்தரிக்கிறீர்கள்.//

அனானி, இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமானது இல்லை. எல்லா மதத்தினரும், எந்த மொழி பேசுபவரானாலும், எந்த ஊரில் வாழ்பவரானாலும், இது எம் நாடு என்று பெருமையுடனும் உரிமையுடனும் செயல்படும் சூழல் இருந்தால்தான் நாடு வளம் பெறும்.

அந்த உணர்வை அழித்து பெரும்பான்மை தீவிரவாதத்தை வளர்க்கும் இந்துத்துதவா கும்பல்கள் நாட்டுக்கு விரோதிகள்.

//This is the first signs of recovery from a grave viral disease of socialism and secularism.//

அல்லது, நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் கும்பல்களின் முதல் வெற்றி என்று கூடப் பார்க்கலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்