ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

ஈழத்தில் எரியும் நெருப்பு

வேலை நிறுத்தம்

இன்றைக்கு வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு. வேலை நிறுத்தம் என்றால் வழக்கத்தை விடத் தாமதமாகத் தூங்கி எழுந்து, இன்னும் விளக்கமாக சமைத்து சாப்பிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்திருந்து, நண்பர்களுடன் தொலைபேசியில் அளவளாவி இன்புற்றிருப்பது இல்லைதான். கடமையை விடுத்து ஒதுங்கும் அந்த நாளில் எந்த காரணத்துக்காக வேலை நிறுத்தம் செய்கிறோமோ அது குறித்த எண்ணங்களை வளர விட்டு, அதை நிறைவேற்றுவதற்காக நம்மால் முடிந்த அளவு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து, நோன்பு இருக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தம் என்று ஈழத் தமிழர் நலப் பாதுகாப்புக் கூட்டணி அறிவித்ததுமே நாமும் அந்த வேலை நிறுத்தத்தில் சேர வேண்டும் என்று தோன்றி விட்டது. இதுவே நேற்றைக்கு தோல் கண்காட்சி தினத்தன்று அமைந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? கற்பனையான கேள்விகளுக்குப் பதில் இல்லைதான். அப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் எது சரி என்று படுகிறதோ அதைச் செய்திருப்பேன். அதற்காக போலியான நியாயங்களைக் கற்பித்திருக்கத் தேவையில்லை.

நாம் மட்டும் வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தால் போதுமா? எல்லாமே வழக்கம் போல நடந்து கொண்டிருந்தால் நம் நிலைமை என்ன? என்று தோன்றியது. நேற்று முழுவதும், தமிழகம் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு விட்டது போலவும், அதன் மூலம் மாநில மத்திய அரசுகளுக்கு எதிராக பெரும் கருத்தலை உருவானது போலவும் கனவுகள். எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. நான் இருக்கும் இடத்தில் பக்கத்து வீடுகளில் சமையல் சத்தங்கள் கேட்கின்றன. அலுவலகத்துக்குப் போகின்றவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகி விட்டார்கள். பள்ளி வாகனங்கள் வரும் சத்தமும் கேட்கின்றது.

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் பார்க்க விரும்பும் மாறுதலாக நாம் வாழ முயற்சிக்கலாம். ஆனாலும் பெரிய ஏமாற்றம்தான். குறைந்த பட்ச மனிதாபிமான உணர்வு கூட இல்லாமல் தன் வாழ்க்கை, தன் சோறு, தன் வேலை என்று இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இனத்துக்கு விடிவு காலமே கிடையாது.

தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகள்

போன சட்ட மன்றத் தேர்தலின் போது, தமிழ் பகைவர் செயலலிதாவின் ஆட்சி வருவது தமிழினத் துரோகி கருணாநிதியின் ஆட்சியை விட மேலானது என்று எழுதியிருந்தேன். தமிழ் நலம் விரும்புபவர்கள் நம்ம ஆட்சிதான் என்று இளைப்பாறி விடும் அபாயம் கருணாநிதியின் ஆட்சியில் இருக்கும். செயலலிதா ஆட்சியில் தமிழ் நலம் விரும்பிகள் விழிப்புடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ், மக்கள் நலன் எல்லாவற்றையும் வியாபாரக் கருவிகளாகவே பயன்படுத்தும் கீழ்த்தரமான வியாபாரி கருணாநிதி. அவரைத் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்வது தமிழர்கள் தம்மைத் தரம் தாழ்த்திக் கொள்வதாகவே முடிந்துள்ளது. தனது குடும்ப வியாபாரத்துக்கு தமிழ் அரசியலை பயன்படுத்திக் கொள்கிறார்.

பதவி வெறி பிடித்தவருக்கு பைத்தியம் முற்றியே போய் விட்டது. பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஈழத் தமிழர் நலனை விற்று விட்ட அவருக்கும் அவரது கட்சிக்கும் கிடைக்கும் மரண அடிகளில் இனிமேல் பதவிகளுக்கே வாய்ப்பில்லாமல் போய் விட வேண்டும்.

திமுக ஆட்சி வந்த பிறகுதான் விடுதலைப் புலிகளுக்கும் குளிர் விட்டு திமிரான நடவடிக்கைகளாக, 'ராஜபக்சே வெற்றி பெற உதவியது', 'கருணாவை பகைத்துக் கொண்டது' என்று நடந்து அதற்கான விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் ஆதரவு கட்சிகள் பிரிந்து கிடக்கிறார்கள். வைகோ செயலலிதா அணியில் போனதை கிண்டலடிப்பவர்கள் அங்கு போயும் தனது கொள்கையில் பிறளாமல் இருக்கும் அவருடைய மாண்பை பாராட்ட முடியாதாது ஆச்சரியம்தான்.

கொலைகார இந்திய அரசு

இந்திய அரசு ஈழத் தமிழர்களின் குருதியை கையில் படர விட்டுக் கொண்டிருக்கிறது. அஸ்ஸாமில் இந்திரா காந்தி தேர்தல் நடத்திக் காட்டிய போது, ரத்த வெள்ளத்தில் இந்திராகாந்தியும் சஞ்சய் காந்தியும் படகு விடுவதாக 'ஆகா இன்ப நிலாவினிலே' என்று பாட்டுப் பாடுவதாக துக்ளக் அட்டைப் படக் கேலிச் சித்திரம் வெளியிட்டது. இன்றைக்கு கருணாநிதியின் தமிழக ஆட்சிப் பொறுப்பும் அப்படி ஈழத் தமிழர்களின் பிணங்களால் அமைக்கப்பட்ட மேடையின் மீதுதான் வீற்றிருக்கிறது.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா வடோதராவும் ஆயிரம் பிறவி எடுத்தாலும் கழுவிக் கொள்ள முடியாத பாவக் கறையை சுமக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்குத் துணை போன மன்மோகன் சிங், ப சிதம்பரம், பிரணாப் முகர்ஜி எல்லோருக்கும் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிந்து போக வேண்டும். 'பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்.' ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பழி வாங்குவதற்காகவா சோனியா காந்திக்கு காங்கிரசு தலைமைப் பதவி கிடைத்தது? அதற்காகவா இந்த அரசுக்கு வாக்களித்து ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது?

வெட்கங்கெட்ட இந்திய அரசு இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு விளையாட அனுப்பியிருக்கிறது. 'அங்கிருந்து ஒரு அணி வந்து குண்டுகளை சிதற விட்டு மக்களைக் கொன்று கொண்டிருக்கும் போது இங்கிருந்து ஒரு அணி போய் கிரிக்கெட் விளையாடுவது முட்டாள்தனம்' என்று பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மறுத்து மாற்றாக, தமது மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கு விளையாடி மகிழ்விக்க 11 தண்டச்சோற்றுத் தடிராமன்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

வங்காள மொழி பேச வேண்டும். அல்லது இந்தி மொழி பேச வேண்டும். அந்த மக்களின் உணர்வுகள்தான் இந்தியக் குடியரசில் மதிக்கப்படும். தமிழராகப் பிறந்தவர்கள் வயிறு எரிந்து கொண்டிருக்கும் போதும் கிரிக்கெட் விளையாடி மகிழ்வதற்கு இந்திய அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எந்த மன உறுத்தலும் இல்லை. ப சிதம்பரத்தில் ஆரம்பித்து அன்புமணி வரை பதவி சுகத்துக்காகத்தானே இதை எதிர்த்துப் பேசாமல் இருக்கிறார்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் இந்தச் சுற்றுப்பயணத்தைக் குறித்து நாளிதழ்களிலும், இணையத் தளங்களிலும் படிக்கவே கூடாது என்று விலகியிருக்க முடிந்தது. கொஞ்சம் கூட மக்களின் உணர்வைப் புரிந்து மதிக்கத் தெரியாத பொறுக்கிகள்தான் டெண்டூல்கர் முதலான கிரிக்கெட் வீரர்கள் என்ற கசப்பான உண்மையையும் புரிந்து கொள்ள முடிகிறது. இனிமேலும் முழு மனதுடன் இந்திய அணி ஆடும் எந்த கிரிக்கெட் விளையாட்டையும் பார்த்து ரசிக்க முடியும் என்று தோன்றவில்லை.

இந்தியக் குடிமகன் என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டிய தருணம் இது. இந்திய நாட்டின் ஒரு முக்கிய பகுதியான தமிழ்நாட்டின் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதை ஒரு புறம் வைத்துக் கொண்டாலும், மனித நெறிகளின் அடிப்படையில் கூட இந்திய அரசு செய்தது மிகப்பெரிய தவறு.

ஈழம் மலர்கிறது

ஈழத் தமிழர்களை ஒடுக்குவது சிங்கள ஆட்சியாளர்களால் முடியாத ஒன்று. விடுதலைப் புலிகளுக்கு இறுதிப் போர் என்று சவால் விட்டுக் கொண்டு மகிந்த ராஜபட்சே, இந்து ராம், துக்ளக் சோ, செயலலிதா, இப்போது திமுக கருணாநிதி, காங்கிரசின் சோனியா காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நடத்தும் இந்தப் போர் தமிழர்களை இன்னும் வலுவாக்கி தமிழீழம் மலர்வதை துரிதப்படுத்தி விடும். தேசிய இனம் ஒன்றை ஒடுக்குவதற்கு வன்முறையும் போரும் ஒரு போதும் சாத்தியமாகாது.

14 கருத்துகள்:

nayanan சொன்னது…

அன்பின் நண்பர் சிவக்குமார்,

பதவி வெறி மட்டுமல்ல; பழி வாங்கும் வெறியும், தன்னை விட தமிழினத்தில் பெரியவர்(இவர் பெரியவரா என்பது வேறு விதயம்)
யாரும் இருக்கக் கூடாது என்ற வெறியும் அவரின் தலையில் ஏறியிருக்கிறது வெட்ட வெளிச்சமாகத்
தெரிகிறது. அதனால்தான் இல்லாத சகோதரயுத்தம் பற்றி இப்பொழுது பேசுகிறார். அதோடு புலிகளைப் பற்றியும் கீழ்த்தரமான வருணனைகளை விடுகிறார்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பெயரில்லா சொன்னது…

People from Tamilnadu have been reduced to zombies who feed on TV interviews with cine artistes - No more fighting for a larger cause, no more egalitarian goals - all that is needed is titillation and freebies from the govt. Karunanidhis and Jayas come and go but until the people of the state get out of this morass, traitors and leeches will be our leaders.

பெயரில்லா சொன்னது…

Dear Sivakumar,

I share your concerns, especially about the cricket team. It pains me to see them sending the cricket team (not even in their regular schedule) to play in srilanka, the country which is committing atrocious war crimes (bombing hospitals/civilians).

We must do whatever we can to help the suffering Tamil people. I'm very hopeful that Tamil Eelam will be a reality soon.

Please forgive me writing in English (still working out tamil writing).

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் நயனன், அனானி நண்பர்களே.

மாற்றங்கள் ஏற்பட போராடுவோம்.
அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனுக்கும் உரிய ஆதங்கம், உங்கள் எழுத்தில் அழகாக வந்திருக்கிறது.

G.T.Arasu சொன்னது…

அன்புமிகு திரு சிவகுமார்,
தாங்களும் வாசனும் ஒருவரேதானா?
வாசன் என்ற பெயரில் பல ஆண்டுகள் படிக்கிறேன்.
தங்களின் கோபங்கள் மிகச்சரியானவை.
தேவை செயல் வடிவங்கள். நான் இயற்கை வேளாண்மையை கையில் எடுக்கிறேன். உரம்,பூச்சிக்கொல்லிகள்,
மான்சாண்டோவின் மலட்டு விதைகள்,
தேவையில்லாத அளவு பெரிதாக வளரும் கார், பைக், டிராக்டர்.
ஆகியவற்றின் உபயோகத்தை தேவையற்றதாக்கி இறக்குமதியை ஒழிப்பது.
காசு கொடுத்து தண்ணீர், கோக் மற்றூம் மென்பானங்கள் ஆடம்பரங்களை தவிர்ப்பது
போன்றவற்றை செய்ய முயல்கின்றேன்
தாளாண்மை என்ற ஒரு பத்திரிகைய
வெளியிடுகிறோம்
அன்புடன்
அரசு

ராஜ நடராஜன் சொன்னது…

பதிவில் ஜுவாலை தெரிகிறது.

Unknown சொன்னது…

உஙகள் பதிவு அருமை , ஆனால் பந்த் தொல்வி இல்லை ,பாரிஸ் சைதாபெட்டை பொன்ற் இடங்கலில் 90% கடைஅடைப்பு நடந்தது , மொத்தமாக 50% அளவு வெற்றீ ,இது பெரிய அளவிலான எழுச்சிக்கு வித்திடும்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அரசு,
இயற்கை வேளாண்மை குறித்த முயற்சிகள் பெருமளவு பரவலாக வேண்டும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ராஜநடராஜன்,
நியாயமாக பலரது மனதில் எரியும் நெருப்பு அழுக்குகளை சுட்டெரித்து விடும்.

தகவலுக்கு நன்றி முகேஷ்.

அன்புடன்,
மா சிவகுமார்

Devanathan சொன்னது…

//வைகோ செயலலிதா அணியில் போனதை கிண்டலடிப்பவர்கள் அங்கு போயும் தனது கொள்கையில் பிறளாமல் இருக்கும் அவருடைய மாண்பை பாராட்ட முடியாதாது ஆச்சரியம்தான்.//

அதானே? வைகோ ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் கொள்கை பிறழாமல் இருப்பார். காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டும் திருமா கொள்கைவாதியாக காட்சியளிப்பதை போல.

//கொஞ்சம் கூட மக்களின் உணர்வைப் புரிந்து மதிக்கத் தெரியாத பொறுக்கிகள்தான் டெண்டூல்கர் முதலான கிரிக்கெட் வீரர்கள் என்ற கசப்பான உண்மையையும் புரிந்து கொள்ள முடிகிறது.//

கிரிக்கட் அவரது தொழில். கேவலம் ஒரு தோல்பொருள் கண்காட்சிக்காக பந்தை அனுசரிப்பதா இல்லையா என யோசிக்கும் உங்களுக்கு இம்மாதிரி அறிவுரைகளை அடுத்தவனுக்கு அள்ளிவீசும் யோகியதாம்சம் இருக்கிறதா என்பதை யோசித்து பார்த்து கொள்ளவும்.

Practice what you preach.

dondu(#11168674346665545885) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
dondu(#11168674346665545885) சொன்னது…

//அஸ்ஸாமில் இந்திரா காந்தி தேர்தல் நடத்திக் காட்டிய போது, ரத்த வெள்ளத்தில் இந்திராகாந்தியும் சஞ்சய் காந்தியும் படகு விடுவதாக 'ஆகா இன்ப நிலாவினிலே' என்று பாட்டுப் பாடுவதாக துக்ளக் அட்டைப் படக் கேலிச் சித்திரம் வெளியிட்டது.//
நீங்கள் குறிப்பிடும் அஸ்ஸம் தேர்தல் நடந்தது 1983-ல். சஞ்சய் காந்தி 1980-லேயெ இறந்துவிட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

தேவநாதன்,

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. என் 'யோகியதாம்சம்' குறித்து தொடர்ந்து அலசிக் கொள்கிறேன்.

டோண்டு சார்,

தகவலுக்கு நன்றி. எனக்கு சஞ்சய் காந்தி படம் போட்டிருந்ததாகத்தான் நினைவு. தவறாயிருந்தால் என் நினைவைத் திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

dondu(#11168674346665545885) சொன்னது…

ராஜீவ் காந்திக்கும் சஞ்சய் காந்திக்கும் முகஜாடை சுமாராக ஒன்றுபோலவே இருக்கும் அல்லவா, அதனால்தான் ஏமாந்து விட்டீர்கள் eந நினைக்கிறேன். :)))

நிற்க. அதே காலகட்டத்தில் மத்திய மந்திரி ஸ்டீஃபன் அந்துலே விவகாரம் பற்றிய விவாதத்தில் எதிர்க்கட்சியினர் தரப்பை நோக்கி ஆபாச சைகை எல்லாம் செய்தார். அதை ரசித்தனர் இnதிரா மற்றும் ராஜீவ். அது பற்றியும் துக்ளக்கில் சோ அவர்கள் கட்டுரை எழுதினார், அவர் அச்சமயம் பொதுமக்கள் காலரியில் அமர்ந்து இண்ட்haக் கூத்ட்hடியெல்லாம் பார்த்தார். அந்த செய்கையை படமாக வரைந்து விளக்கமும் கொடுத்தார் அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்