- இந்தியாவில் அரசியல் பொருளாதரச் சூழல் சரியில்லை என்று 1990களுக்கு முன்பு அமெரிக்காவுக்குப் போனவர்கள் ஒரு வகை.
- 1990களுக்குப் பிறகு மென்பொருள் துறையில் பணி புரிய அமெரிக்காவுக்குப் போனவர்கள் அடுத்த வகை.
- கடந்த சில ஆண்டுகளாகப் பெருகி வரும் இந்தியாவிலிருந்தே அமெரிக்காவுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுப்பவர்கள் மூன்றாவது வகை.
அந்த பலன் அமெரிக்க சமூகத்துக்கு எவ்வளவு என்று நினைத்துப் பாருங்கள்.
- 'அதே வேலையை, அதே மனிதர்கள் இந்தியாவில் செய்தால் அதே பலன் கிடைக்காது, இங்கு சூழல்கள் சரியில்லை, அரசாங்கம் சரியில்லை'
- 'இந்தச் சூழலை சரி செய்து கொண்டிருப்பது என் வேலை இல்லை. எனக்குத் தெரிந்த வேலையை செம்மையாகச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் இடத்துக்குப் போவது என் விருப்பம்'
என்பது தனிமனித உரிமை.
எங்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கு திறமையையும், பணத்தையும் முதலீடு செய்வோம் என்பது மனித குலத்தின் குடிமக்களாக வாழுவதற்கு அடிப்படை. நாட்டுப் பற்று என்று பேசும் சொந்தம் அப்படி இருப்பவர்களுக்கு கிடையாதுதான்.
'எங்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறதோ, எங்கு பொருள் ஈட்ட முடியுமோ அங்கு எங்கள் வாழ்க்கையைச் செலுத்துகிறோம் என்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் வழியில் போகிறோம் ' என்று சொல்லலாம்.
நம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள திரைகடலோடியும் திரவியம் தேடுவது சரியாக இருக்கலாம். ஆனால், நம்மை வளர்த்த, ஆளாக்கிய சமூகத்திற்கான கடனை மறந்து விடக் கூடாது. ஆண்டு தோறும் தர்ம காரியங்களுக்குப் பணம் கொடுப்பதாலோ, சென்ற இடத்தில் தமிழ்க் கோயில் கட்டுவதாலோ அந்த கடன் தீர்ந்து விடாது. உங்கள் திறமையில் ஒரு பகுதியை இந்தியப் பொருளாதாரத்துக்குச் சமூகத்துக்குப் பலனளிக்கும் வேலைகளில் செலவிடுங்கள்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான சேவைகளைச் செய்ய முடிகிற இந்த கால கட்டத்தில் அமெரிக்காவில் இருந்து கொண்டு நமது சமூகத்துக்குத் தேவையான திட்டப் பணிகளில் ஈடுபடுவது நிச்சயமாக முடியும். இந்திய இளைஞர்களின் திறமை BPO மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவது போல, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய அறிஞர்களின் திறமை மறு திசையில் நமது சமூகத்துக்கு வந்து சேர வேண்டும். ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒரு சில மணி நேரம் செலவளித்தால் கூட, பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்து விடலாம்.
மென்பொருள் நிறுவனங்களில் BPO நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களும் தமது நேரத்தில் ஒரு பகுதியையாவது நமது சமூகத்துக்குப் பயன்படும் வகையில் செலவிட்டு, தமது அறிவுத் திறமையையும் ஆற்றலையும் தம்மை வளர்த்த சமூகத்துக்கு தர முயற்சிக்கலாம்.
9 கருத்துகள்:
சரியா சொல்லி இருக்கிங்க சிவா.
எப்படி செய்யலாம் என்றும் சொன்னால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
நன்றி.
எப்படின்னு கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?
அனானி, மாதயன்,
அமெரிக்க நிறுவனங்களின் அலுவலகப் பணிகளை இணையம் மூலம் இந்தியாவில் நடத்திக் கொள்வதைப் போல, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமது திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி தமது துறை தொடர்பான திட்டப் பணிகளை ஆரம்பிக்கலாம். தமிழ்நாட்டுக்கே வந்து பணி புரியும் சூழ்நிலை இல்லாவிட்டாலும் தொலைவில் இருந்து கொண்டே தமது அனுபவத்தாலும் அறிவுத் திறமையாலும் நம்ம ஊர் வசதிகளைப் பெருக்கும் பணியில் ஈடுபடலாம்.
திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து இப்போது கனடாவில் வசிக்கும் ஒரு மருத்துவர் என்று எடுத்துக் கொள்வோம். வாரத்துக்கு நாற்பது மணி நேரம் அந்த ஊர் மக்களுக்காக பணி புரிந்தால் 10% நேரம் நான்கு மணி நேரம் இணையம் மூலம் அவரது திருநெல்வேலி மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கச் செலவிடலாம். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மருத்துவமனையுடன் ஒப்பந்த ஏற்பாடு செய்து கொண்டு, உள்ளூர் மருத்துவர் மூலமாக இணையத் தொடர்பைப் பயன்படுத்தி திருநெல்வேலி மக்களுக்குத் தனது நேரத்தை அளிக்கலாம். இதற்கு நியாயமான கட்டணம் கூட வசூலித்துக் கொள்ளலாம்.
சொல்ல வந்தது என்னவென்றால், தமது திறமையை வளர்த்து ஆளாக்கிய ஊருக்கும் பலன் தரவும் பயன்படுத்த முன் வர வேண்டும் என்பதே.
அன்புடன்,
மா சிவகுமார்
pls dont fuel the guilt of indians working abroad ..They have given more ..see the total "free money" flowing into India every year . I think this transalates into spending power and more money into developmental projects (iam not an economist ..but lets take it from here .)
when i say Free money it is "free "money to India.(or ROI on its subsidized education !!!).Because of this government need not think about creating new jobs ..taking care of old people or health ..they can sit aside and watch ..and care about the real needy people.
At least the middle class is better !
to substantiate my views a cut paste from internet on FREE MONEY...
Thanks
Nambi
-----------------------------------
NRI remittances surpass $ 23 b mark
Indians remittances to the country from abroad have soared considerably over the years to touch $23 billion in 2004, according to World Bank statistics.
According the latest Global Development Finance report prepared by the World Bank, India received $17.4 billion in 2003 from the workers living and working in other countries. The latest figures place India much ahead of China and other developing countries like Mexico and Brazil. At the exchange rate that prevailed in 2003, the inward remittances amounted to about Rs 84,000 crore, which was more than double the amount that government collected as income tax during the financial year. The actual remittances may be much higher as flows through informal channels, such as hawala, are not captured in the official statistics but are believed to be quite large, the report points out.
-----------------------------------
////வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான இந்தியர்கள் தமது குடும்பங்களை இந்தியாவிலேயே விட்டு விட்டுப் பணி புரிவதால் தமது வருவாயின் பெரும்பகுதியை (பொருளாதாரச் சூழல் எப்படி இருந்தாலும்) இந்தியாவுக்கு அனுப்பி வந்தார்கள்,///
Guld countries does not permit permanent residence or award citizenship for aliens. hence this situation.
there is phenemenon called "voting with the feet" ; it has been on from time immemorial when people migrated due to persecution, etc.
it is guite natural. FCs, great entrepreuners like Laksmi Mittal emigrate due to better oppurtunities.
and what is the diff is a person works for US or for Indian Co ?
he is working for the best job he can find. i consider myself a citizen of the world and a human being first, before any Indian, Tamilian identity. and free enterprise means free flow of capital, goods and people across borders (in a ideal state)....
அதியமான்,
//i consider myself a citizen of the world and a human being first, before any Indian, Tamilian identity. and free enterprise means free flow of capital, goods and people across borders (in a ideal state)....//
The day a beggar from the streets of Chennai can migrate to USA, you talk about free enterprise. Now only the cream of cream is let in and the our countries are armtwisted to be a market for their products and services.
True free enterprise system is a utopia which can never exist.
anbudan,
Ma Sivakumar
Nambi,
I am not disputing the facts you state. I feel that contributing directly to our society will be more beneficial than remittances. It is an individual choice, anyway.
anbudan,
Ma Sivakumar
//The day a beggar from the streets of Chennai can migrate to USA, you talk about free enterprise.//
:-)))))
கருத்துரையிடுக