நேர்த்தியாக செறிவாக கட்டுக் கோப்பான உரை.
தமிழ் சமூகம் என்ற ஒன்று எவ்வாறு உருவாகிறது. திரைப்படங்கள், பத்திரிகைகள். அதற்கு முன்னர் கதாகாலட்சேபங்கள், வில்லுப் பாட்டு, தெருக்கூத்துக் கலைஞர்கள். ஆனால், திரைப்படங்களும் பத்திரிகைகளும் என்ற வெளியை இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் பிடித்துக் கொண்டு தமிழ் கூட்டு உளவியலைக் கட்டமைத்தது என்கிறார். அதில் எம்.ஜி.ஆர் முக்கியமான பாத்திரம் வகித்திருக்கிறார்.
1990களுக்குப் பிறகு அரசியல் ஒரு செய்பொருளாக சந்தைப்படுத்துவது தொடங்குகிறது. ஸ்பின்னிங் போரிஸ், யெஸ் வி கேன் என்ற ஒபாமா பரப்புரை, டிரம்ப், நரேந்திர மோடி, என்று விஜய் வரை இது தொடர்கிறது. ஆம் ஆத்மி கட்சி, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று நாம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக