வெள்ளி, செப்டம்பர் 07, 2007

தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களே - வாருங்கள்

இந்தியாவில் என்று தகவல் தொழில் நுட்பப் பொருட்கள் உருவாக்கி விற்கும் துறை தளைக்கும்?

"இந்தியர்கள் எப்போதும் வெளி நாடுகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைப் பயன்படுத்த மட்டும் செய்தால் போதாது. உள்ளூரிலேயே புதிய கருத்துக்கள் உருவாக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் இந்திய பொருளாதாரமும் தொழிலும் முன்னேற முடியும்.

India has to become a bigger investor in ideas, and that's research and development, creation of the next generation of ideas to move its economy, its industry forward. You can't continue to take ideas generated from other parts of the world and bring them to India. You have to start creating your own ideas. "

-- இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரேக் பெரட்.

'நம்ம ஊரில் அரசியல் சரியில்லை, அரசாங்கம் சரியில்லை. எல்லாம் சரியான பிறகு இங்கு வேலை பார்க்கிறோம். அது வரை, மேலை நாடுகளுக்குப் போய் எமது திறமைகளை, எமது சமூகம் அளித்த திறமைகளை அந்த சமூகங்களுக்கு பணி புரிய பயன்படுத்தி பொருள் ஈட்டுகிறோம். என்ன செய்து கடனைத் தீர்ப்பது என்று முடிந்த அளவு இந்தியாவில் இயங்கும் தன்னார்வலர் நிறுவனங்களுக்கு நன்கொடைகள் கொடுத்தும், உதவி செய்தும் தாகத்தைத் தணித்துக் கொள்கிறோம்.'

ஊர் கூடி.. 1 - காலக்கண்ணாடி
டாலர்கள் வேண்டாம், உங்கள் திறமை வேண்டும

10 கருத்துகள்:

kannan சொன்னது…

Hi Siva,

This is a very bad comment on india.But the Day will come when india will be recognised as a leader in ideas too as we were in the past.That days is not too far.

regs,
kannan viswagandhi
www.kannanviswagandhi.com
www.urcoolchoice.com

பெயரில்லா சொன்னது…

Did the intel chip manufactured not say that the red-tape by government blocked his entry and he chose china instead to setup his factory ?

மா சிவகுமார் சொன்னது…

//But the Day will come when india will be recognised as a leader in ideas too //

Thanks for the sentiment, Kannan. Let each of us do our bit for that to happen.

King of Indus,

//the red-tape by government blocked his entry and he chose china instead to setup his factory//

What does that to do with our inability to generate home grown ideas? The red tape stops ideas from flowing?

anbudan,
Sivakumar

Unknown சொன்னது…

//"இந்தியர்கள் எப்போதும் வெளி நாடுகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைப் பயன்படுத்த மட்டும் செய்தால் போதாது. உள்ளூரிலேயே புதிய கருத்துக்கள் உருவாக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் இந்திய பொருளாதாரமும் தொழிலும் முன்னேற முடியும்.//

உள்ளூர் மக்களுக்கு என்ன தேவை என்று சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான கண்டுபிடிப்புகள் வளரும்.

மா சிவகுமார் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் கல்வெட்டு. நம்முடைய பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றால்தான் புதிய கருத்துக்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். அப்படித்தான் அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கிறார்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

MSATHIA சொன்னது…

சிவா,
நல்ல தொகுப்பு.
மனிதவளத்தில் எங்கு கோட்டை விடுகிறோம் என்று தொடர்புடைய என் கருத்துகள் இங்கு

மீட்டர்பாலா சொன்னது…

"வெளிநாட்டு அறிவு செல்வம்" இதில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பங்கும் கணிசமா இருக்கத்தான் செய்கிறது என்பதை அவர் மறுத்தாலும், பில்கேட்ஸும், லேரி எலிசனும் கண்டிப்பா மறுக்க மாட்டர்கள். மென்பொருள் அறிவில் நம்மவர்கள் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது என் கருத்து.

Unknown சொன்னது…

// மென்பொருள் அறிவில் நம்மவர்கள் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது என் கருத்து.//

வெளிநாடோ அல்லது உள்நாடோ நம்மவர்கள் மென்பொருள் துறையில் இதுவரை கண்டுபிடித்துள்ள முக்கிய OS/language/... etc please

உண்மையில் தெரிந்து கொள்ளவே.

மீட்டர்பாலா சொன்னது…

ஐயா, America தவிர மற்ற நாட்டில் எழுதப்பட்ட OS/Language/...etc. எத்தனை? அதுக்காக அந்த நாடுகள்ள அறிவாளிகளே இல்லன்னு அர்த்தமா?

இன்ன‌க்கி இருக்குற‌ OS/Language ம‌ற்றும் ப‌ல‌ முத‌ல்ல‌ உருவாக்குன‌வ‌ங்க‌ Americans தான்னு எல்லாருக்கும் தெரியும். அதே ச‌ம‌ய‌த்துல‌ இன்ன‌க்கி அந்த‌ products இவ்வ‌ளோ பெருசா வ‌ள‌ந்து இருக்கிற‌துக்கு இந்திய‌ர்க‌ளின் ப‌ங்கு மிக‌ பெரிய‌து. இதை அந்த பில் கேட்ஸ் போன்ற பெரிய‌ ஜாம்ப‌வான்க‌ளே ஒத்துகொண்டுள்ளார்க‌ள். (அவர் ஒன்னும் சந்திரபாபு நாயிடுவொட கிளாகஸ்மேட் இல்லீங்கன்னா அடிக்கடி ஹைதிராபாத் வந்து காபி சாப்பிட‌.)

http://www.stephen-knapp.com/indian_contributions_to_american_progress.htm


http://www.littleindia.com/news/142/ARTICLE/1083/2006-04-12.html

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சத்தியா, நல்ல இடுகைக்கு. மென்பொருள் துறையில் கானல் நீரைத் துரத்துவது போல அதிகச் சம்பளத்தையே துரத்திக் கொண்டிருப்பது நல்ல பலனைத் தராதுதான். மற்ற காரணிகளையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

மீட்டர் பாலா,

//http://www.stephen-knapp.com/indian_contributions_to_american_progress.htm//

இந்திய முன்னேற்றத்துக்கும் பயன்பட வேண்டும் அல்லவா. பில்கேட்சின், ஸ்டீவ் ஜாப்சின் திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியர்களுக்கு பங்கிருக்கலாம். ஒரிஜினலாக எத்தனை திட்டங்கள் நாம் உருவாக்கியுள்ளோம் என்பதுதான் கேள்வி

அன்புடன்,
மா சிவகுமார்