ஞாயிறு, மே 30, 2010

தமிழினத் துரோகி நடத்தும் தமிழ் மாநாடு

அருள் என்பவர் ஈழம் தொடர்பான பதிவுகளில் இப்படி ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்.

அருள் said...

எல்லாம் பேசுவோம் ஈழத்தில் எல்லாம் அழிவதற்கு உடந்தையாக இருந்த தமிழின துரோகி நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு தேவையான உதவி அனைத்தையும் செய்து நாமும் வாய் சொல் வீரர் என மனசுக்குள் சொல்வோம்.

குறைந்த அளவு, வாய்ச்சொல் அளவிலாவது நமது எதிர்ப்பைத் தெரிவிக்க
தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கிறேன்.

1. தமிழ் இணைய மாநாடு குறித்து ஒரு கூட்டத்தில் பார்வையாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது - 2 மாதங்களுக்குப் முன்பு.

2. ழ கணினி குறித்து ஒரு காட்சி அரங்கு அமைக்க முடியுமா என்ற முயற்சிகளுக்கு என்னைத் தொடர்பு கொண்டார்கள். அதற்கான ஒருங்கிணைப்புகளையும் மின்னஞ்சல்கள் மூலம் செய்து கொண்டிருந்தேன்.

3. வலைப்பதிவர் பட்டறை ஒன்று நடத்துவது குறித்த திட்டங்களும் நடக்கின்றன.

இவை எல்லாவற்றிலும் என்னுடைய பங்கை (மிகச் சிறிதளவானதாக இருப்பினும்) நீக்கிக் கொள்கிறேன்.

14 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

யதார்த்தமான கண்டனம்!

உண்மைத்தமிழன் சொன்னது…

இந்த வலைத்தளத்தின் உரிமையாளர் பெயர் மா.சிவக்குமாரா..? அல்லது யாரேனும் ஒரு முகமூடிப் பதிவரா..?

நம்ப முடியவில்லை..!

பெயரில்லா சொன்னது…

பாவங்க நீங்க...எத்தனை வேடம் போடுவீங்க.... ஈழப்பிரச்சினையில் விடுதலைபுலிகளின் பிடிவாத நிலைப்போக்கை பற்றியும் முட்டாள்தனங்களை பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்களேன்

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

உங்கள் முடிவு நியாயமானதே!

கோவி.கண்ணன் சொன்னது…

உங்கள் முடிவுக்கு பாராட்டுகள்.

வலைப்பதிவில் கருணாநிதியை பாராட்டியவர்களில் யார் திராவிட சார்புள்ளவர்கள், யார் திமுக ஆதரவாளர்கள் என்பது ஈழப்படுகொலை நிகழ்வின் போதே தெரிந்துவிட்டன.

மா சிவகுமார் சொன்னது…

ராஜ நடராஜன், பாலபாரதி - நன்றி.

உண்மைத் தமிழன்,
அப்படி என்ன நம்ப முடியாத விஷயம்?

அனானி,
என் வேடங்களை எல்லாம் தொடர்ந்து வந்து அடையாளம் கண்டு கொள்ளும் உங்கள் சேவைக்கு நன்றி.

கோவி கண்ணன்,
திமுக, அதிமுக அரசியலாக இதை மாற்றாதீர்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி கண்ணன்,
திமுக, அதிமுக அரசியலாக இதை மாற்றாதீர்கள். //

நான் அந்த புரிதலுக்காக எழுதவில்லை.

கருணாநிதியின் செயல்களை தொடர்ந்து ஆதரிப்பவர்கள் திமுககாரர்கள் என்றேன். மற்றபடி முன்பு அவருக்கான ஆதரவுகள் வெறும் திராவிட சித்தாந்தங்கள் அடிப்படையிலானது, இப்ப அது இல்லை

:)

குழலி / Kuzhali சொன்னது…

மா.சி இந்த புறக்கணிப்பு நிச்சயம் செய்யப்பட வேண்டும், உங்களை பாராட்டுகிறேன்... அங்கீகாரத்திற்க்காகவும், பிரபலத்துக்காகவும், அதிகார நெருக்கத்துக்காகவும் இன்னும் எதெதற்க்குமோ தமிழறிஞர்கள், தமிழ் கணிணி வல்லுனர்கள் ஓணாண்டி புலவர்கள் ரேஞ்சிற்க்கு தமிழினத்துரோகி நடத்தும் கனிமொழி மன்னிக்கவும் செம்மொழி மாநாட்டிற்க்கு வரிந்து கட்டி வேலை செய்வது கொடுமை

பெயரில்லா சொன்னது…

இந்த மாநாடு வரலாற்றில் தமிழனின் அவமானமாக நிச்சயம் பதியப்படும். ஈழத்தமிழர் அவலம் குறித்து இடதுசாரிக்கட்சிகள் ஆரம்பித்த உண்ணாவிரதம் அதைத் தொடர்ந்த அதிமுக ஆதரவு போன்று ஆரம்பித்த வெகுசன எழுச்சிகளை முடக்கி மனிதச் சங்கிலி உண்ணாவிரதம் ராஜினாமா நாடகம் முத்துக்குமார் எழுச்சிக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை என இயல்பான மக்கள் எழுச்சிகளை தடுத்தும் ஈழத்தமிழரின் துன்பத்தை சுயநல அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியும் காலத்தால் அழிக்க முடியாத துரோகத்தை செய்த முத்துவேல் கருணாநிதி தமிழுக்கு மாநாடு நடத்துவது என்பது தமிழினின் அவமானத்தின் அடிமைத்தனத்தின் பதிவுநாள். வரலாற்றில் எட்டப்பன் போல் இந்த நூற்றாண்டில் கருணாநிதி தமிழினத் துரோகி என்பதை வரலாறு பதிவுசெய்யும்.

நந்தா சொன்னது…

மா.சி. நியாயமான கோபம். தேவையான செயல்.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

உங்கள் முடிவை பாராட்டுகிறேன்.

சீனு சொன்னது…

இதையே நாங்க சொன்னா, எங்கள பைத்தியக்காரனு சொல்லுவீங்க...ரைட்டு விடுங்க.

Prathap Kumar S. சொன்னது…

சிவகுமார் சார் நலமா-?

நியாயமான எதிர்ப்பு....
எல்லாம் வேடதாரிகள், சந்தர்ப்பவாதிகள்...

இலவசங்களுக்காக ஓட்டுப்போடு மகாபொதுஜனங்களுக்கு எப்போது இது புரியப்போகுதோ-------??

காலப் பறவை சொன்னது…

கோடி நன்றி என் தமிழ் உறவுக்கு