வெள்ளி, ஜூன் 19, 2026

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம்

 அதன் 14 கூறுகளை சி.என்.என் வெளியிட்டிருக்கிறது.

அந்த 14 கூறுகளை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பு மூக்கடிக்கத் தரையில் விழுந்திருக்கிறது. லெபனான் உட்பட போர் நிறுத்தம் - இஸ்ரேலுக்கு மூக்கறுப்பு. துறைமுக முற்றுகை நீக்கப்படும். 300 பில்லியன் டாலர் அளவுக்கு மீள்கட்டுமான நிதியம் வழங்கப்படும். எண்ணெய், எண்ணெய் பொருட்களை விற்பதற்குத் தடை நீக்கப்படும். முடக்கப்பட்ட நிதி விடுவிக்கப்படும். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை முழுவதும் கைவிடும். இது JCPOA ஒப்பந்தத்திலேயே இருந்தது. ஈரானுக்கு உயிரிழப்பு, உள்கட்டமைப்பு சேதம், ஆயுதத் தளவாடங்கள் சேதம். அதற்குக் குறைவில்லாத அளவு அமெரிக்காவுக்கும் இஸ்ரேக்கும் சேதம், அவர்களது கெத்துக்கு அடி விழுந்தது என்ற வகையில்.

டிரம்ப் நான்தான் பாஸ் என்று ஜி7 மாநாட்டில் கெத்து காட்டினாராம். மோடி அங்கு போய் மேற்கத்திய நாடுகளுக்கு கால்பிடித்து விடப் போயிருக்கிறார். சீனா அழைக்கப்படவில்லை. பிரேசில், தென் ஆப்பிரிக்க அழைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கு கிடைக்கப் போகும் அடுத்த அடி உக்ரைனில். உக்ரைனில் ரசியா தோற்கடிக்கப்பட்டால் சீனாவின் மீதான போருக்கு நாள் குறிக்கப்பட்டு விடும். ஈரான் தோற்றிருந்தாலும் அது நடந்திருக்கும். அது நடக்கவில்லை. அடுத்த குறி ரசியா. அமெரிக்காவின் ஆயுதங்கள் எங்கு பயன்படுத்துவது என்றசிக்கல் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: