ஞாயிறு, ஜூலை 22, 2007

இரும்பு குளிருது, மரம் குளிரலை. ஏன்?

குளிர் காலத்தில் சிமின்டு தரையில் படுத்தால் குளிரும். பாய் விரித்துப் படுத்தால் குளிருவதில்லை. உலோகப் பரப்பைத் தொட்டால் குளிர்கிறது, மரப்பரப்பு குளிருவதில்லை.

நம்ம உடம்பிலிருந்து சூட்டை கடத்தும் பரப்புகளைத் தொட்டால் நம் உடல் வெப்பத்தை இழப்பதால் குளிர்கிறது. வெப்பத்தைக் கடத்த முடியாத பரப்புகளைத் தொடும் போது குளிர்வதில்லை.

அதே போலக் வெளியில் போகும் போது கம்பளி ஆடை அணிவது உடல் வெப்பத்தை இழக்காமல் காத்துக் கொள்ள மட்டுமே. கம்பளி ஆடைக்கு என்று கதகதப்பாக்கும் இயல்பு கிடையாது.

விடையளித்த (முந்தைய பதிவில்) வவ்வாலுக்கும், பெயர் சொல்லாமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்ட நண்பருக்கும் நன்றி.

அடுத்த கேள்வி:
தோசை சாப்பிட்டால் அதிகமா தண்ணீர் தவிப்பது ஏன்?

3 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

உணவுப்பொருளில் உள்ள ஈரப்பதத்தின் அளவைப்பொருத்தே சாப்பிட்டவுடன் தண்ணீர் அருந்தும் உணர்வை நிர்ணயிக்கிறது என நினைக்கிறேன்.

வெள்ளரி , தர்பூஸ் போன்ற நீர்சத்து உள்ள பொருளை சாப்பிட்டால் தண்ணீர் தாகம் ஏற்படாது.
ஆனால் தோசை அப்படி அல்ல தோசைகல்லில் சுடுவதல் முழுவதும் ஈரப்பதம் இன்றி இருக்கும்(kind of dry food?!) மேலும் அது மாவால் ஆனது எனவே நீர் அருந்த வேண்டும் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பிரட்/ பிஸ்கெட் சாப்பிட்டாலும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல இருக்கும்!

எலி நீர் அருந்துவதே இல்லையாம் தானியங்களில் உள்ள ஈரப்பதமே அதன் நீர்த்தேவையை பூர்த்தி செய்துவிடும் எனப்படித்துள்ளேன்! ஒரு வேளை நகரத்தில் உள்ள எலி தோசை சாப்பிட பழகி விட்டால் தண்ணீர் குடிக்குமோ என்னவோ?

மா சிவகுமார் சொன்னது…

ஆமா வவ்வால்!

நான் கேள்விகளைக் கேட்க நீங்கள் விடைகளை சொல்லிக் கொண்டே போகிறீர்கள் :-)

நீர்ச்சத்துக் குறைவும், அரிசி/உழுந்து கலவையும் காரணம் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

because of oil !!!