புதன், டிசம்பர் 19, 2007

நரேந்திர மோடியும் அத்வானியும் எப்படி குற்றவாளிகள் (என் பார்வையில்)

நரேந்திர மோடி குறித்த பதிவில் நடந்த விவாதங்களில் படிப்பதற்கு இடியாப்பச் சிக்கலாகிப் போய் விட்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்த இந்த இடுகை.

ஒரு சின்ன வேண்டுகோள்:

நாம் வலைப்பதிவுகளில் விவாதிப்பதால் நரேந்திர மோடியின் வெற்றி தோல்வியோ, அப்சல் குரு வழக்கின் முடிவோ தீர்மானிக்கப்பட்டு விடப் போவதில்லை. எனக்கு சரி எனப்படுவதை நான் எழுதுகிறேன். அதில் என்ன தவறு என்று உங்களுக்குப் படுகிறதோ அதை விளக்குங்கள். தேவையில்லாமல் என்னையோ, மற்றவர்களையோ திட்டுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை. அப்படித் திட்டுவதால் எனக்குப் பெரிய வருத்தமும் இல்லை.

என்னுடைய பார்வையில் ஏன் அத்வானியும், நரேந்திர மோடியும் குற்றவாளிகள், தேசத் துரோகிகள்?

  • வல்லவன் வகுத்ததே நீதி என்று இருப்பது ஒரு முறை - பழைய மன்னராட்சி
  • கூட்டத்தில் அதிகமான பேர் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நீதி என்று இருப்பது இன்னொரு முறை - கும்பல் சார்ந்த அமைப்புகள் (தோல்வியடைந்த சீன, சோவியத் பரிசோதனைகள்)
அந்த முறைகளில் என்ன குறைபாடு என்றால் அமைதியும் திடத்தன்மையும் நீடிக்க முடியாமல், அடிக்கடி போர்களும் அழிவும் ஏற்படும். நீடித்த அமைதி இல்லாமல் முன்னேற்றமும், வளர்ச்சியும் குன்றி விடும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று சமூகம் பின்தங்கியே இருக்க நேரிடும்.

அவற்றுக்கு மாற்றுதான் அரசியலமைப்பு ஒன்றை வகுத்து, ஒரு பகுதியின் எல்லா மக்களும் அதை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்படுவது. அரசியல் சட்டப்படி ஒவ்வொரு பணியையும் செய்ய தெளிவாக வரையறுக்கப்பட்ட முறைப்படி வெவ்வேறு பதவிகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • சட்டம் இயற்ற சட்டசபை/நாடாளுமன்றம்,
  • நிர்வாகத்தை நடத்த அரசு அதிகாரிகள்,
  • வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றம்,
  • இவை எல்லாவற்றையும் கண்காணிக்க ஊடகத் துறை,
  • நாட்டுக்கு பாதுகாப்புக்கு படைகள்
    என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இந்த அமைப்பை ஏற்றுக் கொண்ட மக்கள் அனைவரும் வகுக்கப்பட்ட நெறிமுறைப்படி வேலைகள் நடக்கும் என்று நம்பி தமது தொழில், தனி வாழ்க்கையை கவலையின்றி பார்க்கலாம்.

பக்கத்து வீட்டுக்காரருடனோ, மாற்று குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்தால், 'அவர் ஆள் திரட்டி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வார்' என்ற அச்சமில்லாமல், இரண்டு பேரும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நீதித் துறையை அணுகி பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெற முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்க முடியும்.
  1. 'நீதிமன்றமாவது ஒன்றாவது, மக்களின் நம்பிக்கைக்கு முன்பு வேறு எதுவும் நிற்கக் கூடாது. ஆளைத் திரட்டி நாங்கள் அவமானம் என்று கருதும் ஒரு கட்டிடத்தை இடித்துப் போடுவோம். எங்கள் கருத்தை ஏற்காத மக்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை' என்று செயல்பட்டவர்கள் (அத்வானி தலைமையிலான கூட்டம்) அரசியலமைப்பை அசைத்துப் பார்த்தார்கள்.

    அவர்கள் செய்ததை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
    என் முடி அலங்காரம் பிடிக்கவில்லை என்று நான்கு தெருவில் இருக்கும் மக்கள் கூட்டமாக வந்து எனக்கு மொட்டை அடித்து விட்டால் அதுவும் நியாயமாகி விடும்.

  2. 'குறிப்பிட்ட நபர் தீவிரவாதி என்று நான் தீர்மானித்தேன். அவர் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கிறார் என்று நான் தீர்மானித்தேன். அதனால் அவரைக் கொன்று விட்டோம். அது சரிதான் என்று கூட்டத்தினரை கூச்சலிட வைப்பேன்' என்று சொன்னவர் (நரேந்திர மோடி), தான் பாதுகாப்பதாக பிரமாணம் செய்து பதவி ஏற்ற அரசியல் சட்டத்தை உடைத்தார்.

  3. 'குறிப்பிட்ட நிகழ்ச்சி, குறிப்பிட்ட குழுவினரால் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் நினைத்தேன், அதனால் அந்தக் குழுவினரைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்க கூட்டம் வெறி கொண்டு திரிந்த போது, அதிகாரத்தில் இருந்த நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். கொஞ்சம் ஆதரவும் கொடுத்தேன். அப்படி இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்' என்று சொல்லும் முதலமைச்சர் (நரேந்திர மோடி) இந்திய இறையாண்மையை உடைத்துப் போட்ட பெருங்குற்றவாளி.
இந்த வாதங்களில் என்ன தவறு என்று பொறுமையாக விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

தொடர்புடைய முந்தைய இடுகைகள்

86 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நாம் வலைப்பதிவுகளில் விவாதிப்பதால் நரேந்திர மோடியின் வெற்றி தோல்வியோ, அப்சல் குரு வழக்கின் முடிவோ தீர்மானிக்கப்பட்டு விடப் போவதில்லை. எனக்கு சரி எனப்படுவதை நான் எழுதுகிறேன்

The tone's started changing b'cos of Modi expected win in Gujarat....

Not only you everyone who belived the newspapers, rather than real one in Gujarat.

So you guys change the tone to slow down.......

பெயரில்லா சொன்னது…

நீங்கள் குறிப்பிடும் இருவர்களின் தீவிரவாதப்போக்கிற்கான பின்னணி என்ன?

இஸ்லாமிய விரிவாக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு பாகிஸ்த்தானையும் வங்காளதேசத்தையோ உருவாக்கும் என நினைப்பதில் தவறு இருக்கிறதா?

மதச்சார்பற்ற நாடு என 80விழுக்காடு இந்துக்கள் பிரகடணம் செய்திருப்பது மகிழ்ச்சியே!.
ஆனால் வெளினாட்டில் இருந்து கொண்டுவரப் பணத்தைப் பயன்படுத்தி படிப்பறிவற்ற இந்திய மக்களை மதமாற்றம் செய்வது அனுமதிக்கலாமா?

manjoorraja சொன்னது…

நீங்கள் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பதே என் நிலையாக இருந்தாலும் இவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதற்கான காரணம் என்ன என்பதை பற்றி ஆராய்ந்தறிவதும் முக்கியமல்லவா?

பெயரில்லா சொன்னது…

நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், சம்பவங்கள் நடந்த இடத்திற்க்கு அருகாமையில் இருக்கும் ஒருவரின் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள்.

நரேந்திர மோடியை 'தேசத் துரோகி' என்று சொல்வதன் மூலம் அவருக்கு எதிராக நீங்கள் உங்களை நிறுத்தி கொள்கிறீர்கள். அவருடைய பேச்சையோ, அல்லது தேர்தல் ஆணையத்திற்க்கு அவர் அளித்த பதிலையோ நீங்கள் ஆராய முற்படவில்லை. பத்திரிகைகள் எல்லாவித செய்திகளையும் வெளியிடுகின்றன. சிலவற்றை spice-up செய்கிறார்கள். சிலவற்றை sensationalise செய்கிறார்கள். பின்னர் விளக்கம் அளிக்கிறார்கள். அத்துனை தகவல்களையும் நாம் எப்படி அனுகுகிறோமா அதை பொறுத்துதான் நமது நிலைப்பாடு அமைகிறது.

நான்கு தெரு மக்கள் வந்து மொட்டை அடித்து அந்த தலையில் அடையாளமாக பச்சை குத்தி விட்டு செல்கிறார்கள். அந்த சின்னத்தை எப்படி எதிர்கொள்வது என்பது அவரவரின் பாதிப்பிற்க்கு ஏற்றவாறு செயல்கள் அமைகின்றன.

நான் பின்பற்றும் மதத்தையோ, அல்லது எனது கொள்கைகளையோ பாதிப்படைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது அண்டைய நாட்டின் பிரதம மந்திரி என்றாலும் போட்டு தள்ளிவிடுவேன் என்பது சிலரின் நிலைப்பாடாக இருக்கலாம். உங்கள் சௌகர்யத்திற்கு ஏற்ப நீங்கள் உங்கள் கேள்விகளை அமைத்து கொள்ளலாம்.

ஆனால், அரசு அமைப்பில் இருக்கும் ஒருவர் இப்படிபட்ட செயல்களை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்கலாமா? இந்த குற்றசாட்டும், அதற்கான பதிலும் நிறைய இடங்களில் காணக் கிடைக்கிறது.


secularism என்பது வோட்டு வேட்டைக்கான minorty appeasement ஆக மாறும்பொழுது நேர்கின்ற எதிர்வினைகள்.

கேள்விக்கு நேரிடையான பதில். ஆம். அவர்கள் இருவருமே தவறு செய்திருக்கிறார்கள் எனது பார்வையில். Modus Operandi - அதற்கு முன்னர் நிகழ்ந்த பல தவறுகள். அவ்வளவே!

பெயரில்லா சொன்னது…

Ayya,

Just as you said- the DK and periyar cur the tuffs of many brahmins ( Just as you mentioned mottai). Do you have anything against them? Can you write mentioning the Lord Periyar as a criminal? or atleast an acceptance of the view by giving affirmation to this comment?
Hope you wont. Bcoz most people are not what they think they are- the nuetral. All are just biased and follow groupism just like Advani and Modi whom you mentioned criminals.

வவ்வால் சொன்னது…

மா.சி,
சரியாக தான் சொல்லியுள்ளீர்கள். மதச்சார்பிண்மை பேசும் ஒரு நாட்டில், அரசியல் சட்டப்படி பதவி ஏற்ற ஒருவர் இப்படி செயல்ப்பட்டது குற்றமே.

அவன் தூண்டினான், நான் அடித்தேன் என்பது தனி மனித உணர்வுகளுக்கு தான் சரியாக வரலாம்(அதுவே தவறு, சட்டத்தினை கையில் எடுப்பது.), ஒரு அரசின் தலைமைக்கு வரக்கூடாது. நிதானம் இழக்காமல் செயல் பட வேண்டும்.

அரசாங்கமும் அப்படித்தானே முறைப்படி கைது செய்து வழக்கு போட வேண்டாமா?

ILA (a) இளா சொன்னது…

மாசி அண்ணே,
நீங்க சொல்றது சரிதான். ஒரு மதத்தை காப்பறுகிறேன்னு சொன்ன காப்பாத்திக்கட்டுமே. யாரும் வேண்டாம்னு சொல்லலை. அதுக்கு ஏன் அடுத்தவங்களை இம்சை படுத்தனும். இம்சை படுத்தினா அது குற்றவாளிங்கதான்.

Me சொன்னது…

//நீங்கள் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பதே என் நிலையாக இருந்தாலும் இவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதற்கான காரணம் என்ன என்பதை பற்றி ஆராய்ந்தறிவதும் முக்கியமல்லவா//

ஐயா,

அதீதமான மதவெறி இருந்தால், ஒசாமாவை போல் வெளிப்படையாக தீவிரவாதக் குச்சியெடுத்து சொறிந்து கொள்ளுங்கள். ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் ஏன் தீவிரவாதிற்கு பல்லக்கு தூக்குகிறீர்கள்.

வெத்து வேட்டு சொன்னது…

If "majority" of the people decided that Modi was wrong then how can Modi win?
if Modi wins that means majority approved his ACTIONS..
TERRORIZE THE TERROISTS...

பெயரில்லா சொன்னது…

//
இடியாப்பச் சிக்கலாகிப் போய் விட்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்த இந்த இடுகை.
//

ஒரு இடியாப்பச்சிக்கலோ புரோட்டா குழம்போ இல்லை. உங்கள் தவறை நீங்கள் ஒத்துக் கொள்வதில் தான் எல்லா சிக்கலும்.


//

நீதிமன்றமாவது ஒன்றாவது, மக்களின் நம்பிக்கைக்கு முன்பு வேறு எதுவும் நிற்கக் கூடாது. ஆளைத் திரட்டி நாங்கள் அவமானம் என்று கருதும் ஒரு கட்டிடத்தை இடித்துப் போடுவோம். எங்கள் கருத்தை ஏற்காத மக்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை' என்று செயல்பட்டவர்கள் (அத்வானி தலைமையிலான கூட்டம்) அரசியலமைப்பை அசைத்துப் பார்த்தார்கள்.

//


அந்த அவமானச் சின்னம் இடிந்ததற்காக தான் வருந்துவதாக பாகிஸ்தான் சென்று தெரிவித்தார் அத்வாணி.


எண்ணற்ற இந்துக் கோவில்களை தரைமட்டமாக்கி, அதில் கிடக்கும் கல்லை வைத்து குதுப் மினார் கட்டின கயவர்களை பாராட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதே செய்வோம் என்றும் சொல்கிறது. கண் முன்னே பாமியான் புத்தர்களை சிதைத்தது. பாகிஸ்தானிலும் உள்ள புத்தர் சிலைகளை உடைத்தது.


//
'குறிப்பிட்ட நபர் தீவிரவாதி என்று நான் தீர்மானித்தேன். அவர் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கிறார் என்று நான் தீர்மானித்தேன். அதனால் அவரைக் கொன்று விட்டோம். அது சரிதான் என்று கூட்டத்தினரை கூச்சலிட வைப்பேன்' என்று சொன்னவர் (நரேந்திர மோடி), தான் பாதுகாப்பதாக பிரமாணம் செய்து பதவி ஏற்ற அரசியல் சட்டத்தை உடைத்தார்.

//

உளராதீர் மா.சி.


அவன் ஆயுதங்கள் பதுக்கிவைத்து செய்தது தீவிரவாதம் என்று அரசியலமைப்பைப் பாதுகாக்கும் நீதி மன்றம் தீர்ப்பே வழங்கியுள்ளது. அவனைப் போட்டுத் தள்ளியது தப்பு தான். அவன் உயிருடன் இருந்திருந்தால் ஒரு 100-150 பேரைக் குண்டு வெடிப்பில் இழந்திருப்போம். அதற்கு அவன் செத்தால் தான் என்ன தப்பு ?
அவனைக் கொன்றது சட்டபடி குற்றம், ஆனால் தர்மப்படி ஞாயம்.


//

'குறிப்பிட்ட நிகழ்ச்சி, குறிப்பிட்ட குழுவினரால் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் நினைத்தேன், அதனால் அந்தக் குழுவினரைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்க கூட்டம் வெறி கொண்டு திரிந்த போது, அதிகாரத்தில் இருந்த நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

//


குஜராத்தில் மதக்கலவரம் என்பது
1714 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி நடந்து வந்து இருக்கிறது.


பா.ஜ.க ஆட்சியில் நடந்த உடனேயே அது அவர்கள் செய்தது ஆகிவிடாது.


அப்படி இதே தரவு கோலைப் பயன் படுத்தினால் காங்கிரஸ் தான் இந்தியாவில் அனைத்து மதக்கலவரத்திற்கும் காரணம் என்று முடிவு செய்யவேண்டி வரும்.

பெயரில்லா சொன்னது…

""""""என் பார்வையில் மா.சி. குற்றவாளி ....""""""""

அவருடைய பேச்சையோ, அல்லது தேர்தல் ஆணையத்திற்க்கு அவர் அளித்த பதிலையோ நீங்கள் ஆராய முற்படவில்லை. பத்திரிகைகள் எல்லாவித செய்திகளையும் வெளியிடுகின்றன. சிலவற்றை spice-up செய்கிறார்கள். சிலவற்றை sensationalise செய்கிறார்கள். பின்னர் விளக்கம் அளிக்கிறார்கள். அத்துனை தகவல்களையும் நாம் எப்படி அனுகுகிறோமா அதை பொறுத்துதான் நமது நிலைப்பாடு அமைகிறது.

பெயரில்லா சொன்னது…

//
ையறுக்கப்பட்ட முறைப்படி வெவ்வேறு பதவிகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சட்டம் இயற்ற சட்டசபை/நாடாளுமன்றம்,
நிர்வாகத்தை நடத்த அரசு அதிகாரிகள்,
வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றம்,
இவை எல்லாவற்றையும் கண்காணிக்க ஊடகத் துறை,
நாட்டுக்கு பாதுகாப்புக்கு படைகள்
என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
//

இவை அனைத்தும் மோடி என்ற ஒருவனுக்கும் பொருந்தும். அவன் குற்றவாளி என்று தீர்மானிக்க நீ யார் ?

பெயரில்லா சொன்னது…

//

அவன் தூண்டினான், நான் அடித்தேன் என்பது தனி மனித உணர்வுகளுக்கு தான் சரியாக வரலாம்(அதுவே தவறு, சட்டத்தினை கையில் எடுப்பது.), ஒரு அரசின் தலைமைக்கு வரக்கூடாது. நிதானம் இழக்காமல் செயல் பட வேண்டும்.

//


http://www.expressindia.com/latest-news/Brinda-prescribes-Dum-Dum-dawai-for-Opposition/236171/

http://www.expressindia.com/latest-news/Buddha-defends-recapture-of-Nandigram/239118/

பெயரில்லா சொன்னது…

உன்னைப் போன்ற பேடிப்பசங்கள் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்துகிட்டாலும், உங்களுக்கு அந்த தற்கொலைப் படைத் துலுக்கனுங்க உதவி செஞ்சாலும் நரேந்திர மோடியின் தாடி முடியைக் கூட நீங்கள் பு@ங்க முடியாது.

புரட்சி தமிழன் சொன்னது…

//Anonymous said...
நீங்கள் குறிப்பிடும் இருவர்களின் தீவிரவாதப்போக்கிற்கான பின்னணி என்ன?

இஸ்லாமிய விரிவாக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு பாகிஸ்த்தானையும் வங்காளதேசத்தையோ உருவாக்கும் என நினைப்பதில் தவறு இருக்கிறதா?//

அவரவர்க்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் வாய்ப்புகள் மருக்க படுவதாலேயே இந்த பிரிவினைகள் காரணமாக இருக்கின்றன.

//மதச்சார்பற்ற நாடு என 80விழுக்காடு இந்துக்கள் பிரகடணம் செய்திருப்பது மகிழ்ச்சியே!.
ஆனால் வெளினாட்டில் இருந்து கொண்டுவரப் பணத்தைப் பயன்படுத்தி படிப்பறிவற்ற இந்திய மக்களை மதமாற்றம் செய்வது அனுமதிக்கலாமா?//

படிப்பறிவு அற்றவனுக்கு கல்வியும் கிடைத்து வசதியும் கிடைக்கும் போது அவன் மதம் மாறினால் என்ன தவறு. அவன் மதம் மாறக்கூடாது என்று நினைப்பவன் அவனுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தால் அவன் ஏன் மதம் மாறப்போகிறான்.

நீங்கள் தான் அவனை இந்துவாக இருக்கவைத்து அவனுடைய கடசி சொட்டு ரத்தம் வரை உரிஞ்ச பார்க்கிரீர்களே.
வேண்டுமானால் உங்கள் மதத்தை வளர்க்க இப்படி செய்யுங்களேன் கோயிலினுள்ளே வந்து சாமி கும்பிடுபவனுக்கு ஒரு ஆளுக்கு பத்து ரூபாய் ஒரு முறை சாமிகும்பிட கொடுத்து பாருங்கள், ஆர்ச்சனை தட்டில் மக்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு பதிலாக அர்ச்சனைக்காக வரும் பக்தர்களிடம் பணம் கொடுங்கள். இப்படி எல்லாம் செய்தால் உங்கள் மதம் மிகப்பெரிதாக வளருமே. ஏன் கொடுப்பவனை கெடுக்கிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

"படிப்பறிவு அற்றவனுக்கு கல்வியும் கிடைத்து வசதியும் கிடைக்கும் போது அவன் மதம் மாறினால் என்ன தவறு. அவன் மதம் மாறக்கூடாது என்று நினைப்பவன் அவனுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தால் அவன் ஏன் மதம் மாறப்போகிறான்."

இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பல நாடுகளையே மதம் மாற்றினார்கள்? ஆபிரிக்க நாடுகளைப் பாருங்கள். சொந்த மதமும் இல்லை. சொந்தப் பெயரும் இல்லை. மதம் மாற்றிய பின் மறந்துவிட்டார்கள். முத்திரை குத்தியது மட்டும்தான். ஏன் இந்தியாவில் மதம் மாற்றப்பட்டவர்களின் வீட்டில் கல்வியும் செல்வமும் தலைவிரித்தாடுகிறதா?


இந்தியா மதச்சார்பற்ற நாடு! அது பலவீனம் என நினைத்து மதம் மாற்றுவதை தடுக்கவேண்டும். இந்தியாவில் மதமாற்றம் தீவிரப்படுத்த வேண்டும் என போப் அறிவித்தார். இந்தியர்களால் அப்படியொரு அறிக்கையை வெளியிட முடியுமா?

மோடியும் அத்வானியும் உருவாகவில்லை. உருவாக்கப்படுகின்றார்கள்

புள்ளிராஜா

Great சொன்னது…

அந்தந்த மதத்த அந்தந்த மதக் கடவுள் தான்(அப்படி எவனும் இருந்தால்) காப்பாத்தணும். ஆனா இங்க ஒரு மதத்த மோடியும் சில அனானிகளும் (அனானி பெயர்ல யார் யார் வராங்கன்னு தெரிஞ்சது தானே) காப்பாத்துவது தான் காமடியாக இருக்கு

பெயரில்லா சொன்னது…

புள்ளிராஜாவின் புரட்டு...

1. ஏன் இந்தியாவில் மதம் மாற்றப்பட்டவர்களின் வீட்டில் கல்வியும் செல்வமும் தலைவிரித்தாடுகிறதா? -புள்ளிராஜா

உண்மையான வரலாறுக்கு கொள்ளிவைத்து கூத்தாடும் -புள்ளிராஜாக்காளின் - புரட்டை - புரட்டி புரட்டி அடிக்கும் கட்டுரை ஒன்று காவித்'திண்ணை'யில் படிக்கக்கண்டேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80705249&format=html

அந்தக்கட்டுரையை படித்த பிறகும் - தேய்ந்து போன ரெகார்டு போல மேற்கண்ட புழுகுகளை - அள்ளிவிட்டால் - படிப்பவர்கள் 'எள்ளி' நகையாடுவார்கள்...

அமிழ்தினியன்

பெயரில்லா சொன்னது…

"உண்மையான வரலாறுக்கு கொள்ளிவைத்து கூத்தாடும் -புள்ளிராஜாக்காளின் - புரட்டை - புரட்டி புரட்டி அடிக்கும் கட்டுரை ஒன்று காவித்'திண்ணை'யில் படிக்கக்கண்டேன். "


ஹை அனானி!!


வ‌றுமையில் வாடும் இந்திய‌ர்க‌ளை ம‌த‌ம் மாற்றித்தான் உத‌வ‌ வேண்டுமா?
ஏன் உங்க‌ள் கருணை உள்ள‌ம் ஏற்க‌ன‌வே ம‌த‌ம் மாறியும் வ‌றுமையில் வாழும்
கிறிஸ்த‌வ‌, இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு முத‌லில் உத‌வினால் என்ன‌?

எண்ணை விற்ற‌ ப‌ண‌மும், வெள்ளைக்கார‌த் துரைக‌ளின் ப‌ண‌மும் ஏழை இந்திய‌ர்க‌ளின் மான‌த்தை ஏல‌ம் போட‌ உத‌வுகின்ற‌து.

சோமாலியாவிலும் எதியோப்பியாலும் வ‌றுமையில் வாழும் ம‌க்க‌ள் ஏற்க‌ன‌வே ஏமாற்றி ம‌த‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்தான்.

மோடிக‌ள் உருவாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்

புள்ளிராஜா

Bharath சொன்னது…

//'குறிப்பிட்ட நபர் தீவிரவாதி என்று நான் தீர்மானித்தேன். அவர் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கிறார் என்று நான் தீர்மானித்தேன். அதனால் அவரைக் கொன்று விட்டோம். அது சரிதான் என்று கூட்டத்தினரை கூச்சலிட வைப்பேன்' என்று சொன்னவர் (நரேந்திர மோடி), தான் பாதுகாப்பதாக பிரமாணம் செய்து பதவி ஏற்ற அரசியல் சட்டத்தை உடைத்தார்.//

இந்த வாதம் soharabuddin'க்கு பொருந்தும் என்றால்.. தினம் தினம் நம் காவல்துறையும், army'யும் நடத்தும் encounter கொலைகளுக்கும் மிகவும் பொருந்தும்.. என்னவோ குஜராத்தில் மட்டும் தான் encounter நடந்ததை போல் எழுதி இருக்கிறீர்கள். வீரப்பன் முதல் வெள்ளை ரவி கொலை வரை இங்கும் மார் தட்டி கொல்லபடுகின்றன..பிறகு மோடியும் அத்வானியும் மட்டும் எப்படி குற்றவாளிகள் ஆனார்கள். Modi has to be opposed for his anti-minority stance but your post is not objective but hypocritical and prejudiced..

புரட்சி தமிழன் சொன்னது…

அமிழ்தினியன் நீங்கள் கொடுத்த சுட்டியை வைத்து திண்ணை பதிவை நானும் படித்தேன். சுட்டி கொடுத்ததற்க்கு நன்றி.

//இந்தியா மதச்சார்பற்ற நாடு! அது பலவீனம் என நினைத்து மதம் மாற்றுவதை தடுக்கவேண்டும். இந்தியாவில் மதமாற்றம் தீவிரப்படுத்த வேண்டும் என போப் அறிவித்தார். இந்தியர்களால் அப்படியொரு அறிக்கையை வெளியிட முடியுமா?

மோடியும் அத்வானியும் உருவாகவில்லை. உருவாக்கப்படுகின்றார்கள்//

அமெரிக்கா வீசும் எச்சில் எலும்புத்துண்டுக்கு பி.ஜே.பி இந்திய அரசில் ஆண்டு கொண்டு இருந்த போதும் அவர்களும் அலைய வில்லையா

அமெரிக்கா ஒரு கிரிஸ்த்தவ தீவரவாத நாடு என்பதை அனைவரும் அறிவர் போப் அமெரிக்காவின் கைப்பாவை வலியவனாக இப்போது இருக்கலாம் எப்போதும் அப்படி இருக்கமுடியாது.

கிருத்துவன் கண்டு பிடித்த மின்சாரம் என்பதர்க்காக அதை உன் கோயில்களில் பயன் படுத்தாமல் விட்டுவிடுகிறாயா என்ன. முஸ்லீம் விளைவிக்கும் பேரீச்சை பழம் என்பதர்க்காக உண்ணமல் இருக்கிறாயா?

அடுத்து விஷயத்துக்கு வருவோம் உன் சாதிக்காரன் உன் மதத்துக்காரன் என்பதர்க்காக அவன் உனவின்றி அலைபவனுக்கு ஒரு பிடி உணவு அளித்திருப்பாயா.

நான் அப்படி அளிப்பவன் என்று கூறினால் சாலைகளில் சுற்றும் பிச்சை எடுக்கும் உன் மதத்துக்காரனுக்கு முதலில் உணவு அளி பின்னர் வந்து பேசலாம் மதம் அழிந்து விடுகிறது என்று.

பெயரில்லா சொன்னது…

ஹை அனானி!!- புள்ளிராஜா!

நீங்கள் மட்டும் என்ன 'அட்ரஸ்" பொட்டுக்கொண்டா எழுத வந்தீர்கள்..ஹி.ஹி.ஹி..(துவக்கமே சரியில்லையென்று எள்ளி நகையாடுவது காதில் கேட்கிறதா!?)

வ‌றுமையில் வாடும் இந்திய‌ர்க‌ளை ம‌த‌ம் மாற்றித்தான் உத‌வ‌ வேண்டுமா?
- புள்ளிராஜா

நான் தந்த இணைப்பை படித்துவிட்டும் மேற்கண்ட கேள்வியை கேட்கிறிரே ..ஹி.ஹி.ஹி.ஹி ( இன்னொரு முறை எள்ளி நகைக்கிறேன்))

ஏன் உங்க‌ள் கருணை உள்ள‌ம் ஏற்க‌ன‌வே ம‌த‌ம் மாறியும் வ‌றுமையில் வாழும்
கிறிஸ்த‌வ‌, இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு முத‌லில் உத‌வினால் என்ன‌?
-புள்ளிராஜா

என்னை கிறித்துவனாகவும் - முஸ்லிமாகவும் மதமாற்றம் செய்த - புள்ளிராஜாவை எண்ணி இன்னும் ஒரு முறை எள்ளி சிரிகிறேன்!ஹ..ஹஹ்ஹஹ்ஹஹஹஹஹ்..ஹா..

எண்ணை விற்ற‌ ப‌ண‌மும், வெள்ளைக்கார‌த் துரைக‌ளின் ப‌ண‌மும் ஏழை இந்திய‌ர்க‌ளின் மான‌த்தை ஏல‌ம் போட‌ உத‌வுகின்ற‌து- புள்ளிராஜா

இவ்வளவு நேரம் வாயால் சிரித்து அலுத்துவிட்டேன்..'அதனால்' சிரிக்கும் வேளை வந்துவிட்டது என்று இன்னும் சிரிக்கிறேன்..அஹஹஹஹ்ஹஹஹஹஹ்

சோமாலியாவிலும் எதியோப்பியாலும் வ‌றுமையில் வாழும் ம‌க்க‌ள் ஏற்க‌ன‌வே ஏமாற்றி ம‌த‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்தான்..புள்ளிராஜா

இந்தியாவைபற்றி முழுதும் தெரியாமல் உளறுகிற நீர் -'இண்டர்னேசனல் லெவலில்' சம்பந்தமே இல்லாமல் - பேசுகிற உம்மை எண்ணி இன்னும் சிரிக்கிறேன் ஹஹஹ ஹாஹஹாஹஹாஹஹாஹா..

மோடிக‌ள் உருவாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்
- புள்ளிராஜா..

மோடிக‌ள் உருவாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்..யாரால் தெரியுமா?
வேறு எதையும் உருவாக்க வக்கற்ற- வகையற்ற - புள்ளிராஜாக்களால்..

புள்ளிராஜா! நான் எழுதியதை படித்துவிட்டு - நீர் நொந்து 'சிரிப்பாக சிரிப்பது' வாசகர்கள் அனைவருக்கும் கேட்கிறது -

அமிழ்தினியன்

பெயரில்லா சொன்னது…

படிப்பறிவு அற்றவனுக்கு கல்வியும் கிடைத்து வசதியும் கிடைக்கும் போது அவன் மதம் மாறினால் என்ன தவறு. அவன் மதம் மாறக்கூடாது என்று நினைப்பவன் அவனுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தால் அவன் ஏன் மதம் மாறப்போகிறான்.- புரட்சிததமிழன்

நெத்தியடியாக கேட்டிருக்கிறீர்கள் புரட்சித்தமிழன்!

தேர்தல் காலங்களில் - முஸ்லிம்களிடமிருந்து ஓட்டு பிச்சை எடுப்பதற்காக - அத்வானி - வாஜ்பாய் கும்பல் - அஜ்மீர் தர்காவுக்கு சென்று 'குல்லா' வைத்துக்கொண்டு - அங்குள்ள முல்லாக்களோடு 'போஸ்' கொடுத்து போட்டோ வெளியாகியது அனைவருக்கும் தெரியும்.

உத்தரபிரதேஷத்தில் - முஸ்லிம்கள் வசிக்கும் - ஒவ்வொரு முஹல்லாக்களிலும் ஒருகமிட்டி அமைத்து - ஆயிரக்கணக்கில் - மதரஸா ஆசிரியர்கள் நியமிகப்படுவார்கள் என்று 'போலி' வாக்குறுதி கொடுத்தது - சங்பரிவார பா.ஜ.தான்..

இஸ்லாமியர்களின் ஓட்டு வேண்டுமென்றால் - அத்வானி-வாஜ்பாய் கும்பல் - 'சுன்னத்' கூட பண்ணிகொள்ளத் தயங்கமாட்டார்கள்..

அமிழ்தினியன்

பெயரில்லா சொன்னது…

அமிழ்தினியன்!!!!

உன்னை பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டி அடிச்சது சரிதானப்பா.
கேள்விக்கு பதில் சொல்லாம இப்படி சிரிச்சிட்டே இருந்தா டீச்சர் என்னப்பா செய்வா?


புள்ளிராஜா

suvanappiriyan சொன்னது…

Best post Mr Sivakumar. Keep it up.
- Suvanappiriyan

பெயரில்லா சொன்னது…

Modi'nna muslimkalukku athiruthille

பெயரில்லா சொன்னது…

I am not writing aginst /for Modi .

//'நீதிமன்றமாவது ஒன்றாவது, மக்களின் நம்பிக்கைக்கு முன்பு வேறு எதுவும் நிற்கக் கூடாது.//


Your arguments are weak and exposing your intention as you are considered as liberal here in tamil blogs. While you are writing with that lablel you have handled with better words as you never wrote anything against other whom you have respect .


Rajiv changed constitution to escape Court order to appease minority For me it is correct as we can not force our belief into Muslim religion in the means of Court Justice . Dont bring imported ideas to India and talk about Court justice . Secular means religion has to be separated from Functioning of govt but in inida we can not do as our culture is based on mostly Hindu religion and last 400 years muslims impact . so it is very difficult to in india.

1984 Riots has been handle better than others ?. Air India Bombing is being handled well even in Canada Courts ? . Where you are when Maoists are doing in other places ? So when people lost faith , people like Modi , Madhani are wiining people's hearts to respective groups.


We always have culture to obey rajas and will do always .Now a days rajas are Modi . MK and other CMs. so as long as CM says /decide it is law , if the law has to be validated just convene assembly and make a new law . How difficult to make a law in GUJARAT to validate the same statement ?

We are just fooled by media that Justice has to be come from Supreme court and blah blah.

Until ordinary person knows what he can do with his valuable vote without "COLOR TV" and with good education these things will happen.

பெயரில்லா சொன்னது…

Dear Mr. Sivakumar,

Have you received my comment that asked you to publish it if you have conscience?

மா சிவகுமார் சொன்னது…

//The tone's started changing b'cos of Modi expected win in Gujarat....

Not only you everyone who belived the newspapers, rather than real one in Gujarat.//

ஐயா, தேர்தலில் வெற்றி தோல்விக்கும் ஒருவர் செய்த குற்றங்களுக்கும் தொடர்பில்லை. வெற்றி பெற்றதாலே அவரது குற்றங்கள் கரைந்து போவதுமில்லை.

தோல்வி அடைந்தால் இன்றைய அரசியல் சூழலில் அவரது குற்றங்களை விசாரித்து தீர்ப்பு கிடைக்க வழி கிடைக்கும் என்ற அளவில் மட்டும் தோல்வி உதவும்.

சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் தொடர்ந்து ஏமாற்றவே முடியாது.

அரசியல் பிழைத்தவர்களுக்கு கூற்று அறம் வடிவில் வந்தே தீரும்.

//நீங்கள் குறிப்பிடும் இருவர்களின் தீவிரவாதப்போக்கிற்கான பின்னணி என்ன?//

இந்தியா ஒரு பல் கலாச்சார, பல் மத, பல் மொழி நாடு என்பதை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் இந்துத்துவா இயக்கத்தினர். 'இந்து மதம்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும், இந்துக்களின் தயவில் மற்றவர்கள் இருந்து கொள்ளலாம்' என்ற பெரும்பான்மை தத்துவத்தின் விளைவு இது.

//இஸ்லாமிய விரிவாக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு பாகிஸ்த்தானையும் வங்காளதேசத்தையோ உருவாக்கும் என நினைப்பதில் தவறு இருக்கிறதா?//

பாகிஸ்தானும் வங்காளதேசமும் உருவானது இரு பக்கமும் இருந்த தீவிரவாதிகளால்தான். அதில் பெரும்பான்மை தீவிரவாதம் அதிக பங்கு வகித்தது. இப்போதும் பெரும்பான்மை தீவிரவாதம்தான் சிறுபான்மை தீவிரவாதத்தைத் தூண்டி பிரிவினைக்கு வழி வகுக்கும்.

//வெளினாட்டில் இருந்து கொண்டுவரப் பணத்தைப் பயன்படுத்தி படிப்பறிவற்ற இந்திய மக்களை மதமாற்றம் செய்வது அனுமதிக்கலாமா?//

மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என்றால் இந்து மதத்தை சீரமைக்க வேண்டும். தத்தமது சாதியைப் பிடித்துக் கொண்டு நாமெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும் வரை இந்து மதத்துக்கு தேக்க நிலைதான்.

//இவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதற்கான காரணம் என்ன என்பதை பற்றி ஆராய்ந்தறிவதும் முக்கியமல்லவா?//

வணக்கம் ஐயா,

மேலே நான் சொன்ன கருத்துக்கள் உங்கள் கேள்விக்கு விடையாக அமையும் என்று நினைக்கிறேன்.

இந்துத்துவா அமைப்புகளின் செயல்முறையை ஓரளவு அனுபவ பூர்வமாகப் பார்த்த முறையில் என்னுடைய புரிதல்கள்.

//நரேந்திர மோடியை 'தேசத் துரோகி' என்று சொல்வதன் மூலம் அவருக்கு எதிராக நீங்கள் உங்களை நிறுத்தி கொள்கிறீர்கள். //

நரேந்திர மோடி ஒரு அடையாளம். நரேந்திர மோடிகளைப் போல பலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதனால் பத்திரிகையில் குறிப்பிட்ட செய்தியைப் படிக்கும் போது இந்துத்துவா இயக்கங்களின் செயல்முறைகளுடன் புரிந்து கொள்ள முடிகிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//ust as you said- the DK and periyar cur the tuffs of many brahmins ( Just as you mentioned mottai). Do you have anything against them? //
நீங்கள் கேட்ட பிறகு நினைத்துப் பார்த்தால் அது பெரிய தவறு என்றே ஒத்துக் கொள்வேன். (அந்த காலத்தில் நான் பிறந்திருக்கக் கூட இல்லை.)

அந்தக் கசப்பின், வெறுப்பின் விளைவுதான் இன்னும் தமிழ் சமூகத்தைப் பிரித்துப் போட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//Bcoz most people are not what they think they are- the nuetral.//

நடுநிலைவாதி என்பது எங்குமே இல்லாத ஒன்று. நாம் ஒவ்வொருவரும் நமது பார்வை, நமது அனுபவங்களின் சார்பில் செயல்படுகிறோம். நடுநிலைவாதி என்று (புனித பிம்பம்) யாரையும் எதிர்பார்க்கவும் வேண்டாம், ஏமாறவும் வேண்டாம்.
அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அரசாங்கமும் அப்படித்தானே முறைப்படி கைது செய்து வழக்கு போட வேண்டாமா?//

அதுதான் வவ்வால், அதிமுக ஆட்சி மாறிய பிறகுதானே தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தீர்ப்பு வர முடிந்தது. இந்த ஆட்சி மாறினால், அழகிரியின் மீது கொலை வழக்கு வரலாம். அதுதான் இன்றைய அமைப்பில் நமக்கு ஒரே நம்பிக்கை.

//அதுக்கு ஏன் அடுத்தவங்களை இம்சை படுத்தனும். இம்சை படுத்தினா அது குற்றவாளிங்கதான்.//

சரியாச் சொன்னீங்க இளா. மதத்தில் பெயரால்தான் அதிகமான கொலைகள் நடந்துள்ளனவாம். மதங்கள் வீட்டுக்குள் பூஜை அறைக்குள் இருக்க வேண்டும்.

//ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் ஏன் தீவிரவாதிற்கு பல்லக்கு தூக்குகிறீர்கள்.//

உறையூர்காரரே, மோடியைத்தானே இந்தக் கேள்வி கேட்டீர்கள்? இந்திய அரசமைப்பு பிடிக்கா விட்டால், தலை மறைவாகி ஆயுதம் எடுத்துப் போராடுங்கள். எதற்கு அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்று பதவியில் இருந்து கொண்டு மீறுகிறீர்கள்!

//If "majority" of the people decided that Modi was wrong then how can Modi win?//

வெத்து வேட்டு, குற்றமும் தண்டனையும் தீர்மானிக்கப்படுவது பெரும்பான்மையினரால் அல்ல, நீதி மன்றங்களால். மக்கள் தீர்ப்பு குற்ற தீர்மானம் இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//ஒரு இடியாப்பச்சிக்கலோ புரோட்டா குழம்போ இல்லை. உங்கள் தவறை நீங்கள் ஒத்துக் கொள்வதில் தான் எல்லா சிக்கலும்.//

தவறு என்று விளக்கினால் ஒத்துக் கொள்ள என்ன கொள்ளை.

அனானிக்கு மேல் அனானியாக கும்மிப் பதிவுகளை தோற்கடிக்கும் படி பின்னூட்டித் தாக்கியதால்தான், 'எந்த அனானி என்ன சொன்னார், யாருக்கு என்ன பதில் சொன்னோம்' என்று குழப்பம்தான் படிப்பவர்களுக்கு.

தான் என்ற ஆணவத்தை அழித்து உருவற்று உண்மையான இந்து மதத்தினராக அனானிகள் ஆனதும் ஒரு வகையில் மகிழ்ச்சிதான் :-)

//எண்ணற்ற இந்துக் கோவில்களை தரைமட்டமாக்கி, அதில் கிடக்கும் கல்லை வைத்து குதுப் மினார் கட்டின கயவர்களை பாராட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது.//

அதை சரிசெய்ய மீண்டும் அந்த நூற்றாண்டு வழிமுறைகளைப் பின்பற்ற முடியாது. 1950க்குப் பிறகு வழக்குகளைத் தீர்க்க இருக்கும் வழிகளைப் பின்பற்றுவது எல்லோரது கடமையும். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அது அதிக தேவை.

//அவனைக் கொன்றது சட்டபடி குற்றம், ஆனால் தர்மப்படி ஞாயம்.//

சட்டம் மட்டும்தான் செல்லுபடியாகும். தர்மம் என்பது யார் தீர்மானிப்பார்கள்? உங்கள் தர்மப்படி நியாயமாகப் படுவது இன்னொருவருக்கு அநியாயம். அதற்குத்தான் சட்டங்கள்.

//பா.ஜ.க ஆட்சியில் நடந்த உடனேயே அது அவர்கள் செய்தது ஆகிவிடாது.//

அப்படி என்றால், குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் இந்துத்துவா இயக்கங்களுக்கும், மோடிக்கும் தொடர்பே இல்லையா! அதை வெளிப்படையாக அறிவித்து அந்த நேரம் முதலமைச்சராக இருந்த மோடி வருத்தமாவது தெரிவித்தாரா??

//என் பார்வையில் மா.சி. குற்றவாளி ...//
//இவை அனைத்தும் மோடி என்ற ஒருவனுக்கும் பொருந்தும். அவன் குற்றவாளி என்று தீர்மானிக்க நீ யார் ?//

நன்றி, அதனால் எனக்கு எந்த பாதிப்பும் வரவில்லை அல்லவா! என் பார்வையில் மோடி குற்றவாளி என்பதாலும் அவருக்கு பாதிப்பு இல்லை. ஆனால் ஒரு மாநில முதல்வர் குற்றம் முடிவு செய்து தண்டனையும் வழங்க ஆரம்பித்து விட்டால் எவ்வளவு பேருக்கு பாதிப்பு!!

//உன்னைப் போன்ற பேடிப்பசங்கள் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்துகிட்டாலும், //

தர்மத்தின் வாழ்வுதனை.....

//அவரவர்க்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் வாய்ப்புகள் மருக்க படுவதாலேயே இந்த பிரிவினைகள் காரணமாக இருக்கின்றன. //

இதன் காரணம் பெரும்பான்மை தீவிரவாத அரசியல்.

//அவனுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தால் அவன் ஏன் மதம் மாறப்போகிறான். //
அதற்கு சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும். எல்லோரும் சமம் என்று சாத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

//இந்தியா மதச்சார்பற்ற நாடு! அது பலவீனம் என நினைத்து மதம் மாற்றுவதை தடுக்கவேண்டும்.//

புள்ளி ராஜா,
மதம் மாற்றுவதை ஏன் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும். இந்து மதத்தின் பெருமையும் அருமையும் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்தால் மதம் மாறுதல் குறையலாம்.

'உம் தலைவிதி இதுதான், நீ பிறப்பால் தாழ்ந்தவன், அதனால் உனக்குக் கல்வி கிடையாது. கோவிலில் உனக்குப் புரியாத மொழியில்தான் வழிபடுவோம்' என்று தடைகளை வளர்த்துக் கொண்டால், இந்து மதத்தில் இருக்க என்ன தேவை என்று சொல்லுங்கள்?

//எண்ணை விற்ற‌ ப‌ண‌மும், வெள்ளைக்கார‌த் துரைக‌ளின் ப‌ண‌மும் ஏழை இந்திய‌ர்க‌ளின் மான‌த்தை ஏல‌ம் போட‌ உத‌வுகின்ற‌து.//

இந்தியாவின் மானம் ஏலம் போவது, வறுமையாலும், சாதிக் கொடுமைகளாலும் அதற்குத் துணை போகும் சாத்திரங்களாலும்தான். அவற்றை நிராகரித்து எல்லோரையும் சமமாக அணைத்துக் கொண்டு போக இயக்கம் ஆரம்பியுங்கள். இந்து மதத்துக்கு சூலம் ஏந்திய காவல் தேவையே இல்லாமல் போய் விடும்.

//வீரப்பன் முதல் வெள்ளை ரவி கொலை வரை இங்கும் மார் தட்டி கொல்லபடுகின்றன..பிறகு மோடியும் அத்வானியும் மட்டும் எப்படி குற்றவாளிகள் ஆனார்கள்//
இரண்டு தவறுகள் சேர்ந்தால் ஒரு போதும் சரியாகி விடாது. வீரப்பனுக்கும் வெள்ளை ரவிக்கும் உரிமைகள் உண்டு.

//உன் சாதிக்காரன் உன் மதத்துக்காரன் என்பதர்க்காக அவன் உனவின்றி அலைபவனுக்கு ஒரு பிடி உணவு அளித்திருப்பாயா.

நான் அப்படி அளிப்பவன் என்று கூறினால் சாலைகளில் சுற்றும் பிச்சை எடுக்கும் உன் மதத்துக்காரனுக்கு முதலில் உணவு அளி பின்னர் வந்து பேசலாம் மதம் அழிந்து விடுகிறது என்று.//

உணவு அளிப்பதில் கூட சாதி பார்த்து அளிக்கும் ஒரே சமூகம் நம்முடையதாகத்தான் இருக்கும் :-(

//Keep it up.
- Suvanappiriyan//
நன்றி சுவனப்பிரியன் :-)

//Have you received my comment that asked you to publish it if you have conscience?//

Yes, it is published. You can see for yourself. I do not moderate comments and remove only those comments which are totally off topic and offensive. Everything else is accepted by default.

//you are considered as liberal here in tamil blogs.//

எனக்கு எந்த முத்திரையும் தராதீர்கள். நான் லிபரலும் இல்லை, நடுநிலைவாதியும் இல்லை, கம்யூனிஸ்டும் இல்லை. எனக்குப் புரிந்ததை எழுதுகிறேன். தவறு என்று விளக்கினால் திருத்திக் கொள்வேன். முத்திரைகளால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

வால்பையன் சொன்னது…

சார்,
என்னுடைய பெயர் அருண், நான் புதிதாக வலை பூ ஒன்று ஆரம்பித்திருக்கிறேன்,
வால் பையன் என்ற பெயரில், டோண்டு சாரிடம் உங்கள் போன் நம்பர் வாங்கி இரண்டு முறை உங்களை தொடர்பு கொண்டேன், நீங்கள் வேலையில் இருந்ததால் பிறகு அழைக்க சொல்லி விட்டீர்கள்,
என்னுடய பிரச்சினை என்னவென்றல் என்னால் தமிழ்மணம் மற்றும் தேன் கூட்டில் இணைய முடிய வில்லை, அவர்கள் கொடுத்திருக்கும் இரண்டாவது java லைன் (<$BlogItemTitle$>) இதற்க்கு கீழே போட சொல்லி இருக்கிறார்கள், என்னுடைய templete-இல் இந்த லைன் இல்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யவும், என்னுடைய பிளாக் வால்பையன்
போன் நம்பர் 9994500540

நன்றி

பெயரில்லா சொன்னது…

சிவகுமார் !!!

இந்துமதத்தில் மட்டுமல்ல குறையில்லாத மதம் உண்டா?
கிறிஸ்தவத்தில் சேர்ந்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சாதி இல்லையா?
கிறிஸ்தவ கருப்பனும் வெள்ளைடயனும் சர்ச்சையில்லாமலா வாழ்கின்றார்கள்?

2. பாகிஸ்தானில் மசூதியில் வெடிக்கும் குண்டு (சுன்னி/சியாக்) மனிதர்களைத்தானே கொல்கிறது?

3. சவுதியில் உள்ள சவுதி அரபியர்களுக்கான மசூதிக்குள் இந்திய முஸ்லீம்கள் தொழுகைக்காக அனுமதிக்கப்படுவதில்லை.

அனைத்து மதங்களிலும் தூக்கி எறிய பல விடயங்கள் உண்டு!!!!!!!

மோடி இந்துவைக் காப்பாற்றுவதாக நினைக்கவேண்டாம். ஏன் இந்தியாவை அன்னிய சக்திகளின் ஊடுருவலில் இருந்து காப்பற்ற முனைவதாக எண்ணக்கூடாது?


புள்ளிராஜா

Me சொன்னது…

//மோடி இந்துவைக் காப்பாற்றுவதாக நினைக்கவேண்டாம். ஏன் இந்தியாவை அன்னிய சக்திகளின் ஊடுருவலில் இருந்து காப்பற்ற முனைவதாக எண்ணக்கூடாது?//

பீயள்ளுவதை புண்ணியமாய் நினைக்க சொல்லும் பேடி, அன்னியர்களிடமிருந்து நாட்டை காப்பாத்துவாராம். இவர்கிட்ட இருந்து மனுசங்கள காப்பாத்துறதே பெரும்பாடா இருக்கு.

பெயரில்லா சொன்னது…

சவுதியில் உள்ள சவுதி அரபியர்களுக்கான மசூதிக்குள் இந்திய முஸ்லீம்கள் தொழுகைக்காக அனுமதிக்கப்படுவதில்லை.

-புள்ளிராஜா

சொதப்பாதே புள்ளிராஜா...முதன்முதலாக முகம்மது நபி
தொழுகைக்கு மக்களை அழைத்தபோது - பாங்கு சொன்னவர் யார் தெரியுமா?

கறுப்பர் இனத்தை சார்ந்த பிலால் என்பவராம்..
(சில வருடங்களுக்கு முன்பு முஸ்லிமல்லாதவருக்காக நடத்தப்படும் 'இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சியில் - கேட்டிருக்கிறேன்)

கமாராஜா - (கமா - ,இந்த கமாதான்))

பெயரில்லா சொன்னது…

பீயள்ளுவதை புண்ணியமாய் நினைக்க சொல்லும் பேடி, அன்னியர்களிடமிருந்து நாட்டை காப்பாத்துவாராம். இவர்கிட்ட இருந்து மனுசங்கள காப்பாத்துறதே பெரும்பாடா இருக்கு.- உறையூர்காரன்

உறையூர்காரரே!நீங்கள் உரக்க சொல்வது யாருக்கு உறைக்க வேண்டுமோ அவர்களுக்கு உறைக்காது!

மா சிவகுமார் சொன்னது…

//இந்துமதத்தில் மட்டுமல்ல குறையில்லாத மதம் உண்டா?//
புள்ளிராஜா, நம்ம மதத்தின் குறைகளைக் களைந்து கொண்டால், தலை நிமிர்ந்து அமைதியாக வாழலாம். மற்ற மதங்களின் குறைகளைக் குறித்து நமக்கு ஏன் கவலை?

//மோடி இந்துவைக் காப்பாற்றுவதாக நினைக்கவேண்டாம். ஏன் இந்தியாவை அன்னிய சக்திகளின் ஊடுருவலில் இருந்து காப்பற்ற முனைவதாக எண்ணக்கூடாது?//

மோடி பாணி அரசியல்தான் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது என் கருத்து. நாம், சாதி, மத, மொழி ஏற்றத் தாழ்வு இல்லாமல் ஒற்றுமையாக உறுதியாக இருப்பதுதான் இந்தியாவுக்கு பாதுகாப்பு. நம்மைப் பிரிப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

வணக்கம்,

பெயரில்லா சொன்னது…

>>மோடி இந்துவைக் காப்பாற்றுவதாக நினைக்கவேண்டாம். ஏன் இந்தியாவை அன்னிய சக்திகளின் ஊடுருவலில் இருந்து காப்பற்ற முனைவதாக எண்ணக்கூடாது?<<

எப்படி ?

- தன் மனைவி முன்னிலையில் தன் வீட்டு பூஜையறையில் தான் வணங்கும் கடவுளர் படங்களுக்கு முன்பு "நான் வணங்கும் கடவுள்கள் முன்னிலையில் கூறுகிறேன், நான் இங்கே பொய் சொல்லமாட்டேன்" என்ற முன்னுரையோடு மாற்று மதம் சார்ந்த ஒரு பெண்மணியை "அவள் ஒரு கனிந்த பழம் போல இருந்தாள், அவளை நான் சுவைத்தேன்" என்று பெருமையோடு பிரஸ்தாபம் செய்யும் 'தொண்டர்' .....

- உயிர் தப்பிப்பிழைக்கும் ஆவேசத்தோடு அடைக்கலம் என்று இறைஞ்சியவருக்கு 'அஞ்சேல்' என்று தன்வீட்டில் பாதுகாப்பளித்த பாவத்திற்காக ஒரு முதிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை, அவர் நிறைய பணம் தந்துவிடுகிறேன் என்றபோதும் பிறப்புறுப்பு தொடங்கி அங்கமங்கமாக சிதைத்துக்கொல்லும் ஒரு நர ரத்தம் புசிக்கும் காட்டுமிராண்டியினும் - ஒரு கொடிய மிருகத்தினும் கீழானதொரு கொலைவெறிக்கும்பல் ....

- உயிருக்குத்தப்பி பதைக்கும் நெஞ்சோடு பதுங்கியிருக்கும் இஸ்லாமியர்களை கொலைவெறி கும்பலுக்கு காட்டிக்கொடுக்கும் விசுவாசமிக்கதொரு காவல்துறை கும்பல் ....

இவற்றின் துணையோடா ? மேற்படி வழியோடா ?

நன்று நண்பரே ... மிக்க நன்று.

அன்புடன்
முத்து.

பெயரில்லா சொன்னது…

//
புள்ளிராஜா, நம்ம மதத்தின் குறைகளைக் களைந்து கொண்டால், தலை நிமிர்ந்து அமைதியாக வாழலாம். மற்ற மதங்களின் குறைகளைக் குறித்து நமக்கு ஏன் கவலை?
//

அதே போல் இருக்கும் மாற்று மதத்தினரிடத்தே மட்டுமே அப்படிச் செய்ய முடியும்.


இங்கே யாரும், பார்சீ, சீக்கியர்களையெல்லாம் குறை கூறுவதில்லையே ஏன் என்று உமக்கு மண்டையில் உரைக்கவில்லையா ?


//

மோடி பாணி அரசியல்தான் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது என் கருத்து. நாம், சாதி, மத, மொழி ஏற்றத் தாழ்வு இல்லாமல் ஒற்றுமையாக உறுதியாக இருப்பதுதான் இந்தியாவுக்கு பாதுகாப்பு. நம்மைப் பிரிப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்.

//


ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.


இந்துக்கள் ஆயிரம் சாதியாக இருந்தாலும் உணர்வில் இந்தியர் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு சில மாற்று மதத்தினர் அப்படி நினைப்பதில்லை என்பதனால் தான் மோடிக்கள் உருவாகுகிறார்கள், வெல்கிறார்கள்.


நம்மைப் பிரிப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்பதில் எந்த அளவு conviction உனக்கு உள்ளது ?


பிராமணர்கள் கைபர் பொலான் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் என்று எதற்கெடுத்தாலும் பிராமண துவேஷம் செய்யும் கூட்டத்தில் என்றாவது அவர்கள் செய்வது "பிரிவினை" என்று வாய் திறந்து சொல்லியிருக்கிறாயா ?

பெயரில்லா சொன்னது…

//
மோடி பாணி அரசியல்தான் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது என் கருத்து.
//

உன் கருத்து தவறு என்பது தான் குஜராத் 2002, 2007 தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.


உன் கருத்தில் உண்மையிருப்பதாக ஏற்றால் 5 கோடி குஜராத்தி மக்கள் தேச விரோதிகள் ஆகிவிடுவாரக்ள். நிச்சயம் குஜராத்தி மக்கள் தேசவிரோதிகள் அல்லர். நீ ஒருவன் வேண்டுமானால் தேசவிரோதியாக இருக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

//
அப்படி என்றால், குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் இந்துத்துவா இயக்கங்களுக்கும், மோடிக்கும் தொடர்பே இல்லையா! அதை வெளிப்படையாக அறிவித்து அந்த நேரம் முதலமைச்சராக இருந்த மோடி வருத்தமாவது தெரிவித்தாரா??
//

தொடர்பு உண்டு.


ஆனால் முதலமைச்சருக்கும் கலவரத்துக்கும் தான் தொடர்பு இல்லை. அதை உருவாக்க நினைப்பது தான் உங்கள் hidden agenda.

பெயரில்லா சொன்னது…

நரேந்திர மோடி தவறு செய்திருந்தால் தண்டனை பெறவேண்டும். மன்னிப்பு கோறத்தேவையில்லை.

யார் வேண்டுமென்றாலும் மன்னிப்பு கேட்டுவிட்டு எந்தத் தவறும் செய்யலாம் என்பது தான் உங்கள் சட்டம் போல.

பெயரில்லா சொன்னது…

//
அதை சரிசெய்ய மீண்டும் அந்த நூற்றாண்டு வழிமுறைகளைப் பின்பற்ற முடியாது. 1950க்குப் பிறகு வழக்குகளைத் தீர்க்க இருக்கும் வழிகளைப் பின்பற்றுவது எல்லோரது கடமையும். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அது அதிக தேவை.
//

//
அப்படி என்றால், குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் இந்துத்துவா இயக்கங்களுக்கும், மோடிக்கும் தொடர்பே இல்லையா! அதை வெளிப்படையாக அறிவித்து அந்த நேரம் முதலமைச்சராக இருந்த மோடி வருத்தமாவது தெரிவித்தாரா??
//

மேலே கூறப்பட்டுள்ள இரு வாக்கியத்தையும் தொடர்பு படுத்திப் பார்தேன்.


எண்ணற்ற இந்துக் கோவில்களை உடைத்தவர்களை இன்னும் ஹீரோக்களாக்கிப் போற்றும் மதத்தினர் யாராவது இதுவரை வருத்தம் தெரிவித்துள்ளனாரா ?


என்ற கேள்வி எழுந்தது.

வஜ்ரா சொன்னது…

என்ன மா. சிவகுமார். சத்தத்தையே காணோமே ?


அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


இனி மோடி ஒரு சர்வாதிகாரி என்று பதிவு போட்டு சந்தோஷப்படலாம், உங்கள் தோழர்கள். நெறுப்பு கோழிகள் போல் அவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மையை உணர்ந்தால் உடனடியாக சமுதாய "அறிவாளிகள்" ஒன்று கூட வேண்டும், என்று அரைக்கூவல் விடுவார்கள். அப்படிச் செய்தால், சமுதாயத்தில் அவர்கள் தேவை கொஞ்சமும் இல்லை என்ற பய உணர்வு அவர்களுக்கு இப்பத்தான் வர ஆரம்பிக்கிறது என்பது தெரியும்.


நீங்கள் தலையை மண்ணில் புதைத்துக் கொண்டுள்ள நெறுப்புக் கோழியா இல்லை உங்கள் தேவை சமுதாயத்தில் இல்லை என்று உணர்ந்த "அறிவாளியா" ?

மா சிவகுமார் சொன்னது…

//அதே போல் இருக்கும் மாற்று மதத்தினரிடத்தே மட்டுமே அப்படிச் செய்ய முடியும்.//

ஏங்க நம்மை மேம்படுத்திக் கொள்ளக் கூட மற்றவர்களின் அனுமதி வேண்டுமா என்ன? தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் கொடுப்பதை மாற்று மதத்தினர் எதிர்க்கிறார்களா அல்லது நம்மில் ஒரு பிரிவினரே எதிர்க்கிறோமா?

//நம்மைப் பிரிப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்பதில் எந்த அளவு conviction உனக்கு உள்ளது ?//

அதை உறுதியாகச் சொல்லும் அளவு இருக்கத்தான் செய்கிறது :-)

//பிராமணர்கள் கைபர் பொலான் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் என்று எதற்கெடுத்தாலும் பிராமண துவேஷம் செய்யும் கூட்டத்தில் என்றாவது அவர்கள் செய்வது "பிரிவினை" என்று வாய் திறந்து சொல்லியிருக்கிறாயா ?//

சொல்லியிருக்கிறேன். மோடியைக் குறித்து உரக்கச் சொல்வது போலச் சொன்னதில்லை. மோடிக் கும்பலின் அபாயம் மிகத் தீவிரமானது என்பது எனது கருத்து.

//உன் கருத்து தவறு என்பது தான் குஜராத் 2002, 2007 தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. //

குஜராத் தேர்தல் முடிவுகள், மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று மட்டும்தான் காட்டுகின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விடை அதில் கிடைக்கவில்லை.

//உன் கருத்தில் உண்மையிருப்பதாக ஏற்றால் 5 கோடி குஜராத்தி மக்கள் தேச விரோதிகள் ஆகிவிடுவாரக்ள். நிச்சயம் குஜராத்தி மக்கள் தேசவிரோதிகள் அல்லர்.//

குஜராத்தி மக்கள் தேசவிரோதிகள் இல்லை. ஆனால் எப்படி மோடி போன்றவர்களின் வெற்றி உருவாகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

//முதலமைச்சருக்கும் கலவரத்துக்கும் தான் தொடர்பு இல்லை. அதை உருவாக்க நினைப்பது தான் உங்கள் hidden agenda.//

முதலமைச்சருக்கு என்ன பொறுப்பு? கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் எத்தனை பேருக்கு அந்த முதலமைச்சரின் ஆட்சியில் தண்டனை கிடைத்திருக்கிறது? ஏன்?

//நரேந்திர மோடி தவறு செய்திருந்தால் தண்டனை பெறவேண்டும். மன்னிப்பு கோறத்தேவையில்லை.//

நிச்சயமாக! தண்டனை அனுபவிக்கும் போது தவறை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்.

//எண்ணற்ற இந்துக் கோவில்களை உடைத்தவர்களை இன்னும் ஹீரோக்களாக்கிப் போற்றும் மதத்தினர் யாராவது இதுவரை வருத்தம் தெரிவித்துள்ளனாரா ?//

இரு தவறுகள் எப்போதும் சரியாகி விடாது. முதலில் நமது தவறை சரி செய்து கொண்டு, மேலும் தவறிழைக்காமல் இருக்கப் பார்ப்போம்.

//என்ன மா. சிவகுமார். சத்தத்தையே காணோமே ? அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.//

இதை எல்லாம் பெரிய கற்களை எல்லாம் தின்று செரித்தவர்கள்தாம் நாம். நிச்சயம் இதையும் தாங்கிக் கொண்டு நாடு மீள மேம்படும் என்று நம்பிக்கை இருக்கிறது.

//நீங்கள் தலையை மண்ணில் புதைத்துக் கொண்டுள்ள நெறுப்புக் கோழியா இல்லை உங்கள் தேவை சமுதாயத்தில் இல்லை என்று உணர்ந்த "அறிவாளியா" ?//

எதுவும் இல்லை, தனக்குப் புரிந்ததை பகிர்ந்து கொள்ளும் மனிதன். தவறு என்று படுவதை சொல்லத் தயங்கக் கூடாது என்று நினைப்பவன். அவ்வளவுதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
இதை எல்லாம் பெரிய கற்களை எல்லாம் தின்று செரித்தவர்கள்தாம் நாம். நிச்சயம் இதையும் தாங்கிக் கொண்டு நாடு மீள மேம்படும் என்று நம்பிக்கை இருக்கிறது.
//

இப்படியே பெரிய பெரிய கற்களை தின்று செரிப்பதே உங்கள் வேலையாக இருக்க ஆண்டவனிடம் கேட்டுக் கொள்கிறேன்.


//

எதுவும் இல்லை, தனக்குப் புரிந்ததை பகிர்ந்து கொள்ளும் மனிதன். தவறு என்று படுவதை சொல்லத் தயங்கக் கூடாது என்று நினைப்பவன். அவ்வளவுதான்.

//


குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

//இப்படியே பெரிய பெரிய கற்களை தின்று செரிப்பதே உங்கள் வேலையாக இருக்க ஆண்டவனிடம் கேட்டுக் கொள்கிறேன்.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.//

:-).

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

"How the wisdom of the crowds trumped the stupidity of the elite few"

It was to be the “revenge of democracy”.
It was also to be the “political punishment” of Gujarat politicians, social scientists, civil society activists, bureaucrats and citizens.
It was supposed to be “Religion coming to the rescue of politicians”
It was also supposed to be an election where “many Gujarati voters view these very merchants of death as extra-judicial protectors of Hindus”.
It was supposed to be a ghettoised state where religion has divided people down the middle.
But then something went horribly wrong in this script that a bigoted media had been working overtime to spin.
The wisdom of the crowds trumped the stupidity of the elite few.
To appreciate how the wisdom of the crowds delivered Gujarat to Narendra Modi let us look at the voting patterns.
First in a repudiation to all those who questioned demoracy in Gujarat, an overwhelming 59.76% or nearly two-thirds of eligible voters in Gujarat exercised their franchise. This should put to shame even the oldest of democracies were participation rarely touches the half-way mark. With this phenomenal turnout Gujaratis have shown that democracy is vibrant in their state and they dont need certificates from armchair psuedo-intellectuals on their commitment to democracy.
Secondly for a state that has been repeatedly characterised as being structurally polarised 5 out of the 6 muslim candidates fielded by the Congress won the election. Those who won are Faruq Sheikh (Kalupur), Gyasuddin Sheikh (shahpur), Sabir Kabliwala (Jamalpur), Iqbal Sheikh (Vagra) and Javed Pirzada (Vankaner). The lone Muslim candidate who lost was a woman Shahnaz Babi who it is rumored was unacceptable to Muslims on account of her gender.
Let us analyse what happened in these 6 seats.
Kalupur had a high turnout of 64%. It had 4 muslim candidates in the fray and 4 hindu candidates. Congress polled 57.5% of the vote while the BJP polled 39.52% of the vote. Now contrast this with how the votes pared in 2002. 59% for the Congress’ Muslim candidate and 39.94% for the BJP. Thats not all, this is the BJP’s all time worst performance in Kalupur while it is the Congress’ all time best performance.
Shahpur had 65.9% turnout. It had 6 Muslim candidates and Muslim crusader Mukul SInha in the fray. The rest of the 11 contestants were Hindu. The Congress won with about 1.5% margin in a tossup election that saw sitting Minister Kaushik Patel lose. This is the first time the BJP vote share dipped below 50% since 1995 while the Congress vote share remained almost static. Interestingly two other Muslim candidates one from the BSP and the other an Independent polled about 1% of the vote. (Btw Mukul Sinha got just 250 odd votes).
Jamalpur had nearly 60% voter turnout. A seat that has never been won by the BJP. It had only 2 Muslim candidates in the fray. The Congress polled 58.5% of the vote while the BJP 33.8%. This is the best vote share the Congress had since 1985 and a 5% decline in vote share for the BJP since 2002.
Vagra had a 66.7% voter turnout. The Congress has been winning here for the last 2 elections. It had 5 muslim candidates and 3 Hindu candidates. The Congress won with a vote share of 47.68%. With the exception of 1995 this is Congress’ worst performance matching its performance in 1990. Its vote share declined from 2002. The BJP’s vote share declined from 2002 as well but its best performance was not in 2002 but in 1990.
Wankaner had 63.65% voter turnout. This seat has flip flopped between the BJP and the Congress last 4 elections. Predictably it went back to the Congress. Congress won with a decisive margin of 16%. Last time BJP won with a decisive margin of 8%. The election before the Congress won a tossup with a margin of 2% against an Independent, the BJP was nearly wiped out in that election. 2002 saw the BJP’s peak performance here. With the execption of 1998 this is the BJP’s worst performance matching 1990.
Now for the lone losing Muslim womas candidate from the Congress. Junagadh saw a relatively lower turnout of just 51.55%. The BJP won with an overwhelming margin of over nearly 26%. Important to note that an Independent polled a high of 14%. The BJP saw a 7% decline in its vote share, its lowest in 3 elections since it started to win this seat.
So where is the evidence of the so called structural polarization ?
In each of these seats where Muslim candidates have won, there is a different story to tell. Except for Kalupur where the vote shares mirror 2002 and the population divide, in the rest of the seats if there is anything common it is that the BJP had done worse than before and in some cases it was at its worst performance.
In closing while the Muslim vote may have consolidated in favor of Muslim candidates fielded by the Congress, the same can hardly be said of the Hindu vote consolidating in favor of the BJP which saw its vote share decline.

Offstumped Bottomline: To call Gujarat structurally polarised is a slur to the nearly two-thirds who participated in this election.
With a majority favoring Narendra Modi the mainstream media must learn to respect the wisdom of the crowds rather than insinuate its judgement.
Unless the psuedo-intellectuals in the media admit to their elitist stupidity and apologize to Gujarat they will be cast by the wayside into irrelevance.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

She can only win, never lose!
Wednesday December 26 2007 08:18 IST
S GURUMURTHY

இதையும் படித்துக் கொள்ளுங்கள். (சுட்டி நாளைக்கு மாறி விடலாம்)

பத்திரிகைகளை 'போலி மதச்சார்பின்மையை' துச்சமாக மதிக்கும் இந்துத்துவாவாதிகளுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கம்!

இது வரை எதிர்த்தவர்கள் எல்லாம் தமது புகழ் பாட ஆரம்பித்து விட வேண்டும் என்று ஏன் எதிர்பார்ப்பு? தாம் செய்வது சரி என்றால் மனதுக்குள் சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே!

'உலகமே எதிர்த்து வந்தாலும் ஒரே ஒரு மனிதன் சத்தியத்தைப் பற்றி நின்றால் போதும் சத்தியம் வெற்றி பெற்று விடும்' என்று படித்திருக்கிறீர்களா? இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கக் கிளம்பியிருக்கும் இந்துத்துவா தீவிரவாதக் கும்பல்களை ஏற்றுக் கொள்வது என்பது நடக்காத ஒன்று.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

please read this from the Vajra's posted Link blog.

Modi's victory exposes intellectual vaccum and denial

Offstumped has wonderfully analyzed the psyche of the likes of you.

பெயரில்லா சொன்னது…

What we need is an indian Mcarthy who will purge you bloody commies.

Far too much mass media space is been covertly taken up by pinkos. This has to end some where. Hopefully the beginning of the end for pinko bootlickers has begun in Blogsphere.

வஜ்ரா சொன்னது…

//
பத்திரிகைகளை 'போலி மதச்சார்பின்மையை' துச்சமாக மதிக்கும் இந்துத்துவாவாதிகளுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கம்!
//

காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி இப்படி சீரழிவதை, வாரிசு அரசியல் செய்ய நிர்பந்தப் படுவதை எண்ணி ஆதங்கப் படாமல் என்ன செய்ய முடியும் ?


//

இது வரை எதிர்த்தவர்கள் எல்லாம் தமது புகழ் பாட ஆரம்பித்து விட வேண்டும் என்று ஏன் எதிர்பார்ப்பு? தாம் செய்வது சரி என்றால் மனதுக்குள் சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே!

//

மா.சி, அந்த குருமூர்த்தியின் கட்டுரையைச் சரியாகப் படிக்கவும். அதில், சோனியா ஜீ தான் அப்படி எண்ணுவதாக எழுதியுள்ளார்.


பா.ஜ.க தான் வாரிசு, அரசியல், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு போன்ற வற்றை எதிர்த்தும் uniform civil code
ஐ ஆதரிக்கும் ஒரே கட்சி, இந்தியாவில்.


//

'உலகமே எதிர்த்து வந்தாலும் ஒரே ஒரு மனிதன் சத்தியத்தைப் பற்றி நின்றால் போதும் சத்தியம் வெற்றி பெற்று விடும்' என்று படித்திருக்கிறீர்களா? இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கக் கிளம்பியிருக்கும் இந்துத்துவா தீவிரவாதக் கும்பல்களை ஏற்றுக் கொள்வது என்பது நடக்காத ஒன்று.

//


இல்லை. படித்ததில்லை.


இன்றைய உலகில் கொள்கை, கொள்கை என்று பயம் காட்டி எவ்வளவு நாள் உங்கள் "அறிவாளிகள்" ஜாதி பிளைக்கப் போகிறது என்று நான் பார்க்கத் தான் போகிறேன்.



you are obsolete mr. ma.si, very soon your service will no longer be required to the society.


பத்திரிக்கைகளில், வலைப்பதிவுகளில், right of centre பார்வையே இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. அதை offstumped அழகாக ஆராய்ந்திருக்கிறார், இந்த மோடியின் வெற்றியை வைத்து.

பெயரில்லா சொன்னது…

//
பத்திரிகைகளை 'போலி மதச்சார்பின்மையை' துச்சமாக மதிக்கும் இந்துத்துவாவாதிகளுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கம்!
//


போலி மதச்சார்பின்மையை என்ன தலையில் தூக்கியா ஆட முடியும்.


மதச்சார்பின்மை பற்றி இதைப் படிங்க.


Structural asymmetric secularism

வஜ்ரா சொன்னது…

என்ன மா.சி. ஹிமாச்சலம் கூட பி.ஜே.பி வெற்றி பெற்றுவிடும் போல இருக்கே ?


கடப்பாவிலிருந்து கற்களை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கவா ? உண்டு செரிப்பதற்கு ? :D

பெயரில்லா சொன்னது…

நம்பிக்கை தரும், இந்த வெற்றி !

நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள், ஒரு முதல்வரினுடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் அடிக்கடி நடப்பதில்லை; இம்முறை இது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்.

எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்து, மோடியின் தலைமையில் பா.ஜ.க.
இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்தான், இந்த வெற்றியின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். "சென்ற இடமெல்லாம், பெரும் கூட்டங்களைச் சந்தித்து, பெண்களை எல்லாம் கவர்ந்துவிட்டார்' என்று கூறப்பட்ட
– சோனியா காந்தியின் கடுமையான தாக்குதல்கள்; மோடி மீண்டும் ஆட்சிக்கு
வந்தால், அந்த "மரணத்தின் வியாபாரி' கையில் குஜராத் சிக்கிவிடும் என்று அவர் விடுத்த மிரட்டல்கள்; மிகவும் நல்லவர் என்று எல்லோராலும் அறியப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் தீவிர பிரச்சாரம்; மோடியையும், பா.ஜ.க.வையும் பொய்யர்கள், ஏமாற்றுப் பேர் வழிகள் என்று அந்த நல்லவரே கூறிவிட்ட சூழ்நிலை; பா.ஜ.க.வில் மோடியின் நிர்வாகத்தில் தங்களுக்குப் பயன் கிட்டவில்லை என்பதால், அக்கட்சியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் வேட்பாளர்களாகவும், சுயேச்சைகளாகவும்
போட்டியிட்டு பா.ஜ.க.வின் ஓட்டுக்களைப் பறித்துவிட முனைந்த, பா.ஜ.க. அதிருப்தியாளர்களின் ஓட்டுப் பிளவு முயற்சிகள்; கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரங்களும், நிகழ்ந்த கொலைகளும் மோடியினால் நடத்தப்பட்டவை என்று சித்தரிக்க முனைந்த, தெஹல்கா தயாரிப்பு வீடியோ
காட்சிகள்; அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, "மோடி கொலைகாரர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது' – என்று தீர்ப்பளித்து, அவரை தண்டிக்குமாறு குஜராத் வாக்காளர்களை வற்புறுத்திய டெலிவிஷன் சேனல்களின் அவதூறுகள்; "மோடி வெறியர், பா.ஜ.க. மதவெறிக் கட்சி' என்றெல்லாம் கூறி, குஜராத் தேர்தலை
காங்கிரஸுக்குச் சாதகமாக்கி விட, வரிந்து கட்டிக்கொண்டு, தேர்தல் பிரச்சாரத்தில்
இறங்கிய பத்திரிகை உலகம்;
பா.ஜ.க.விலேயே இருந்துகொண்டு, மோடியைத் தேர்தலில் வீழ்த்தி, பா.ஜ.க.வை தோற்கடித்து, தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சித்த கேசுபாய் பட்டேலின் துரோகம்; அவரும் அவருடைய ஆதரவாளர்களும் உருவாக்கிய ஜாதி ரீதியான பிரச்சாரம்... என்ற பன்முனைத் தாக்குதலைச் சந்தித்து, மோடியும் அவர் தலைமையில் பா.ஜ.க.வும் கண்டுள்ள
வெற்றி இது.

எதனால் இது சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு; அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண் ஜேட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கும் மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை; அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் – இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக் கூடிய விஷயம் இந்தத் தேர்தலில்
நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில்
இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க்கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது. வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும்
– அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற
அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும், மிகக் கடுமையாக முனைந்தும் – ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர் இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் – என்று நரேந்திர மோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.


சாதாரணமாக நேர்மையாளராகத் திகழ்பவர்கள், செயல் முனைப்பில் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள் என்பது, நம் நாட்டு அரசியலில் உள்ள ஒரு பலவீனம். ஆனால் மோடி இப்படிப்பட்டவரல்ல; அவருடைய செயல் திறன் வியக்கத்தக்கதாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சரி; நிர்வாக ரீதியாக துணிவுடனும், உறுதியுடனும் செயல்படுவதிலும் சரி, அவர் புதிய அத்தியாயங்களையே எழுதி வருகிறார்.

அவருடைய நிர்வாகத் திறனையும் உறுதியையும் காட்ட ஒரு உதாரணம் :
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது, பெரும் எதிர்ப்புக் கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர். மோடி, விவசாயிகளிடம், "இலவச மின்சாரம் தந்தால் – அது ஒவ்வொரு தினமும், மின்சார
விநியோகத்திற்கு வசதியான நேரத்தில்தான் உங்களுக்குக் கிடைக்கும்; மாறாக நீங்கள் கட்டணம் செலுத்தி மின்சாரம் பெறுவதாக இருந்தால், அது ஒவ்வொரு தினமும் 24 மணி நேரமும் கிட்டும். எது வேண்டும்? எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்ல முடியாத இலவச மின்சாரமா? அல்லது எப்போதும் வரும் என்கிற, கட்டணம் செலுத்திப் பெறப்படுகிற மின்சாரமா?' என்று கேட்டார்.

விவசாயிகள், கட்டண மின்சாரத்தையே ஏற்றார்கள்; இலவச மின்சாரம் போயிற்று. அவர்களுக்கு, 24 மணி நேர மின்சார சப்ளை கிட்டியது; ஆனால் சிலர் மின்சாரத் திருட்டில் இறங்கினார்கள். பார்த்தார் மோடி. மின்சாரம் திருடிய ஒரு லட்சம்
விவசாயிகளுக்கு, மின்சார சப்ளை ரத்தாகியது. "ஓட்டு வங்கி' என்று நினைத்து,
அஞ்சி, விவசாயிகள் விஷயத்தில் "வம்பு வேண்டாம்' என்று ஒதுங்கிவிடுகிற
நிர்வாகங்களையே எல்லா மாநிலங்களிலும் கொண்ட நமது நாட்டில் – குஜராத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, மின்சார திருட்டு காரணமாக, மின்சார சப்ளை நின்றது. அவர்கள் தவறை உணர்ந்தனர். நிலைமை சீரடைந்தது. இலவச மின்சாரம் போயிற்று; விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் கிட்டியது. விவசாயிகளுக்குத் திருப்தி; நிர்வாகத்திற்கு வெற்றி. இது மோடியின், நிர்வாக பாணி.


இம்மாதிரி நிர்வாகம் இருப்பதால்தான் – "குஜராத் மிக நன்றாகச் செயல்படுகிற நிர்வாகம் உள்ள மாநிலம்; நிதி நிர்வாகத்திலும் சரி, நீர் நிர்வாகத்திலும் சரி, சமூகத்தில் செய்கிற பணிகளிலும் சரி, முதன்மையாக நிற்கிற மாநிலம் குஜராத்' என்று திட்டக்கமிஷனே – மத்திய காங்கிரஸ் அரசின் கீழ் இயங்குகிற திட்டக்கமிஷனே
– தனது அறிக்கையில் கூறியது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை – சோனியா காந்தியின் தலைமையில் இயங்குவது; மத்திய அமைச்சர்கள் சிலரை உறுப்பினர்களாகக் கொண்டது. அந்த அமைப்பினால் நியமிக்கப்பட்ட குழு, குஜராத்தை "இந்தியாவின் முதல் மாநிலம்' என்று
தேர்ந்தெடுத்தது. "பொருளாதார சுதந்திரம், ஊழலின்மை, அரசின் குறுக்கீடு இல்லாமை, சட்டம் – ஒழுங்கு, மக்கள் வாழ்விற்குப் பாதுகாப்பான சூழ்நிலை, வேலை நிறுத்தத்தினால் தொழில் நஷ்டம் இல்லாமை – ஆகிய பல அம்சங்களிலும், மிக நன்றாகச் செயல்பட்டு, குஜராத் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது' – என்று அந்த அமைப்பு கூறியது.

"ஹிந்துத்துவம் பேசுகிறார்' என்று வர்ணித்து மோடியை வீழ்த்த காங்கிரஸ் முனைந்து வந்தது; அதுவும் பலிக்கவில்லை. ஹிந்துத்துவத்தில் தான் கொண்டுள்ள நம்பிக்கையை மோடி மறைத்ததில்லை; ஹிந்துத்துவம் என்பது, மதரீதியானது அல்ல – என்று
சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது;
மக்கள் மனதிலும் இது ஒரு மதவெறி நிலையாகக் காணப்படவில்லை.

நிர்வாகத்திலும், நேர்மையிலும் மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக மோடி திகழ்கிறார். அப்படிப்பட்டவர் பெற்றிருக்கிற வெற்றி, நேர்மைக்குக் கிடைத்துள்ள வெற்றி.

"நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா?' என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க்கொண்டிருக்கிற நம் நாட்டு
அரசியலில் – மோடி பெற்றிருக்கிற வெற்றி, மக்கள் மனதில் நம்பிக்கை துளிர்க்க வழிசெய்யும்.

பெயரில்லா சொன்னது…

Hindutva and radical islam: Where the twain do meet

What more is needed to stoke reaction ?

மா சிவகுமார் சொன்னது…

//Offstumped has wonderfully analyzed the psyche of the likes of you.//

வேறு வேலை இல்லாத போது படித்துப் பார்க்கிறேன். சோவின் துக்ளக் கூட அவ்வப்போது படிப்பது உண்டு. நாம் நம்புவது எவ்வளவு சரி என்பதற்கு ஆதாரம் இத்தகைய எழுத்துக்களில் கிடைத்து விடுகிறது!

//Far too much mass media space is been covertly taken up by pinkos. This has to end some where. Hopefully the beginning of the end for pinko bootlickers has begun in Blogsphere.//

மக்களை மக்கள் வெறுக்கத் தூண்டும் இந்துத்துவா இயங்கங்களுக்கான எதிர்வினை எல்லாத் தளங்களிலும் இன்னும் பல்கிப் பெருகும். மனித இயல்பு சக மனிரை நேசிப்பது, அதற்கு எதிரானப் போக்குகளுக்கு எதிர்ப்பு இயல்பாகவே வருகிறது.

//பா.ஜ.க தான் வாரிசு, அரசியல், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு போன்ற வற்றை எதிர்த்தும் uniform civil code
ஐ ஆதரிக்கும் ஒரே கட்சி, இந்தியாவில்.//

மத அடிப்படையில் கட்சியே நடத்துபவர்களுக்கு வேறு எதைப் பற்றிப் பேச தார்மீக உரிமை இருக்கிறது.

இந்தியாவில் uniform food code, uniform dress code கூட கொண்டு வந்து விடலாம். எல்லோரும் காலையில் என்ன சாப்பிட வேண்டும், அலுவலகத்துக்கு என்ன உடை உடுத்த வேண்டும் என்று இந்துத்துவா கும்பல்கள் முடிவு எடுத்து அறிவித்து விடலாம்!!!

//இன்றைய உலகில் கொள்கை, கொள்கை என்று பயம் காட்டி எவ்வளவு நாள் உங்கள் "அறிவாளிகள்" ஜாதி பிளைக்கப் போகிறது என்று நான் பார்க்கத் தான் போகிறேன்.//

பாருங்கள். மற்றவர்களை ஏய்த்து வாழும் ஜாதி சமூகம் அழியும் காலம் வந்துதான் விட்டது. அது பொறுக்க முடியாமல்தான் இந்துத்துவா இயக்கங்களின் எதிர்வினை ஆரம்பித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

//கடப்பாவிலிருந்து கற்களை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கவா ? உண்டு செரிப்பதற்கு ?//

கடப்பா கற்களை செரிக்கப் போவது இந்திய நாடு. இந்துத்துவா கும்பல்களின் அநியாயங்களையும் தாங்கிக் கொண்டு வளர வேண்டிய சுமை இந்திய நாட்டுக்கு. அதற்கான உறுதியும் கட்டமைப்பும் நம் நாட்டுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
மத அடிப்படையில் கட்சியே நடத்துபவர்களுக்கு வேறு எதைப் பற்றிப் பேச தார்மீக உரிமை இருக்கிறது.

இந்தியாவில் uniform food code, uniform dress code கூட கொண்டு வந்து விடலாம். எல்லோரும் காலையில் என்ன சாப்பிட வேண்டும், அலுவலகத்துக்கு என்ன உடை உடுத்த வேண்டும் என்று இந்துத்துவா கும்பல்கள் முடிவு எடுத்து அறிவித்து விடலாம்!!!
//

மனித விரோத கம்யூனிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கட்சி நடத்துபவர்கள் எல்லாத்தைப் பற்றியும் பேசுகிறார்களே ?


ஏன், எதற்கு, இடது சாரிக் கட்சிகள் uniform civil code ஐ எதிர்க்கிறார்கள் ?

பா.ஜ.க சொல்கிறது என்ற ஒரே காரணத்தினால் தான் உங்களைப் போன்றவர்கள் uniform civil code ஐ எதிர்க்கிறீர்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்கிறீர்கள். வெட்கங் கெட்ட ஜென்மங்கள்.

பா.ஜ.க மதவாதக் கட்சிதான் ! எந்தச் சந்தேகமும் இல்லை. ஏன் அது மதவாதக் கட்சியாக இருக்கக்கிறது ?


How come no one objects when for years a Muslim politician keeps publishing maps of constituencies in which Muslims as Muslims can determine the outcome, and exhorting them to do so? When, not just an individual politician but entire political parties — from the Congress to the Left parties — stir Muslims up as a vote bank. When Muslims start behaving like a vote bank, you can be certain that someone will get the idea that Hindus too should be welded into a vote bank, and eventually they will get welded into one. Why is stoking Muslims ‘secular’ and stoking Hindus ‘communal’?


புரியாத ஜடங்களுக்கு,


காங்கிரஸ் முதல் கம்யூனிஸ்டுகள் வரை எல்லோரும் இஸ்லாமியர்களை வோட்டு வங்கியாக நடத்துகிறார்கள். இஸ்லாமியர்கள் உண்மையாக வோட்டு வங்கியாகவே நடந்து கொள்ளும் போது (tactical voting). இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் இந்துக்கைளையும் இப்படி வோட்டு வங்கியாக்கலாம் என்ற ஐடியா உதிக்கும். அது போல் செயல் பட்டு வெற்றியும் பெற்றுவிடுவர்.


இஸ்லாமியர்களைத் தூண்டி வோட்டு வங்கி ஆக்கினால் அது "செகுலர்", அதே இந்துக்களைத் தூண்டி வோட்டு வங்கி ஆக்கினால் "மதவாதமா" ?

dondu(#11168674346665545885) சொன்னது…

நரேந்திர மோடியும் அத்வானியும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள், அப்படியே இருக்கட்டும்.

ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? பிந்த்ரன்வாலேயை வளர்த்துவிட்டு, அவன் பல உயிர்களைக் குடிக்க, பிறகு அவனை கொலை செய்வித்து தானும் அதன் காரணமாக தனது பாதுகாப்பாளர்கள் மூலமே கொல்லப்பட்ட சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் அந்த அன்னை மாதா தாயார்.

அவர் இறந்ததும் 4 நாட்களுக்கு மேல் இந்தியா முழுக்க (பஞ்சாப் தவிர்த்து) சீக்கியர்களை வேட்டையாடிக் கொன்றனர். தில்லியில் மிக அதிகம். அப்போது ஓர் ஆலமரம் விழுந்தால் பல சிறுதாவரங்கள் அப்படித்தான் அழியும் என திருவாய் மலர்ந்தருளிய பெருந்தகைதான் ராஜீவ் காந்தி. 1984 தேர்தலில் தீவிரவாதிகளாக சர்தார்ஜிகளை படம் போட்டு காட்டி அபார வெற்றியும் பெற்ற அவர் எப்படிப்பட்ட கிரிமினலாக உங்களுக்கு பட்டிருக்க வேண்டும்?

ஒரு தவறுக்கு இன்னொரு தவறு மாற்றாக முடியாது என்று நீங்கள் உத்தமமாகக் கூறும் முன்னால், சீக்கிய கொலைகளில் ஈடுபட்ட ஜக்தீஷ் டைட்லர், எச்.கே.எல். பகத் ஆகியோர் இன்னும் அமோகமாகவே கொழிக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். அதே சமயம் இதை நீங்கள் எப்போதாவது கண்டித்தீர்களா என்பதையும் தெரிந்து கொள்ள ஆவல்.

2001-ல் நடந்த குஜராத் கலவரத்தை வைத்து 2002-ல் தேர்தல் பிரசாரம் செய்தார்கள், தோற்றும் போனார்கள். அதையே 2007-லும் செய்ய என்ன காரணம். டெஹல்கா டேப்புகளை வேண்டுமென்றே இந்த நேரத்தில் வெளியிடக் காரணம் எது? பிறகு அதைப் பற்றி எல்லோருமே அடக்கி வாசிக்கக் காரணம் எது? அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை வைத்து ஒரு தண்டனையும் வாங்கித் தரமுடியாது என்பதுதானே இதற்கு பதிலாக இருக்க முடியும்? இந்த தமாஷா எல்லாம் இல்லாது போலிஸில் அவற்றை ஒப்படைத்திருக்க இயலாதா?

இன்னொரு விஷயம். கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு தீவிரவாதத் தாக்குதலும் இல்லை என்பதை பற்றி என்ன கருத்து?

இசுலாமியரை ஓட்டு வங்கிகளாக செயல்பட வைப்பது சரி என்றால், இந்துக்களும் அப்படியே இருந்து விட்டு போகிறார்கள். எந்தத் தொகுதியில் என்ன ஜாதி இருக்கிறது என்று பார்ப்பவர்கள் இருக்கின்றனர் தமிழ்நாட்டில். ஓசி டிவிக்கு பல்லிளிக்கின்றனர் மக்கள் இங்கே. குஜராத்தில் அந்த முயற்சியும் செய்து பார்த்து விட்டனர். அங்கு பப்பு வேகவில்லை. அதுதானே உண்மை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) சொன்னது…

//சோவின் துக்ளக் கூட அவ்வப்போது படிப்பது உண்டு.//
என்ன, அவ்வப்போதுதானா? உங்கள் எழுத்து பதிவுகளில் நீங்கள் எப்போது பஸ்ஸில் பயணம் செய்தாலும் துக்ளக்தானே வாங்குவதாகத்தானே எழுதுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

//ஏன், எதற்கு, இடது சாரிக் கட்சிகள் uniform civil code ஐ எதிர்க்கிறார்கள் ?//

இடது சாரிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை....

'இந்தியாவில் uniform food code, uniform dress code கூட கொண்டு வந்து விடலாம். எல்லோரும் காலையில் என்ன சாப்பிட வேண்டும், அலுவலகத்துக்கு என்ன உடை உடுத்த வேண்டும் என்று இந்துத்துவா கும்பல்கள் முடிவு எடுத்து அறிவித்து விடலாம்!!!'

இதனால்தான் uniform civil code அபத்தமாகப் படுகிறது.

//ஒரு தவறுக்கு இன்னொரு தவறு மாற்றாக முடியாது//
டோண்டு சார்! மோடி பாணி அரசியல் காங்கிரசு வன்முறைக்கு மாற்று அல்ல. காங்கிரசில் குண்டர்கள், ரௌடிகள் அநியாயம் செய்தார்கள், சட்டத்துக்கும் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடியின் கட்சி மற்றும் இயக்கத்தின் அடிப்படையே இது போன்ற குற்றங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

//இன்னொரு விஷயம். கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு தீவிரவாதத் தாக்குதலும் இல்லை என்பதை பற்றி என்ன கருத்து?//

(பெருமூச்சு) உண்மையிலேயே இதற்கு மேல் விளக்க இப்போது பொறுமை இல்லை சார்!! நீங்கள் என்னை வீட அதிக ஆண்டுகளாக இந்திய அரசியலை கவனித்து வருபவர். 1980களில், 90களில், கடந்த பத்தாண்டுகளில் மதக் கலவரங்களின் பின்னணியைக் குறித்து அலசிப் பாருங்கள் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.

//நீங்கள் எப்போது பஸ்ஸில் பயணம் செய்தாலும் துக்ளக்தானே வாங்குவதாகத்தானே எழுதுகிறீர்கள்?//

1. இல்லை, எப்போதும் துக்ளக் கிடையாது. விகடன், குமுதம், டெக்கான் குரோனிக்கிள் சில சமயம் துக்ளக்

2. வாராவாரம் விகடன் படிப்பது போல தவறாமல் படித்து விட வேண்டும் என்று துக்ளக் வாங்குவது இல்லை என்பதால் அவ்வப்போது என்று குறிப்பிட்டேன்.

சோவின் அரசியல் சார்புகள் எப்படி இருந்தாலும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தான் நினைத்ததை தைரியமாகச் சொல்லும் குணத்தை மோடி, பாஜக விவகாரங்களில் இழந்து விட்டார் என்றே நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

dondu(#11168674346665545885) சொன்னது…

//ஒரு தவறுக்கு இன்னொரு தவறு மாற்றாக முடியாது என்று நீங்கள் உத்தமமாகக் கூறும் முன்னால், சீக்கிய கொலைகளில் ஈடுபட்ட ஜக்தீஷ் டைட்லர், எச்.கே.எல். பகத் ஆகியோர் இன்னும் அமோகமாகவே கொழிக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். அதே சமயம் இதை நீங்கள் எப்போதாவது கண்டித்தீர்களா என்பதையும் தெரிந்து கொள்ள ஆவல்//.
அதை ஓப்புக்குக் கூட நீங்கள் கண்டிக்கவில்லையே என்ற எனது கேள்விக்கு பதில் எங்கே?

குஜராத்தில் பயணம் செய்து, அங்குள்ள பொது மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அவதானித்தீர்களா? இல்லை மீடியாக்களில் படித்ததைப் பார்த்துத்தான் எழுதினீர்களா?

தில்லியில் காங்கிரஸ் 1984-ல் செய்த அக்கிரமத்தை நேரில் பார்த்தவன் நான். ஒரு காலத்தில் இந்தியன் என்றால் அன்னியப்படங்களில் சர்தார்ஜிகளைத்தான் காட்டுவார்கள். அவர்களை தீவிரவாதிகளாக்கி பின்னால் கொலை செய்த காங்கிரஸின் தவறை ஏன் அடக்கி வாசிக்கிறீர்கள்? 2007-லும் 2002-ல் செய்த பிரசாரத்தையே செய்வது என்பது எந்த முறையில் சரி? அப்படி என்றால் 1984-ம்தானே எடுக்க வேண்டும்?

சோ பற்றி கடைசி பாராவில் நீங்கள் குறிப்பிட்டதற்கு எனது பதில். இல்லை சோ அவர்கள் தான் நினைத்ததை தைரியமாகத்தான் கூறுகிறார். அது உங்கள் ரசனைக்கேற்றபடி இல்லையென்றால் அது உங்கள் பிரச்சினை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

//
இதனால்தான் uniform civil code அபத்தமாகப் படுகிறது.
//

 அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதி என்று சொல்வது உங்களுக்கு அபத்தமாகப் படுகிறது, ரொம்ப சந்தோஷம்.


உங்களைப் போன்ற கம்பூனிசக் கைகூலிகளிடம் என்ன ஞாயத்தை எதிர்பார்க்க முடியும் ?

பெயரில்லா சொன்னது…

Remarkably after all the reams of paper filled and the tankers of ink spilt, Sonia hasn’t changed her approach to politics one bit since her grand entrance 10 years ago. It is still that ‘as if to the manner born’ look, the complete merger of the Congress identity within the Nehru/Gandhi clan identity (the latter being a complete hoax), and the plain and clear goal of continued suzerainty over India’s thinking and living. What has changed is the attitude of the prospective allies. IG for all her ruthlessness was a patriot to the core and it can be argued every action she took however distasteful and however nepotistic was tied into India’s interests in some way or the other. IG was a ver strong and courageous person and treated carpetbaggers like the DMK and traitors from the commie parties like dirt. No one treated commies like she did, utterly divesting them of any claim to respectability whatsoever. Mimic marxes like Jyoti Basu still quake in their boots when they think of her (which is why the crook contrived to keep clear of the prisons during the Emergency). Sonia’s interests are narrower and exhibit a siege mentality. She is at the vanguard of a ramshackle Nehruvian - don’t worry-be happy-socialist spirit staffed by limo liberals, chatterati, and assorted doormats clinging to visions of world domination through medicrity. At the core these punks have either their family interests at heart (Lalloo. Mulayam, Karunanidhi, Deve Gowda etc.) or their scotch and soda exclusivity on the tops of their minds. They love to lord it over the less educated or the indigenously educated folk, keep us out of their IIC and keep us out of the Euiropean junkets. Vinod Mehta, Rajiv Shukla, Vir Sanghvi, N.Ram etc., love to be our patronisers. Unfortunately huge masses of India have moved past and are leaving this crumbling facade behind in the dust. There are some who buy into this corrupt vision and rather than making a determined push to compete would like to join the chatterati and gliberals and blame crony capitalism for their fate. Vinod Mehta’s Outlook is founded on the belief that cynicism runs deep in India and that a rag that runs counter to the India Today formula of optimism is bound to find a market. Vinod Mehta hasn’t bett badly but had better watch out. Ideas are fickle things and never last for ever. India is one of those media markets where blog readership overlaps almost completely with ELM readership. That is every person in the latter category is likely to have an internet connection. Making the ELM irrelevant should be an easier task in India than it is in otehr parts of the world.

மா சிவகுமார் சொன்னது…

//அதை ஓப்புக்குக் கூட நீங்கள் கண்டிக்கவில்லையே என்ற எனது கேள்விக்கு பதில் எங்கே?//

அந்த சம்பவங்கள் நடந்த போது நான் பிளாக் எழுதிக் கொண்டிருக்கவில்லை என்ற உடனடிக் காரணம் ஒரு புறம் இருக்க, அவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய சம்பவங்கள்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மோடியின் குற்றங்களைப் பேசும் இடுகையில் அவற்றைக் குறித்து பேசுவதை விட, தனியாக காங்கிரசின் அராஜகப் போக்கு என்று ஒரு பதிவு போட்டுக் கண்டிக்கலாம்.

காங்கிரசின் முரட்டுத் தனமான அயோக்கியத்தனங்கள் விதியை மீறி செய்யப்படுபவை, இந்துத்துவா இயக்கங்களில் முரட்டுத்தனமான மனிதவிரோதச் செயல்கள் அவர்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்கின்றன என்பது எனது புரிதல்.

//இல்லை மீடியாக்களில் படித்ததைப் பார்த்துத்தான் எழுதினீர்களா?//

மீடியாக்களில் படித்த விபரங்கள், 1980களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்கள் அனுபவித்த நிகழ்ச்சிகளை ஒத்திருப்பதை உணர்ந்து எழுதினேன்.

//சோ அவர்கள் தான் நினைத்ததை தைரியமாகத்தான் கூறுகிறார். //

என்கவுண்டரை நியாயப்படுத்தி ஒரு மாநில முதல்வர் பேசுவதை குறித்த போன வார தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள். பூசி மெழுகல் தெரியும்.

//அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதி என்று சொல்வது உங்களுக்கு அபத்தமாகப் படுகிறது, //

உங்கள் வீட்டில் என்ன காலை உணவு என்பது உங்கள் குடும்பத்து உறுப்பினர்களின் வசதியையும் விருப்பத்தையும் பொறுத்து மட்டும் இருந்தால் போதும். அதில் என்னுடைய கருத்துக்கு ஏன் தேவை? 'எல்லா வீட்டிலும் காலையில் ஆலு பரோட்டாதான் உணவு' என்று ஒரே சட்டம் வந்தால் எப்படி இருக்கும்.

குற்றவியல் சட்டங்கள் பொதுவில்தான் இருக்கின்றன. ஒரு சமூகத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கான சிவில் சட்டங்கள் தனியாக இருப்பதில் என்ன பிரச்சனை? அவற்றில் மாற்றங்களை அந்த சமூகத்தினரே செய்து கொள்வார்கள்.

அதில் அரசாங்கத்துக்கோ, பெரும்பான்மை கருத்துக்கோ இடமே இல்லை.

எல்லாமே uniform ஆக இருக்க வேண்டும் என்பது பாசிசம். அதில் ஏறிப் பயணிக்கும் இந்துத்துவா இயக்கங்கள் நாட்டு ஒற்றுமைக்கு உலை வைக்கத்தான் கிளம்பியிருக்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடு. அதை குலைக்க முனைபவர்கள் இந்தியாவின் எதிரிகள்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
உங்கள் வீட்டில் என்ன காலை உணவு என்பது உங்கள் குடும்பத்து உறுப்பினர்களின் வசதியையும் விருப்பத்தையும் பொறுத்து மட்டும் இருந்தால் போதும். அதில் என்னுடைய கருத்துக்கு ஏன் தேவை? 'எல்லா வீட்டிலும் காலையில் ஆலு பரோட்டாதான் உணவு' என்று ஒரே சட்டம் வந்தால் எப்படி இருக்கும்.

குற்றவியல் சட்டங்கள் பொதுவில்தான் இருக்கின்றன. ஒரு சமூகத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கான சிவில் சட்டங்கள் தனியாக இருப்பதில் என்ன பிரச்சனை? அவற்றில் மாற்றங்களை அந்த சமூகத்தினரே செய்து கொள்வார்கள்.

அதில் அரசாங்கத்துக்கோ, பெரும்பான்மை கருத்துக்கோ இடமே இல்லை.

எல்லாமே uniform ஆக இருக்க வேண்டும் என்பது பாசிசம். அதில் ஏறிப் பயணிக்கும் இந்துத்துவா இயக்கங்கள் நாட்டு ஒற்றுமைக்கு உலை வைக்கத்தான் கிளம்பியிருக்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடு. அதை குலைக்க முனைபவர்கள் இந்தியாவின் எதிரிகள்.

அன்புடன்,
மா சிவகுமார்
//

மிகவும் தவறான பார்வை திரு. சிவகுமார் அவர்களே.


அனைவருக்கும் ஒரே நீதி என்பது, நீதிக்கு முன் அனைவரும், அனைத்து மதத்தினரும் சமம் என்று பொருள்.


நீதிக்கு முன் சமம் என்றில்லாமல் இருப்பது தான் ஃபாசிசம்.


தனிப்பட்ட சொத்துரிமை, பெண்களுக்கு எதிரான வண்கொடுமையான வரதட்சணை, பாகப்பிரிவினை, திருமணம், விவாகரத்து, போன்றவை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தவர்கள் என்று மற்றவர்களுக்கு hindu personal law என்று இருக்கிறது நம் இந்தியாவில்.


இதில் இஸ்லாமியர்கள் 4 பெண்டாட்டி கட்டுதல், செல் போன் மூலம் தலாக் கூறி விவாகரத்து பெறுதல், பெண்களுக்கு சொத்தொல் சல்லிக் காசு கொடுக்காமல் இருத்தல், போன்ற செயல்களுக்கு அரசே தனிச் சிவில் சட்டம் மூலம் அங்கீகாரம் வழங்குவது கேவலமான செயல்.


ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் தனிச் சிவில் சட்டம் உள்ளது, அதில் பெண்களை இழிபிறவிகளாக நடத்துவது போன்ற விஷயங்கள் விவாதித்தால் ஐக்கிய நாடுகள் சபை கூட இந்தியாவில் பொதுச் சிவில் சட்டம் கொண்டு வரச்சொல்லி இந்திய அரசை நிர்பந்திக்கும்.

இது போன்ற தனிச் சிவில் சட்டத்தினால் பாதிக்கப்படுவது முற்றிலும் பெண்களே. ஏனென்றால் எல்லாத் தனிச் சிவில் சட்டமும் ஏதாவது ஒரு மத அடிப்படையைக் கொண்டது. எந்த மதமும் பெண்களை சமமாக நடத்துவது கிடையாது (இந்து மதம் உட்பட).


பெண் விடுதலை, ஆணும் பெண்ணும் சமம் என்று லிபரல் கருத்து பேசும் உங்களைப் போன்ற "அறிவாளிகள்" இந்த விஷயத்தில் கன்றாவியாக பல்லிழித்துக் கொண்டு, அந்த அந்த மதத்தினர் அவர்கள் சட்டத்தைத் திருத்திக் கொள்வார்கள் என்று எக்ஸ்பிளனேசன் கொடுப்பது, பார்க்க, கேட்க, மற்றும் நினைக்க மிக மிக மிகக் கேவலமாக உள்ளது. நீங்கள் எல்லாம் இனி பெண் விடுதலை என்றெல்லாம் பேசினால் ஷரியத் சட்டப்படி, 1000 சவுக்கடிகளும் முடிந்தால் விரல்கள், கை, கால், அல்லது சுசினம் என்று ஏதாவது ஒன்றை வெட்டவும் செய்யலாம்.

மா சிவகுமார் சொன்னது…

//தனிப்பட்ட சொத்துரிமை, பெண்களுக்கு எதிரான வண்கொடுமையான வரதட்சணை, பாகப்பிரிவினை, திருமணம், விவாகரத்து, போன்றவை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தவர்கள் என்று மற்றவர்களுக்கு hindu personal law என்று இருக்கிறது நம் இந்தியாவில்.//

உண்மை.

//இதில் இஸ்லாமியர்கள் 4 பெண்டாட்டி கட்டுதல், செல் போன் மூலம் தலாக் கூறி விவாகரத்து பெறுதல், பெண்களுக்கு சொத்தொல் சல்லிக் காசு கொடுக்காமல் இருத்தல், போன்ற செயல்களுக்கு அரசே தனிச் சிவில் சட்டம் மூலம் அங்கீகாரம் வழங்குவது கேவலமான செயல்.//

இதில் பிற்போக்கான சட்டங்களைச் சரி செய்து கொள்ள வேண்டியது இசுலாமிய சமூகத்தினர் செய்ய வேண்டியது. அதில் கேட்காத அறிவுரைகளும் வலியுறுத்தல்களும் தர யாருக்கும் உரிமையும் இல்லை, தேவையும் இல்லை.

//இது போன்ற தனிச் சிவில் சட்டத்தினால் பாதிக்கப்படுவது முற்றிலும் பெண்களே. ஏனென்றால் எல்லாத் தனிச் சிவில் சட்டமும் ஏதாவது ஒரு மத அடிப்படையைக் கொண்டது. எந்த மதமும் பெண்களை சமமாக நடத்துவது கிடையாது//

பொதுச் சட்டம்தான் அதற்குத் தீர்வு என்று எப்படிக் கூறுகிறீர்கள்? ஒவ்வொரு சட்டத்தையும் சீரமைப்பதுதானே சரியாக இருக்க முடியும்!

//நீங்கள் எல்லாம் இனி பெண் விடுதலை என்றெல்லாம் பேசினால் ஷரியத் சட்டப்படி, 1000 சவுக்கடிகளும் முடிந்தால் விரல்கள், கை, கால், அல்லது சுசினம் என்று ஏதாவது ஒன்றை வெட்டவும் செய்யலாம்.//
அது குற்றவியல் சட்டம். அதற்கு இந்தியக் குற்றவியல் சட்டம் இருக்கிறது (என்னுடைய புரிதல்). எனது சொத்து விவகாரங்கள், உறவுகள் போன்றவற்றிற்குத்தான் தனிச் சட்டங்கள்.

நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது பொது சிவில் சட்டத்தின் உன்னதம் புரிகிறது. அது வருவதற்கு ஒவ்வொரு மதத்தினரும் பல மடங்கு உயர் நிலையை அடைய வேண்டியிருக்கும்.

இந்து மதத்தினர் கோயில்களை எப்படி நிர்வகிப்பது? மடங்களின் சொத்துக்கள் எப்படி கையாளப்பட வேண்டும்? கூட்டுக் குடும்பங்கள் எப்படி உறவாட வேண்டும்? என்று பல விஷயங்களில் மாற வேண்டியிருக்கும்.

சரிதானே?

(கூகிளில் தேடி கொஞ்சம் படித்துப் பார்த்தேன். இதைப் பாருங்கள் . இன்னும் பல சுட்டிகள் கிடைக்கின்றன).

இந்தியா போன்ற பல்கலாச்சார, பல்மொழி நாட்டில் மாற்றங்கள் உள்ளிருந்து வர வேண்டும். மிரட்டலாலும், அதிகாரத்தாலும் மாற்றங்கள் வராது, அழிவும் தேக்கமும்தான் மிஞ்சும்

ஒவ்வொரு சமூகமும் தமது சட்டங்களை மேம்படுத்திக் கொண்டே வந்து சீர்திருத்திக் கொண்டே வரும் போது பொது சிவில் சட்டம் என்று உடோபியா உருவாகி விடும். (நான் உடோபியாக்களை நம்புபவன்)

அதற்குத் தேவை ஒவ்வொரு சமூகத்திலும் அன்பும் சேவை மனப்பான்மையும் கொண்ட தலைவர்களின் வழிகாட்டல். மாற்று சமூகத்தினரில் போர் முழக்கங்களினால் மாற்றங்கள் வந்து விடாது.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

அப்ப ஒண்ணு செய்யலாம் சார்.


கிரிமினல் சட்டங்களையும் தனிச் சட்டங்களாக மாற்ற ஏற்பாடு செய்யலாம். அந்தச் சட்டம் அந்த அந்த மதத்தினரே மாற்றிக் கொள்ளட்டும். எதற்கு அரசு தேவையில்லாமல் அதில் தலையிட வேண்டும் ?


இந்துக்கள் (குறிப்பாக தலித்துக்கள்) வேதங்கள் கேட்டால் ஈயம் காய்ச்சி ஊற்றுவோம், பிராமணனுக்கு முதல் மரியாதை செய்வோம், சரியா ?


தவறு செய்து மாட்டிக் கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு ஷரியா சட்டத்தின் படி தண்டனை. பொது இடத்தில் தூக்கு, சவுக்கடி, கை எடுப்பது, கால் எடுப்பது, வண்டி ஏற்றி கையை உடைப்பது...கல்லால் அடித்துக் கொல்லுதல் எல்லா வித தண்டனைகளும் கொடுக்கப்படவேண்டும்..சரியா ?


Lets all go the middle ages and live.

A common civil code is the need of the hour. Muslims will never agree to a common civil code, because they want Sharia to be the common civil code of India.

பெயரில்லா சொன்னது…

Cracking the code.

uniform civil code ஏன் இருக்கவேண்டும் என்ற
தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

//கிரிமினல் சட்டங்களையும் தனிச் சட்டங்களாக மாற்ற ஏற்பாடு செய்யலாம். அந்தச் சட்டம் அந்த அந்த மதத்தினரே மாற்றிக் கொள்ளட்டும். எதற்கு அரசு தேவையில்லாமல் அதில் தலையிட வேண்டும் ?//

அப்படி எல்லாமே கருப்பு வெள்ளையாக இருந்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு எளிதாகிப் போய் விடும்!! ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அணுகுமுறைதான் செல்லும் என்பது நடைமுறை உலகம் ஐயா.

//A common civil code is the need of the hour. //

need of the hour என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு பகைமையைத் தூண்டாமல், இணக்கமாக மாறும் சூழல் இருக்க வேண்டும். இந்துத்துவா இயக்கங்களின் அடாவடிப் போக்குகள் அந்தச் சூழலுக்கு வழி வகுக்கா என்று மட்டும் தெரிகிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//uniform civil code ஏன் இருக்கவேண்டும் என்ற
தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.//

சுட்டிக்கு நன்றி அனானி. அது குறித்த இன்றைய நடைமுறை அரசியலையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ராமச்சந்திர குகா.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
இந்துத்துவா இயக்கங்களின் அடாவடிப் போக்குகள் அந்தச் சூழலுக்கு வழி வகுக்கா என்று மட்டும் தெரிகிறது.
//

இந்துத்வா இயக்கங்கள் நோக்கம் தவறாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எடுத்துரைக்கும் பிரச்சனை சரியானதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் மனம் மாறக்கூடும்.


வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவுக்கு

உண்மவையான ஆபத்து, அப்போது தான் ஏற்படும்.


அதை மறந்து இந்துத்வா இயக்கங்கள் ஆதரிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரசும், வெளி நாட்டுக் கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகளும் uniform civil code விஷயத்தை எதிர்ப்பது அந்த ஆபத்தை அருகில் அழைப்பதற்குச் சமம்.


இதைத்தான் குஹா சொல்லியுள்ளார்.


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


இந்த ஆண்டு தீவிரவாதம் ஒடுக்கப்படும் ஆண்டாக இருக்கட்டும்.

மா சிவகுமார் சொன்னது…

//இந்துத்வா இயக்கங்கள் நோக்கம் தவறாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எடுத்துரைக்கும் பிரச்சனை சரியானதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் மனம் மாறக்கூடும்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவுக்கு உண்மவையான ஆபத்து, அப்போது தான் ஏற்படும்.//

நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகிறது. உண்மையான தேவைகளை எடுத்துக் கொண்டு தீய உள்நோக்கத்தோடு வருபவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து விடுவது அபாயம்தான்.

//அதை மறந்து இந்துத்வா இயக்கங்கள் ஆதரிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரசும், வெளி நாட்டுக் கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகளும் uniform civil code விஷயத்தை எதிர்ப்பது அந்த ஆபத்தை அருகில் அழைப்பதற்குச் சமம்.
இதைத்தான் குஹா சொல்லியுள்ளார்.//

அதேதான் என்னுடைய புரிதலும். அதற்கான விடிவுதான் கண்ணுக்குத் தெரியவில்லை :-(

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//இந்த ஆண்டு தீவிரவாதம் ஒடுக்கப்படும் ஆண்டாக இருக்கட்டும்//

இந்துத்துவா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இன்னும் பல ஆண்டுகள் தீங்கு விளைத்து விட்டுதான் ஓயும் என்றுதான் படுகிறு. இந்த ஆண்டிலேயே ஒடுக்கப்பட்டு விடுமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
அதேதான் என்னுடைய புரிதலும். அதற்கான விடிவுதான் கண்ணுக்குத் தெரியவில்லை :-(
//

விடிவு, தெளிவான ஒரு சிவில் சட்டம் கொண்டுவருவதே. அதை ஏற்கனவே அன்னல் அம்பேத்கார் எழுதியும் உள்ளார். நடைமுறைக்குக் கொண்டு வந்தால் போதும்.


இந்துத்வா இயக்கங்கள் அதைச் செய்தால் அனைத்து மக்களும் அவர்கள் பக்கம் போய்விடுவர். ஏற்கனவே அப்படி நடக்கவும் ஆரம்பித்துவிட்டது.


//

இந்துத்துவா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இன்னும் பல ஆண்டுகள் தீங்கு விளைத்து விட்டுதான் ஓயும் என்றுதான் படுகிறு. இந்த ஆண்டிலேயே ஒடுக்கப்பட்டு விடுமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது

//


தீவிரவாதம் என்பதைத் திண்ணமாக எதிர்க்கத் திராணியில்லாமல் இருக்கும் நடுவண் அரசு தவறு செய்கிறது. இவர்களுடய ஒவ்வொறு தவறும் நரேந்திர மோடி அத்வாணி போன்றோரின் political base ஐ அதிகரிக்கும்.


இந்துத்வா தீவிரவாதம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை இந்துத்வாவாதிகள் யாரையும் திட்டமிட்டு சதி செய்து கொன்றதில்லை. கலவரத்தின் போது தாக்குதல் போன்ற காரியங்கள் தீவிரவாதம் ஆகாது, அதன் பெயர் Arson, terrorism இல்லை.


இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம், மாவொயிஸ்டுகள் (ultra left wing terrorism) தீவிரவாதம் தான் அதிக உயிர்களைக் கொன்றுள்ளது.

மா சிவகுமார் சொன்னது…

//விடிவு, தெளிவான ஒரு சிவில் சட்டம் கொண்டுவருவதே. அதை ஏற்கனவே அன்னல் அம்பேத்கார் எழுதியும் உள்ளார். நடைமுறைக்குக் கொண்டு வந்தால் போதும்.//

யாரும் கொண்டு வரக் கூடாது. ஒத்தக் கருத்துடன் உருவாக வேண்டும் என்பதுதான் பரவலான கருத்து.

//இந்துத்வா இயக்கங்கள் அதைச் செய்தால் அனைத்து மக்களும் அவர்கள் பக்கம் போய்விடுவர். ஏற்கனவே அப்படி நடக்கவும் ஆரம்பித்துவிட்டது.//

தவறான உள்நோக்கத்தோடு நடந்து கொள்பவர்களின் சாயம் ஒரு நாள் இல்லா விட்டால் மறுநான் வெளுத்துத்தான் போகும்.

//இந்துத்வா தீவிரவாதம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை இந்துத்வாவாதிகள் யாரையும் திட்டமிட்டு சதி செய்து கொன்றதில்லை.//

'அறையில் எரிவாயுவைத் திறந்து விட்டு விட்டு, குறிப்பிட்டவர் வந்து அடுப்பை பற்ற வைப்பார் என்று காத்திருப்பவர்கள்' குற்றவாளி இல்லை என்றால் இந்துத்துவாவாதிகளும் தீவிரவாதிகள் இல்லை.

//இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம், மாவொயிஸ்டுகள் (ultra left wing terrorism) தீவிரவாதம் தான் அதிக உயிர்களைக் கொன்றுள்ளது.//

இந்தத் தீவிரவாதங்களின் வரலாற்றை கவனித்திருக்கிறீர்களா? 1990களுக்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் எங்கெல்லாம் இருந்தது. அஸ்ஸாம், பஞ்சாப், காஷ்மீர். இப்போது எங்கெல்லாம் இருக்கிறது? ஏன்?

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
இந்தத் தீவிரவாதங்களின் வரலாற்றை கவனித்திருக்கிறீர்களா? 1990களுக்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் எங்கெல்லாம் இருந்தது. அஸ்ஸாம், பஞ்சாப், காஷ்மீர். இப்போது எங்கெல்லாம் இருக்கிறது? ஏன்?
//

ஹலோ சார், சுத்தி சுத்தி உங்க குற்ற உணர்ச்சி உங்களை எங்கே கொண்டு வருகிறது என்று எனக்குத் தெரிகிறது. இதைத்தான் திம்மி மனப்பான்மை அல்லது திம்மித்துவம், இந்துத்வாத்திற்கு எதிர்ப்பதம், என்று சொல்கிறார்கள்.



(இந்துத்வம் இஸ்லாமுக்கு எதிரானது அல்ல, மாறாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சொல்வதைக் கேட்டுச் செயல்படும் திம்மித்துவத்திற்கு எதிரானது)



இன்றும் தீவிரவாதம் அஸ்ஸாம், பஞ்சாப், கஷ்மீரில் இருக்கிறதே ? ஏதாவது மாறியிருக்கா ?


1992 டிசம்பர் 6 இந்துக்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படும் மானங்கெட்டத்தனத்திலிருந்து விடுதலை அடைய செய்த புரட்சி நாள்.


இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு முதல் அடி இந்தியாவில் விழுந்த நாள்.

இஸ்லாமியத் தீவிரவாதம் இன்று எல்லா இடத்திலும் இருக்கிறது. அல்பேனியர்கள் வாழும் கோசவோ, சீனாவில், ஐரோப்பாவில், அமேரிக்காவில் என்று எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தீவிரவாதமும் இருக்கிறது, அதற்கெல்லாம் என்ன 1992 டிசம்பர் 6 தான் காரணமா ?

மா சிவகுமார் சொன்னது…

//ஹலோ சார், சுத்தி சுத்தி உங்க குற்ற உணர்ச்சி உங்களை எங்கே கொண்டு வருகிறது என்று எனக்குத் தெரிகிறது. இதைத்தான் திம்மி மனப்பான்மை அல்லது திம்மித்துவம், இந்துத்வாத்திற்கு எதிர்ப்பதம், என்று சொல்கிறார்கள்.//

இல்லை சார்!! இது போன்ற அமெச்சூர் மனவியல் அலசல் எல்லாம் செய்யாமல் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.

நான் கேட்ட கேள்விக்கு விடை என்ன?

1990களுக்கு முன்னால் இந்தியாவில் தீவிரவாதம் எங்கெங்கு இருந்தது? இப்போது எங்கெங்கு பரவியிருக்கிறது? அதற்கு அடிப்படை என்ன?

//1992 டிசம்பர் 6 இந்துக்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படும் மானங்கெட்டத்தனத்திலிருந்து விடுதலை அடைய செய்த புரட்சி நாள்.//

ஒவ்வொரு இந்திய குடிமகனும் வெட்கப்பட வேண்டிய இழிந்த நாள் அது. 'நாட்டின் சட்டங்களை மதிக்காமல் ஒரு கும்பல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்' என்று கருதுகோளை உருவாக்கிக் கொண்டாடி வரும் அடிப்படை வாதிகள் நாட்டின் மானத்தை கப்பலேற்றிய நாள்.

//இஸ்லாமியத் தீவிரவாதம் இன்று எல்லா இடத்திலும் இருக்கிறது. //

இந்தியாவைப் பற்றிப் பேசுங்கள். இந்தியாவில் தீவிரவாதத்தின் வேர் என்ன?

கசப்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
அதற்கு அடிப்படை என்ன?
//

என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

//
இந்தியாவைப் பற்றிப் பேசுங்கள். இந்தியாவில் தீவிரவாதத்தின் வேர் என்ன?
//

என்னைப் பொருத்தவரை இந்தியாவில் (greater india) தீவிரவாதத்தின் விதை விதைக்கப்பட்ட ஆண்டு 644 AD.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

எந்த ஒரு அமைப்பிலும் ஒரு குழுவினர் எண்ணிக்கையின் அடிப்படையில் வலிமையாகவும் ஆதிக்கம் செலுத்தும்படியும் இருக்க முடியும். இதனால் அமைப்பில் இருக்கும் மற்ற சிலரின் தேவைகள் சரிவர கவனிக்கப்படாமல் போய் விடும் நிலைமை உருவாகும்.

இந்த நிலைமைக்கு வழி வகுக்கும் காரணங்களில் சில: ஆண்/பெண்ட, வயது, மொழி, இனம், மதம், உடல் திறமைகள் போன்றவை

ஒரு அமைப்பு நிறைவாக செறிவாக செயல்பட ஒவ்வொரு உறுப்பினரின் சிறப்புத் தேவைகளையும் கவனித்து எல்லோரும் மன நிறைவுடன் வாழும் சூழல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட நாடாக உருவாக்கப்பட்டதுதான் இந்தியத் திருநாடு (1947ல்/1950ல்). அந்தச் சூழலைக் குலைக்கும் வேலையில் இந்துத்துவா கும்பல்கள் ஈடுபடுவதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிக்கின்றன.

'நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்க இந்த நாட்டில், அந்த அமைப்பில் வழி இல்லை' என்று பொருளாதார ரீதியாக அல்லது, மத ரீதியாக அல்லது சாதி ரீதியாக
சிறுபான்மையினராக இருக்கும் ஒருவர் மனம் சோர்ந்து போனால் அவருக்கு திறக்கும் வழி, அமைப்பைத் தகர்த்து விட முயற்சிக்கும் தீவிரவாதச் செயல்கள்.

அதிகாரத்தைப் பிடிக்க தமது அரசியலை வளர்க்க அடாவடியாகச் செயல்பட்ட அத்வானி போன்றவர்களின் செயல்கள் ஏற்கனவே 'சட்டத்தை மதிக்கத் தேவையில்லை' என்று முன்னுதாரணம் ஏற்படுத்தி விட்ட பிறகு தீவிரவாதம் என்று குற்றம் சாட்ட என்ன உரிமை இருக்கிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
அதிகாரத்தைப் பிடிக்க தமது அரசியலை வளர்க்க அடாவடியாகச் செயல்பட்ட அத்வானி போன்றவர்களின் செயல்கள் ஏற்கனவே 'சட்டத்தை மதிக்கத் தேவையில்லை' என்று முன்னுதாரணம் ஏற்படுத்தி விட்ட பிறகு தீவிரவாதம் என்று குற்றம் சாட்ட என்ன உரிமை இருக்கிறது.

//

சரி அவர்களுக்கு உரிமை இல்லாமலே போகட்டும். ஆனால் தீவிரவாதத்தை தீவிரவாதம் என்று சொல்லும் அறிவு கூடவா இல்லாமல் போகும் ?

மா சிவகுமார் சொன்னது…

//அவர்களுக்கு உரிமை இல்லாமலே போகட்டும். ஆனால் தீவிரவாதத்தை தீவிரவாதம் என்று சொல்லும் அறிவு கூடவா இல்லாமல் போகும் ?//

உரிமை இல்லை என்றால் சொல்ல முடியாது. அதே அறிவைப் பயன்படுத்து தாம் செய்வதும் தீவிர பயங்கரவாதம்தான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

மோடியின் தலைமையில் குஜராத் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறுவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. சில கார்ப்பரேட் முதலாளிகள் “மோடி தான் பிரதமருக்கு பொருத்தமானவர்“ என வக்காலத்து வாங்கினர். இதன் காரணமாக அத்வானிக்கு தூக்கம் பறி போய் விட்டது. பிரதமரின் கனவில் மோடி உலாவர அவரது மாநிலத்தில் தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் அவலம் குறித்து தடுத்திட அவருக்கு சிந்தனையோ அல்லது நேரமோ இல்லாமல் போய் விட்டது.

அமெரிக்க பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று வைரம் பட்டைத் தீட்டும் தொழிலாகும். குஜராத் மாநில சூரத் நகரில் மட்டும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் உள்ளனர். நெருக்கடி காரணமாக தீபாவளிக்கு மூடப்பட்ட தொழில்கள் இதுவரை திறக்கப்படவில்லை.

வேலைப் பறிபோன காரணத்தால் வறுமை இத்தொழிலாளர்களை வாட்டி வருகிறது. இதற்கு முதல் பலி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விதான். கல்விக் கட்டணத்தை கட்ட முடியாத பல தொழிலாளர்கள் தம் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதை நிறுத்த வேண்டியதாயிற்று. இக்குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலுவான கோரிக்கைகள் எழுந்தன. மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மோடி அரசாங்கம் இணங்கியது.

இதற்கான படிவங்கள் வாங்க வந்த தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் மீது மோடி அரசாங்கம் இரக்கமின்றி தடியடி நடத்தியது. பலர் இரத்தக் காயம் அடைந்தனர். இந்த தடியடி நடந்த பொழுதுதான் “உயிர்த் துடிப்புடன் பீடு நடை போடும் குஜராத்“ எனும் நிகழ்ச்சியில் கார்ப்பரேட் முதலாளிகள் மோடிக்கு பிரதமர் கனவை உருவாக்கினர். அந்த கனவுலகத்தில் மிதந்த மோடிக்கு தடியடி என்பது கவலைப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனையா என்ன?

கல்விக் கட்டணத்தை ரத்து செய்தாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்தனர் பெற்றோர்கள். காரணம் வறுமை! இறுதியில் தம் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தனர். இப்படி 71 தொழிலாளர்கள் கடந்த இரு மாதங்களில் தற்கொலை செய்து தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

வறுமையில் இத்தொழிலாளர்கள் வாடிக் கொண்டிருக்கும் இதே வேளையில் வைர முதலாளிகள் தம் சொகுசு வாழ்வில் குறைவில்லாமல் மூழ்கி வருகின்றனர். இவர்களது வீட்டில் வருமானவரி சோதனை நடந்த பொழுது கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிக்கப்பட்டன.

குஜராத்தின் பல இடங்களில் இத்தொழிலாளர்கள் மரணத்தின் விளிம்பை நோக்கி சென்று கொண்டுள்ளனர். முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மோடி தொழிலாளர்களுக்கு உதவிட முன்வரவில்லை. இன்னும் எத்தனை தற்கொலைகள் நிகழுமோ எனும் கவலை எழுந்துள்ளது.

எனினும் மோடியின் கவலை அது அல்ல! மனிர்களின் மரணம் மோடியை எப்பொழுதும் பாதித்தது இல்லை! குஜராத் கலவரத்தில் 2000 சிறுபான்மையினர் கொல்லப்பட்ட பொழுது கவலைப்படாத மோடிக்கு இப்பொழுது எப்படி கவலை வரும்? அதுவும் பிரதமர் கனவில் உலா வரும் பொழுது

மா சிவகுமார் சொன்னது…

lightink,

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. குஜராத்தில் வசிப்பவர்களிடம் பேசி உண்மை நிலவரம் தெரிய வந்தால் உதவியாக இருக்கும்.

அன்புடன்,
மா சிவகுமார்