ஞாயிறு, ஜனவரி 25, 2009

கண்டனத்துக்குரிய டோண்டு ராகவன்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வலைப்பதிவை ஆரம்பித்ததும் ஆரம்ப இடுகைகளில் ஒன்று, டோண்டு ராகவனின் சாதி அமைப்பைத் தூக்கிப்பிடிக்கும் போக்கைக் கண்டிப்பதாக இருந்தது.

இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்ட அவரது கருத்தாக்கங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். டூண்டு என்ற பெயரில் அவரைத் தாக்கி அடக்கி வைத்திருந்தவரின் முறைகள்தான் சரியோ என்று தோன்றுகிறது.

குமுதம் என்ற வருணாசிரம ஆதரவுப் பத்திரிகையில் வெளியிடப்படும் கட்டுரைகளைத் தமக்கு தூண்டுதலாக அவர் சொல்வதில் இருக்கும் அவலம் நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் நோய்களின் முதல்.

டோண்டுவின் கருத்துக்களை தேவையில்லாமல் இணைத்து விளம்பரம் கொடுப்பதாக இருந்தாலும், கசப்புடனேயே இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

6 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

நான் உங்களது முந்தைய இடுகையில் இட்ட பின்னூட்டங்களின் தேவை இன்னும் மாறவில்லை. அவை அதிகரித்தே உள்ளன.

குமுதம் கட்டுரை இட்டதை நீங்கள் எதிர்த்தால், பல்கலை கழகங்களில் சாதி அமைப்பு பற்றி பல ஆய்வுகட்டுரைகள் வருகின்றன, அவற்றை எழுதியவர்களுக்கு டாக்டரேட் பட்டம் தரப்படுகிறது, அதற்கெல்லாம் கூட நீங்கள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்.

நான் எனது பிள்ளைமார் சமூகம் பற்றிய பதிவில் குறிப்பிட்டதை இங்கு மீண்டும் உங்களது இப்பதிவுக்கான பின்னூட்டமாக இடுகிறேன்.

“பெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம், ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது. பதிவுக்கு போகும் முன்னால் சில வார்த்தைகள். முதலில் இந்த வரிசையை துவக்கக் காரணமே எனது கேள்வி பதில் பதிவுக்கு செட்டியார் சமூகம் பற்றிய வந்த சில கேள்விகளால்தான். அவற்றுக்கு பதில் கூற இணையத்தை நாடியதில் பல விஷயங்கள் தெரிய வந்தன. அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அக்கேள்விகளுக்கென தனி பதிவே போட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு.

நாடார்களை நான் மிகவும் அட்மைர் செய்கிறேன். தமது சொந்த முயற்சியால் முன்னுக்கு அவர் வந்ததது யூதர்கள் 2000 ஆண்டு காலம் போராடி யூத நாட்டை அடைந்ததற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல எனது எனது அசைக்க முடியாத கருத்து. ஆகவே அவர்கள் பற்றியும் பதிவு வந்தது.

இந்த இரு பதிவுகளுக்குப் பிறகு ஒரு மாதிரி வேகம் வந்து விட்டது. இந்த அவசர உலகில் ஒரு ஒழுங்குடன் நிலைத்து நிற்பவை என்பன சிலவே. அவற்றில் நமது பாரம்பரியமும் ஒன்று. இயற்கையில் வேறுபாடுகள் அனேகம் உண்டு. எல்லாவற்றையும் ரோடு போடுவது போல சமன்படுத்துவது என்னும் செயல்பாட்டில் பல பாரம்பரியங்கள் அழியும் அபாயம் எப்போதுமே தொக்கி நிற்கிறது. அவற்றை கட்டிக் காப்பதில் பல சாதி சமூகங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த வரிசையை இப்போதைக்கு விரிவுபடுத்தி மேலும் சில சாதிகளைப் பற்றி எழுத நினைக்கிறேன். தத்தம் சாதிகள் பற்றி அபூர்வ தகவல்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பதிவர்கள் அவற்றை எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் கூகளண்ணனை நாடுவேன்”. பார்க்க: http://dondu.blogspot.com/2009/01/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிங். செயகுமார். சொன்னது…

:-)

சென்ஷி சொன்னது…

//இந்த அவசர உலகில் ஒரு ஒழுங்குடன் நிலைத்து நிற்பவை என்பன சிலவே. அவற்றில் நமது பாரம்பரியமும் ஒன்று.//

Haa. haa.. haa..

பெயரில்லா சொன்னது…

Hi Siva sir,

Please don't waste your time by referring these useless things.

மா சிவகுமார் சொன்னது…

டோண்டு சார்,

உங்கள் வயதுக்கும் அனுபவங்களுக்கும் மட்டும் எனது மரியாதை எப்போதும் உண்டு. உங்கள் சமூக வாதங்களைக் கேட்டு மிகவும் வருத்தமடைகிறேன். 'அப்படி என்னதான் நாம் தவறாக சொல்கிறோம்' என்று சில நிமிடங்களாவது சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் மகிழ்வேன்.

சிங் செயகுமார், சென்ஷி, அனானி,

தேவையில்லாமல் இதில் நேரம் செலவிழக்கவோ, புழுதியைக் கிளறவோ வேண்டாம் என்பதை முழுவதும் உணர்கிறேன்.
http://donotfeedtheenergybeast.com/

அன்புடன்,
மா சிவகுமார்

We The People சொன்னது…

//தேவையில்லாமல் இதில் நேரம் செலவிழக்கவோ, புழுதியைக் கிளறவோ வேண்டாம் என்பதை முழுவதும் உணர்கிறேன்.
http://donotfeedtheenergybeast.com///

வழிமொழிகிறேன் :(