தமிழினத் துரோகி நடத்தும் தமிழ் மாநாடு இதைத் தொடர்ந்து ஒரு உரையாடல்.
நண்பர்:
ஒரு சிறு சந்தேகம் . இலங்கை விவகாரத்தில் கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். இது விவாதம் அல்ல. தெரிந்து கொள்ள முயற்சி
கலைஞர் ராஜினாமா செய்திருந்தால் - தமிழகத்தில் - அதிமுக ஆட்சி அமைத்திருக்கும் - அதனால் ஏதாவது ஒரு மாற்றமாவது வந்திருக்குமா
நான்:
எந்த ஒரு அரசியல் நடவடிக்கைக்கும் இரண்டு விளைவுகள் இருக்கும் இல்லையா! உடனடி, நீண்ட காலம். உடனடி விளைவாக அதிமுக ஆட்சி அமைத்திருக்கலாம். நீண்ட காலத் தாக்கமாக
1. மத்திய காங்கிரசு ஆட்சி தமிழ்நாட்டை கிள்ளுக்கீரையாக நடத்துவது நின்றிருக்கும் (ஈழ விவகாரத்திலாவது)
2. அந்த அளவில் இலங்கை அரசின் மீது அழுத்தம் அதிகமாகியிருக்கும். இந்திய அரசு செய்த ஆயுத உதவிகள், அரசியல் உதவிகள் கஷ்டமாகியிருக்கும்.
நண்பர்:
உடனடி விளைவாக ஆதிமுக ஆட்சி அமைந்திருக்கும். அதனால் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காதா
1 : கலைஞர் ராஜினாமா செய்திருந்தால் இன்று இலங்கையில் இருக்கும் நிலைமையில் ஏதாவது ஒரு மாற்றமாவது இருந்திருக்குமா
2 : ஒரு கட்சி ராஜினாமா செய்து அடுத்த கட்சி ஆட்சி அமைத்தால் அவர்கள் கிள்ளுகீரையாக நடத்துவது நின்றிருக்குமா :) :) :)
ராஜினாமா செய்திருக்க வேண்டியது - என்று தான் கூறுகிறீர்களே தவிர, அப்படி செய்திருந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும் என்று உங்களால் மட்டும் அல்ல, யாராலும் கூறவே முடியவில்லை
காரணம் - ஒரு மாற்றமும் நடந்திருககாது என்பதே உண்மை.
நான்:
ராஜினாமா செய்திருக்க வேண்டியது அல்லது மத்திய அரசை நெருக்கி வேண்டியபடி கொள்கையை மாற்றியிருக்க வேண்டியது. திமுகவுக்கு மத்திய அரசில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தவில்லை.
தீவிரமடைவதற்கு குறைந்தது 1 ஆண்டு முன்னதாகவே எதிர்ப்பை ஆரம்பித்திருக்க வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு இந்திய உளவுத் துறை செய்யும் நடவடிக்கைகள் நிறையவே தெரிந்திருக்கும். பிரியங்கா நளினியை சந்திக்க வந்தது எதற்காக?
நண்பர்:
மா சி நான் கேட்ட இரு கேள்விகளுக்கும் விடையளியுங்கள். அதன் பிறகு நான் கூறுகிறேன் :) :)
நான்:
1. கலைஞர் ஈழத் தமிழர்களின் நலனை மனதில் வைத்து ஆட்சி செய்திருந்தால் (செய்யவில்லை), அப்படி செய்ய முடியாமல் சூழல் இருந்திருந்து பதவி துறந்திருந்தால் இன்றைக்கு ஈழத்தின் நிலைமை வேறாகத்தான் இருக்கும்
2. ஈழத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், நம்மைக் கேட்க யாரும் இல்லை என்று சோனியா காந்தி குடும்பம் / எம் கே நாராயணன், சோ, சுப்ரமணிய சுவாமி கும்பல் நடந்து கொண்டது பொய்யாகியிருக்கும்
தமிழ்நாட்டில் no one cared என்பதுதான் வெளியானது.
நண்பர்:
கலைஞர் ராஜினாமா செய்து, ”அதிமுக மற்றும் பா.ம.க ஆட்சி அமைக்க மறுத்திருந்தால்” நிலைமை வேறாக இருந்திருக்கும்
ஆனால் திமுக ராஜினாமா செய்து அதிமுக அங்கு வந்திருந்தால் ஒரு மாற்றமுமே இருந்திருக்காது - இதை நீங்கள் மறுக்கிறீர்களா!
அப்படி இருக்கும் போது நீங்கள் கலைஞரை மற்றும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல
நான்:
திமுக ராஜினாமா செய்வதிலேயே மாற்றம் வந்திருக்கும். அதன் பிறகு ஜனாதிபதி ஆட்சி வந்திருந்தால் அல்லது அதிமுக ஆட்சி அமைத்திருந்தால் என்பது அடுத்த கட்டம்.
நண்பர்:
அதிமுக ஆட்சியில் என்ன மாற்றம் என்று நீங்கள் இதுவரை கூறவேயில்லை திமுக போனால் அதிமுக என்ற நிலை வந்திருந்தால் தமிழக தமிழர்களில் நிலை இதை விட மோசம்
நான்:
கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்று, உலகத் தமிழர்களின் முக்கியமான ஈழத்தமிழர், தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றியவர்கள் வாழ்விழந்து இருக்கும் போது இப்போது என்ன கொண்டாட்டம்?
என்ற கேள்வி தமிழகத் தமிழர்களுக்குத் தோன்றா விட்டாலும், ஈழத் தமிழர்களுக்கு நிச்சயமாக வருத்தும்.
நண்பர்:
அனைவரும் துரோகி துரோகி என்று கூறுகிறார்களே தவிர, இது வரை ஒருவரால் கூட அதை substantiate செய்ய முடியவில்லை
நான்:
இந்த உரையாடலையும் என் வலைப்பதிவில் போட்டுக் கொள்ளலாமா? உங்கள் பெயர் வேண்டாம் என்றால் ஒரு நண்பர் என்று மாற்றிக் கொள்கிறேன்!
நண்பர்:
என் பெயரை போட வேண்டாம் :) :)
நான்: நீங்கள் சொன்னது போல இது விவாதம் இல்லைதானே. என் கருத்தை அறிந்து கொள்ள கேட்டீர்கள். உங்கள் கருத்து மாறாது என்று எனக்குத் தெரியும். எனது கருத்தும் மாறாது :-)
நண்பர்:
நீங்கள் என்ன மாற்றம் வந்திருக்கும் என்று கூறியிருந்தால் என் கருத்து மாறியிருக்கும். நீங்கள் கூறவில்லை. அதனால் மாறவில்லை :) :) :)
15 கருத்துகள்:
உங்களுடன் கடந்த காலத்திலே சில விடயங்களிலே எனக்கு முரண்பாடிருந்தன. உள்ளே தோன்றியதை மறக்காமல் இங்கே நான் எழுதவேண்டுமானால், உங்களைப் பற்றி நான் கொண்டிருந்த கருத்திலே உங்களிடமிருந்து இப்படியான துணிச்சலான நேர்மையெனப்படும் செயற்பாட்டினை எதிர்பார்க்கவில்லை. உங்கள் நெஞ்சுரத்தினையும் செயற்பாட்டினையும் இந்நேரத்திலே விதந்து பாராட்டுகிறேன்.
இரண்டகத்தை ஞாயப்படுத்தும் நாலாந்தகை முயற்சி!
தூ! இழிஞர்களே!
என் பார்வையில் உங்கள் நண்பரின் வாதம் இப்படி இருக்கிறது.
1) எப்படியும் தமிழனை கொல்லபோகின்றான். திமுக ஆட்சியில் இருக்கும்போது கொல்லட்டுமே..
2) சுதந்திரம் என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல. ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவதற்கு. நிறைய இழக்க வேண்டும். ஒருமுறை ஆட்சியை இழப்பதால் மட்டும் ஒன்றும் நடந்துவிடாது. ஆனால் எதிரிக்கு ஒரு பயத்தை கொடுத்து இருக்கும். இந்தியா சுதந்திரம் ஒரு நாள் போராட்டத்திலா கிடைத்தது.
3) உங்கள் நண்பரின் பார்வையில் திமுக நேர்மையான கட்சி. அதிமுக தமிழர்களுக்கு எதிரான கட்சி. உண்மையில் திமுக தமிழருக்கு ஆதரவானவர்களாக இருந்தால் நீங்கள் பதவிய உதறிவிட்டு மக்களிடம் போயிருக்கலாம். முடியாது..!! ஏன்..? பயம்..!! ஏன் என்றால் கலைஞரின் அரசியலே மக்களை உணர்ச்சி அற்றவர்களாக மாற்றுவதுதான். ஏற்கனவே உணர்ச்சி இழந்த சமுகத்தில் நம்மால் போராட்ட அரசியலை நடத்த முடியாது. இங்கு எல்லாமே பணம் அல்லது மக்களை ஜாதிகளாக பிரித்தாளும் சூழ்ச்சி..
இறுதியாக உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். கருணாநிதி ஆட்சியில் இருக்கும்வரை அவரை தமிழின தலைவர் என்று அவராக சொல்லிகொள்ளலாம்.. ஆனால் உண்மைக்கும் இந்த வார்த்தைக்கும் வெகு தூரம்.. இதை பிடிப்பதற்கான தகுதி இனி அவர் வாழ்க்கையில் ஏற்படபோவதும் இல்லை. எப்படி எட்டப்பனை இன்றும் பேச்சி வழக்கில் பயன்படுத்துகிறோமோ அதை போல கருணாநிதியை வருங்காலம் துரோகத்திற்கு பயன்படுத்தும்.. திமுக என்பது ஆட்சி அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஊடகங்களாலும் இருக்கும் ஒரு மாயையான வெளித்தோற்றம் மட்டுமே. உள்ளே வெறும் கூடு. அதிகாரம் இல்லாமல் போகும்போது அது ஒன்றும் இல்லாமல் நொறுங்கி போகும். அதை தடுப்பதற்குத்தான் செம்மொழி மாநாடு போன்ற கூத்துக்கள்..
2006 தேர்தலிலேயே அதிமுக ஆட்சிக்கு வரவேண்டுமென ஆசையை தெரிவித்தவர் நீங்கள்.
2009லாவது ஈழப்பிரச்சினையில் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டு, பாமக ஆதரவோடு அதிமுக வந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியிருப்பதை இப்பதிவின் வாயிலாக உணர்ந்துகொள்கிறேன்.
உங்கள் ஆசை 2011-ல் (30 சதம் கூட வாய்ப்பில்லாவிட்டாலும்) நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துகள்! :-)
யுவகிருஷ்ணா,
எதையும் திமுக/அதிமுக என்ற அரசியலில் அடைத்துப் பார்ப்பது உங்களுக்கு வாடிக்கையாகப் போய் விட்டது. இதற்கு வெளியிலும் உலகம் இருக்கிறது.
2006ல் நான் என்ன எழுதினேன் என்று நினைவு கூரல் கீழே. இவற்றில் எதையும் நான் திரும்பி வாங்க வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன்.
தமிழ் நாட்டை, தமிழர்களைக் கூறு போட்டு விற்க முயலும் கும்பல்களைத் தாங்கிப் பிடிக்கும் கட்டாயத்தில் நான் இல்லை.
A. மீண்டும் ஈழப் போர் மூழ்கிறது என்ற வருத்தம்
B. ஆனால், தம்மை ஓரளவே சார்ந்திருக்கும் மத்திய அரசையே தமது குடும்ப தொழில் நன்மைக்கேற்ப வளைக்க முனையும் திமுக தலைமை, மாநில அரசு அதிகாரத்தைத் தனியாகவோ கூட்டாகவோ கைப்பற்றி விட்டால் இன்னும் தீவிரமாக தமது ஊடக ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனையும்.
ஆகவே, இந்த தேர்தலில திமுக ஆட்சி அதிகாரம் பெறாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்பது என் கருத்து.
C. திமுக ஆட்சி அமைத்தால்
நன்மைகள்
1. அதிகாரம் பரவலாக்கப்படும். முதலமைச்சருக்கு பயந்து நடுங்கிக் கொண்டு இல்லாமல் அமைச்சர்களும் மற்ற நிர்வாகிகளும் தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும்.
2. முதல்வர் பத்திரிகைகளும், தோழமைக் கட்சிகளும் எளிதில் அணுகும்படியாக இருப்பார்.
3. மத்திய அரசுடன் நல்லுறவு பேணப்பட்டு தமிழகத்துக்கான திட்டங்கள் சரிவர நிறைவேறும்.
தீமைகள்
1. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கழகங்களைப் பொறுத்தவரை அதிகாரம் == ஊழல். பரவலான அதிகாரம் என்பது பரவலான ஊழல் என்றே பொருள்படும்.
2. வட்டார குண்டர்களுக்கு மீண்டும் துளிர்த்து விடும்.
3. கருணாநிதியின் குடும்பத் தொழில்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகி விடும்.
மாசி!
மறுபடியும் அதே காமெடி...
திமுக ஆட்சிக்கு வந்தால் வரும் தீமைகள் என்று மூன்று விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறீர்கள்.
மூன்று பாயிண்டுமே அதிமுகவுக்கு அட்சரம் பிசகாமல் கொஞ்சம் அதிகமாகவே கூட பொருந்தும். இதெல்லாம் சாதாரண ஜனத்துக்கே தெரியும். தீவிர அரசியல் பார்வையாளரான உங்களுக்கு தெரியாதது ஆச்சரியம்தான்!
நேரடியாக சொல்லிவிட்டுப் போங்களேன். உங்களுக்கு அதிமுகவையும், ஜெயலலிதாவையும் பிடிக்குமென்று. அதற்கேன் ஏகப்பட்ட சப்பைக்கட்டுகள்?
சிவக்குமார், தமிழகம் இழைத்த துரோகம்/ தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். எதையும் பணத்தால் வாங்கிப் பழக்கப்பட்டுவிட்ட திமுக தலைமை ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிணங்களையும், சுதந்திரத்தையும் கூட விற்று தனது குடும்ப அதிகாரத்தை/ வருமானத்தை பலப்படுத்திக்கொண்டதே அல்லாமல் நடந்ததில் அரசியல் ஒன்றும் இல்லை.
எப்படியும் சாகப்போகிறார் என்பதற்காக முதியவர் ஒருவரை ஒரு குடும்பம் (காப்பாற்ற வாய்ப்புகள் இருக்கும் நிலையிலும்) சாகவிடுமா?
வாழ்க அக்குடும்பம்!
உங்கள் பதிவுக்கு நன்றி!
யுவகிருஷ்ணா,
உங்களுக்கு காமெடியாக இருக்கலாம். இங்கே பேசப்படுவது காமெடியான எதுவும் இல்லை.
அதனால்தான், எதையும் திமுக/அதிமுக அரசியலாகப் பார்க்கும் கிணற்றுக்குள் இருந்து வெளி வரச் சொல்கிறேன்.
அந்த கிணற்றில் வைத்தே தமிழனை காயடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
மாசி அவர்களே லக்கிலுக் போன்ற திமுகவுக்கு ஆள் பிடிக்கும் நபர்களுக்கு நீங்கள் உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். விமர்சனம் செய்தால் நீ அந்த கட்சிக்காரன் என்று பட்டம் சூட்டும் இவைகளை திருத்தமுடியாது.. அது தமிழின தலைவர்(லக்கிலுக்குக்கு மட்டும்) அவரின் அரசியல் பாடம். எதிர்ப்புகளை ஆபாசத்தாலும், ஜாதியாலும் சந்திக்கிற குணம்.. லக்கிலுக் பதிவுகளை பாருங்கள் ஈழத்தமிழருக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு ஒரு பதிவு கூட இருக்காது.
//அதனால்தான், எதையும் திமுக/அதிமுக அரசியலாகப் பார்க்கும் கிணற்றுக்குள் இருந்து வெளி வரச் சொல்கிறேன்.
//
மாசி!
உங்கள் அதிமுக ஆதரவுக்கு நீங்கள் தமிழ் பிராண்ட் குத்திக் கொள்வதைப் பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. உங்களுக்கு கருணாநிதி வெறுப்பு. எனவே அவர் என்ன செய்தாலும் அதை ஏதோ ஒரு பிராண்டில் எதிர்க்கத்தான் போகிறீர்கள்.
ஆனால் முந்தைய பின்னூட்டத்தில் நான் கேட்டிருந்த கேள்வியின் அடிப்படையை அப்படியே தாண்டி செல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை.
தீமையென்று நீங்கள் சொல்லியிருக்கும் அந்த மூன்று பாயிண்டுகளும் அதிமுகவுக்கு பொருந்துமா பொருந்தாதா?
யுவகிருஷ்ணா,
//தீமையென்று நீங்கள் சொல்லியிருக்கும் அந்த மூன்று பாயிண்டுகளும் அதிமுகவுக்கு பொருந்துமா பொருந்தாதா?//
பொருந்தும்.
இங்கு பேசப்படுவது தமிழ் மாநாடு நடத்துபவருக்கு இருக்க வேண்டிய யோக்கியதை பற்றி. அதற்கு இந்த தீமை இல்லாத தலைவர் வேண்டும் எனக்கு.
'எங்களை விட எதிர்ப்புறம் அதிகம் அழுக்கு அதனால் எங்கள் அழுக்கை சகித்துக் கொள்ளுங்கள்' என்று நீங்கள் ஆட்டம் போடுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனக்குத் தமிழ்ப் பற்றும் கிடையாது. மனதுக்குப் படுவதை சொல்கிறேன். பிராண்ட் குத்துவது எல்லாம் உங்களைப் போன்றவர்களின் வேலை.
//இங்கு பேசப்படுவது தமிழ் மாநாடு நடத்துபவருக்கு இருக்க வேண்டிய யோக்கியதை பற்றி. அதற்கு இந்த தீமை இல்லாத தலைவர் வேண்டும் எனக்கு.
//
மா.சி.!
ஜனநாயகத்தில் யோக்கியதை பற்றியெல்லாம் முடிவெடுக்க வேண்டியது மக்கள். அவர்கள்தான் திமுக கூட்டணியை ஆட்சியில் அமர வைத்தவர்கள். உங்களுக்கு பிடிக்காதவர் என்பதால் அவர் யோக்கியமற்றவர் ஆகிவிட மாட்டார்.
ஜனநாயகத்தில் யோக்கியதை மக்கள் வாக்களிப்பில்தான் கிடைக்கிறது என்று தெரிவித்ததற்கு நன்றி.
என்னைப் பொறுத்த வரை துரோகிகள் எதிரிகளை விட தீயவர்கள்.
அரசியல்(?) நடத்துங்கள், அரசாங்கம் நடத்துங்கள் (?), தேர்தலில் ஜெயித்துக் கொள்ளுங்கள்!
ஆனால் தமிழ், தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு மாநாடு நடத்தாதீர்கள். மக்கள் ஆட்சியில் அமர வைத்தது மட்டும் இல்லை அதற்கான தகுதி. அடிப்படை நேர்மையும் உணர்வும் வேண்டும்.
Maasi,
nalama,sariyaga sonneerkal.Dmk allamal admk aatchi seythu irunthalum pathavi vilakuvathaga solli/seythu irukka vendum athu maththiyil thakam kondu vanthirukum,kalaignar payanthu vittar pathavi meendum kidaikatho ena.
(admk also neesa katchi athai piragu parpom)
Mulli vaykkal sambavam nadakkum kalathil admk porupil irunthirunthalum maasi ippothu sonnathai than solli iruppar.
Pulikalin vanmurai pidikatha pothum ,appavi thamizharkal pali aanathu sari alla ena ninaippavan nan.pulikal illatha ippothum thamizharkal meethana vathai nirkavillaiye athu yen?
Thamizhina thalaivar enpavar ippothum vaalairupathu yen?
Kovai maanadu purakanipu kurithu matru karuthundu piragu pesukiren
கருத்துரையிடுக