- திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள், விலைமதிப்பு வாய்ந்த கற்கள் நிறைந்த பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பலர் பல லட்சம் கோடி மதிப்பிலான கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1. பெருமதிப்பிலான இந்த புதையல்கள் எப்படி உருவாயின?
நாட்டு மக்களிடமிருந்து சம்பாதித்த, கொள்ளையடித்த அல்லது பறித்த பணத்தை, அது அரசாங்கத்தின் மூலமாக மக்கள் நலப்பணிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் தனி மனிதர்கள் பதுக்கி வைத்ததன் விளைவுகள்தான் இவை.
இவற்றை உருவாக்கியவர்கள் இரண்டு முறை குற்றவாளிகள். மக்களையும், அரசையும் ஏமாற்றிப் பணத்தை திரட்டியது ஒரு குற்றம். திரட்டிய பணத்தை பயன்படுத்தாமல் பதுக்குவது இரண்டாவது குற்றம்.
2. இவற்றை அப்படியே விட்டு வைத்தால் என்ன?
இந்த செல்வங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்கள், பொதுவான புழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளுக்கு வெளியில் கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்கிறார்கள்.
உதாரணமாக, ஒரு வீட்டை வாங்கும் போது கறுப்புப் பணம் வைத்திருப்பவர், வாங்கும் மதிப்பில் 80%த்தை தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து விற்பவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடுவார். 20%த்துக்கு மட்டும் வரி கட்டுவார்கள்.
வெளிநாட்டில் படிக்கப் போகும் தனது மகனுக்கு ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பிக் கொள்வார்கள்.
கோயிலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முன்னாள் அரச குடும்பத்தினர் அல்லது மடஅதிபதிகள், அதை வைத்து மற்றவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
3. இவற்றை அரசு கைப்பற்றி மக்கள் நலனுக்கு செலவழிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
'இத்தனை லட்சம் கோடி டாலர்கள் வெளியில் வந்தால் இந்திய ரூபாயின் பரிமாற்ற மதிப்பு மிகவும் அதிகமாகி விடும் (1 டாலருக்கு 20 ரூபாய் என்று ஆகி விடலாம்), அதனால் ஏற்றுமதி நின்று போய் விடும், நாட்டில் பண வீக்கம் அதிகரிக்கும்' என்று ஒரு விந்தையான வாதம் வைக்கப்பட்டது.
10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம்+ஒரு லட்சம் கோடி மதிப்பிலான கோவில் நகைகள் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
'பணப் பற்றாக்குறை அல்லது அன்னிய செலாவணி மதிப்பு குறைந்து விடக் கூடாது' என்று செய்யாமல் இருக்கின்ற பல திட்டங்களை செயல்படுத்தலாம். இது போன்ற புதிய இறக்குமதி பரிமாற்றங்களில் பணம் செலவாகும் போது பாரம்பரிய ஏற்றுமதி/இறக்குமதி செலவாணி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- பல்வேறு துறைகளில் நிபுணர்களை வரவழைத்து வேலைக்கு அமர்த்தலாம்.
- நவீன எந்திரங்களை, தொழில் நுட்பங்களை விலைக்கு வாங்கலாம்.
- புதிய ஆய்வு நிறுவனங்கள் ஏற்படுத்தலாம்.
ஒரிஜினலாக இந்தப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள், நமது மக்களின் உழைப்பை சுவிஸ் நாட்டுக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள், அதற்கு நிவாரணமாக இது அமையும்.
4. பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியர் சொல்வது ஏன்?
அடுத்த கத்தி நம்மைப் போன்ற மடங்களின் தலைக்கு மேல் என்று தோன்றுவதாலும் இருக்கலாம்.