வெள்ளி, அக்டோபர் 02, 2009

சாதி அழிய வேண்டும்! சாதி வெறியர்கள் ஒழிய வேண்டும்!

மூத்த பதிவர் ஒருவர் சாதி அமைப்பைத் தூக்கிப் பிடிக்க ஜெயமோகனின் காந்தி பற்றிய கட்டுரையின் முதற் பகுதியை மட்டும் மேற்கோளிட்டு எழுதியிருக்கிறார்.

அதன் இறுதிப் பகுதிகளிலிருந்து மேற்கோள்கள்

1935ல் காந்தி எழுதினார் ”சாதி அழிய வேண்டும். நடைமுறையில் சாஸ்திரங்கள் சொல்லும் வருணாசிரம தர்மம் இப்போது எங்குமில்லை. இன்றைய சாதிமுறை என்பது சாஸ்திரங்கள் சொல்லும் இலட்சிய வருணாசிரமதர்மத்துக்கு நேர் எதிரான ஒன்று. எத்தனை வேகமாக பொதுமக்களின் பிரக்ஞையில் இருந்து அதை ஒழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அது நல்லது

சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின்
புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும். மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”

காந்தி பதில் அளித்தார். ” ஹரிஜனப்பெண்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் அது சிறப்பானது என்று சொல்ல கொஞ்சம் தயங்குகிறேன். அது ஆண்களை விட பெண்கள் குறைவானவர்கள் என்று காட்டுவது போல ஆகிவிடும். இப்போதெல்லாம் அந்தவகையான தாழ்வுச்சிக்கல் இருப்பதை நான் அறிவேன். ஆகவே ஹரிஜன பெண் உயர்சாதி ஆணை மணம்செய்வதைவிட உயர்சாதி பெண் ஹரிஜன ஆணை மணம்செய்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். என்னால் முடிந்தால் என் பேச்சைக்கேட்கும் எல்லா உயர்சாதிப்பெண்களையும் ஹரிஜன ஆண்களை திருமணம் செய்துகொள்ளும்படிச் சொல்வேன்.”

ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.

8 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

இந்த உயர்சாதி ஆண் பெண், கீழ் சாதி ஆண் பெண் இதையெல்லாம் விட்டுட்டுக் காதல் கல்யாணங்களை மக்களும், இளசுகளின் பெற்றோரும் ஆதரித்தாலே இதெல்லாம் ஓரளவுக்காவது ஒழிஞ்சுருமே.

காதலுக்கு சாதி இல்லை மதமும் இல்லையே...... கவியரசர் பாட்டு நினைவுக்கு வருது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.//

:)

சூப்பர்

PRABHU RAJADURAI சொன்னது…

I never thought that Gandhiji would have expressed such a revolutionary opinion...TY

மா சிவகுமார் சொன்னது…

(இந்த இடுகையில் முதல் இரண்டு வாக்கியங்களைத் தவிர மீதி எல்லாம் ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியவை)

துளசி அக்கா,
அது அவ்வளவு சீக்கிரம் நடந்து விடக் கூடாது என்றுதான் இன்றைக்கு நிறைய ஆதிக்க சாதியினர் சாதியைத் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். (குமுதம் கட்டுரைத் தொடர் ஒரு எடுத்துக்காட்டு)

ஆணும் பெண்ணும் சாதி மத பேதமின்றி மனமொத்து திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் வளர்ந்தால் சாதி அழிந்து விடும்.

கோவி கண்ணன்,
வணக்கம். இன்னொரு காந்தி வந்து உயிர் தியாகம் செய்தால்தான் சாதி ஒழிய வேண்டும் என்றில்லை. மக்கள் மனம் மாறினாலே போதும்.

பிரபு ராஜதுரை,
ஜெயமோகன் தனது கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல காந்தி 'political correctness" பற்றி கவலைப்படாமல், தனது அறிவுக்கு சரி என்று பட்டதை சொல்லியும் செய்தும் வந்திருக்கிறார்.

பள்ளியில் காந்தியை மகாத்மா என்று படித்து விட்டு விபரம் வந்த பிறகு தேடித் தேடி அதற்கு எதிரான சான்றுகளைத் தேடும் வாலிபப்பருவ முரண்டு பிடித்தலுக்கு காந்தியின் பிம்பம் சரியான இலக்கு. அதன் விளைவுதான் இன்றைய தலைமுறையினர் பலரின் காந்தி எதிர்ப்பு என்பது என் கருத்து.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

I think periyar had the same ideaolgy.I am Erode(Sathy).Even i planned to do a Intercaste Marrige.
Will reeply soon in tamil

மா சிவகுமார் சொன்னது…

flytoravi,

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

Tamil Home Recipes சொன்னது…

மிகவும் அருமை

மா சிவகுமார் சொன்னது…

நன்றி Tamil Home Recipes