வெள்ளி, ஜனவரி 28, 2011

தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு

http://www.savetnfishermen.org/

அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாகப் போயிருக்கின்றன.

இந்திய மத்திய அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1. தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீனவர்களின் கடலில் மீன்பிடிக்கும் உரிமை நாட்டு எல்லைகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.

2. இந்திய கடற்படை மூலமாக, பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

3. கச்சத் தீவை இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும்.

தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசில் வற்புறுத்தி, தமிழர் நலன்களை பாதுகாக்கும்படி இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

4 கருத்துகள்:

Mugundan | முகுந்தன் சொன்னது…

மா.சி,

கடிதம்+கடிதம்+கடிதம் = சாவுகள்

கலைஞர் தமிழ்நாட்டை மட்டும் ஆளவில்லை,மத்திய அரசிலும் பங்கு கொண்டுள்ளார்.

தமிழினத்தில் ஏன் தான் பிறந்தோமோ?

துளசி கோபால் சொன்னது…

//தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். //

அதெல்லாம் கடிதம் எழுதி போஸ்ட் பண்ணிருவாருங்க அவர் :(

எழுதியாச்சுன்னு 'உடன்பிறப்பு'களுக்கும் **** யில் எழுதிருவாரு.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

அவரும் அதிகபட்சம் கடிதம்தான் எழுதப்போறாரு....வழக்கம்போல

கையலாகாத தலைவர்கள் நமக்கு எதற்கு....?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் எண்ணத்துப்பூச்சி, துளசி அக்கா, பிரதாப்,

அந்தப் பதவியில் இருப்பவரிடம் நாம் முறையிட வேண்டும், அவ்வளவுதான்.

(தமிழக முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை. அச்செடுத்து அல்லது எழுதி தபாலில் அனுப்பினால்தான் போய்ச் சேரும்).

மா சிவகுமார்