புதன், ஏப்ரல் 19, 2006

டோண்டு ராகவ அய்யங்கார் அவர்களுக்கு

யாருடைய சாதியையும் தெரிந்து கொள்ளவோ, அப்படித்தெரிந்தாலும் அதைப் பொருட்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் நான் உங்கள் பொருட்டு ஒரு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்கிறேன்.

தன்னுடைய சாதி இன்னது, அதில் தான் பெருமை கொள்கிறேன் என்று கூறும் யாருமே பரிதாபத்துக்கும் கண்டனத்துக்கும் உரியவர்கள். அய்யங்கார் என்பது நீங்கள் 10 வருடம் படித்துப் பெற்ற பட்டமா என்ன (வேதம் புதிது வசனம்)? அதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது? சாதியை சொல்லிச் சொல்லியே எம்மை ஒடுக்கிய சமூகத்துக்கு முன் என் உறுதியை காட்டுவதுதான் இப்படிச் சொல்வது என்கிறீர்களே இதே மாதிரி ஒவ்வொருவரும் தமது அழுக்குப் பக்கங்களை வெளியே விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டால், இணைய உலகும், வெளி உலகும் நாற்றம் அடிக்க ஆரம்பித்து விடும்.

தன்னுடைய அடையாளத்தையும், பாரம்பரியத்தையும் ஒவ்வொருவரும் பேற்றிப் பேணி பெருமை கொள்வது இயற்கைதான். ஆனால் மெத்தப் படித்து, இந்த இந்திய திருநாட்டின் முக்கிய நகரங்களில் பல ஆண்டுகள் பணி புரிந்து விட்ட உங்களுக்கு இந்த சாதி அடையாளம் என்ற பேதிக்குறிகள் புரையோடி விட்ட புற்று நோய், அதை வெட்டி எறிவதை விட வேறு வழி இல்லை என்று இன்னும் புரியாமல் போய் விட்டது என்று வியப்பாக உள்ளது.

'சாதி எல்லாம் அழிந்து விட்டது. இந்த காலத்தில் எங்கே சாதி உள்ளது. பேருந்தில் பக்கத்தில் இருப்பவன் என்ன சாதி என்று கேட்டுக் கொண்டா இருக்கிறோம், இன்னும் சாதி பெயர் சொல்லி ஏன் எம்மை பழிக்கிறீர்கள்' என்று கூறிவதும் சிரிப்புக்குரியது. இந்து நாளிதழில் வெளியாகும் திருமண விளம்பரங்களில் சாதி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுவது நிற்கும்போதுதான் சாதி ஒழிந்து விட்டது என்று ஒப்புக் கொள்ளலாம்.

சாதி எப்போது ஒழியும் என்று தெரியுமா? உன் சாதி என்ன என்று கேட்பவனையும், என் சாதி இன்ன என்று சொல்பவனயும் நாக்கைத் துணித்துத தண்டனை அளிப்போம் என்று இந்தச் சமூகம் துணிந்தால் நடக்கலாம்.

அது வரை சாதி என்ற அடையாளத்தோடு நீங்கள் பிறந்து விட்ட ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆதாயங்களுடன் வாழ்ந்து விட்ட குழுவினருக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பதை விட்டொழியுங்கள்.

14 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

என் சாதியை நான் ஏன் கூற நேர்ந்தது என்பதை நான் பல முறை பல இடங்களில் கூறியாகி விட்டது. அதற்காக "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்ற ஒரு பதிவும் போட்டு அதை மீள் பதிவு கூட செய்தாகி விட்டது. இன்னும் புரியவில்லை என்றால் எப்படி?

அன்புடன் டோண்டு ராகவன் என்றே வழக்கமாகக் கையொப்பமிடும் நான் டோண்டு ராகவையங்கார் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இட்டுள்ளேன். அவற்றையெல்லாம் பார்த்தால் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும், கொல்ல வேண்டும், எல்லா கொடுமைகளுக்கும் பார்ப்பனரே பொறுப்பு என்றப் பொறுப்பில்லாப் பின்னூட்டங்களின் எதிர்வினையாகத்தான் இருக்கும்.

தமிழ் இணைய உலகில் பார்ப்பன எதிர்ப்பு என்பதைத் தன் பிறப்புரிமையாகக் கொண்டு உளறுபவர்களுக்கு என்னுடைய பதில் இதுவே. மற்றப்படி பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் என்பதை எங்காவது நான் கூறியிருக்கிறேனா என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னதான் நின்று தலைகீழாக நின்றாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதைத் தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள் என்று நான் கூறியது உண்மையாகவே நடப்பதை வைத்துத்தான்.

"இந்து நாளிதழில் வெளியாகும் திருமண விளம்பரங்களில் சாதி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுவது நிற்கும்போதுதான் சாதி ஒழிந்து விட்டது என்று ஒப்புக் கொள்ளலாம்."

ஒன்று செய்யுங்கள். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையென்றால், இம்மாதிரியெல்லாம் விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று உங்கள் பெற்றோரிடம் கூறி விடுங்கள். உங்கள் திருமணம் பெற்றோர்களால் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டதுதான் என்றால், அவர்கள் எந்த ஜாதியிலிருந்து பெண்ணைத் தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

அதர் ஆப்ஷனையும் அனானி ஆப்ஷனையும் வைத்திருக்கும் உங்கள் பதிவில் உண்மையா டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

டோண்டு - பிடிவாதம் பிடித்த கிழவன்
போலி டோண்டு - பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற போர்வையில் (safe and secure) இயங்கும் ஆண்மையில்லாதவன்
நீ - ஜால்ரா

உங்கள் மூவரின் 'குறி'யையும் கல்லில் வைத்து குறுக்கு வெட்டாக வெட்டி, காயடிக்க வேண்டும்.

போய் உருப்படியான வேலையை பாருங்கள். வந்துவிட்டார் ஜால்ரா அடிக்க....

லக்கிலுக் சொன்னது…

இணைய உலகு ஒரு மர்ம தேசம்... அதில் ஜாதியின் பெயரால் நம்மை நாமே அடையாளம் காட்டிக் கொள்வது மிகப் பெரிய தவறு தான்... அதுபோல் காட்டிக் கொள்வதால் நமக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை... தீமை தான் அதிகம்...

கலைஞர் தன்னை ஒரு நாத்திகராக பெருமையாக சொல்லிக் கொள்வதைப் போல தான் இது.... அதனால் அவருக்கு நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்....

பெயரில்லா சொன்னது…

மா சிவகுமார.

தங்களது முந்தைய பதிவில் ஒரு அனானி நீங்கள் சன் குழுமத்தை பற்றி கூறிய உடன் உங்களை முத்திறை குத்தியதை பார்தீர்களா, இது மாதிரி முகம் இல்லாமல் முத்திறை குத்துபவர்கள் மத்தியில் நாம் காலத்தை நகர்த்துகிறோம் என்பதை நினைத்து பார்த்து, இனி மற்றவரை சுயமாக செயல் பட இந்த மாதிரி பதிவுகளை விட்டு நல்ல பயனுல்ல பதிவுகளாக இட எனது வாழ்த்துக்கள்.

ராஜன்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

டோண்டுவிற்கு ஒரு வேண்டுகோள்

"ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"

வலைப் பதிவாளர் சிவக்குமாருக்கு இந்த கருத்தை வழியுறுத்த முயன்றதற்காக என்னுடய வாழ்த்துக்கள்.

டோண்டு அவர்களின் அறுபதாம் ஆண்டு பதிவில் வாழ்த்து தெரிவதற்காக என்னுடய பதிவில் போலி டோண்டு ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட்டு இருந்தார். அவ்வாறு ஆபாசமான வார்த்தைகளை பயன் படுத்தாமல் ஆரோக்கியமான பதிவாக வெளியிட்டுள்ளதர்காகவும் என்னுடய வாழ்த்துக்கள்.

என்னை இதை எழுத தூண்டியது டோண்டு அவர்கள் தங்களுக்கு அளித்த பின்னூட்டம்தான்.

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

இதோடு நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை மேலும்

"இவ்வாறு கூறியது நடப்பதை வைத்துத்தான்"

என்று கூறி இருப்பது

திரு டோண்டு அவர்களின் நான் தான் உயர்ந்தவன் என் ஜாதிதான் உயர்ந்தது என்ற மனோபாவத்தைதான் காட்டுகிறது.

என்னை உண்மையாக புண் படுத்தியது என்னவெனில் இது போன்ற கருத்துக்கள் தமிழ்மணம் போன்ற ஒரு நல்ல முயற்சி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் கூறப் பட்டு இருப்பதுதான்.

இது போன்ற கருத்துக்கள் இந்த நல்ல முயற்சியை தவறான விசயங்களில் திசை திருப்பி விட்டு விடுகிறது.

பாருங்களேன் விவாதிக்க எவ்வளவோ தலைப்புகள் உள்ள நிலையில் நாம் இன்னும் ஜாதியைப் பற்றி விவாதித்து வருகிறோம்.

டோண்டு அவர்களே "பார்பன எதிர்ப்பு" என்று சொல்கிறீர்களே ஏன் பல ஜாதிகள் உள்ள நிலையிலும் "பார்பன எதிர்ப்பு" மட்டும் தோன்றியது என்று எண்ணுகிறீர்கள் உங்கள் வார்த்தைகளை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

இது போன்ற ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களின் ஆணவம்தான் தீண்டாமை, கோயிலுக்குள் அனுமதி மறுத்தல் போன்ற பல கொடுமையான விசயங்களுக்கு மூல காரணம் .

"பார்ப்பன எதிர்ப்பு" ஏனெனில் இது போன்ற கொடுமைகளுக்கு 90 சதவீதம் அவர்களே காரணமாக இருந்துதான்.

மேலும் அடக்கி ஒடுக்க பட்ட காரணங்களினால் மட்டுமேதான் சில காலம் முன் வரை சில கூறிப்பட்ட பிரிவினரே எல்லா இடங்களிலும் மேலே வர காரணமாக இருந்ததே ஒழிய வேறு காரணங்கள் இல்லை.

உதாரணமாக ஈஈT எடுத்துக் கொள்ளுங்கள் நான் படிக்கும் காலங்களில் ஈஈTயில் சேர்வது எப்படி என்பது என்பது எனக்கு தெரியாது ஆனால் சில பிரிவை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற விசயங்கள் தெளிவாக தெரிந்து இருந்ததால் அவர்களால் அதில் சுலபமாக நுழைய முடிந்தது.

ஆனால் இன்று மாறி வரும் காலம் விழிப்புணர்வு முன்பு இருந்ததை விட பல மடங்கு உள்ளது, இன்றைய நிலையில்

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் முன்னேறி விடுவார்கள் போன்ற ஆணவமான கருத்துக்கள் ஜாதி மதம் இல்லை என்று எண்ணும் என்னைப் போன்ற பலருடைய மனதை புண்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் ஒரு அருமையான முயற்சியான தமிழ்மணம் போன்றதை ஆரோக்கியமான விசயங்களில் இருந்து திசை திருப்பி விடுகிறது.

ஆகையால் தயை கூர்ந்து இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

doondu சொன்னது…

மதம் என்பது என்னைப் பொருத்தவரையில் இறைவனைச் சென்றடையும் மார்க்கம். அவரவர்களுக்குப் பிடித்த மார்க்கத்தினில் இறைவனைச் சென்றடைகிறார்கள். இந்துவும் இஸ்லாமும் கிறிஸ்துவர்களும் மற்ற மதத்தினரும் தமக்குப் பிடித்த வழிகளில் தத்தமது இறைவனிடம் செல்கின்றனர். நமக்குப் பிடித்த வழிகளில் நாம் இறைவனிடம் செல்வது தவறு ஆகாது. நம் மதம் குறித்த நல்ல கருத்துக்களை பரப்புவதில்கூட தவறு இல்லை. ஆனால் மற்ற மதங்களைக் கேவலமாக சித்தரித்தல் ஒருபோதும் கூடாது. இதுதான் மிகவும் தவறான செயல். நமக்குப் பிடிக்காதது மற்றவர்களுக்குப் பிடித்து இருக்கலாம். நம் பார்வையில் தவறு என்று நினைப்பது அடுத்தவர் பார்வையில் சரியாக இருக்க வாய்ப்புண்டு. எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.

நான் எழுதிய சில கருத்துக்களால் சிலர் புண்பட்டது உண்மை. அவ்வாறு புண்பட்டவர்கள் ஜாதியை வளர்த்த பிராமணர்கள். எந்த இஸ்லாமியராவது என்னால் பாதிக்கப் பட்டாரா? எந்த கிறிஸ்துவராவது என்மேல் கோபம் கொண்டிருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? எந்த புத்த மதத்தினராவது என்னால் பாதிப்புக் குள்ளானார்களா? பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.

எனது ஜாதி மட்டுமே இந்த உலகத்தில் பெரிய ஜாதி என்று மார்தட்டியவர்கள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது விஞ்ஞான யுகம். 21ம் நூற்றாண்டு. நிலவிலும் சந்திரனிலும் செவ்வாயிலும் காலடி எடுத்து வைத்து வீடு கட்டலாமா, காலிமனை விற்பனை செய்யலாமா என ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது நான் அய்யங்கார் என்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் நான் பூணூல், குடுமி வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் டோண்டு சொன்னதும் அதற்கு பல பார்ப்பனர்களின் ஆதரவு பின்னூட்டமும் எங்களை சினம் கொள்ள வைத்தது. பல முறை நாங்களும் சொல்லிப் பார்த்தோம். சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளின் கடைசி முயற்சியாகத்தன் எங்கள் தாக்குதல் தீவிரமானதே தவிர எடுத்தவுடன் கவிழ்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தை அல்ல!

இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாக பிரியாமல் அனைவரும் ஒன்றாக இருந்து இஸ்லாமியம் பேணுகின்றனர். ஜியா என்றும் சன்னி என்றும் நமது நட்டைப் பொருத்தவரையில் சண்டை ஏற்பட்டதில்லை. அதேபோல கிறிஸ்துவர்களுக்குள்ளும் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்டு எனவும் பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொண்டு நான் பார்த்தது இல்லை.

ஆனால் இந்த இந்து மதத்தில் மட்டும் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிறப்பால் நீ தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். பிறக்கும் குழந்தை தெய்வத்திற்கு சமமானது. எல்லாக் குழந்தையும் தெய்வ. அப்படி இருக்கும்போது தலித் வீட்டில் பிறக்கும் குழந்தையும் அய்யங்கார் வீட்டில் பிறக்கும் குழந்தையும் ஒன்றேதான். ஜாதியை அரசர்கள் காலத்தில் முதலில் அறிமுகப்படுத்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஆரியர்களாக வந்த பார்ப்பனர்கள்தான். இதனை பலரும் எழுதி உள்ளனர். வரலாற்றில் தகுந்த சான்றுகள் உண்டு. ஜாதியை வளர்த்தவர்கள் தலித்தோ தாழ்த்தப்பட்டவரோ இல்லை.

இங்கே டோண்டு என்ற பெயரில் எழுதும் கிழ மிருகத்துக்கு சோ என்ற பார்ப்பன பத்திரிக்கையாளனைப் பிடிக்குமாம். சோ பற்றி முத்து(தமிழினி) முதல் தங்கமணி, கறுப்பு வரை எழுதி இருக்கின்றனர். டோண்டுவுக்கு ராஜாஜியை ரொம்பப் பிடிக்குமாம். ராஜாஜியின் குலக்கல்விமுறை பெரும் கண்டனத்துக்கு உள்ளானதை பல தோழர்களும் அறிவீர்கள்.

டோண்டுவுக்கு இஸ்ரேல் பிடிக்குமாம். அதனால் பாலஸ்தீனத்தை வெறுக்கிறாராம். ஏன் இஸ்ரேலைப் பிடிக்கிறது என்று கேட்பவர்களுக்கு தகுந்த பதில் இல்லை. பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடு என்ற ஒரே ஒரு விஷயத்தினால் மட்டுமே டோண்டுவுக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது! தவிர டோண்டு போன்ற பல பார்ப்பனர்களுக்கும் அமெரிக்காவைப் பிடித்து இருப்பதும் ஒரு காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் நண்பன் என்பதால் இவருக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது.

இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது. இனிமேல் அவர்கள் அமெரிக்கா என் தாய்நாடு என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள். அமெரிக்காவில் வேலை, வசதி என்றால் தம் தாய்நாட்டுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் உண்மை.

மா சிவகுமார் சொன்னது…

"என்னதான் நின்று தலைகீழாக நின்றாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதைத் தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள் என்று நான் கூறியது உண்மையாகவே நடப்பதை வைத்துத்தான்."

ஐயா வணக்கம்.

இப்படி சொல்லிக் கொண்டு யாராவது முன்னேறி விட்டதாக நினைத்தால் அது முன்னேற்றம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

Santhosh சொன்னது…

சிவா,
நல்ல பதிவு. சிலரை செல்லித்திருத்த முடியாது. போலி டோண்டு பிரச்சனை ஒழிந்த நிலையில் தன்னுடைய ஜாதிய பதிவுகளை மீள் பதிவு என்ற பெயரில் போட்டு பிரச்சனைகளுக்கு வித்திடுள்ளார் பார்க்கலாம் எங்கு போயி முடிகிறது இது என்று. சில பேருக்கு எப்பொழுது தன்னை அடுத்தவர்கள் கவனிக்க வேண்டும் என்ற மனப்பான்மை. அது எப்பொழுதாவது இல்லை என்று படுகிற பொழுது உடனே ஏதாவது ஒன்று செய்து அடுத்தவர்களின் கவனத்தை கவர்ந்து விடுவார்கள்.

பெயரில்லா சொன்னது…

நான் சந்தோஷ் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். டோண்டு தன்னை பலர் கவனிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்பவர் என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார். போலி டோண்டு இவரை எதிர்ப்பதால் பலரையும் கவனிக்க வைத்தவர். ஏறக்குறைய இவருக்கும் அதே நோய் தான். ஏறக்குறைய இதே முறையை தான் இந்த கட்டுரையாளனும் கையாண்டு இருக்கிறார். இந்த மூவரும் இந்த உலகத்தில் இருந்து eliminate செய்யப்பட வேண்டியவர்கள். குமரன் போன்றவர்கள் இங்கு வந்து செய்வது வெட்டி விவாதம். அவனவன் குண்டியை முதலில் கழுவிக் கொள்வோம் அடுத்தவன் குண்டியில் பீ ஒட்டியிருக்கிறது என்று சொல்லும் முன்.

இரண்டாவது பின்னூட்டமிட்ட அதே அனானிமஸ் தான் இந்த பின்னூட்டத்தையும் விட்டது.

குமரன் (Kumaran) சொன்னது…

இந்த விஷயத்தில் என் கருத்து டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் ஆதரவானதன்று. மேலே குமரன் என்ற பெயரில் கருத்து சொல்லியிருப்பவர் நான் அன்று. அவர் செந்தில் குமரன் என்னும் வலைப்பதிவாளர். யாராவது அது நான் என்று எண்ணியிருந்தால் அந்த குழப்பத்தை நீக்குவதற்காக இந்தப் பின்னூட்டம்.

dondu(#11168674346665545885) சொன்னது…

மா. சிவகுமார் அவர்களே,

போலி டோண்டு அனானியாகவும் doondu வாகவும் பலமுறை பின்னூட்டமிட்டுச் சென்றுள்ளான்.

முதலில் உங்கள் பாதுகாப்பைப் பார்த்துக் கொள்ளவும். பிறகு மற்றவர்களின் சாதி சார்பைப் பற்றிக் கவலைப்படலாம். மட்டுறுத்தலைச் செயலாற்றவும் மேலும் அனானி மற்றும் அதர் ஆப்ஷனைத் தூக்கினாலே பதிப் பிரச்சினை ஒழியும்.

ஏதோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன். மீதி உங்கள் விருப்பம்.

அதர் ஆப்ஷனையும் அனானி ஆப்ஷனையும் வைத்திருக்கும் உங்கள் பதிவில் உண்மையா டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலசந்தர் கணேசன். சொன்னது…

ஜாதி பெருமை பேசுவதை தவறாக கருதுபவன் நான். ஆனால் தங்கள் ஜாதியின் பெயரால் இழிவுபடுத்த படும் போது அதற்கு எதிர்ப்பு குரலாக அதன் பெருமைகளை கூறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எல்லாரும் திருந்தினால் மட்டுமே இதற்கு தீர்வு. வெறுமனே டோண்டுவையும் போலி டோண்டுவையும் பற்றி பேசுவது பிரச்சினையை வளர்க்க மட்டுமே செய்கிறது. முடிக்க வில்லை. அநேகமாக ஜாதி, மதம் பற்றி இணையத்தில் எழுத கூடாது என்று தடை விதித்தால் எல்லாமே பல வலைபூக்கள் காலியாக இருக்கும்.

சம்பந்தமே இல்லாமல் பல இடங்களில் நாமாக ஆதாரம் இல்லாமல் பல உள்நோக்கங்களை கற்பனை செய்து கொள்கிறோம். உதாரணம் டோண்டு சோவை ஆதரிப்பது பற்றி. அவர் ஜாதியை சேர்ந்தவர்களை எல்லாம் அவர் புறக்கணிக்க வேண்டுமா?

ஜாதி பெருமையை பேசுகிற பதிவுகள், ஜாதியை பற்றி இழிவு செய்கிற பதிவுகள் அனைத்தையும் நாம் சிறிதும் கவனம் செலுத்தாமல் புறக்கணிப்போம். ஏனெனில் ஜாதி என்பது இயற்கையாக வந்த ஒன்று அல்ல. செயற்கையாக முன்னோர்களால் உருவாக்க பட்ட ஒன்று. பள்ளியில் பல்வேறு செக்ஷன் மாணவர்கள் அடித்த்டு கொள்வதை போல ஜாதியின் பெயரால் முட்டி கொள்வதை நிறுத்துவோம்.

ஜாதியின் பெயரால் அநியாயமான முறையில் மக்கள் கொடுமைபடுத்த படுவதை நிறுத்துவோம்.

மா சிவகுமார் சொன்னது…

"முதலில் உங்கள் பாதுகாப்பைப் பார்த்துக் கொள்ளவும். பிறகு மற்றவர்களின் சாதி சார்பைப் பற்றிக் கவலைப்படலாம். மட்டுறுத்தலைச் செயலாற்றவும் மேலும் அனானி மற்றும் அதர் ஆப்ஷனைத் தூக்கினாலே பதிப் பிரச்சினை ஒழியும்."

ஐயா,

எனது பதிப்பில் பதிவோடு தொடர்புடைய எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்தப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். வேண்டாத விளம்பர பதிவுகளை மட்டும் அழித்து விடலாம்.

எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்றுவதற்கான வலுவான காரணம் எதுவும் வந்து விடாது என்று நம்புகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்.

பெயரில்லா சொன்னது…

உயர் திரு டோன்டு ,

//என்னதான் நின்று தலைகீழாக நின்றாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதைத் தடுக்க முடியாது//

தாங்கள் முன்னேற எத்தனை பேரை காலை வாரியிருப்பீர்கள்.