புதன், அக்டோபர் 17, 2007

நாற்பது ஆண்டுகளில் நல்ல முதல்வர் - 2

"அறிஞர் அண்ணா குறுகிய காலம்தான் ஆட்சி செய்தார். அதனால் அவரது உண்மையான திறமையை எடை போட முடியாது. "

"கலைஞரும் சரி, செல்வி ஜெயலலிதாவும் சரி, முன்பு எம்ஜிஆரும் சரி, தனது ஆட்சி அண்ணாவின் ஆட்சி என்றே சொன்னார்கள்"

'கலைஞர் தமிழுக்குக் காப்பு. அதனால் அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது தமிழர் நலன்கள் ஓங்குகின்றன. அவர் ஆட்சியில் வந்து விட்டால் குறுகிய காலத் திட்டங்கள் நிறைவேறினாலும் நீண்ட கால நோக்கில் தமிழர் கனவுகளுக்குப் பின்னடைவுதான். ' இது என்னுடைய மூளை அலை.

அதற்காக ஜெயலலிதாதான் மாற்று என்னும் போது வெறுத்துப் போகிறது.

உங்கள் கருத்து என்ன? வலது பக்கம் ஒரு தேர்ந்தெடுங்கள். ஒருவருக்கு ஒரு வாக்குதான். ஆனால், ஒரே முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு செய்து கொள்ளலாம்.

9 கருத்துகள்:

நாஞ்சிலான் சொன்னது…

//குறுகிய காலத் திட்டங்கள் நிறைவேறினாலும் நீண்ட கால நோக்கில் தமிழர் கனவுகளுக்குப் பின்னடைவுதான்.//

புரியவில்லையே. கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்.

மா சிவகுமார் சொன்னது…

//புரியவில்லையே. கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்.//

தனிப்பதிவாகப் போடுகிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்

இரண்டாம் சொக்கன்...! சொன்னது…

இந்த நாலுபேரில் கேட்டீர்களானால் நிச்சயமாக கலைஞர்தான் சிறந்த முதல்வர்.

முரசொலி மாறன் தற்போது இல்லாது போனது கலைஞருக்கும் தமிழகத்துக்கும் பெரும் பின்னடைவு என்றே கருதுகிறேன்.

லக்கிலுக் சொன்னது…

முந்தையப் பதிவு போட்டபோதே கலைஞருக்கு அதிக வாக்குகள் கிடைத்து விட்டதால் இந்த இரண்டாவது பதிவு போட்டிருக்கிறீர்களா மாசி?

ராஜ நடராஜன் சொன்னது…

நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவனென்றாலும் அனுபவக் கோர்வைகளில் தரம் பிரிக்கும் போது கலைஞர்தான்.கூடவே தேர்தல் நேரத்து சந்தர்ப்பவாதம்,இலங்கைப்பிரச்சினையில் மதில்மேல் பூனை நிலை போன்றவைகளுக்கு மார்க்கை குறைத்துக் கொள்ளவும்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி இரண்டாம் சொக்கன்.

லக்கி,

//முந்தையப் பதிவு போட்டபோதே கலைஞருக்கு அதிக வாக்குகள் கிடைத்து விட்டதால் இந்த இரண்டாவது பதிவு போட்டிருக்கிறீர்களா மாசி?//

அது ஒரு முக்கிய காரணம்! முதல் முறை தவற விட்டவர்களும் வாக்களிக்கட்டுமே என்று நல்ல எண்ணமும் உண்டு :-)

என்ன இருந்தாலும் படிச்ச மக்களிடையே கலைஞருக்கு மவுசு அதிகம் ;-)

வாங்க நட்டு,

//கூடவே தேர்தல் நேரத்து சந்தர்ப்பவாதம்,இலங்கைப்பிரச்சினையில் மதில்மேல் பூனை நிலை போன்றவைகளுக்கு மார்க்கை குறைத்துக் கொள்ளவும்.//

அப்படியே நீளமா பட்டியல் போட்டுக் கொடுங்களேன் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

None of the CMs were worth mentioning. Even Anna used cheap populisim (roopaykku randu padi arisi) which floursihed later making beggers out of voters who sold their votes without thinking.
JJ has a much better economic vision in spite of her other demerits and she balanced the budget and reduced deficts and debts to a great extent. the long term effects of govt debt and deficts will be felt only slowly..

My vote is for Rajaji, a great statesman and visionary, who was much mis-understood for his kulakkalvi thittam which should have been named thozirkalvil thittam. his views about economics and govt spending are being adopted now. he was far ahead of his peers and had great moral courage to stand for what he felt was right. he is still not understood correctly by most people, who see him only as a cunning brahmin with narrow castesist agenda (which is not true).

and Kamaraj gets the second rank for his able leadership. only he became a power broker later and installed Indira Gandhi over many other able leaders for purely oppurtunistic reasons in 1966. He later regretted his decisons and paid a bitter price for his power politics. he died a disillusioned, broken and unhappy man.

மணிப்பக்கம் சொன்னது…

சும்மாவா தமிழக மக்கள், பல்லாரி வெங்காயம் எல்லாம்! கருமம் கருமம். இனிமேல் இது போன்று ஓட்டெடுப்பு வெங்காயம் எல்லாம் வேண்டாம் அய்யா!

மா சிவகுமார் சொன்னது…

பார்த்தீங்களே சிவாஜி தி பாஸ், நம்ம புரட்சித் தலைவருக்கு குறைவாத்தான் வாக்குகள் :-)

அன்புடன்,
மா சிவகுமார்