திங்கள், மே 31, 2010

தமிழகம் இழைத்த துரோகம்

தமிழினத் துரோகி நடத்தும் தமிழ் மாநாடு இதைத் தொடர்ந்து ஒரு உரையாடல்.

நண்பர்:
ஒரு சிறு சந்தேகம் . இலங்கை விவகாரத்தில் கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். இது விவாதம் அல்ல. தெரிந்து கொள்ள முயற்சி

கலைஞர் ராஜினாமா செய்திருந்தால் - தமிழகத்தில் - அதிமுக ஆட்சி அமைத்திருக்கும் - அதனால் ஏதாவது ஒரு மாற்றமாவது வந்திருக்குமா

நான்:
எந்த ஒரு அரசியல் நடவடிக்கைக்கும் இரண்டு விளைவுகள் இருக்கும் இல்லையா! உடனடி, நீண்ட காலம். உடனடி விளைவாக அதிமுக ஆட்சி அமைத்திருக்கலாம். நீண்ட காலத் தாக்கமாக

1. மத்திய காங்கிரசு ஆட்சி தமிழ்நாட்டை கிள்ளுக்கீரையாக நடத்துவது நின்றிருக்கும் (ஈழ விவகாரத்திலாவது)
2. அந்த அளவில் இலங்கை அரசின் மீது அழுத்தம் அதிகமாகியிருக்கும். இந்திய அரசு செய்த ஆயுத உதவிகள், அரசியல் உதவிகள் கஷ்டமாகியிருக்கும்.

நண்பர்:
உடனடி விளைவாக ஆதிமுக ஆட்சி அமைந்திருக்கும். அதனால் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காதா
1 : கலைஞர் ராஜினாமா செய்திருந்தால் இன்று இலங்கையில் இருக்கும் நிலைமையில் ஏதாவது ஒரு மாற்றமாவது இருந்திருக்குமா
2 : ஒரு கட்சி ராஜினாமா செய்து அடுத்த கட்சி ஆட்சி அமைத்தால் அவர்கள் கிள்ளுகீரையாக நடத்துவது நின்றிருக்குமா :) :) :)

ராஜினாமா செய்திருக்க வேண்டியது - என்று தான் கூறுகிறீர்களே தவிர, அப்படி செய்திருந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும் என்று உங்களால் மட்டும் அல்ல, யாராலும் கூறவே முடியவில்லை
காரணம் - ஒரு மாற்றமும் நடந்திருககாது என்பதே உண்மை.

நான்:
ராஜினாமா செய்திருக்க வேண்டியது அல்லது மத்திய அரசை நெருக்கி வேண்டியபடி கொள்கையை மாற்றியிருக்க வேண்டியது. திமுகவுக்கு மத்திய அரசில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தவில்லை.

தீவிரமடைவதற்கு குறைந்தது 1 ஆண்டு முன்னதாகவே எதிர்ப்பை ஆரம்பித்திருக்க வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு இந்திய உளவுத் துறை செய்யும் நடவடிக்கைகள் நிறையவே தெரிந்திருக்கும். பிரியங்கா நளினியை சந்திக்க வந்தது எதற்காக?

நண்பர்:
மா சி நான் கேட்ட இரு கேள்விகளுக்கும் விடையளியுங்கள். அதன் பிறகு நான் கூறுகிறேன் :) :)

நான்:
1. கலைஞர் ஈழத் தமிழர்களின் நலனை மனதில் வைத்து ஆட்சி செய்திருந்தால் (செய்யவில்லை), அப்படி செய்ய முடியாமல் சூழல் இருந்திருந்து பதவி துறந்திருந்தால் இன்றைக்கு ஈழத்தின் நிலைமை வேறாகத்தான் இருக்கும்

2. ஈழத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், நம்மைக் கேட்க யாரும் இல்லை என்று சோனியா காந்தி குடும்பம் / எம் கே நாராயணன், சோ, சுப்ரமணிய சுவாமி கும்பல் நடந்து கொண்டது பொய்யாகியிருக்கும்

தமிழ்நாட்டில் no one cared என்பதுதான் வெளியானது.

நண்பர்:
கலைஞர் ராஜினாமா செய்து, ”அதிமுக மற்றும் பா.ம.க ஆட்சி அமைக்க மறுத்திருந்தால்” நிலைமை வேறாக இருந்திருக்கும்
ஆனால் திமுக ராஜினாமா செய்து அதிமுக அங்கு வந்திருந்தால் ஒரு மாற்றமுமே இருந்திருக்காது - இதை நீங்கள் மறுக்கிறீர்களா!
அப்படி இருக்கும் போது நீங்கள் கலைஞரை மற்றும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல

நான்:
திமுக ராஜினாமா செய்வதிலேயே மாற்றம் வந்திருக்கும். அதன் பிறகு ஜனாதிபதி ஆட்சி வந்திருந்தால் அல்லது அதிமுக ஆட்சி அமைத்திருந்தால் என்பது அடுத்த கட்டம்.

நண்பர்:
அதிமுக ஆட்சியில் என்ன மாற்றம் என்று நீங்கள் இதுவரை கூறவேயில்லை திமுக போனால் அதிமுக என்ற நிலை வந்திருந்தால் தமிழக தமிழர்களில் நிலை இதை விட மோசம்

நான்:
கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்று, உலகத் தமிழர்களின் முக்கியமான ஈழத்தமிழர், தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றியவர்கள் வாழ்விழந்து இருக்கும் போது இப்போது என்ன கொண்டாட்டம்?

என்ற கேள்வி தமிழகத் தமிழர்களுக்குத் தோன்றா விட்டாலும், ஈழத் தமிழர்களுக்கு நிச்சயமாக வருத்தும்.

நண்பர்:
அனைவரும் துரோகி துரோகி என்று கூறுகிறார்களே தவிர, இது வரை ஒருவரால் கூட அதை substantiate செய்ய முடியவில்லை

நான்:
இந்த உரையாடலையும் என் வலைப்பதிவில் போட்டுக் கொள்ளலாமா? உங்கள் பெயர் வேண்டாம் என்றால் ஒரு நண்பர் என்று மாற்றிக் கொள்கிறேன்!

நண்பர்:
என் பெயரை போட வேண்டாம் :) :)

நான்: நீங்கள் சொன்னது போல இது விவாதம் இல்லைதானே. என் கருத்தை அறிந்து கொள்ள கேட்டீர்கள். உங்கள் கருத்து மாறாது என்று எனக்குத் தெரியும். எனது கருத்தும் மாறாது :-)

நண்பர்:
நீங்கள் என்ன மாற்றம் வந்திருக்கும் என்று கூறியிருந்தால் என் கருத்து மாறியிருக்கும். நீங்கள் கூறவில்லை. அதனால் மாறவில்லை :) :) :)

ஞாயிறு, மே 30, 2010

தமிழினத் துரோகி நடத்தும் தமிழ் மாநாடு

அருள் என்பவர் ஈழம் தொடர்பான பதிவுகளில் இப்படி ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்.

அருள் said...

எல்லாம் பேசுவோம் ஈழத்தில் எல்லாம் அழிவதற்கு உடந்தையாக இருந்த தமிழின துரோகி நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு தேவையான உதவி அனைத்தையும் செய்து நாமும் வாய் சொல் வீரர் என மனசுக்குள் சொல்வோம்.

குறைந்த அளவு, வாய்ச்சொல் அளவிலாவது நமது எதிர்ப்பைத் தெரிவிக்க
தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கிறேன்.

1. தமிழ் இணைய மாநாடு குறித்து ஒரு கூட்டத்தில் பார்வையாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது - 2 மாதங்களுக்குப் முன்பு.

2. ழ கணினி குறித்து ஒரு காட்சி அரங்கு அமைக்க முடியுமா என்ற முயற்சிகளுக்கு என்னைத் தொடர்பு கொண்டார்கள். அதற்கான ஒருங்கிணைப்புகளையும் மின்னஞ்சல்கள் மூலம் செய்து கொண்டிருந்தேன்.

3. வலைப்பதிவர் பட்டறை ஒன்று நடத்துவது குறித்த திட்டங்களும் நடக்கின்றன.

இவை எல்லாவற்றிலும் என்னுடைய பங்கை (மிகச் சிறிதளவானதாக இருப்பினும்) நீக்கிக் கொள்கிறேன்.