நேற்று சுடர் பற்றி அவரிடமிருந்து ஒரு மடல். இன்று காலையில் அவரது மரணச் செய்தி.
அவர் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த போது, வலைப்பதிவர் சந்திப்பில் பார்த்து, பின்னர் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு தகவல்கள் பரிமாறிக் கொண்டு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தோம்.
'தமிழ் மணத்தைப் போலவே இன்னொரு திரட்டி என்றால் தேவையில்லை. மாறுபட்ட விதமாக ஒரு களத்தை உருவாக்குங்கள் என்று காசி சொன்னார்' என்று தேன்கூட்டு ஆரம்பத்தைச் சொல்லி விட்டு, பெட்டகம், சார்பு நிலை குறித்த குற்றச் சாட்டுகள் என்று பேசிக் கொண்டிருந்தார்.
'நீங்கள் ரியாத் வரும் போது ஒரு வலைப்பதிவர் கூட்டம் போட்டு விடுவோம்' என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அவர் இருக்க மாட்டார். தொலைபேசி உரையாடலின் இடையில் தன் மகளின் குறுக்கீட்டுக்கு மதிப்பு அளித்து இடைவெளி விட்டு தொடர்ந்தார். அந்தக் குட்டிப் பெண்ணுக்கு அவர் இல்லாமல் போய் விட்டார்.
அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடவுள், தான் அதிகமாக நேசிப்பவர்களை சீக்கிரமாக அழைத்துக் கொள்கிறார் போலும்.
5 கருத்துகள்:
இன்னும் மனசு சரியாகலை. அதிர்ச்சியா இருக்கு.
அவருக்குச் சின்னக் குழந்தை வேற இருக்கா?! அடப் பாவமே!
சாகரனுக்கான அஞ்சலி இங்கே.....
http://ajeevan.blogspot.com/
ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்
நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்
கார்த்திக்,
உங்க பதிவுகளை அவ்வப்போது படிச்சுக்கிட்டுதான் இருக்கேன். பின்னூட்டம் இன்னும் போடத் தூண்டவில்லை எதுவும்!
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக