வெள்ளி, ஏப்ரல் 23, 2010

பெண் ஏன் அடிமையானாள்?

யமுனா ராகவன் என்பவர் தமிழ்நாட்டில் ஒரு பெண்ணின் நிலையைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். ஒரு தமிழ்நாட்டு ஆணின் மனதை ஊடுருவிப் படித்தது போல எழுதியிருந்தார். (எல்லா ஆண்களுக்கும் எல்லா குறிப்புகளும் பொருந்தா விட்டாலும்), இப்படி ஒரு பெண்ணின் மனதை எந்த ஆணாவது எழுத முடியுமா?

நான் பார்த்த வரையில் கான்வென்டில் படித்த பெண்களுக்கு ஒரு விடுதலை மனதளவில் கிடைத்திருக்கிறது. பெண் உடலின் மீது அசூயையோ, தான் ஆணை விடக் குறைந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மையோ முற்றிலும் இல்லாமல் செய்யும் நம்பிக்கை சிஸ்டர்கள் கொடுத்து விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

சமூக அளவிலான மாற்றங்கள் இதைச் செய்து காட்டலாம்.
  • சாங்காயில் சீனப் பெண்கள் ஆண்களுக்கு எந்தத் தாழ்வும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று பார்த்திருக்கிறேன்.
  • திருவனந்தபுரம் பெண்கள் குறிப்பாகவும், கேரளப் பெண்கள் பொதுவாகவும் இந்த விடுதலை பெற்றவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.
  • உழைக்கும் வர்க்கத்தில் பெண்கள் இது போன்ற தளைகளில் கட்டுறாமல் இருப்பதாக தமிழ்ச்செல்வன் கேணி கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.
இதைப் போன்று பல பெண்கள் இருந்தாலும், பெரும்பான்மை கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கப் பெண்கள் மனதளவில் அடிமைப் படுத்தப்பட்டு, அதனால் தினசரி வாழ்க்கையில் துன்புற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த துன்பங்களின் அழகான கொஞ்சம் நீளமான வெளிப்பாடாக அந்த இடுகை.

அந்த இடுகைக்கு வாக்களிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக உடனேயே ஒரு தமிழ்மண பயனர் கணக்கு பதிந்து கொண்டேன். masivakumar என்று ஏற்கனவே பெயர் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்ததால் பல நாட்கள் முயற்சித்து விட்டிருந்தேன். நேற்றைக்கு ma_sivakumar என்று பதிந்து கொண்டேன். முதல் முறையாக வாக்களித்தது இந்த இடுகைக்குத்தான்.

6 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

யமுனா எழுதியவற்றை இதற்குள் சுருக்கலாம்.

1.பாலியல் வறட்சி
------------------

நமது சமுதாயம் பாலியல் வறட்சியால் பீடிக்கப்பட்ட ஒன்று.

பதிவிலேயே இன்னும் நடிகையின் பிதிங்கிய மார்பையோ அல்லது பின் புறத்தையே தேடி எடுத்து படமாக போடுபவர்கள் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் முன்னாள் லக்கி. அடுத்த பெண்ணுடலை இரசிப்பது தவறு இல்லை என்ற மனோபாவம் .

தினத்தந்தியில் கவர்ச்சிபடம் என்று ஒன்று வரும். இன்னும் வருகிறதாதெரியவில்லை. வாரப்பத்திரிக்கை தொடங்கி எல்லாவற்றிலும் அட்டைப்படம் பெண்தான். உடல் சார்ந்த கவர்ச்சியை வைத்து வியபாரம். யமுனா சொல்லும் அதே நடுத்தரப் பெண்கள் இந்த குப்பைகளின் வாசகர்கள்.

2.பாலியல் கல்வி
-------------
‍‍ஆண் பெண் உடல்களை மற்றும் உணர்வுகளை இருபாலரும் புரிந்து கொள்ளும் வெளிப்படையான பாலியல் கல்வி சமுதாயத்தில் இல்லை. இருபாலருக்கும் இயற்கையான பாலியல் தேவைகள் கட்டுப்படுத்தப்படும் போது எல்லாக் கொடுமையும் நடக்கும்.

3.எதிர் பாலரை புரிந்து கொள்ளுதல்
-----------------------------

ஆண் உடல் மற்றும் மூளையில் தோன்றும் சிந்தனைகளுக்கும் , பெண் உடல் மற்றும் மூளையில் தோன்றும் சிந்தனைகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது இயற்கைதான் என்றாலும், சரியான புரிதல் இருந்தால் சுலபமாகக் கடந்து போக முடியும்.

4.சபிக்கப்பட்ட சமுதாயம்.
-----------------------
எல்லாவற்றையும் தாண்டி இந்தியா சபிக்கப்பட்ட நாடு. ஒன்றும் செய்ய இயலாது. கடவுளில் ஆரம்பித்து கடைக்கோடி மனித வரை தாகாத உறவுகளை கொண்டாடும் கேவலமான கூட்டம். முருகனுக்கு வப்பாட்டி, இந்திரனின் கேவலமான காரியங்கள், மனைவியைச் சந்தேகப்படும் இராமன்.. என்று பல .

5.சுய ஒழுக்கம் அற்றவர்கள்.
-------------------------
குப்பையைப் போடுவதில் ஆரம்பித்து குண்டியைக் கழுவுவதுவரை யாராவது சட்டம் போட்டால் மட்டுமே செய்ய முனைபவர்கள்.

6.சுரணை அற்றவர்கள்.
------------------
எதற்கும் கொதித்தெழாத ஒருவகைச் நோய்ச்சமூகம்.


***
டாக்டர் ஷாலினி ஆண் பெண் உடல் கவர்ச்சி மற்றும் மூளையில் ஏற்படும் இராசாயன மாற்றங்கள் பற்றிச் சொன்னால் நல்லது

.

கல்வெட்டு சொன்னது…

//உழைக்கும் வர்க்கத்தில் பெண்கள் இது போன்ற தளைகளில் கட்டுறாமல் இருப்பதாக தமிழ்ச்செல்வன் கேணி கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார். //

????

புரியவில்லை...

உதாரணமாக...

செங்கள் சூளைப் பெண்கள்
சித்தாள் பெண்கள்
வயல் வேலைகளில் கூலி வேலைப் பெண்கள்....
எல்லா இடத்திலும் பாலியல் சுரண்டல் இருக்கத்தான் செய்கிறது.

பாலியல் கவர்ச்சி மிகவும் இயல்பானது. அதை எப்படி முறைப்படுத்துகிறோம் என்பதில்தான் மனிதன் மற்ற விலங்குகளில் இருந்து வேறுபடுகிறான்.

குறைந்த சதவீதமாக இருந்தாலும், ஆண்களை பயன்படுத்தும் பெண்களும் உள்ளார்கள்.

.

கல்வெட்டு சொன்னது…

தமிழ்ச்செல்வன் என்று பதிவு எழுதுபவரையா சொல்கிறீர்கள்...?

http://satamilselvan.blogspot.com/2010/03/2.html

??
பாலியல் மற்றும் அது சார்ந்த புரிதல் இல்லாவர் என்றே நினைக்கிறேன்.
வரதராஜன் என்பவரின் பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை கட்சி ரீதியாக விசாரிப்பது சம்பந்தமான எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை. பின்னூட்டங்களை குப்பையில் போட்டுவிட்டார்.

இந்த போலிச்சமூகத்தில் ஒரு ஆண் அல்லது பெண் மீது சொல்லப்படும் இந்தவகையான குற்றச்சாட்டு மிகவும் தாக்கங்கள் கொண்டது.

"அழகி" கைது என்று சொல்வதும் ரஞ்சிதாவா என்று கேட்கப்படுவதிலும் அதிக ஆர்வமுள்ள சமுதாயம்.

இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வரதராஜன் போன்றோரின் பாலியல் சம்பந்தமான விசயங்களை குடும்பமும் அவரும் மனநலம்/குடும்பநலம் சம்பந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் உதவியைஅ நாடாமல் கட்சி கட்டப்பஞ்சாயத்து செய்ததை இன்னும் கண்டிக்காதவர் இவர்.

.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

நீங்கள் குறிப்பிட்டுள்ள அதே தமிழ்ச் செல்வன்தான்.

கேணினி கூட்டத்தில் பேசும் போது, இயல்பாக தனது குறைநிறைகளை வெளிப்படையாக சொன்னார்.

கட்சியில் இருப்பதால் கட்சி தொடர்பான விஷயங்களை வெளியில் விவாதிப்பதில்லை என்று விளக்கமும் சொல்லியிருந்தார். ஒரு அமைப்பில் இருக்கும் போது (இருப்பது வரை) அதன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருக்கத்தானே வேண்டியிருக்கிறது.

அவர் பேசும் போது தமிழகப் பின்னணியில் வளர்ந்த தான், விடுபட வேண்டும் என்று விரும்பியும் விட்டு விடாத (ஆணாதிக்கக்) குணங்களைக் குறிப்பிட்டு, அத்தகைய சூழல்கள் கிராமப்புறத்தில் உழைக்கும் மக்களிடையே குறைவாக இருப்பதைச் சொன்னார்.

நீங்கள் குறிப்பிட்டது போல பாலியல் சுரண்டல்கள் இருந்தாலும், ஒப்பிட்டுப் பார்க்கும் போது படித்த, white collar பெண்களுக்கு மன உளைச்சலும் தடைகளும் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

கல்வெட்டு சொன்னது…

.

//ஒரு அமைப்பில் இருக்கும் போது (இருப்பது வரை) அதன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருக்கத்தானே வேண்டியிருக்கிறது. //

சிவா,
ஒரு அமைப்பு உங்களின் உண்மையான உணர்வுகளைப் பேச தடைவிதிக்கிற‌து என்றால்..ஏன் அந்த அமைப்பில் இருக்க வேண்டும்?

வரதராஜனும் இவரும் ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக , பாலியல் குறித்த தனிமனித உணர்வுகளை நிலைப்பாடுகளைப் பேசக்கூடாதா?

எனக்கு புரியாதது....

1.கட்சிக் கொள்கைகளை படித்துவிட்டு, தானே விரும்பித்தானே கட்சியில் சேர்கிறார்கள்? இல்லை வம்சாவழி தீட்சையா?

2.வெளிப்படையாக இருக்கும் கட்சிக்கொள்கைகளில் முரண் தெரியும்போது, அதை ஏன் வெளிப்படையாகப் பேசக்கூடாது?

3.கட்சியில் இருப்பதாலே தன்னை ஒரு அடிமை போல எண்ணிக் கொள்பவர்கள், ஏன் சமூகம் பற்றி சுய கருத்தைச் சொல்லவேண்டும்?

இவரே நித்யானந்தாவிற்கு பாலியல் சுதந்திரம் உண்டு என்றார்.

//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. //

http://satamilselvan.blogspot.com/2010/03/blog-post_03.html

4. அதாவது, இவர் யாரைப்பற்றியும் பொதுவில் பேசலாம் கேள்விகேட்க‌லாம்,கருத்துச் சொல்லலாம் ஆனால் , இவராக விரும்பி ஏற்றுள்ள கட்சியின் பாலியல் பஞ்யாசத்துக்களை இவரிடம் கேட்கக்கூடாது. என்ன கொடுமை இது?
கட்சி என்ன இவர் சம்பள‌ம் வாங்கும் கம்பெனியா? மக்கள் அமைப்பு அல்லவா?
அதன் கொள்கைக்கும் செயல்பாட்டுக்கும் முரண்வரும்போது விளக்கம் அளிக்கவேன்டியது கடமை அல்லவா?

அதை விடுங்கள்...சுயமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் கட்சிக்கு அடகுவத்துவிட்ட இவர் போன்றோரை நீங்கள் மேற்கோள் காட்டியதால் வந்தது இந்த எதிர்வினை.

***

//நீங்கள் குறிப்பிட்டது போல பாலியல் சுரண்டல்கள் இருந்தாலும், ஒப்பிட்டுப் பார்க்கும் போது படித்த, white collar பெண்களுக்கு மன உளைச்சலும் தடைகளும் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.//

அப்படி இல்லை என்றே தோன்றுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இது சமூகத்தின் ஒட்டுமொத்த நோய். :-((




.

மா சிவகுமார் சொன்னது…

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்

என்பதின்படி தான் சார்ந்த அமைப்பில் ஏற்றுக் கொள்ள முடியாத குறைகள் இருந்தாலும், மற்ற குணங்கள் குறைகளை மிகுந்து நிற்கும் போது அதில் தொடர வேண்டும் என்றுதானே நினைப்பார்? அப்படித் தொடர வேண்டுமானால், அந்த அமைப்பின் கட்டுத் திட்டங்களை பின்பற்றத்தானே வேண்டும்?

எனது சில இயல்புகளை, பழக்கங்களைப் பற்றி நினைக்கும் போது, 'என்ன, இவ்வளவு கேவலமாக இருக்கிறோம்' என்று சில சமயம் தோன்றும். ஆனால், அவற்றைத் தவிர்த்த நல்லியல்புகள் மிகுந்து நிற்பதை உணர்வதால்தானே நம்மை நாமே மதித்து வாழ முடிகிறது!

அன்புடன்,
மா சிவகுமார்