வியாழன், டிசம்பர் 02, 2010

குடும்பப் பாசம் கட்சியையும், மாநிலத்தையும் சீரழித்தது

திமுகவின் சார்பில் நீரா ராடியா பேரம் பேசும் ஏற்பாடு எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்?

1. திரு மாறன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில்  மத்திய அமைச்சராக இருந்த போது, திமுகவின், தமிழ்நாட்டின் நலன்களை பார்த்துக் கொள்ள முடிந்தது. அவரது அனுபவமும், பிற கட்சித் தலைவர்களுடன் இருந்த தொடர்புகளும் பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்கியிருக்கும்.

இப்போது திரும்பிப் பார்த்தால், ஈழத்தில் தமிழர் நலனுக்கும் சரியான கவனம் அப்போது இருந்ததை உணர முடிகிறது.

2. மாறனின் மறைவுக்குப் பிறகு, திமுக தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலிருந்து விலகுவதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஒரு முக்கிய காரணம், 'அனுபவமே இல்லாத ஒரு இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க' பாஜக மறுத்து விட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்தத் திட்டம் காங்கிரசுடனான பேரங்களில் சரிவர நடந்து 2004 தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசில் தயாநிதி மாறன் அமைச்சரானார்.  டி ஆர் பாலு திமுகவின் தில்லி முகமாக செயல்பட ஆரம்பித்தார்.

3. 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டி ஆர் பாலுவும் கழற்றி விடப்பட்டு கனிமொழி, மாறன், ராசா கைகளில் பேச்சு வார்த்தை விடப்பட்டது. அவர்கள் யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் விழிக்க, நீரா ராடியாவின் கையில் திமுகவின் (அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டின்) மானம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்று திருக்குறள் படித்த திரு கருணாநிதி,  குடும்பப் பாசம் கண்ணை மறைக்க, அறிஞர் அண்ணா முதல் வைகோ தொடர்ந்து, மாறன் வரை தில்லியில் முன் நிறுத்திய திராவிடக் கட்சிகளின் மதிப்பை அதல பாதாளத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

(Due to continuous spam, disabled comments - 2-1-2011)

6 கருத்துகள்:

Ravichandran Somu சொன்னது…

உண்மை...

மர்மயோகி சொன்னது…

வைகோ ஒரு தேச துரோகி, அவனுக்கும் இந்தியாவின் நலத்துக்கும் சிறிதும் சம்மந்தமில்லை..அவனைப் பற்றி பேசாதேடா..நீயும் ஒரு தேச துரோகிதாண்டா.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ரவிச்சந்திரன்,

மர்மயோகி,

தேசம் என்பது டாடா, ரிலையன்சு, ஏர்டெல்... + NDTV, India Today.... + Congress, BJP ...மட்டுமில்லை. இவர்களுக்கு வெளியில்தான் இந்தியா இருக்கிறது, வாழ்கிறது.

ராடியா தொலைபேசி உரையாடலில் முகேஷ் அம்பானியின் லாபத்துக்காக தேசபக்தி எப்படி உற்பத்தி ஆகிறது என்று பாருங்கள்.

பயங்கரவாதத்துக்கு எதிரான தேச பக்தியை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்று இங்கு படித்துப் பாருங்கள்.
http://openthemagazine.com/article/nation/the-ones-caught-will-brazen-it-out

ராவணன் சொன்னது…

1924-லேயே நாறிப்போன ஒரு விசம் சாரி..விசயம் நீரடியாவால் நாறிப்போனது என்றால் நம்பும்படி இல்லை.

பெயரில்லா சொன்னது…

ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள் சகோதரரே . பெரியார், அண்ணா வளர்த்த கட்சியின் மானம் டெல்லி யில் கப்பலேறி காற்றில் பறந்து ரொம்ப வருடமாச்சு .

மா சிவகுமார் சொன்னது…

இப்போது கூட கருணாநித கும்பலை விலக்கி குடும்ப அரசியலால் கட்சியை விட்டுச் சென்ற வைகோ போன்றவர்களைச் சேர்த்தால் திமுக புத்துயிர் பெறலாம்.