பஞ்சம், படுகொலை, பேரழிவு : அறிவியல் என்ற புத்தகத்தில் குரவிந்தன் காலகண்டன், அறிவியல் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். சர் ஐசக் நியூட்டனில் தொடங்கி, ஐன்ஸ்டைன் வழியாக, இன்று வரை அறிவியல் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
பின்னர் ஒரு கேள்வி எழலாம்: ஆனாலும் ஏன் பல அறிவாளி மூளைகளை அறிவியல் வசீகரிக்கிறது. உண்மைகளை பரிசீலனை மூலம் தெரிந்து கொள்வதையும், மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும் என்பதையும் விரும்புபவர்கள்தானே அறிவியலால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால், அதன் பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் குரவிந்தன் விளக்குகிறார்.
-- கத்ரி காஷாத்ரியின் பதிவிலிருந்து
பின்னர் ஒரு கேள்வி எழலாம்: ஆனாலும் ஏன் பல அறிவாளி மூளைகளை அறிவியல் வசீகரிக்கிறது. உண்மைகளை பரிசீலனை மூலம் தெரிந்து கொள்வதையும், மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும் என்பதையும் விரும்புபவர்கள்தானே அறிவியலால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால், அதன் பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் குரவிந்தன் விளக்குகிறார்.
-- கத்ரி காஷாத்ரியின் பதிவிலிருந்து
5 கருத்துகள்:
ஜூப்பருய்யா! :)))
//பஞ்சம், படுகொலை, பேரழிவு : அறிவியல் என்ற புத்தகத்தில் குரவிந்தன் காலகண்டன், அறிவியல் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். சர் ஐசக் நியூட்டனில் தொடங்கி, ஐன்ஸ்டைன் வழியாக, இன்று வரை அறிவியல் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.//
உண்மையான ஆன்மீகம் போய பல மதங்களில் போலிகளே மிகைத்து மதத்தின் நோக்கங்களையே சிதைத்து விடுகின்றனர். அதுபோல் இறை மறுப்பில உதிக்கும் விஞ்ஞானமும் மனித குலத்துக்கு கேடாகவே முடிகிறது.
சுவனப்பிரியன்,
//உண்மையான ஆன்மீகம் போய பல மதங்களில் போலிகளே மிகைத்து மதத்தின் நோக்கங்களையே சிதைத்து விடுகின்றனர். அதுபோல் இறை மறுப்பில உதிக்கும் விஞ்ஞானமும் மனித குலத்துக்கு கேடாகவே முடிகிறது.//
இதே போன்ற கருத்தைத்தான் நான் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் 'குரவிந்தன் காலகண்டன்' வெளிப்படுத்த நினைத்திருக்கிறார். என்ன அவர் இந்து மத சார்பில் அதை விளக்கியிருப்பார், அவ்வளவுதான்.
கம்னியுசம் என்றால் அறிவியலாமா? அடப் பாவிகளா இது தெரியாமல் காலேஜில் போய் பி எஸ்சி எம் எஸ் ஸி என்று படிக்கிறார்களே? பேசாமல் தெருவில் போய் தகர டப்பா குலுக்கியிருந்தால் அந்த உண்டியல் வழியாகவே அறிவியல் அறிவு மண்டைக்குள் போயிருந்திருக்குமே. எப்படி அறிவியல் அணுகுமுறையின் அத்தனை கூறுகளையும் கம்னியுசம் பின்பற்றுகிறதாமா? அடக் கூறு கெட்ட குப்பா? ஒரு வேளை ஒரு கேஸ் சேம்பரில் எத்தனை பேர்களைப் போட்டு எரிக்கலாம் போன்ற ஆராய்ச்சியைச் சொல்லுகிறானோ? புத்தகத்தைப் படித்து விட்டு விவாதம் செய்யும் அளவுக்கு அறிவுள்ளவனாக இருந்தால் அவன் ஏன் கம்னியுஸ்டாக இருக்கிறான்? ஊரில் உருப்படாத விடலைகளையெல்லாம் பிடித்து கம்னியுஸ்டுகளாக்கி அவர்களது எதிர்கால வாழ்க்கையைக் கெடுக்க ஒரு கும்பலே அலைகிறது. ஆனால் அப்படிக் கெடுக்கும் இந்தத் தலைவர்கள் எல்லாம் கோடி கோடியாகச் சொத்து சேர்த்து விடுகிறார்கள். ஐயா டேவிட் பாண்டியனைக் கேளுங்கள், அச்சுதானந்தனைக் கேளுங்கள் எம்புட்டுச் சொத்துச் சேர்த்திருக்கிறார்கள் என்று. அயோக்யச் சிகாமணிகள். கைலி கட்டிக் கொண்டு பீடி வலிக்கிற கம்னியுஸ்டுகள் இன்று பழைய மலையாள சினிமாக்களில் மட்டுமே காண முடியும் ஒரு அபூர்வப் பிராணிகள். இப்பவெல்லாம் கார்பொரேட் கம்னியுஸ்டுகளான கராத், யெச்சூரி, என் ராம் போன்றோர்தான் ரோல் மாடல்கள். அடுத்தவன் குடியைக் கெடுத்துப் பிழைப்பு நடத்தும் கபோதிகளின் மறு பெயரே கம்னியுஸ்டுகள். அந்தக் காலத்தில் பி.ராமமூர்த்தி, ஏ பி போன்ற ஏதோ ஒன்றிரண்டு கிறுக்கர்கள் திரிந்திருக்கிறார்கள். இப்பொழுது இவர்கள் ம்யூசியத்தில் வைத்துக் காட்ட ஒரு நல்லக் கண்ணுவை வைத்திருக்கிறார்கள்
வணக்கம் அனானி,
//கம்னியுசம் என்றால் அறிவியலாமா?//
ஆமா.
//அடப் பாவிகளா இது தெரியாமல் காலேஜில் போய் பி எஸ்சி எம் எஸ் ஸி என்று படிக்கிறார்களே?//
பிஎஸ்சி, எம்எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளுக்கு. மார்க்சிசம் பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக அறிவியல் துறைகளுக்கு.
//பேசாமல் தெருவில் போய் தகர டப்பா குலுக்கியிருந்தால் அந்த உண்டியல் வழியாகவே அறிவியல் அறிவு மண்டைக்குள் போயிருந்திருக்குமே.//
உண்டியல் வழியாக போகாது. உண்டியல் குலுக்கும் போது மக்களிடம் பேசி கற்றுக் கொள்ளும் போது உள்ளே போகும்.
//எப்படி அறிவியல் அணுகுமுறையின் அத்தனை கூறுகளையும் கம்னியுசம் பின்பற்றுகிறதாமா?//
நடைமுறையிலிருந்து ஆய்வு செய்தல், கோட்பாடுகளை நடைமுறையில் பரிசீலித்தல், பரிசீலனையில் கிடைக்கும் தகவல்களை வைத்து கோட்பாடுகளை மேம்படுத்துதல்.
அதே அணுகுமுறை கொண்டிருப்பது கம்யூனிசம்.
// ஒரு வேளை ஒரு கேஸ் சேம்பரில் எத்தனை பேர்களைப் போட்டு எரிக்கலாம் போன்ற ஆராய்ச்சியைச் சொல்லுகிறானோ?//
ஹிட்லர், முசோலினி, நரேந்திர மோடி போன்றவர்களை எல்லாம் கம்யூனிசம் பற்றிய விவாதத்தில் ஏன் இழுக்கிறீர்கள்?
//புத்தகத்தைப் படித்து விட்டு விவாதம் செய்யும் அளவுக்கு அறிவுள்ளவனாக இருந்தால் அவன் ஏன் கம்னியுஸ்டாக இருக்கிறான்?//
பதிவைப் படித்து விட்டு எழுதிய எதிர்வினை இது. புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். படிப்பதற்கு கட்டற்ற பொறுமை வேண்டும் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.
//ஊரில் உருப்படாத விடலைகளையெல்லாம் பிடித்து கம்னியுஸ்டுகளாக்கி அவர்களது எதிர்கால வாழ்க்கையைக் கெடுக்க ஒரு கும்பலே அலைகிறது.//
அப்படியா?
//ஆனால் அப்படிக் கெடுக்கும் இந்தத் தலைவர்கள் எல்லாம் கோடி கோடியாகச் சொத்து சேர்த்து விடுகிறார்கள்.//
அப்படியா?
//ஐயா டேவிட் பாண்டியனைக் கேளுங்கள், அச்சுதானந்தனைக் கேளுங்கள் எம்புட்டுச் சொத்துச் சேர்த்திருக்கிறார்கள் என்று.//
டேவிட் பாண்டியன் யார்? அச்சுதானந்தன் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார்? இவர்களை கம்யூனிசம் பற்றிய விவாதத்தில் ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று புரியவில்லை.
நன்றி.
கருத்துரையிடுக