புதன், ஜனவரி 03, 2007

தமிழ் நாடு வழிகாட்டுகிறது.

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_4282.html

25 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

மகிழ்ச்சியான நிகழ்வு. பகிர்ந்ததற்கு நன்றி.

நற்கீரன் சொன்னது…

மகிழ்ச்சியான நிகழ்வு. பகிர்ந்ததற்கு நன்றி.

மணியன் சொன்னது…

தமிழக அரசின் இந்த முடிவு பாராட்டப்பட வேண்டியது. இம்முடிவை எடுக்க உறுதுணையாக இருந்த அரசு செயலருக்கு நானும் உங்கள் பாராட்டுக்களில் கலந்து கொள்கிறேன். இதே பதிவை நானும் சுட்டி சற்றுமுன் பதிந்து தமிழ்மணத்தில் பார்த்தபிறகே உங்களின் அருமையான இடுகையை கண்டேன் :(

நற்கீரன் சொன்னது…

Certainly a good news. But, Suse edition is sponsored by Novel, which is a partner with the MicroSoft. So, carefully selecting the edition is important as well. Some Linux editions fully support Tamil, while others do not.

✪சிந்தாநதி சொன்னது…

உமாசங்கர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத் தக்கது. ஆனால் அரசாங்கத்தில் உள்ள மைக்கோசாப்ட் அபிமானிகள் அரசியல் ரீதியாக மாற்றிவிடாமல் இருந்தால் சரி.

அதிருக்கட்டும்...எனக்கொரு சந்தேகம்..
(லினக்ஸ் நிறுவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தும் இதுவரை சரியான வாய்ப்பு அமைய வில்லை.)

ரெட்ஹேட் லினக்ஸ், உபுண்டு, சூசி என்று வரும் லினக்ஸ் பொதிகளில் உருவாக்கியவர்கள்/நிறுவன வேறுபாடு தவிர அடிப்படையான இயக்கமுறை வேறுபாடுகள் என்னென்ன? செயல்பாட்டில் சந்திக்கும் மாறுபாடுகள் எவை?

Guru Prasath சொன்னது…

எனது பதிவை refer செய்தமைக்கு சிவக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. சிந்தாநதி அவர்களே லினக்ஸிற்க்கு மிகவும் புதியவர்களுக்கு இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ள உபுண்டுவை நான் சிபாரிசு செய்வேன். உஙகளுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தால், நீங்கள் நேராக https://shipit.ubuntu.com/ சென்று வேண்டுமான அளவுக்கு குறுந்தகடுகளை ஆர்டர் செய்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைப்பார்கள். காலணா செலவு இல்லை.

✪சிந்தாநதி சொன்னது…

உபுண்டுவை ஏற்கனவே பெற்று விட்டேன். இன்னும் சோதிக்கத்தான் இல்லை.

தனித்தனி லினக்ஸ் பொதிகளின் இயக்கமுறை வேறுபாடுகள் பற்றியே அறிய விரும்பினேன்

பெயரில்லா சொன்னது…

சில சந்தோசமான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்

இதோ ஆரம்பித்துவிட்டது..

வளப் படட்டும் தமிழகம்...

பகிர்தலுக்கு நன்றி...

மா சிவகுமார் சொன்னது…

நன்றி மணிபிரகாஷ்,

//இதோ ஆரம்பித்துவிட்டது..

வளப் படட்டும் தமிழகம்...//

தமிழகத்தின் வளமான எதிர்காலம் உள்ளத்தில் தெரியத்தான் செய்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//மகிழ்ச்சியான நிகழ்வு. பகிர்ந்ததற்கு நன்றி.//

நன்றி பாலா, நற்கீரன்

இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு. தன்னார்வலர்களின் பங்களிப்பும் இதற்கு உண்டு என்பது இன்னொரு செய்தி. திரு உமாசங்கர் சென்னை லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு வந்து விபரங்கள் திரட்டி சிலரின் உதவியையும் பெற்றுக் கொண்டது சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒன்று.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் மணியன்,

உங்கள் பதிவையும் படித்தேன். நல்லதை நான்கு இடத்தில் சொல்வது நல்லதுதானே. பரிநிரலின் முன்னேற்றம் தவிர்க்க முடியாத தடுத்து விட முடியாத காலத்தின் கட்டாயம் (அரசியல் முழக்கம் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நற்கீரன்,

சுசே நோவல் நிறுவனத்தினால் நடத்தப்பட்டாலும், லினக்சை யாரும் கட்டிப் போட்டு விட முடியாது, மைக்ரோசாப்டு எவ்வளவோ முயற்சித்து, அவர்களது வழக்கமான ஆயுதங்கள் எல்லாம் மழுங்கிப் போன போட்டி லினக்சு இயக்கம்.

சூசே, மாண்டிரேக், ஃபெடோரா கூட தமிழ் இடைமுகத்தை வழங்குகின்றன என்று நினைக்கிறேன்.


அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

குருபிரசாத்,

நான் டெக்கான் குரோனிக்கிளில் முதலில் படித்தேன். அதன் இணையப்பதிப்பில் யாருக்கும் கிடைக்கவில்லை. நீங்கள் எடுத்துப் போட்டதுதான் பரவலாக பலருக்கும் போய்ச் சேர உதவியிருக்கிறது.

சிறப்பு நன்றிகள்:-)


அன்புடன்,

மா சிவகுமார்

✪சிந்தாநதி சொன்னது…

வெவ்வேறு லினக்ஸ் பொதிகளில் இயக்கமுறை வேறுபாடு?

சிவா இது பற்றி ஏதாவது?
----

என் கணினியின் கடிகாரபாட்டரி செயலிழந்துள்ளதால் சர்வீஸ் செய்பவரை அழைத்து விவரம் சொன்னபோது லினக்ஸ் நிறுவித்தர வேண்டும் என்றும் சொன்னேன். லினக்ஸ் தற்போது தன்னிடம் இல்லை என்றார். இங்கே இருக்கிறது என்றபோது உபுண்டு என்றதும் அது பிரச்சினை கொடுக்கும் என்பது போல பேசினார்.

உண்மையில் லினக்ஸ் பற்றிய தெளிவு அவர்களிடம் இல்லை, அவர்கள் விண்டோஸ் மட்டுமே நிறுவுகிறார்கள்.

இனி நாமாகவே முயற்சித்தாக வேண்டும்..பார்ப்போம் பார்ட்டிஷன் பிரச்சினை போன்றவையும் இருக்கிறது...

மா சிவகுமார் சொன்னது…

சிந்தாநதி,

இயக்கும் முறைகளில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. எல்லாவற்றிலுமே கேடியீ மற்றும் ஜினோம் என்ற இரண்டு மேசைச் சூழல்களும் இருக்கும். ஏதாவது ஒன்றில் பழகிக் கொண்டால், மற்றொரு லினக்சு பொதிக்கு மாறும் போது அதிக பட்சம் அரை நாள் ஒரு நாள் முயன்று புதிய அமைப்புகளுக்கு பழகிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பொதியின் வடிவமைப்பு மாறுபட்டாலும், எல்லாவற்றின் பயன்பாடுகள் ஒரே மாதிரியானவைதான். கவலைப்படாமல் உபுண்டுவைப் பயன்படுத்திப் பாருங்கள். இணையத் தளங்களின் மேய்ந்து பாருங்கள். லினக்சு பத்திரிகைகளை வாங்கிப் படியுங்கள். இந்தப் பயணத்தை ஆரம்பிப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

விசு சொன்னது…

உங்கள் பதிவை படித்தேன். மகிழ்ச்சியான நிகழ்வு. பகிர்ந்ததற்கு நன்றி. தமிழகம் மென்மேலும் வ‌ளர‌ட்டும்...

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

தகவலை தெளிவாகத் தந்ததற்கு நன்றி. பரிநிரல் - பெயர்க்காரணம் விளக்குவீர்கள் ஆனால் நன்றாக இருக்கும். திறவூற்று, திறமூல என்று தானே பரவலாக குறிப்பிடப்படுகிறது?

மா சிவகுமார் சொன்னது…

ரவிசங்கர்,

பரி நிரல் என்று ராமகி ஐயா பரிந்துரைத்தார்கள். என்ன காரணம் என்பது மறந்து விட்டது. திறமூலம் என்பது open source, பரி நிரல் என்பது Free Software. ஆங்கிலத்தில் இரண்டுக்கும் உள்ள தத்துவ வேறுபாடு உங்களுக்கு தெரியும் அல்லவா?

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

வணக்கம் மா.சி,

லினக்ஸ் பயன்பாடு அரசு அளவில் கொண்டு செல்வது நல்ல செய்தியே!(இதற்கு முன்னரே ஆந்திரவில் நாயுடு சென்றதும் ராஜசேகர் ரெட்டி லினக்ஸ் கணிப்பொறிகளை பயன்படுத்த சொல்லி விட்டார்) உமாசங்கர் முன்னர் சுடுகாட்டுக்கூறை ஊழலை வெளிக்கொண்டுவந்து பெயர்ப்பெர்றவர் ,ஆனால் தற்போது தகவல் தொழில்னுட்ப செயலர(& elcot) என்றப் பதவியில் இருந்து கொண்டு பணம் பண்ணுவதாக ஜூனியர் விகடன் கழுகார் குற்றப்பத்திரிக்கை வாசித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தயானிதிமாறன் உச்சத்தில் இருந்த போது பில்கேட்ஸ் ஐ நேரில் சந்தித்து தமிழக அரசிற்காக மலிவு விலையில் வின்டோவ்ஸ் வாங்கி வந்ததாக பேட்டி தந்தாரே என்னவாயிற்று?

பரி நிரல் என்பது அந்த மூல நிரலை பரிமாறிக்கொண்டு குழுவாக பலரும் சேர்ந்து மேம்ப்படுத்துவதால் இருக்கலாம், லினக்ஸ் இயக்கம் அப்படித்தானே செயல்படுகிறது.

-L-L-D-a-s-u சொன்னது…

மகிழ்ச்சியான நிகழ்வு. பகிர்ந்ததற்கு நன்றி.

துளசி கோபால் சொன்னது…

கேக்கவே மகிழ்ச்சியா இருக்கு.

தகவலுக்கு நன்றி சிவா.

வடுவூர் குமார் சொன்னது…

ஜனவரி 3யில் போட்ட பதிவு,கண்ணில் இருந்து தப்பிவிட்டது.
ஃஃபெடோரா 7 போட்டு பாருங்கள்,அட்டகாசமாக இருக்கு.அதுவும் தமிழ் உள்ளீடு செய்யும் வசதி பற்றி இங்கு சொல்லியிருக்கேன்.

மா சிவகுமார் சொன்னது…

//பரி நிரல் என்பது அந்த மூல நிரலை பரிமாறிக்கொண்டு குழுவாக பலரும் சேர்ந்து மேம்ப்படுத்துவதால் இருக்கலாம், லினக்ஸ் இயக்கம் அப்படித்தானே செயல்படுகிறது.//

பொருத்தமாகத்தான் படுகிறது. நன்றி.

ஆறு மாதத்துக்கு முந்தைய இடுகைக்கு புத்துயிர் கொடுத்ததற்கு சிறப்பு நன்றிகள் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் L L Dasu, துளசி அக்கா,

உபுண்டு குறுவட்டுக் கிடைத்தால் பாவித்துப் பாருங்களேன்!

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//ஃஃபெடோரா 7 போட்டு பாருங்கள்,அட்டகாசமாக இருக்கு.//

இப்போதானே வந்தது, அதற்குள் நிறுவிக் கொண்டு விட்டீர்களே! :-)

இங்கு லினக்சு ஃபார் யு பத்திரிகை கொடுக்கும் DVD பிரதிகள்தான் எங்களுக்கு வழி. இணையத்திலிருந்து தகவிறக்க செலவு அதிகம் ஆகும்.

அன்புடன்,

மா சிவகுமார்