திங்கள், மார்ச் 23, 2009

சனி விட்டது

பல வார பரபரப்புக்குப் பிறகு இந்தியன் பிரிமீயர் லீக் - இரண்டாவது பதிப்பு இந்தியாவில் நடைபெறாது என்று தீர்மானித்து விட்டார்கள். தேர்தல்கள், பாதுகாப்பு கொடுக்க முடியாதது என்று பல காரணங்கள் இருந்தாலும், இந்தச் சனியன் நம்ம ஊரை விட்டு சீக்கிரம் ஒழிந்து போவது எல்லோருக்கும் நல்லது.

வெளிநாட்டில் நடந்தாலும் தொலைக்காட்சி மூலமாக நம்ம வீடுகளின் வரவேற்பறைகளையும் இளைஞர்களையும் மனங்களையும் ஆக்கிரமிக்கப் போவது என்னவோ கசப்பான உண்மை.

மொத்தமாக திரை மூடப் போகும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

5 கருத்துகள்:

KARTHIK சொன்னது…

// வெளிநாட்டில் நடந்தாலும் தொலைக்காட்சி மூலமாக நம்ம வீடுகளின் வரவேற்பறைகளையும் இளைஞர்களையும் மனங்களையும் ஆக்கிரமிக்கப் போவது என்னவோ கசப்பான உண்மை.//

உண்மைதான்.

டிக்கெட் விற்பனையை எடுத்துகிட்டா நம்ம நாட்டுல விற்ரமாதிரி அங்க போகாது.அதனால இவங்க வேற எதாவது நொண்டி சாக்கு சொல்லி திறும்பவும் இந்தியாவுக்கு வந்துருவாங்க.

// "சனி விட்டது"//

இது ஜென்மச்சனி அவ்வளவு சீக்கிரம் விடாது பாருங்க.

கல்வெட்டு சொன்னது…

வியபாரம்...
ஒரு தெருவில் தொழில் நடத்த முடியவில்லை என்றால் அடுத்த தெருவிற்கு போய் கடைவிரிக்கலாம்.

அடுத்த தெருவில் வருமானம் கம்மி என்றால் அடுத்த ஊர்.

ஆட்டம் கொஞ்சம் சுவராசியம் குன்றினால் ரிக்கார்ட் டான்ஸுடன் அடுத்த நாடு.

துளசி கோபால் சொன்னது…

நெசமாவாச் சொல்றீங்க?

ஆஹா....ஆஹா......

thiru சொன்னது…

சீக்கிரம் விடாது போலிருக்கிறது மா.சி.

இந்திய இளைஞர்கள் மனங்களில் கோக், பெப்சி, மிட்டாய் விளம்பரங்களில் சிம்மாசனம் போட்டு குடியேறிவிட்டது. கிரிக்கெட் இல்லாமல் பல பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் வளர்ச்சி பெற்றிருக்காது. விளம்பர பணத்திற்காக கிரிக்கெட் நட்சத்திரங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆள்பிடித்தார்கள். நட்சத்திரங்கள் அடித்த சதங்களில் வீழ்ந்த ரசிகர்கள் சமூகத்தை மறந்து கிரிக்கெட்டில் கிறங்குகிறார்கள். கையில் கோக், கக்கத்தில் மட்டை. கண்கொள்ளா காட்சிக்கு தொலைக்காட்சி! இதுல சனியன் எப்ப விடும்?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கார்த்திக், கல்வெட்டு, துளசி அக்கா, திரு

நாம எல்லாம் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் இப்படி எல்லாம் நாம் சொல்வதைப் பார்த்து சலித்துக் கொள்ளத்தான் செய்வார்கள் :-)

ஆனால், இது போன்ற ஏற்பாடுகளில் நடக்கும் விரயங்கள் உறுத்தத்தான் செய்கின்றன.

அன்புடன்,
மா சிவகுமார்