ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2007

லினக்சா கொக்கா!

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_2912.html

11 கருத்துகள்:

வினையூக்கி சொன்னது…

:) :) :) :):)

மு. மயூரன் சொன்னது…

இதுவாவது பரவாயில்லை.

க்னூ/லினக்சின் பரம வைரியான மைக்ரோசொப்ட் நிறுவனமே தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் தரவிறக்கங்களை கையாள்வதற்கு லினக்ஸ் வழங்கியையே பயன்படுத்துகிறது.

இதோ ஆதாரம்

அவ்வளவு நம்பிக்கை. அவர்களுக்கே!

rajakvk சொன்னது…

பதிவர்களில் எத்தனை பேர் லினக்சை உபயோகிறார்கள் என்று தெரியுமா?

வடுவூர் குமார் சொன்னது…

அட! அப்படியா?
நல்லா இருக்கே!
வெப் காமிரா மற்றும் மேசேஞ்சர் வசதி இன்னும் மேம்பட்டால் வின்டோஸ் பக்கம் போக வேண்டிய அவசியம் எனக்கிருக்காது.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நிறைய தொழில்நுட்ப வெற்றிகளை லினக்ஸ் கொண்டிருந்தாலும், கிட்டதட்ட 12 ஆண்டுகள் கணிணியுடன் வாழ்கிற எனக்கே சிலசமயம் லினக்ஸின் பழுது நீக்கல் மற்றும் நிறுவுதல் போன்றவற்றில் ஏகப்பட்ட குளறுபடிகள்.


புதியவர்கள் பாடு திண்டாட்டம் தான் :-))

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

//ஆரம்பத்திலிருந்தே கோடிக் கணக்கான பயனர்களுக்கு சேவை செய்யத் தேவையான ஆற்றலும் வசதியும் லினக்சினால்தான் கிடைத்ததாம்.//

லினக்ஸ் சிறந்தது தான் என்றாலும் இன்றைக்கு கிடைக்கும் இயங்குதளங்களில் தலைசிறந்ததாக கருத முடியாது. அதை விட நல்ல ஆற்றல்/வசதி எல்லாம் சன் சொலாரிஸிலும் (Sparc கட்டமைப்பில்). HP Unixலும் கிடைக்கும். ஆனால் இவை இலவசமாக/மலிவு விலையில் கிடைக்காது அது தான் முக்கியமான காரணம்.

எனது பணி அனுபவத்தில், ஒரு சன் சொலாரிஸ் சர்வரை நீக்க அதற்கு சமமாய் 43 RHEL (லினக்ஸ்) சர்வர் நிறுவ வேண்டியிருந்தது. அப்படியும் சில பிரச்சனைகளை சரி செய்ய முடியவில்லை.

வருங்காலத்தில் லினக்ஸ் ஒரு தலைசிறந்த இயங்குதளமாகலாம். இன்றைக்கு இல்லை என்பதே உண்மை.

மா சிவகுமார் சொன்னது…

கோபி,

//லினக்ஸ் சிறந்தது தான் என்றாலும் இன்றைக்கு கிடைக்கும் இயங்குதளங்களில் தலைசிறந்ததாக கருத முடியாது. அதை விட நல்ல ஆற்றல்/வசதி எல்லாம் சன் சொலாரிஸிலும் (Sparc கட்டமைப்பில்). HP Unixலும் கிடைக்கும். ஆனால் இவை இலவசமாக/மலிவு விலையில் கிடைக்காது அது தான் முக்கியமான காரணம்.//

சரியாகச் சொன்னீர்கள். இலவசமாகக் கிடைக்கும் இயங்கு தளம் பல லட்சம் விலையில் கிடைக்கும் வணிக மாற்றுக்களுடன் ஒப்பிட முடிவதே பெரிய வெற்றிதான்.

//எனது பணி அனுபவத்தில், ஒரு சன் சொலாரிஸ் சர்வரை நீக்க அதற்கு சமமாய் 43 RHEL (லினக்ஸ்) சர்வர் நிறுவ வேண்டியிருந்தது.//

அவற்றுக்கான விலை வேறுபாடு என்னவாக இருந்தது? 43 வழங்கிகளின் விலை, 1ஐ விட எவ்வளவு அதிகம்?

கூகிள் ஆயிரக் கணக்கான லினக்சு கணினிகளை ஒருங்கிணைத்துதான் தனது தேடல் சேவைகளை வழங்குகிறதாம். அதில் கிடைக்கும் வசதிகள் மற்ற தேர்வுகளில் இல்லை என்கிறார்கள்.

//வருங்காலத்தில் லினக்ஸ் ஒரு தலைசிறந்த இயங்குதளமாகலாம்.//

தலை சிறந்த இயங்கு தளம் என்று எதுவுமே ஆகப் போவதில்லை, இது வரை எதுவும் இருந்ததும் இல்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பணிக்கு ஒவ்வொரு இயங்குதளம் பொருந்தும். இன்றைக்கு லினக்சு சிறிய, நடுத்தர கணினிகளில் கோலோச்ச முடிகிறது.

பாரி அரசு,

//புதியவர்கள் பாடு திண்டாட்டம் தான் :-))//

அப்படி ஒரு பொதுக் கருத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். மாற்று இயங்கு தளங்களின் பூச்சி தொல்லைகளுடன் ஒப்பிடும் போது லினக்சு சார்ந்த கணினிகளின் சிக்கல் மிகக் குறைவுதான் இல்லையா?

வாங்க குமார்,

//வெப் காமிரா மற்றும் மேசேஞ்சர் வசதி இன்னும் மேம்பட்டால் வின்டோஸ் பக்கம் போக வேண்டிய அவசியம் எனக்கிருக்காது.//

இங்குதான் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது. ஆனால் நிலைமை வேகமாக மாறி வருகிறது. இன்னும் பல பேர் லினக்சைப் பயன்படுத்த ஆரம்பித்தால், வெளிக் கருவிகளுக்கான ஆதரவும் அதிகரிக்கும். கோழி / முட்டை கதைதான்.

அன்பின் நான்,

// பதிவர்களில் எத்தனை பேர் லினக்சை உபயோகிறார்கள் என்று தெரியுமா?//

ஒரு கணிப்பு வைத்தால்தான் தெரியும்.

//மைக்ரோசொப்ட் நிறுவனமே தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் தரவிறக்கங்களை கையாள்வதற்கு லினக்ஸ் வழங்கியையே பயன்படுத்துகிறது.//

தகவலுக்கு நன்றி மயூரன்.

அன்புடன்,
மா சிவகுமார்

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

//இலவசமாகக் கிடைக்கும் இயங்கு தளம் பல லட்சம் விலையில் கிடைக்கும் வணிக மாற்றுக்களுடன் ஒப்பிட முடிவதே பெரிய வெற்றிதான்.//

உண்மை.

//அவற்றுக்கான விலை வேறுபாடு என்னவாக இருந்தது? 43 வழங்கிகளின் விலை, 1ஐ விட எவ்வளவு அதிகம்?//

பெரிய அளவு விலை வேறுபாடு இருந்தது. 1க்கு பதில் 43 ஆனாலும் 1ஐ விட சுமார் 2 மடங்கு குறைந்த விலை தான். அது மட்டுமல்ல ஒரு சில நடைமுறை பிரச்சனைகள் தவிர தரத்தில் பெரிய அளவில் எந்த குறைபாடும் இல்லை.

:-)

வவ்வால் சொன்னது…

மா.சி,

//"The single highest-impact blog I wrote in the past year was when I apologized to a customer who had a hard time trying to buy from Sun," says CEO Schwartz.Schwartz rejects the conventional wisdom that computers have become commodities, a necessary cost rather than a potent weapon.

Instead, he proposes that more and more companies will be like Google, which has an insatiable appetite for computing and uses it for strategic advantage. And the Blackbox is symbolic of that vision. //

கூகிள் சன் கம்பியூட்டர்ஸின் பிளாக் பாக்ஸ் என்ற சர்வரைப்பயன்படுத்துவதாக போட்டுள்ளார்களே .

லினக்ஸில் அதிக சக்தி தேவைப்படும் வேலைகளில் செய்வது எளிது என கேள்விப்பட்டுள்ளேன்.பல ஆங்கில படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க லினக்ஸ் தான் பயன்படுத்துகிறார்கள். டைட்டானிக் படத்திலும் லினக்ஸ் கொண்டு தான் சிறப்புகாட்சிகளை செய்தார்கள்.

யோசிப்பவர் சொன்னது…

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!!!

;-))

மா சிவகுமார் சொன்னது…

//பெரிய அளவு விலை வேறுபாடு இருந்தது. 1க்கு பதில் 43 ஆனாலும் 1ஐ விட சுமார் 2 மடங்கு குறைந்த விலை தான். அது மட்டுமல்ல ஒரு சில நடைமுறை பிரச்சனைகள் தவிர தரத்தில் பெரிய அளவில் எந்த குறைபாடும் இல்லை.//

விளக்கத்துக்கு நன்றி கோபி :-). 43ஐயும் நிர்வகிப்பது தொல்லையாக இல்லாமல் நிரல்கள் மூலம் தானியக்க முறையில் செய்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

//கூகிள் சன் கம்பியூட்டர்ஸின் பிளாக் பாக்ஸ் என்ற சர்வரைப்பயன்படுத்துவதாக போட்டுள்ளார்களே .//

கூகிள் போன்ற நிறுவனத்தில் பல வகையான கணினிகளைப் பயன்படுத்துவது புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால், நான் கேள்விப் பட்டது வரை, கூகிளின் தேடலை இயக்கவது ஆயிரக்கணக்கான லினக்சால் இயங்கும் சாதாரண x86 கணினிகளின் கூட்டு அமைப்பு.

//கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!!!//

ஆமாமா, அப்படி முறைத்துப் பார்த்து பொசுக்கி விட முடியவில்லை என்றுதான் பல நிறுவனங்களுக்கு லினக்சு மீது கடுப்பு :-)

அன்புடன்,
மா சிவகுமார்