செவ்வாய், மே 22, 2007

தோல் துறை (தொகுப்பு)

தோல் துறை பற்றிய அறிமுகம், மேலாண்மை, சுற்றுப் புறச் சூழல் சிக்கல்கள் குறித்த பதிவுகளின் தொகுப்பு

இங்கே.

நிறுவனத்தின் வளங்களை கட்டி மேய்க்க உதவும் மென்பொருள் பயன்பாடு ERP எனப்படும் நிறுவன வள திட்டமிடல் (நிவதி). நிவதி மென்பொருளை உருவாக்குதல், அதன் அடிப்படைக் கூறுகள், நடைமுறைப்படுத்துதல் குறித்து அடுத்து எழுதுவதாக திட்டம்.

6 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

அருமையான தொடர்.
இதைப்படித்து யாராவது முன்னுக்கு வந்தால் நானும் மகிழ்வேன்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நல்ல தொடர் சிவகுமார்.. தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

நிவதி குறித்து அறிய ஆவலாக இருக்கிறேன்.. தொடர்ந்து பதியுங்கள்..

தென்றல் சொன்னது…

வாழ்த்துக்கள், சிவகுமார்!

ERP-னா நிவதி-யா?
நம்ம சுயபுராணத்தை [resume] தமிழ்-ல மொழி பெயர்ப்பு செய்யலாம் போல..!

/நிவதி மென்பொருளை உருவாக்குதல்...நடைமுறைப்படுத்துதல் குறித்து அடுத்து எழுதுவதாக திட்டம்./

எதிர்பார்க்கிறேன்!

மா சிவகுமார் சொன்னது…

வடுவூர் குமார்,

//அருமையான தொடர். இதைப்படித்து யாராவது முன்னுக்கு வந்தால் நானும் மகிழ்வேன்.//

'தமிழில் மென்பொருள் எழுதியிருக்க வேண்டியதுதானே,ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள்' என்று குத்தலாகக் கேட்டார் ஒரு நண்பர் நேற்று.

'காலம் காலமாக ஒடுக்கி வைக்கப்பட்ட மக்கள் கூட்டமான எங்களுக்கு ஆங்கிலத்திலிருந்து பிச்சை எடுத்துத் தொழில் செய்யத்தான் இன்று வழி இருக்கிறது

இனி வரும் காலங்களிலாவது தமிழிலும் வளம் கொழிக்க ஒரு புல்லையாவது பிடுங்கிப் போடும் பணியை நிச்சயமாகச் செய்து விட்டுப் போவோம்.'

என்று பதிலுரைத்தேன்.

தமிழில் இல்லாதது இல்லை என்ற நிலை வர எனக்குத் தெரிந்து ஆங்கிலத்தில் கற்றதை எல்லாம் தமிழுக்குக் கொண்டு வர முயல்வேன்.

உங்கள் ஊக்குவித்தல் மிக பயனுள்ளதாக இருக்கிறது !

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//நல்ல தொடர் சிவகுமார்.. தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். //

நன்றி பொன்ஸ்.

//நிவதி குறித்து அறிய ஆவலாக இருக்கிறேன்.. //

எங்கள் நிறுவன அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக எழுதியுள்ளேன். கொஞ்சம் தட்டி வளைத்து வடிவம் கொடுக்க வேண்டியிருக்கும். மற்ற நண்பர்களின் கருத்தளிப்பும் தேவைப்படும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//ERP-னா நிவதி-யா?//
ERPக்கு தமிழ்ப் பெயராக்கம் என் கைங்கரியம்தான் :-).

//நம்ம சுயபுராணத்தை [resume] தமிழ்-ல மொழி பெயர்ப்பு செய்யலாம் போல..!//

நீங்களும் தொடர்ந்து செய்யுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்