செவ்வாய், மார்ச் 04, 2008

பரிதாபம்!!!

"எங்கள் இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட அரசியல் தத்துவத்திற்காக உயிரை விடுகிறார்கள். தமிழ் நாட்டு இளைஞன் என்னவென்றால் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்கிறான்.. விஜயகாந்துக்கு என்கிறார். என்ன அயோக்கியத்தனம் இது."

"எங்களுக்காகத் தமிழ்நாட்டில் அனுதாபப்படாதீர்கள். அதை எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். இப்படி ஒரு இளைஞர் சமுதாயத்தை வளர்த்து வைத்திருப்பதற்காக நாங்கள்தான் தமிழ்நாட்டைப் பார்த்து அனுதாபப்பட வேண்டியிருக்கிறது."

ஈழத்து தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் புதிய பார்வை இதழ் பேட்டியில்.

14 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஜீவா நல்ல சிந்தனைத் தெளிவு மிக்கவர்.
அவர் கூற்றில் நீங்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வைத்துப் பார்க்கும் போது; தவறில்லை.
ஆனாலும் விதிவிலக்குகளாக பலர் உள்ளார்கள். மறுப்பதற்கில்லை.
அவருக்கும் அது தெரியும். ஆனால் விதிவிலக்கு விகிதாசாரத்தில் பிந்துவதாலும்; அவர்கள் கூட நம் மக்களே என்னும் ஆதங்கமாகக் கூட இருக்கலாம்.

ROSAVASANTH சொன்னது…

// தமிழ் நாட்டு இளைஞன் என்னவென்றால் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்கிறான்.. விஜயகாந்துக்கு என்கிறார். என்ன அயோக்கியத்தனம் இது.//

இதில் அயோக்கியத்தனம் என்ன இருக்கிறது என்று ரத்தம் வரும்வரை சொரிந்து யோசித்தும் புரியவில்லை.


இந்த மாதிரி ஆவேசங்கள் முதலில் தமிழ்நாட்டு சூழலில் தேவையில்லை; அப்படி ஆவேசப்படுவது வெட்டியானது. இவை எல்லாமல் இல்லாமல் ரஜினிக்காகவும், விஜயகாந்துக்காகவும் உயிர் கொடுக்கப் போவதாக சொல்லி இந்த ஆவேசத்துக்கு மாற்று ego satisfier வைத்து கொள்வது எவ்வளவோ மேல். இத்தனை ரத்தக் களரி நடந்த பின்பும் தங்கள் சூழல் மீது சின்ன விமரசனம் கூட இல்லாமல், அதை glorify செய்து பேசும் டொமினிக் ஜீவாதான் சிந்திக்க நிறைய இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

ROSAVASANTH சொன்னது…

//டொமினிக் ஜீவாதான் சிந்திக்க நிறைய இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.//

`
சிந்திக்க வேண்டிய தேவை நிறைய இருப்பதாக எனக்கு தோன்றுகிறது' என்று வாசிக்கவும்.

வஜ்ரா சொன்னது…

//
எங்கள் இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட அரசியல் தத்துவத்திற்காக உயிரை விடுகிறார்கள். தமிழ் நாட்டு இளைஞன் என்னவென்றால் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்கிறான்.. விஜயகாந்துக்கு என்கிறார்.
//

அரசியல் தத்துவம் என்று சொல்லி இளைஞர்கள் உயிரையெல்லாம் எடுக்கும் "தத்துவமேதைகளை" நம்பும் பெரும் தவறைச் செய்துவிட்டு அதைப் பற்றிய பிரக்ஞை கொஞ்சமும் இல்லாமல் தமிழ்நாட்டில் கண்டவனுக்காக உயிரைவிடுவேன் என்று சொல்கிறார்கள் (சொல்லத்தானே செய்கிறார்கள் ?) என்று எழுதும் எழுத்தாளரா நல்ல சிந்தனையாளர் ?

சீனு சொன்னது…

//"எங்களுக்காகத் தமிழ்நாட்டில் அனுதாபப்படாதீர்கள். அதை எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். இப்படி ஒரு இளைஞர் சமுதாயத்தை வளர்த்து வைத்திருப்பதற்காக நாங்கள்தான் தமிழ்நாட்டைப் பார்த்து அனுதாபப்பட வேண்டியிருக்கிறது."//

அப்படின்னா, அவர மூடிகிட்டு அவர் வேலை மட்டும் பார்த்தால் போதும். எங்களை பார்த்து அவர் அனுதாப்பட தேவையில்லை.

மா சிவகுமார் சொன்னது…

ரோசா வசந்த், வஜ்ரா, சீனு

ஒரு பார்வையாளராக அவர் சொன்னக் கருத்தை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கா ஆகி விட்டோம்!

இன்றைக்குத் தமிழகத்தில் அத்தகைய நிலை குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். யோகன் சொல்வது போல விதிவிலக்குகள் ஏராளம் இருக்கின்றன என்பதும் உண்மைதான். அவரே சொல்வது போல விகிதாச்சாரத்தில் விதிவிலக்குகள் பிந்துகின்றன என்பது கிராமப் புறங்களிலும் சிறு நகரங்களிலும் காணக் கிடைக்கிறது.

ஜீவாவுக்கு இருக்கும் ஆதங்கத்தை அவர் கோணத்திலிருந்து பாருங்கள். அதே வாக்கியத்தில் ஈழப் போராட்டத்தையும் குறிப்பிடுவதிலிருந்து, தமிழகத்திலிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் தெரிவதை பார்க்க முடிகிறது. தமிழக இளைஞர்களின் கவனம் திசை திருப்பப்பட்டிருப்பதாக அவர் நினைப்பதாகப் படுகிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

KARTHIK சொன்னது…

//தமிழ் நாட்டு இளைஞன் என்னவென்றால் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்கிறான்.. விஜயகாந்துக்கு என்கிறார். என்ன அயோக்கியத்தனம் இது."//

தீ அப்படினு சொன்ன நாக்கு சுடவா போகுது.அது ஒரு வயசு அப்படிதான் இருக்கும்.வயசு ஏறும் போது ரசனையும் மாறுபாடும்.ஆனால் இது வரை ஒரு உயிரும் போனதில்லை.

//எங்கள் இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட அரசியல் தத்துவத்திற்காக உயிரை விடுகிறார்கள். //
ஆயுதம் ஏந்தி உயிர் விட்டு இவர்கள் சாதித்தது என்ன.

//ஈழப் போராட்டத்தையும் குறிப்பிடுவதிலிருந்து, தமிழகத்திலிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் தெரிவதை பார்க்க முடிகிறது.//

ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு நாம் ஆதரவு குடுப்போமேயானால்.காஷ்மீர் பிரச்சனையில் பாக்கிஸ்தான் தலையிடுவதும் சரியன்றாகிவிடும்.ஆயுதம் தாங்கி போரிடுவதற்கு நாம் ஆதரவுதருவது சரியல்ல.நம்நாடு பேச்சுவார்த்தையில் பங்குகொள்வது சரி.

ROSAVASANTH சொன்னது…

//ஒரு பார்வையாளராக அவர் சொன்னக் கருத்தை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கா ஆகி விட்டோம்!//

கொடுமை! நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே (ஒப்புக்கொள்வது என்பது வேறு) இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க போகிறீர்கள்?

சீனு சொன்னது…

//ஒரு பார்வையாளராக அவர் சொன்னக் கருத்தை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கா ஆகி விட்டோம்!//

அதே பார்வையாளாராக தானே அவரும் நம்மை அனுதாபப்படவேண்டாம்னு சொல்லிட்டார்.

அவர் அவருக்காகவே அனுதாபப்படவேண்டாம்னு சொல்லிட்டாரே. அப்புறம் அவரு மட்டும் எதுக்கு தமிழ்நாட்டைப் பார்த்து அனுதாபப்பட வேண்டியிருக்கிறது? அவர் வேலையை பார்க்கலாமே! நிறைய இருக்கு...

சீனு சொன்னது…

//தீ அப்படினு சொன்ன நாக்கு சுடவா போகுது.அது ஒரு வயசு அப்படிதான் இருக்கும்.வயசு ஏறும் போது ரசனையும் மாறுபாடும்.ஆனால் இது வரை ஒரு உயிரும் போனதில்லை.//

அதானே! குஷ்பூக்கு துடைப்பத்தை காட்டிய பொழுது அவருக்கு கோயில் கட்டியவர்கள் சண்டைக்கு வந்தார்களா என்ன?

மாயாவி சொன்னது…

//ஆயுதம் ஏந்தி உயிர் விட்டு இவர்கள் சாதித்தது என்ன//

தமிழ்நாட்டில் கோயிலில் அதுவும் தமிழில் தேவாரம் பாடுவதற்க்கே அடிதடி கோர்ட் போலிஸ் என்று நடக்கும் போது,

இலங்கையில் தமிழினத்தையே அழிக்க நினைக்கும் ஒரு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில் என்ன தப்பு?

//ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு நாம் ஆதரவு குடுப்போமேயானால்.காஷ்மீர் பிரச்சனையில் பாக்கிஸ்தான் தலையிடுவதும் சரியன்றாகிவிடும்.ஆயுதம் தாங்கி போரிடுவதற்கு நாம் ஆதரவுதருவது சரியல்ல//

இலங்கையில் தமிழ் போராளிகளுக்கு ஆயுதம் வழங்கி போராட்டத்திற்க்கு ஆதரவு அளித்து ஆரம்பித்து வைத்ததே இந்தியாதான்.

இன்று அதே போராளிகள் வெற்றி பெறக்கூடாது என சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழக மீனவர்கள் பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை என கடலிலே கண்ணி வெடிகளை விதைக்கும்படி அறிவுரை வழங்கியதும் அதே இந்தியாதான்.

இலங்கையில் சமாதானம் வரக்கூடாது என இந்தியா கவனமாக காய் நகர்த்துவது எல்லோருக்கும் தெரியும்.

ஜீவா சொன்னது எல்லோருக்கும் பொருந்தாது என்றாலும் அதிலுள்ள உண்மை சுடத்தான் செய்கிறது இல்லயா??

Unknown சொன்னது…

//ஜீவா சொன்னது எல்லோருக்கும் பொருந்தாது என்றாலும் அதிலுள்ள உண்மை சுடத்தான் செய்கிறது இல்லயா??//

உண்மைதான், ஆனால் சிலர் ரத்தம் வர யோசித்தும் புரியவில்லை என்கிறார்களே, அதுதான் எனக்குப் புரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

//
தமிழ்நாட்டில் கோயிலில் அதுவும் தமிழில் தேவாரம் பாடுவதற்க்கே அடிதடி கோர்ட் போலிஸ் என்று நடக்கும் போது,

இலங்கையில் தமிழினத்தையே அழிக்க நினைக்கும் ஒரு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில் என்ன தப்பு?
//

RED HERRING

இலங்கைத் தமிழன் மீது அவ்வளவு அக்கறை கொண்ட நீ போய் ஆயுதம் ஏந்திப் போராடி வீர மரணம் எய்தவேண்டியது தானே ? ஏன் வலைப்பதிவு எழுத வந்திருக்கிறாய் ? உன்னைப் போன்ற உட்கார்ந்து பேசும் தத்துவமேதைகளால் தான் எல்லாப் பிரச்சனையும்.

KARTHIK சொன்னது…

வணக்கம் மாயாவி
/தமிழ்நாட்டில் கோயிலில் அதுவும் தமிழில் தேவாரம் பாடுவதற்க்கே அடிதடி கோர்ட் போலிஸ் என்று நடக்கும் போது,//

இந்த பிரச்சனை வேறு இலங்கையில் நடப்பது வேறு.இந்த பிரச்சனை இன்னும் ஓரிரு தினங்களில் முடிந்துவிடும்.ஆனால் அங்கு நிலைமை வேறு.

//இலங்கையில் தமிழினத்தையே அழிக்க நினைக்கும் ஒரு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில் என்ன தப்பு?//

தப்புதான்.பேசி தீர்க்க முடியாத காரியம் எதுவும் இல்லை.வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வுகான்பதே நிரந்தர தீர்வாக இருக்குமென்பது என் அபிப்பிராயம்.