செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மகஇகவும் இணையமும்

http://www.vinavu.com/2010/08/31/jyovram-pala/

http://www.google.com/buzz/115511813610845200164/bHuJAeb5mQf/வ-னவ-ம-ம-க-இ-க-த-ழர

மகஇகவை மற்ற கட்சிகளோடு ஒப்பிடக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.

திமுக, அதிமுக, பாமக முதலான கட்சிகள் இந்திய அரசியலமைப்புக்குள், தேர்தலில் போட்டியிடுவது, பத்திரிகைகளில் 'கொள்கை' பரப்புவது, மக்களுக்குப் பிடித்தபடி (அன்றைய தேதியில்) நடந்து கொண்டு பிரபலமடைவது என்று செயல்படுகிறார்கள்.

மகஇகவைப் பொறுத்த வரை, இன்றைய ஆட்சியமைப்பையே முழுமையாக நிராகரிக்கிறார்கள் (என்பது எனக்குப் புரிந்தது). இந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய சமூகம் உருவாக்குவது அவர்களது நீண்ட கால நோக்கம்.

அதற்கான வேலைகளை மட்டும் செய்து கொண்டே இருக்கும் கர்மவீரர்கள் அவர்கள். இடையில் கிடைக்கும் பதவி, பணம், அங்கீகாரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜெயிலுக்குப் போவது ஒரு கௌரவம் என்பது கூட ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அடுத்த 10 ஆண்டுகளில் இல்லா விட்டாலும், 100 ஆண்டுகளிலாவது தாம் நம்பும் சமூகத்தை உருவாக்கி விடலாம் என்ற உறுதியான நம்பிக்கையில், அதற்காக இன்றைய என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்கிறார்கள்

1. மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுவது மூலம் பொது மக்கள் மத்தியில் பணி செய்வது ஒரு பக்கம்.

2. இன்னொரு பக்கம், நீண்ட கால நோக்கில் அறிவுஜீவிகளின் மத்தியில்  கருத்தாக்கம் செய்வது  முக்கியமான பணி.

இரண்டாவது நோக்கத்தின் ஒரு பிரிவுதான் இணையத்தில் செயல்படுவது. மகஇக உறுப்பினர்கள் தாமாகவே இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தாலும், பின்னர் அவர்களுக்குள் விவாதித்து ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

8 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

.
சிவா,
இப்போது நீங்கள் அதிகமாக கம்யூனிச‌‌ம் பற்றி சிந்தித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். :-)))

மதங்கள் போல எல்லா இசங்களும் ஒரு பகுதியில் ஒரு கால கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

கம்யூனிச‌ அடிப்படையானது தொழிலாளர்கள் அதாவது மூலதனம் என்ற‌ ஒன்று இல்லாமல் உடல் உழைப்பால் வாழ்பவர்களின் நலன் சார்ந்தது. இயந்திரங்களின் பங்கு பஞ்சாலைகளில் அதிகமான போது உண்டான சித்தாந்தம் இது.

கம்யூன் என்பது (நிலப்பிரபுக்களை எதிர்த்து உண்டான ..ஏறக்குறைய கம்யூனிட்டி என்ற அர்தத்தில்) கம்யூனசித்தின் முன்னோடி எனலாம்.


கம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் கம்யூனசத்தின் பைபிள் என்று சொல்லலாம்.

http://www.marxists.org/archive/marx/works/download/pdf/Manifesto.pdf

மார்க்ஸ் இறந்தபிறகு கூட , எங்கெல்ஸால் புதிய அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டது. ( ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் மார்க்ஸ் எங்கெல்ஸ் சரிபார்ப்பார்கள்)

கம்யூனிச‌‌ம் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பம் இருந்தால் நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய இடம் இந்த மேனிவஸ்ட்தான்.

****

இந்த 68 பக்க அறிக்கைதான் உலகில் பலரால் பலவாறு அமுலாக்கம் செய்யப்பட்டது.

1.லெனினின் கம்யூனிச‌‌ அமலாக்கமும்
2.மாவோவின் கம்யூனிச‌‌ அமலாக்கமும்
3.பிடலின் கம்யூனிச‌‌ அமலாக்கமும்
4.சேயின் கம்யூனிச‌‌ அமலாக்கமும்
5.கிம் (வட கொரியா) கம்யூனிச‌‌ அமலாக்கமும்
.....
..ஒரே மூலத்தை (68 பக்க அறிக்கை) அடிப்படையாகக் கொண்டாலும் முற்றிலும் வேறு வேறானது.

அதனால்தான் அது லெனினிசமாகம், மாவோசிசமாகவும் அறியப்படுகிறது.

***

இந்தியாவில் இருக்கும் கம்யூனிசம் என்பது ஒரு வகையான சாம்பார். யாரை எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் கொள்கைகள் இந்த 68 பக்க அறிக்கையில் இருந்து எதைக் எடுத்துக் கொள்கிறது என்று பார்த்தால் தெளிவின்மைதான் இருக்கும்.

**
இந்தியாவின் பிரிவினை வர்க்கம் சார்ந்தது என்றாலும் அதைவிட முக்கியம் வர்ணப்பிரச்சனை.

68 பக்க அறிக்கையில் தொழிலாளி வர்க்கம் இருக்குமே தவிர வர்ணம் இருக்காது. இந்திய சூழ்நிலைக்கான சித்தாந்தம் கம்யூனசித்தை அடிப்படையாகக் கொண்டாலும் இந்திய பிரச்சனைகளை பேசுவதற்காக இருக்க வேண்டும்.

**

அரேபியா பெண்கள் மணற்புயலில் இருந்து பாதுகாக்க போட ஆரம்பித்த (நபி மற்றும் இஸ்லாமிற்கு முன்னரே இருக்கும் பழக்கம்) முழுச்சொக்காயை தமிழகத்த்லும் போடுவது போல, 68 பக்க அறிக்கையை அப்படியே இந்தியாவில் அமுல்படுத்த முடியாது.

எப்படி லெனின் அவரது நிலப்பரப்பிற்கு தோதாக அதை அமுல்படுத்தி லெனினிசமாக ஆக்கினாரோ அதுபோல இந்தியாவின் வர்ணப்பிரச்சனைகளையும் பேசக்கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும்.

***

வர்க்க பேதத்துடன் வர்ணபேதத்தையும் சேர்த்து மேலும் மற்ற மண் சார்ந்த பிரச்சனைகளையும் பேசும் இசம் வேண்டும் நமக்கு.

***

இந்தியாவில் ஒரு கம்யூனிசத்திற்கு மற்ற ஒன்று போலி. :-(((( அப்படித்தான் அழைத்துக் கொள்கிறார்கள்.

பிழைப்புவாதக் கூட்டணிதான் பெரும்பாலும் இருக்கிறது. 68 பக்க அறிக்கை எந்தனை பேருக்கு இன்னும் பைபிளாக உள்ளது என்று தெரியாது.

***

Renga சொன்னது…

//இந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய சமூகம் உருவாக்குவது அவர்களது நீண்ட கால நோக்கம்.//


பிறகு ஏன் முதலாளித்துவம் கண்டுபிடித்த blogger & wordpress ஐ பயன்படுத்தவேண்டும்?

Indian சொன்னது…

Well said Kalvettu.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

1. நான் எப்போதுமே கம்யூனிசம் பற்றி நிறையவே சிந்தித்து வந்திருக்கிறேன் :-)

2. நீங்கள் சொல்வது போல தொழில் புரட்சிக்குப் பிறகான முதல் சார்ந்த பொருளாதார சமூகத்தில் 'தொழிலாளர்களின் (பெரும்பான்மை மக்களின்) உழைப்பு எப்படி மூலதனத்தைக் கட்டுப்படுத்துபவர்களால் சுரண்டப்பட்டு விடுகிறது' என்பதை விவரிக்க வந்ததுதான் கம்யூனிச தத்துவம் என்பதுதான் எனது புரிதலும்.

3. லெனினிசம், ஸ்டாலினிசம், மாவோயிசம் என்று அந்தந்த ஊருக்கு ஏற்றபடி தீர்வுகளை செயல்படுத்த முயன்றார்கள். அவற்றில் மிகப்பெரிய தவறுகள் நிகழ்ந்தன என்பதும் உண்மையே.

சீனாவைப் பொறுத்தவரை, பாரம்பரியமாக வந்த சமூக ஏற்றத் தாழ்வுகளை (குலம், ஆண்/பெண், நிலவுடமை) முற்றிலுமாக அடித்தொழித்த பெருமை மாவோயிசத்துக்குத்தான் என்பது நான் நேரடியாகப் பார்த்தது.

மற்றபடி ஊழல், தனிமனித ஒழுக்கம் என்பதெல்லாம் கம்யூனிச புரட்சியால் மாறி விடப் போவதில்லைதான்.

4. இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் என்ற முத்திரையில் பல குழுக்கள் இருக்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவற்றின் பொதுவான ஒரு பண்பு - சுயநலம் /ஊழல் இல்லாதவர்கள், சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் என்பது.

இவர்களைப் போன்றே எதிர் பக்கம் (வலது சாரி) இருக்கும் கொள்கைத் தீவிரவாதிகள் (ஆர்எஸ்எஸ் போன்றவர்கள்) - பழைய கால வேதங்களுக்கு உயிர் கொடுப்பதையும், பணக்கார நலன்களுக்கு கட்சி நடத்துவதையும்தான் செய்து வருகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.

5. அதனால் இந்தக் கட்சிகளின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், அவர்களது தூய நோக்கம், நலிந்த பிரிவினருக்காக போராடும் குணம் இவை சமூகத்துக்குத் தேவை என்பதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ரெங்கா,

உங்கள் கேள்விக்கு பஸ் விவாதத்தில் நான் சொன்ன பதிலையே தருகிறேன்.

'உலகெங்கிலும் முதலாளித்துவம் கொடி கட்டிப் பறக்கும் போது, வளங்களும் மக்கள் உழைப்பும் அந்த நிறுவனங்கள் கையில்தான் இருக்கின்றன. அதற்காக மாற்றுக் கொள்கைக் காரார்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு உயிரை விட்டு விடத் தேவையில்லை.

இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தமது நோக்கங்களுக்காகப் போராடலாம்.'

Indian - வருகைக்கு நன்றி.

கல்வெட்டு சொன்னது…

.

சிவா,
கம்யூனிசத்தை விமர்சிப்பது என்பது அதை அறிந்ததால் அது மேலும் சிறப்படைய வேண்டும் என்ற நோக்கில்.

//இவர்களைப் போன்றே எதிர் பக்கம் (வலது சாரி) இருக்கும் கொள்கைத் தீவிரவாதிகள் (ஆர்எஸ்எஸ் போன்றவர்கள்) - பழைய கால வேதங்களுக்கு உயிர் கொடுப்பதையும், பணக்கார நலன்களுக்கு கட்சி நடத்துவதையும்தான் செய்து வருகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். //

ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் விமர்சனத்திற்குகூட தகுதியற்றவர்கள். சாதி மத குப்பையை ஒட்டி வரும் எந்த இசங்களும் தூர விலக்கப்படவேண்டியவை.

*****

//அவற்றில் பெரும்பாலானவற்றின் பொதுவான ஒரு பண்பு - சுயநலம் /ஊழல் இல்லாதவர்கள், சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் என்பது. //

பொதுவாக அப்படிச் சொல்லமுடியாது சிவா. தமிழ்ச்செல்வன் என்ற பதிவர் குறித்த பேச்சுக்களில் அவரின் முரண்கள் குறித்து பேசி இருப்பேன். கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது. நாளை ஜெயலலிதாவிடனோ அல்லது கருணாநிதியுடனோ அல்லது விசயகாந்த உடனோ கம்யூனிஸ்ட் கட்சி கூட்டு வைத்தால் இவர்கள் கட்சியை விட்டு வெளியேவா வந்துவிடப் போகிறார்கள்?

பிழைப்புவாதம்தான் தெரிகிறது

***
மகஇக வின் கொள்கைகள் ..அதாவது why they exists as political party
என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும் . அதைப் படித்தே பிறகே அவர்களை விமர்சிக்க முடியும்.

உங்களின் யூகங்கள்/புரிதல்களாக இல்லாமல் நான் கொடுத்துள்ள 68 பக்க அறிக்கை போல மகஇக வின் மேனிவெஸ்ட் என்ற‌ ஒன்று இருந்தால் சுட்டி தரவும்.

FYI:
ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.
http://kalvetu.blogspot.com/2010/04/blog-post_27.html


.

Ramprasad சொன்னது…

I do agree with the effort that they are putting to form a new society, but why they are targetting only Hindus and Brahmins. Don't they have enough guts to speak about Muslims and Christians or is this a way of political drama which has been solicitated by other so called rationalist parties. Can you please explain the same.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் Prasad,

I am not sure why you get the impression they target only Hindus and Brahmins.

In our society where majority are Hindus and Hindu society is dominated by Brahminical attitudes, it is natural for a reformist/revolutionary party to target them.

In China, for instance, the communist party targets Muslim societies in a big way. In Russia it was the Catholic Church.

Thanks and regards,
Sivakumar