ஞாயிறு, செப்டம்பர் 02, 2007

நானாக இருப்பேன்!!

என் சுயத்தை வெளியில் தேடாமல் என்னுள்ளேயே வளர்த்துக் கொள்வேன்.

யாரும் என்னை அழ விட அனுமதிக்க மாட்டேன் (தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர)

பத்திரிகைகளின் அட்டையில் வரும் உருவங்கள் போல இருப்பதுதான் அழகு என்று இல்லை

யாரும் என்னைக் கடுப்படிக்க முடியாது.

"உன் வாழ்த்து அட்டைகளை நீயே வச்சுக்கோ!"

என்னை நான் காதலிக்கிறேன்.

குண்டான பெண்களுக்கான உள்ளாடைகள் விற்கும் கடைக்கான விளம்பரத்தில் ஒரு குண்டுப் பெண்ணின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்த வாசகங்களின் குத்துமதிப்பான தமிழாக்கம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - பெங்களூர் இணைப்பில் ஏப்ரல் 11, 2007 அன்று படித்தது.

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அழகான கவிதை

துளசி கோபால் சொன்னது…

அப்பாடா......... இப்பவாவது மனுஷங்க வெவ்வேற 'அளவு'களில்
இருக்காங்கன்னாவது புரிஞ்சதே.

விளம்பரங்களால் இன்னும் என்னென்ன
மூளைச்சலவை நடக்குதுன்னு பார்த்தாலே வயிறு எரியுது.

சப்போர்ட்க்கு நன்றி:-))))

மா சிவகுமார் சொன்னது…

பாராட்டு(?)க்கு நன்றி ஜோதி ராமலிங்கம் :-)

துளசி அக்கா,

எது அழகு என்று ஒரு ஜெயகாந்தன் சிறுகதையை தொலைக்காட்சி பட வடிவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அகத்தின் அழகுதான் அழகு இல்லையா!

அன்புடன்,
மா சிவகுமார்

முகவை மைந்தன் சொன்னது…

தம்முள் அடித்துக் கொண்டு சாகும் அற்ப உயிர்களுக்கான செய்தியை இதைவிட மென்மையாக வெளிப்படுத்த இயலாது. அறிவின் பயன் வெளிப்பட்டுள்ளது, விப்ரோவின் அடையாள வாசகம் போல.

அடுத்த பதிவு, பாரதியின் பாடல் பொருத்தமான தொடர்ச்சி.

மா சிவகுமார் சொன்னது…

முகவை மைந்தன்,

உண்மையில் சொல்லப் போனால் இந்த இடுகைக்கும் அடுத்த பாரதி இடுகைக்கும் தொடர்புள்ளதாக நான் பதியவில்லை. :-) இது நான்கு மாதங்கள் முன்பு குறித்து வைத்தது, இப்போது வெளியிடலாம் என்று பதிந்தேன்.

எப்படியானாலும் பாராட்டுக்கு நன்றி :-)

அன்புடன்,
மா சிவகுமார்

முரளிகண்ணன் சொன்னது…

\\விளம்பரங்களால் இன்னும் என்னென்ன
மூளைச்சலவை நடக்குதுன்னு பார்த்தாலே வயிறு எரியுது\\.
உடலால் அழகு குறைந்தவர்களை மன சித்திரவதைப் படுத்துகின்றன இந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் (அதிகமாக பென்களை) மற்றும் குழந்தைகளுக்கு வாழ்க்கை குறித்த தவறான புரிதலை தருகின்றன. இம்மாதிரி விளம்பரங்கள் அதிகம் தேவை நம் சமூகத்தில்.

மா சிவகுமார் சொன்னது…

//வாழ்க்கை குறித்த தவறான புரிதலை தருகின்றன.//

வருத்தமான உண்மை :-(

அன்புடன்,
மா சிவகுமார்