திங்கள், பிப்ரவரி 12, 2007

கல்யாண் - சாகரன்

நேற்று சுடர் பற்றி அவரிடமிருந்து ஒரு மடல். இன்று காலையில் அவரது மரணச் செய்தி.

அவர் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த போது, வலைப்பதிவர் சந்திப்பில் பார்த்து, பின்னர் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு தகவல்கள் பரிமாறிக் கொண்டு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தோம்.

'தமிழ் மணத்தைப் போலவே இன்னொரு திரட்டி என்றால் தேவையில்லை. மாறுபட்ட விதமாக ஒரு களத்தை உருவாக்குங்கள் என்று காசி சொன்னார்' என்று தேன்கூட்டு ஆரம்பத்தைச் சொல்லி விட்டு, பெட்டகம், சார்பு நிலை குறித்த குற்றச் சாட்டுகள் என்று பேசிக் கொண்டிருந்தார்.

'நீங்கள் ரியாத் வரும் போது ஒரு வலைப்பதிவர் கூட்டம் போட்டு விடுவோம்' என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அவர் இருக்க மாட்டார். தொலைபேசி உரையாடலின் இடையில் தன் மகளின் குறுக்கீட்டுக்கு மதிப்பு அளித்து இடைவெளி விட்டு தொடர்ந்தார். அந்தக் குட்டிப் பெண்ணுக்கு அவர் இல்லாமல் போய் விட்டார்.

அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடவுள், தான் அதிகமாக நேசிப்பவர்களை சீக்கிரமாக அழைத்துக் கொள்கிறார் போலும்.

ஞாயிறு, பிப்ரவரி 11, 2007

சுடர் நகர்கிறது

கவிதாவின் சுடரில் எனக்கு ஒளி

எப்படி உங்களால், எழுத்து, வியாபாரம், நண்பர்கள், பிற பொது பணிகள், வெளி ஊர் பயனம் என்று எல்லாவற்றையும் ஒருவித நிதானத்துடன், தடையில்லாமல் செய்ய முடிகிறது?

'எல்லாம் சரிதான், பதட்டத்தில் கோட்டை விட்டு விடுவாய்' என்பதுதான் என் மீதான அப்பா அம்மாவின் விமரிசனம். சின்ன வயதில் நிதானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள்தான் நான்.

'பதட்டப்படுவதால் ஆக வேண்டிய எதுவும் நடக்கப் போவதில்லை' என்ற உண்மை உறைத்த பிறகு, உறைப்பதற்கான வழிகளைத் தேடிய பிறகு நிதானம் தொற்றிக் கொண்டது. 'நம்ம வேலை ஆக வேண்டியதுதான், அதற்குச் சிறந்த வழி அமைதியாக நமது பங்கைச் செய்து கொண்டு போவதுதான்' என்ற புரிதல் வந்த பிறகு பதட்டம் மறைந்து விட்டது.

வேலை செய்கிறேன். அதற்கான வெளியூர் பயணங்களும் நடந்து விடுகின்றன. நண்பர்கள் மிகக் குறைவு. பொதுப் பணிகள் எதுவும் பெரிதாகச் செய்ய ஆரம்பிக்கவில்லை இன்னும்.

உங்களிடம் அதிகம் கவனித்தது, உங்களின் perfection. அதற்குக் காரணம் என்ன என்று எதை சொல்வீர்கள். உங்களின் கல்விமுறை, வளர்ப்பு முறை, இல்லை உங்களை நீங்களே தயார் செய்து கொண்டீர்களா?

என்னிடம் perfection (முழுமை) இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெற்றிகரமான தொழில் முனைவர்கள், அரசியல்வாதிகள், படைப்பாளிகள் கடைப்பிடிக்கும் ஒழுங்குடன் ஒப்பிடும் போது நாமெல்லாம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைக் குறைக்கும் பயணத்தில் சிறிது தூரம் வந்திருக்கிறேன் என்று உங்கள் கேள்வியிலிருந்து தெரிகிறது. எனக்குள் இன்னும் பல படிகள் மேம்பட வேண்டும் என்று தவிப்பு.

அரைகுறையாக வேலை பார்ப்பதன் அடிப்படை காரணம் சோம்பேறித்தனம்தான் என்று நினைக்கிறேன். செய்யும் வேலையில் சோம்பலை ஒழித்து முழுக் கவனம் செலுத்தினால் முழுமை அடைந்து விடலாம்.

உங்களின் எல்லா பதிப்புகளுமே..மிக சிறந்தவை, பயனுள்ளவை என சொல்ல கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆனால் அதிகமாக யாரையும் சென்று அடையவில்லை என்பது எங்களுடைய கனிப்பு. பயனுள்ள பதிவுகளை படிப்பவர்களை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

எழுத ஆரம்பித்தது, சென்ற ஆண்டு ஏப்ரலில். நான் எதிர்பார்த்தற்கு மேலேயே அங்கீகாரங்களும் படிப்பவர்களும் நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். உங்களைப் போல சொல்லிச் சொல்லி எனது பதிவுகளைப் படிப்பவர்களும் அதிகமாகி விட்டார்கள்.

படிப்பவர்கள் விரும்பும் வண்ணம் எழுதுவது இன்னும் அதிகமான பேரைப் படிக்கத் தூண்ட முதல் படி. தீவிரமான பொருளையும் எளிமையாக எழுதினால் எல்லோரும் படிப்பார்கள்.

ராகவன் சார் - பதிவுகளுக்கு பின்னூட்டமே இல்லை அதனால் போலி ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார் மற்றும் அவரை குறை கூறி வரும் பலர் போலி பெயர்களில், போலி பதிவுகள், பின்னூட்டங்கள் போடுகிறார்கள்- இது பற்றி உங்கள் கருத்து.

பெயரிலியாகவோ, மாற்றுப் பெயரிலோ எழுதுவது அவரவர் விருப்பம். அதைக் கட்டுப்படுத்த நினைப்பது தவறு என்பது என்னுடைய கருத்து. மறுமொழி மட்டுறுத்தல், பெயரிலி பின்னூட்டங்களை கட்டுப்படுத்தல் இரண்டுமே தவறு என்று ஆரம்பம் முதலே நான் நம்பி வருகிறேன்.

ஒருவரது பெயரைப் பயன்படுத்தி அவர் எழுதுவது போல ஆள்மாறாட்டம் செய்வது, அடுத்தவரைப் புண்படுத்தும்படி எழுதுவது இவற்றை தவிர்த்து விட்டால் மாற்றுப் பெயரில் எழுதுவதால் என்ன தவறு?

டோண்டு சார் மாற்றுப் பெயரில் எழுதுபவர்களை எதிர்த்துக் கொண்டே மாற்றுப் பெயரில் எழுதியதுதான் பலருக்கு வருத்தம் என்று படுகிறது.

சொந்தப் பெயரில் எழுத முடியாதை எழுதாமலே இருப்பது என்பது என் கொள்கை.

எப்போதும் சீரியசாக இருக்கும் உங்களை, நகைசுவை பதிவு ஒன்று போட சொன்னால் போடுவீர்களா?.. போடுவேன் .என்றால் எப்போது?. இல்லை என்றால் ஏன்?

முடிந்தால்தானே போட முடியும்.

நகைச்சுவைக்கு சிறப்பான மனநிலை வேண்டும். 'ஏதோ உலகமே நம்ம தலையில்தான் ஓடுகிறது' என்று சுமந்து கொண்டு திரிபவர்களுக்கு நகைச்சுவை சாத்தியமாகாது. எழுத்திலும், பேச்சிலும் நான் நகைச்சுவை முயன்றால் அது யாரையாவது மோசமாக புண்படுத்துவதில்தான் போய் முடிகிறது. அதை விட நகைச்சுவை முயற்சிகளை தவிர்த்து விடுவதுதான் நல்லது என்று முடிவு செய்தேன்.

நான் சுடர் ஏற்ற அழைப்பது ஓசை செல்லா.
 1. இணைய உலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உங்கள் சிறப்பு அனுபவங்களைப் பற்றி ஏன் அதிகமாக எழுதுவதில்லை?
 2. உங்கள் வலைப்பூவில், கையில் கருவியோடு இருக்கும் புகைப்படத்தை எடுத்தது யார்?
 3. உங்கள் இணைய ஊடக அறிவைப் பயன்படுத்தி பெரியாரது கொள்கைகளை பரப்ப ஏன் முயல்வதில்லை?
 4. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, உங்களுக்கு?
 5. இணையத்தில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்தும் கும்பல்களை எப்படித் தடுத்து நிறுத்தலாம்?

வெள்ளி, பிப்ரவரி 09, 2007

கலப்பு திருமணம்

இயல்பான திருமணம் என்றால் என்ன? கலப்பு திருமணம் என்றால் என்ன?

'ஒரு ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து இணைந்து வாழ்வது இயல்பான திருமணம். மனிதரும் விலங்கும் சேர்ந்து வாழ்வது கலப்புத் திருமணம்.'

அப்படி வரையறுத்தால் டோண்டு சொல்வது போலக் கலப்புத் திருமணங்களால் பிரச்சனைகள் இருக்கலாம். ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையை கலப்புத் திருமணம் என்று சொல்வது நமது சமூக அவலத்தைத்தான் காட்டுகிறது.
 • திருமண வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் புரிதல்கள், அன்பு, காதல் அல்லது அவை இல்லாமல் இருப்பது மட்டுமே காரணமாகும்.
 • ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டும் இவை இல்லாமல் பிரிந்து போனவர்கள் உண்டு.
 • வெவ்வேறு மொழி, மதம் சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் காதல் வாழ்வு நடத்தும் தம்பதிகளும் உண்டு.
இதைப் பற்றிக் கருத்து சொல்ல எனக்குத் தேவையான அனுபவம் உண்டு. ஒரே சாதியில், சின்ன வட்டத்துக்குள் திருமணம் செய்து கொண்ட பல உறவினர்களின் திருமணங்கள் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் ஒத்துப் போகாமல் முறிந்து போனதைப் பார்த்திருக்கிறேன்.

திருமணம், தனிநபர்களின் இணைப்பு மட்டுமில்லை, குடும்பங்களின் சேர்க்கை என்பது சரிதான். நம்ம ஊர் வழக்கமான சாதிக்குள்ளான திருமணங்களில் குடும்பங்களும், சமூகமும் பங்கு பெறுவதால் மண வாழ்க்கையில் ஏதேனும் சின்ன பிணக்கு வந்தால் அதைச் சரி செய்து கொள்ள அவர்களின் ஆதரவு கிடைக்கிறது. சாதி விட்டு செய்யப்படும் திருமணங்களில் இரு வீட்டாரும் ஒதுங்கி விடவோ, எதிரெதிராக நிற்கவோ செய்வதால் சின்ன பொறிகளும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வாழ்க்கையை குலைத்து விடுகின்றன.

குடும்பங்கள் நட்பாக இருந்து, சேர்ந்து பழகி இருந்த சொந்தத்தில் திருமணம் புரிந்தால், இரு குடும்பத்தாரும் நல்ல உறவோடு தொடர்ந்து வாழ்ந்தால் சாதி விட்டு சாதி திருமணம் புரிந்தாலும் சிறப்பான வாழ்க்கை அமையும்.

கலப்புத் திருமணம் செய்து கொண்டால் சாப்பாட்டு பிரச்சனையில் சண்டை வரும், குழந்தை வளர்ப்பில் கருத்து வேற்றுமை வரும் என்பதெல்லாம் வெற்று வாதங்கள். எந்த திருமணத்திலும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போய் விட்டால், அதை வெளிப்படுத்த சாப்பாட்டையோ, குழந்தைகளையோ முன்னிறுத்திக் கொள்வார்கள். ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு மனைவி சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட மாட்டேன் என்று வாழ்நாள் முழுவதும் உணவு விடுதியில் சாப்பிட்ட ஒரு உறவினர் கூட உண்டு.

புரிதலும் அன்பும் காதலும் இருந்தால் எந்த சாதிக்குள்ளும் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும். சுயநலமும், மூர்க்கமும், சின்னப் புத்தியும் இருந்தால் ஒரே சாதிக்குள்ளோ, வெவ்வேறு சாதிக்குள்ளோ வாழ்க்கை உடைந்தே தீரும்.

சாதி ஒழிய வேண்டும்.

செவ்வாய், பிப்ரவரி 06, 2007

ஊர் கூடி.. 7 - தேரிழுத்தோம்

http://kaniporul.blogspot.com/2010/08/7.html

வழி சொல்லுங்கள்

Bad News India இந்தப் பதிவைக் குறிப்பிட்டு எழுத பல அன்பர்கள் தமது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

ஒதுக்கித் தள்ளி விடுவதுதான் தீர்வு என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அனானி ஒருவர் சொல்வது போல இத்தகைய தாக்குதல்களைக் கண்டு வலைப்பூவிலகிலிருந்தே விலகி விடுபவர்களும் இருக்கிறார்கள். அதற்காகவாவது இதை நிறுத்த வேண்டும்.

இவை வலைப்பதிவுலகில் மட்டுமில்லாமல், சென்னை நகரப் பேருந்துகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் பெண்கள் தினமும் சந்திக்கும் வலிகள். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் பொறுப்புடையவர்களாகிறோம். இத்தகையவர்களை அடையாளம் கண்டு கொண்டு, இத்தகையவர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு, விளங்க வைப்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

இதை எழுதுபவர்கள் மீது விரலைச் சுட்டும் அதே நேரம் நம்மைச் சுட்டும் மூன்று விரல்களையும் கவனிப்போம். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? நம் சமூகத்திலிருந்துதானே! இவர்களைப் பெற்ற தாய் தந்தையருக்கு இவர்களின் மன விகாரம் தெரியுமா? அவர்களுக்கு பொறுப்பு உண்டா? தமிழ் சமூகத்துக்கு பொறுப்பு உண்டா?

அடாவடிச் செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும் வீட்டில் பிற உறவுகளும் இந்தப் பையனா இப்படிச் செய்தான் என்று மாய்ந்து போவதைப் பல முறை செய்திகளில் படித்திருக்கிறோம். ஒரேயடியாக வில்லன்கள் என்று ஒதுக்கி நமது மனதை சமாதானப்படுத்திக் கொள்ளாமல் முன் முயற்சிகள் எடுத்து இந்த ஆரோக்கியமற்ற போக்கைக் குணப்படுத்த வேண்டும்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வழி தெரிந்தால் சொல்லுங்கள்.

திங்கள், பிப்ரவரி 05, 2007

டாலர்கள் வேண்டாம், உங்கள் திறமை வேண்டும்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு உழைக்கும் தமிழர்கள்
 1. இந்தியாவில் அரசியல் பொருளாதரச் சூழல் சரியில்லை என்று 1990களுக்கு முன்பு அமெரிக்காவுக்குப் போனவர்கள் ஒரு வகை.
 2. 1990களுக்குப் பிறகு மென்பொருள் துறையில் பணி புரிய அமெரிக்காவுக்குப் போனவர்கள் அடுத்த வகை.
 3. கடந்த சில ஆண்டுகளாகப் பெருகி வரும் இந்தியாவிலிருந்தே அமெரிக்காவுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுப்பவர்கள் மூன்றாவது வகை.
அப்படி அமெரிக்க சமூகத்துக்காக தமது அறிவாற்றலையும் வாழ்நாளையும் கழிப்பவர்களின் வாழ்க்கைத் தரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், கிராமத்தினர் வாழ்க்கையும் அதனோடு ஒட்டி மேம்பட்டிருக்கிறது. அமெரிக்க சமூகத்துக்குப் பலன் கொடுக்கும் வேலைக்குக் கொடுக்கப்படும் பணத்தின் விளைவுகள் இவ்வளவு.

அந்த பலன் அமெரிக்க சமூகத்துக்கு எவ்வளவு என்று நினைத்துப் பாருங்கள்.
 • 'அதே வேலையை, அதே மனிதர்கள் இந்தியாவில் செய்தால் அதே பலன் கிடைக்காது, இங்கு சூழல்கள் சரியில்லை, அரசாங்கம் சரியில்லை'
 • 'இந்தச் சூழலை சரி செய்து கொண்டிருப்பது என் வேலை இல்லை. எனக்குத் தெரிந்த வேலையை செம்மையாகச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் இடத்துக்குப் போவது என் விருப்பம்'

  என்பது தனிமனித உரிமை.
வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான இந்தியர்கள் தமது குடும்பங்களை இந்தியாவிலேயே விட்டு விட்டுப் பணி புரிவதால் தமது வருவாயின் பெரும்பகுதியை (பொருளாதாரச் சூழல் எப்படி இருந்தாலும்) இந்தியாவுக்கு அனுப்பி வந்தார்கள், வருகிறார்கள். மேலை நாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் வட்டி வீதம், வங்கிக் கொள்கைகள் மாறிய பிறகுதான் பணம் இந்தியாவில் முதலீடு செய்வதை அதிகப் படுத்தினார்கள் என்பது பொதுவான போக்கு.

எங்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கு திறமையையும், பணத்தையும் முதலீடு செய்வோம் என்பது மனித குலத்தின் குடிமக்களாக வாழுவதற்கு அடிப்படை. நாட்டுப் பற்று என்று பேசும் சொந்தம் அப்படி இருப்பவர்களுக்கு கிடையாதுதான்.

'எங்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறதோ, எங்கு பொருள் ஈட்ட முடியுமோ அங்கு எங்கள் வாழ்க்கையைச் செலுத்துகிறோம் என்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் வழியில் போகிறோம் ' என்று சொல்லலாம்.

நம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள திரைகடலோடியும் திரவியம் தேடுவது சரியாக இருக்கலாம். ஆனால், நம்மை வளர்த்த, ஆளாக்கிய சமூகத்திற்கான கடனை மறந்து விடக் கூடாது. ஆண்டு தோறும் தர்ம காரியங்களுக்குப் பணம் கொடுப்பதாலோ, சென்ற இடத்தில் தமிழ்க் கோயில் கட்டுவதாலோ அந்த கடன் தீர்ந்து விடாது. உங்கள் திறமையில் ஒரு பகுதியை இந்தியப் பொருளாதாரத்துக்குச் சமூகத்துக்குப் பலனளிக்கும் வேலைகளில் செலவிடுங்கள்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான சேவைகளைச் செய்ய முடிகிற இந்த கால கட்டத்தில் அமெரிக்காவில் இருந்து கொண்டு நமது சமூகத்துக்குத் தேவையான திட்டப் பணிகளில் ஈடுபடுவது நிச்சயமாக முடியும். இந்திய இளைஞர்களின் திறமை BPO மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவது போல, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய அறிஞர்களின் திறமை மறு திசையில் நமது சமூகத்துக்கு வந்து சேர வேண்டும். ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒரு சில மணி நேரம் செலவளித்தால் கூட, பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்து விடலாம்.

மென்பொருள் நிறுவனங்களில் BPO நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களும் தமது நேரத்தில் ஒரு பகுதியையாவது நமது சமூகத்துக்குப் பயன்படும் வகையில் செலவிட்டு, தமது அறிவுத் திறமையையும் ஆற்றலையும் தம்மை வளர்த்த சமூகத்துக்கு தர முயற்சிக்கலாம்.

ஞாயிறு, பிப்ரவரி 04, 2007

வலைப்பதிவர் சந்திப்பில் பதிந்தவை

சிவஞானம்ஜி
கணினியில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டதால் நீண்ட நாட்கள் தள்ளிப் போட்டிருந்த ஒரு வேலை முடிக்க முடிந்தது. சென்னை பல்கலையில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதலாம். ஆனால், வகுப்பில் தமிழில் சொல்லித் தரும் படி ஆசிரியரைக் கேட்க முடியாது. அந்த நிலை மாற ஆசிரியர்கள் பயன்படுத்த தமிழில் பாடப் புத்தகங்கள் வேண்டும்.

அப்புறம் பருவ முறை வந்ததும் புத்தகத்தை மாற்றி எழுத வேண்டியிருந்தது. எழுதுவதற்கு யாரும் முன் வரவில்லை. 'முந்நூறு ரூபாய்க்கு யார் மெனக்கிடறது' என்று ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.

கணினித் தமிழ் மூலம் ஐயா அந்த வேலையை முடித்து விட்டார்.

ஐகாரஸ் பிரகாஷ்

ஐகாரஸ் என்பதற்கு பெயர் காரணம் கேட்டவர்களில் நான் ஐம்பதாவது ஆள். அதற்கு ஒரு விருந்து வைப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் பல துறைகளில் என்னென்ன திட்டப் பணிகள் வரவிருக்கின்றன என்று துப்பு அறிந்து அந்தப் பணிகளுக்குத் தேவையான கருவிகள், பொருட்கள், சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தெரிய வைக்கும் புதுமையான அதிகம் அறியப்படாத தொழில் செய்து வருகிறாராம். வரிசையாக சிகரெட்டுகளை உருவிக் கொண்டே இருந்தார்.

டோண்டு ராகவன்
வெற்றிகரமாக புதிய பிளாக்கருக்கு மாறி விட்டார். மென்பொருள் பயன்பாட்டின் அருமைகளை உணரக் கூடிய வல்லமையுடன் புதிய பிளாக்கரின் புது வசதிகளை விவரித்தார். தரையில் உட்கார சிரமப்பட்டு எல்லோரின் அன்பு அழைப்பையும் ஏற்று உட்கார்ந்து கொண்டார். புதிய பிளாக்கரிலாவது அனானி/அதர் தேர்வுகளை கொடுக்க மாட்டீர்களா என்ற லக்கிலுக்கின் வேண்டுகோளை பரீசிலிப்பதாகச் சொன்னார்.

விக்கி என்ற விக்னேஷ
பிப்ரவரி 24 அன்று சென்னையில் விக்கிகேம்ப் நடக்க இருக்கிறதாம். விக்கிபீடியாவின் தந்தை வருகை தருகிறாராம். விக்கிபீடியாவின் அடுத்த நிலைகள் பற்றி பேசப் போகிறார்களாம். தமிழ் விக்கிபீடியாவுக்கும் ஒரு புத்துயிர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டோம்.

தற்கால அரசியல் வரலாற்றைப் பற்றிய புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டோம்.

சோமீதரன்
பிபிசிக்கு வேலை பார்த்து மூன்று ஆண்டுகளாக நிஹாரி என்ற நிறுவனப் பெயரில் ஆவணப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார். சமூக அக்கறைப் படங்களைக் கைக்காசு போட்டுக் கூட எடுக்கிறார். தன்னார்வ நிறுவனங்கள், செய்து நிறுவனங்களுக்காக நிதி உதவி பெற்றும் படங்கள் உருவாக்குகிறார்கள். இதைத் தவிர வணிக நிறுவனங்களுக்குத் தேவையான படங்கள் எடுப்பதில் பொருள் ஈட்ட முடிகிறதாம்.

நாலு லட்சம் பேருக்கு என்ன ஆகிறதோ அது எங்களுக்கும் ஆகட்டும் என்று யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட்ட அம்மா அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மரபூர் சந்திரசேகரன
தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய தகவல்களை திரட்டி சிதைந்து போனவற்றைப் புதுப்பிக்கும் பணியை ஒரு குழுவாக ஆரம்பித்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் வெள்ளை அடித்து அது காயும் முன் சித்திரம் வரையும் முறையில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளைப் பற்றிக் கூறினார். விஜயநகர ஆட்சியின் மீது அதன் மீது இன்னொரு பூச்சு அடித்து அவர்கள் பங்குக்கு வரைந்தார்களாம்.

பிற்காலத்தில் வௌவால் எச்சங்கள் படிந்து ஏதோ கல் தூண் போலக் காட்சியளித்ததாம். அதை மேல் நாட்டு ஆராட்சியாளர் ஒருவர் சுரண்டிப் பார்க்க உள்ளே இருந்த ஓவியங்கள் வெளி வந்திருக்கின்றன. விஜயநகர ஓவியங்களைத் தனியாக பிரித்து எடுக்கும் பணியையும் செய்து முடித்தார்களாம்.

செந்தழல் ரவி
hireafreelancer.com என்ற தளத்தில் போய் திட்டப் பணிகளைப் பிடிக்கலாம். வீட்டிலிருந்த படியே கணினி, இணைய வசதியுடன் எளிதாக மாதம் ஐநூறு டாலர்களுக்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றார். மேலும் திறமை கொண்டவர்கள் இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.

வேலை வாய்ப்பு மடல்களுடன் தனது அனுபவப் பதிவுளையும் தொடர்ந்து எழுத கேட்டுக் கொண்டோம்.

முத்து தமிழினி.
வேங்கை வெளியே வருவது போல மீண்டும் வலைப்பதிவுகளின் புத்துணர்ச்சியுடன் இறங்கி விளையாடப் போகிறார்.

பாலராஜன் கீதா
வங்கித் துறை, மென்பொருள் துறை என்று பரவி, சவுதிஅரேபியாவில் பத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு சென்னையில் சொந்த நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.

சனி, பிப்ரவரி 03, 2007

female verbal molestation

அழுக்கு மனங்கள்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாமல் வன்முறையை அவிழ்த்து விடுவது பலவீனத்தைக் காட்டுகிறது. வன்முறை, கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்துதல் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் காட்டுகிறது.

ஒரு பெண் பதிவரிடமிருந்து வந்த மடல் கீழே தரப்பட்டுள்ளது. அவரது பெயரைக் குறிப்பிடவில்லை.

சில சொற்களை மட்டும் (தேடல் இயந்திரங்களுக்காக) நீக்கியுள்ளேன். படித்து தலை குனிவோம்.

QUOTE

Dear friends,

I have had enough. I have been patient, indifferent and indirect in showing my repulsion to this kind of female molestation in our tamil manam blog world. But nobody is doing anything about it.

People are trying to protect each other even though they are aware of the extent of nastiness that these guys are capable of. I want action. If we dont keep our own house clean, who else will?

I want this guy to be questioned. I want everybody to know about these guys.
I want women molestation to stop in tamil blogs.
I believe it is not too much to ask.

I am forwardin you a nasty email content. I am sorry to send this to you.

I have had four emails.
I have had plenty of comments from this exact same fellow.

I want you to do something. Anything. Just lets show that we are not ashamed.

I am absolutely not ashamed of this going public. I want this guy to be put in front of public.
I want him to stop it. I want all his friends to stop this nonsense.

Tamilmanam is a wonderful place with a lot of wonderful people.
I think its just 0.1% who are this crazy.

PLEASE DO SOMETHING. Yes read the nasty attachement.
If you want to figure out the IP address tell me how else I can forward it to you.
I am not naming anybody. But its too easy a guess, or somebody is abusing this too easy to guess person. I have no idea

best,
your colleague at tamilmanam

Note: forwarded message attached.

Looking for earth-friendly autos?
Browse Top Cars by "Green Rating" at Yahoo! Autos' Green Center.

---------- Forwarded message ----------
From: "samuga sevai"
To:
Date: Wed, 31 Jan 2007 17:34:57 +0800
Subject: helloooo

_____யியும் ____யும் தவிர வேற எதுவுமே தெரியாத அரிப்பெடுத்த தெவ்டியாடி நீ.
பழுக்கக் காய்ச்சின இரும்பு ராட எடுத்து உன் ___யில செருகிட்டா போதும். தெளிவா ஆயிடுவ.


உன் ரெண்டாவது(?) புருஷன் prax அவ்ளோ wimp -பா அந்த நாய் ?

உனக்கெல்லாம் 32க்கு மேல கொழந்தையும் பொறக்காது, ஒரு கொரங்கும் பொறக்காது. அந்த கம்னாட்டி எதுக்குதான் வாழரானோ.

பொறந்தாலும் அது தெவ்டியாவாதான் போகும் - அது ஒன்னும் தப்பில்ல - இருந்தாலும் உன் புருஷனே உம் பொண்ண காசு கொடுத்து _____. That'll be interesting,no?