'ஒரு ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து இணைந்து வாழ்வது இயல்பான திருமணம். மனிதரும் விலங்கும் சேர்ந்து வாழ்வது கலப்புத் திருமணம்.'
அப்படி வரையறுத்தால் டோண்டு சொல்வது போலக் கலப்புத் திருமணங்களால் பிரச்சனைகள் இருக்கலாம். ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையை கலப்புத் திருமணம் என்று சொல்வது நமது சமூக அவலத்தைத்தான் காட்டுகிறது.
- திருமண வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் புரிதல்கள், அன்பு, காதல் அல்லது அவை இல்லாமல் இருப்பது மட்டுமே காரணமாகும்.
- ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டும் இவை இல்லாமல் பிரிந்து போனவர்கள் உண்டு.
- வெவ்வேறு மொழி, மதம் சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் காதல் வாழ்வு நடத்தும் தம்பதிகளும் உண்டு.
திருமணம், தனிநபர்களின் இணைப்பு மட்டுமில்லை, குடும்பங்களின் சேர்க்கை என்பது சரிதான். நம்ம ஊர் வழக்கமான சாதிக்குள்ளான திருமணங்களில் குடும்பங்களும், சமூகமும் பங்கு பெறுவதால் மண வாழ்க்கையில் ஏதேனும் சின்ன பிணக்கு வந்தால் அதைச் சரி செய்து கொள்ள அவர்களின் ஆதரவு கிடைக்கிறது. சாதி விட்டு செய்யப்படும் திருமணங்களில் இரு வீட்டாரும் ஒதுங்கி விடவோ, எதிரெதிராக நிற்கவோ செய்வதால் சின்ன பொறிகளும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வாழ்க்கையை குலைத்து விடுகின்றன.
குடும்பங்கள் நட்பாக இருந்து, சேர்ந்து பழகி இருந்த சொந்தத்தில் திருமணம் புரிந்தால், இரு குடும்பத்தாரும் நல்ல உறவோடு தொடர்ந்து வாழ்ந்தால் சாதி விட்டு சாதி திருமணம் புரிந்தாலும் சிறப்பான வாழ்க்கை அமையும்.
கலப்புத் திருமணம் செய்து கொண்டால் சாப்பாட்டு பிரச்சனையில் சண்டை வரும், குழந்தை வளர்ப்பில் கருத்து வேற்றுமை வரும் என்பதெல்லாம் வெற்று வாதங்கள். எந்த திருமணத்திலும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போய் விட்டால், அதை வெளிப்படுத்த சாப்பாட்டையோ, குழந்தைகளையோ முன்னிறுத்திக் கொள்வார்கள். ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு மனைவி சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட மாட்டேன் என்று வாழ்நாள் முழுவதும் உணவு விடுதியில் சாப்பிட்ட ஒரு உறவினர் கூட உண்டு.
புரிதலும் அன்பும் காதலும் இருந்தால் எந்த சாதிக்குள்ளும் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும். சுயநலமும், மூர்க்கமும், சின்னப் புத்தியும் இருந்தால் ஒரே சாதிக்குள்ளோ, வெவ்வேறு சாதிக்குள்ளோ வாழ்க்கை உடைந்தே தீரும்.
சாதி ஒழிய வேண்டும்.
2 கருத்துகள்:
//புரிதலும் அன்பும் காதலும் இருந்தால் எந்த சாதிக்குள்ளும் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும். சுயநலமும், மூர்க்கமும், சின்னப் புத்தியும் இருந்தால் ஒரே சாதிக்குள்ளோ, வெவ்வேறு சாதிக்குள்ளோ வாழ்க்கை உடைந்தே தீரும்.
//
அதே அதே.
மதுசூதனன் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம் இது.
செல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.
உடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.
ஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.
பைதபை நானும் உம்ம ஜாதிதான்!
ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.
சர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்?
கருத்துரையிடுக