புதன், டிசம்பர் 01, 2010

பர்கா தத் - பத்திரிகையாளர்

நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் (ndtvயின் பர்கா தத், இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, வீர் சங்க்வி முதலானோர்) தமது எல்லைகளைத் தாண்டியதாக வெளி வந்தது.

1. செய்தி சேகரிக்கிறோம் என்ற ஆர்வத்தில் அதிகார தரகர்களாக இவர்கள் செயல்படுவது தெரியவந்தது.

2. ஒன்றரை ஆண்டுகள் முன்பு நடந்த இந்த உரையாடல்கள் செய்திகளாக வெளியிடாமல் வைத்திருந்தார்கள் - நீரா ராடியா என்ற தொழில் முனைவர் அரசியல் தரகராக செயல்படுவதைக் குறித்து இவர்கள் தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் விவாதிக்கவில்லை.

3. தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியான பிறகும் அவை பற்றிய விபரங்களை தத்தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தார்கள்.

வேறு வகையில் ஊழல் அல்லது தவறு செய்யாமல் இருந்தாலும், இந்த அடிப்படை பத்திரிகை தர்மத்தில் அவர்கள் தவறியிருக்கிறார்கள். இதில் அதிகமாக தாக்கப்பட்டவர் பர்கா தத். பர்காகேட் என்று தலைப்பிட்டு இணையத்தில் பரவலான விவாதங்கள் நடந்தன.

ஒரு வழியாக பர்கா தத், சக பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளை சந்தித்து, அந்த நிகழ்ச்சியை சுருக்காமல் அப்படியே ஒளி பரப்பு செய்திருக்கிறார்கள் ndtvயில்.

http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/barkha-dutt-other-editors-on-radia-tapes-controversy/178964?hp

தவறு செய்வது மனித இயற்கை. செய்த தவறை உணர்ந்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர் காலத்தில் அத்தகைய தவறுகளை தவிர்ப்பதாக உறுதி சொல்வது, சிறந்த மனிதர்களின் அடையாளம்.

பர்கா தத்தும், NDTVயும் தாமதமானாலும் தமது சிறப்பைக் காட்டியிருக்கிறார்கள் and she is pretty :-)

6 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒப்பன் அவுட்லுக் ஆசிரியர் மனு ஜோசப் கேட்ட கேள்வி இதுதான்- பர்காவோ அல்லது என்டிடிவி யோ ஏன் இப்படி ஒரு நிகழ்வு (நீர ராடியாவ்டன் தொலைபேசி பேச்சு) நடந்துள்ளது பற்றி முன்னரே டிவியில் தெரிவிக்க வில்லை. (atleast in 2009 or untill June2010)

அதற்க்கு பர்கா பதிலே சொல்லாமல் மழுப்பி விட்டார். பிசினெஸ் ஸ்டாண்டர்ட் ஆசிரியர் கூட சொன்னார் மனிதர்கள் அனைவரும் தவறு செய்யும் இயல்பு உடையவர்கள், அது இயற்கை. எனவே பர்கா இப்பொழுதாவது ஒரு வார்த்தை சாரி என்று சொன்னால் பிரச்னை முடிஞ்சு விடும் என்றார்.

அதற்க்கும் பர்கா மழுப்பி விட்டார். ரொம்ப அழுத்தமாக மனு ஜோசப் கேட்டதும் பர்கா சொன்னது,. எனக்கு 2009 இல் நீரா ராடியாவுடன் அமைச்சரவை அமைப்பது குறித்து நடந்த தொலைபேசி உரையாடல் ஒரு பெரிய /முக்கிய செய்தியாகவே தெரியவில்லை.

நிகழ்ச்சியும் முடிந்தது, பர்கா மீது வைத்து இருந்த நம்பிக்கையும் முடிந்தது.

மா சிவகுமார் சொன்னது…

உண்மை ராம்ஜி யாஹூ,

பர்கா கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட கேள்வி கேட்டவரை தாக்குவதில் அதிக நேரம் செலவழித்து தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டார் என்று எனக்கும் தோன்றியது.

இத்துடன் முடிந்து விடாமல் இன்னும் ஓரிரு விவாதங்கள் நடத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம். இது ஒரு நல்ல ஆரம்பம்!

ஆனால் பர்காகேட் என்று பெயர் சூட்டி பர்காதான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவி என்று இணைய உலகம் கும்மி அடிப்பது கொஞ்சம் அதிகப்படியாகப் படுகிறது.

பர்கா என்ற திறமையான, புத்திசாலியான, எனக்குத் தெரிகிற வரை பெருமளவு நேர்மையான பத்திரிகையாளரை பலிகடாவாக்கி விட்டு மற்ற பெருச்சாளிகளை கண்டு கொள்ளாமல் விடுவது போலத் தோன்றுகிறது.

ரத்தன் டாடாவைப் பற்றி ஏன் பேச்சு இல்லை? இந்தியாவின் 'நேர்மை'யான பொறுப்புள்ள குழுமத் தலைவர் ஏன் தனது உரையாடல்களுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லத் தயாராக இல்லை?

இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, நீதிமன்றங்களை fix செய்வது வரை பேசுகிறார். அவர் பெயர் ஏன் தலைப்புச் செய்திகளில் இல்லை?

பர்காதத் தவறு செய்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அவரை முன்னிட்டு நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரும் ஊறு விளைவிக்கும் மற்ற பெருந்தவறுகளை மறைக்கத் தலைப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன்.

சீனு சொன்னது…

//பர்கா என்ற திறமையான, புத்திசாலியான, எனக்குத் தெரிகிற வரை பெருமளவு நேர்மையான பத்திரிகையாளரை பலிகடாவாக்கி விட்டு மற்ற பெருச்சாளிகளை கண்டு கொள்ளாமல் விடுவது போலத் தோன்றுகிறது.//

மீடியா தேவையான பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவரை குற்றம் சாட்டுகிறார்களாம். இதையே தான் அவரும் இத்தனை காலமாக செய்துகொண்டிருந்தார்...திருப்பி தாக்குகிறது...

மா சிவகுமார் சொன்னது…

சீனு,

1. நீரா ராடியா திமுக சார்பில் பேரம் பேசுவதை வெளியில் சொல்லாமல் இருந்தது பர்கா தத்தின் தவறு.

2. பதிவுகள் வெளியான பிறகு முற்றிலும் இருட்டடித்தது இன்னும் பெரிய தவறு.

இந்த இரண்டிற்கு மேல் பர்கா தத்துக்கு பொறுப்பு இல்லை. தண்டனையும், குற்றச்சாட்டுகளும் செய்த தவறுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.

100க்கும் மேற்பட்ட பதிவுகளையும் பர்காகேட் என்று முத்திரை குத்துவது வேறு ஏதோ வெறுப்பைத்தான் காட்டுகிறது.

சீனு சொன்னது…

//100க்கும் மேற்பட்ட பதிவுகளையும் பர்காகேட் என்று முத்திரை குத்துவது வேறு ஏதோ வெறுப்பைத்தான் காட்டுகிறது.//

இதையேத்தான் இவரும் செய்துகொண்டிருந்தார் என்கிறேன் நான். இவருக்கு இப்போ வலிக்கிறது. அவ்வளவு தான்.

வட இந்திய சானல்கள் எல்லோரும் நியூஸ் ரீடராக இல்லாமல், நியூஸ் மேக்கர்கள் என்று நினைத்து செயல்படுகின்றனர்.

உதா, காங்கிரஸுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிர்ந்த ஊடகங்கள் திடீரென்று ஒன்று சேர்ந்தார் போல் கல்மாடியை குறிவைக்க காரணம் என்ன? அவர் செய்த ஊழல்களா? இருக்காது. இதை தான்டி ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்.

அதுவும் கேவலமான சேனல் என்றால் அது சி.என்.என். தான். இவர்களாக முடிவு செய்துவிட்டு அதற்கேற்றார் போல் செய்திகளை போடுவது. வட்டம் போட்டு ஏதோ கிரிமினல் போல காட்டுவது என்று இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. ப்ரேக்கிங் நியூஸ் என்று போட்டு, "Raaja escaped to Chennai" என்று ஓட்டுவது. இது அவர்களுக்கே கேவலமாக இருக்கவேண்டும்.

பர்க்காவும் அதே குட்டையில் ஊறியவர் தான். அப்புறம் என்ன "MEDIA"?

சீனு சொன்னது…

http://blogs.wsj.com/indiarealtime/2010/12/01/a-too-argumentative-barkha-dutt-squanders-chance/