வியாழன், செப்டம்பர் 27, 2007

சிவபாலன்: வாவ்! கலக்கும் தமிழகம்!!

ஊர்க் கோபுரத்தில் ஏறி உலகம் உய்ய மந்திரம் உரைத்த பெரியவர் போல கல்விக்கு விளக்காக பாட நூல்களை இணையத்தில் வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கும், அதை எல்லோரும் அறியச் செய்த சிவபாலன் அவர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

சிவபாலன்: வாவ்! கலக்கும் தமிழகம்!!

43 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

மா.சி,

சிவபாலன் பதிவைப்படித்து விட்டு தினமலரை திறந்தால் அதில் இதே செய்தி , பதிவர்கள் எந்த அளவு வேகமாக இருக்கிறார்கள் என்பது கண்டு வியந்தேன். நீங்களும் அவர் பின்னாலே ஓடி வந்திங்க போல தெரியுதே! :-))

சிவபாலன் சொன்னது…

மா.சி,

என் இடுக்கையின் சுட்டியை தந்தமைக்கு மிக்க நன்றி!

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!

SurveySan சொன்னது…

----
சூப்பருன்னு சொல்லத் தான் தோணிச்சு.

ஆனா, யாருக்கு இதனால் பலன்?

-----

பெயரில்லா சொன்னது…

//ஆனா, யாருக்கு இதனால் பலன்? //

சர்வேசா,
உன் வெட்டி சர்வேக்களால் யாருக்கு என்ன பலன்?

SurveySan சொன்னது…

//சர்வேசா,
உன் வெட்டி சர்வேக்களால் யாருக்கு என்ன பலன்?//

எனக்குப் பலன். பொழுது போவுது.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அனானி ;)

பெயரில்லா சொன்னது…

nalla vishayam..
ithuvm than
http://muslimpage.blogspot.com/2007/09/2_5547.html
nandri

வெங்கட்ராமன் சொன்னது…

********************************
SurveySan said...
ஆனா, யாருக்கு இதனால் பலன்?
********************************

சர்வேயரே எனக்கு இதுனால பலன,் புக்கு வாங்கி படிக்கலாம்னு இருந்தேன் நல்ல காலம் மின் புத்தக வடிவில் இருக்கு.

நான் படிக்க ஆசைப்பட்டது வரலாறு மற்றும் ஆங்கிலம்.

SurveySan சொன்னது…

வெங்கட்ராமன், 20 ரூவாய் குடுத்தா, புக்கு கெடைக்கும்.

நீங்க படிக்க எதுக்கு 50 லட்சம் செலவு செஞ்சு திட்டம் போடணும்? :)

seriously, பசங்களுக்கு இதனால் என்ன பயன்னு தெரியாமதான் கேட்டேன். விளையாட்டுக்கு கேக்கல.

கண்டிப்பா,எனக்கும் பயன் இருக்கு - சில புத்தங்கள் படிக்க சுலபாவது உண்மைதான். ஆனா, பலன் கிடைக்க வேண்டியவனுக்கு கிடைக்குமா?

Unknown சொன்னது…

சர்வேசன்,
சும்மா மொக்கையா இப்படிக் கேட்கக்கூடாது. :-))

ஒரு தகவல் பொதுவில் பலரின் பார்வை படும்படி வைக்கப்படும்போது அது சம்பந்தமான விவாதங்கள்,ஆய்வுகள்,விமர்சனங்கள் வரலாம். இணையம் பலரும் படிக்கும் பொதுவான எளிய அமைப்பு ஆதலால் மாணவர்கள்/ஆசிரியர்கள்/கல்வித்துறை தவிர மற்றவர்களின் பார்வையில் இது பட வாய்ப்புகள் அதிகம். அதனால் பாடங்களில் உள்ள குறைகள்/நிறைகள் பொதுவில் விவாதிக்கப்பட ஒரு நல்ல வாய்ப்பு.

ஆட்சி மாறும் போது சந்தில் சிந்துபாடும் வண்ணம் 32 வார்டு வேதாந்த பாலாஜி ஒரு சுதந்திரப்போராட்ட தியாகி என்று வரலாற்றை மாற்ற கட்சிகள் முயன்றால் இதன் மூலம் ஆப்புகள் எளிதாக வைக்க வழி உண்டு இல்லையா?

//பலன் கிடைக்க வேண்டியவனுக்கு கிடைக்குமா?//
பலன் கிடைக்க வேண்டியவனுக்கு சரியான தகவல் போகிறதா என்ற அளவிலாவது கல்வியாளர்கள் கவனிக்க ஒரு எளிய வழி.

**
யார் அதிகம் ஒண்ணுக்குப் போனார்கள் என்ற அளவில் நடத்தும் சர்வேக்களால் என்ன பயன்? பிளாக்கர் இலவசம் தான் ,ஆனாலும் யாரோ ஒரு நிறுவனத்திற்கு மொக்கை சர்வேக்களால் செலவுதானே?
:-))


***


கருத்துப் பரிமாற்றம் நடக்க தகவல்கள் மக்கள் எளிதில் அணுகும் வண்ணம் இருக்க வேண்டும். அதனால் இது போன்ற திட்டங்களை வரவேற்கலாம்.

பெயரில்லா சொன்னது…

Hi folks,
This will be helpful in the long run. Now a days people are talking about one laptop per child. Although Indian Govt is not yet interested, they will come around by political compulsions and politics of freebies. This is the only trickle down effect/method now seem to be working in India not open market based ( MA Siva, you are recently suspicious of trickle down effect, now take this one this will do some good). Despite big critisism and doubt the free color TV program in doing well in TN.(i am not supporter of dmk)Why 100$ lap top not possible? or even less as promised by some indian firm?. So the day is not far away.I am sure if any political party takes (congress/bjp/dmk/tdp/admk/dmdk)this opportunity and make their eletroral promise they will sure to get landslide victory.It is now clear that bringing some livelihood to large people, if not equity is a political process and not entirely economic/market technical decision as people like chidambaram,alluwaia wallas think.
In the last election,Mr Karunanidhi seem to have taken note of this signal very clearly. Market is not fair place when huge disparities in income exist.

Most of you net folks aware of this OLPC non profit movement and pls see the following videos,news, they thoroughly convince why should our govt invest instead of conventional way of doing things which are not so effective. A people's movement should start particularly from software folks to demand & pressurerise political parties to make electroral promise in this direction otherwise the traditionally failed bureaucratic planning will never care such noble works.Secretary in HRD had rejected outrightly this offer with out even discussing in detail with those olpc non profit movement who in my opinion acting in alturistic way. Initially Intel was invovled in war of words and latter they also joined with OLPC. They need orders in millions to get 100$ and even less but our guys are (Simputer) said to be in competition. They should join with OLPC team to further reduce cost. OLPC team has achieved some fantastic improvements in technonolgy (display, power management,wifi net work, simple& effective software,safety etc)even the 2000$ system does not have such things.

Another world is relly possible.


http://mitworld.mit.edu/video/313/

http://en.wikipedia.org/wiki/$100_laptop

http://www.laptop.org/


http://www.olpcnews.com/

SurveySan சொன்னது…

கல்வெட்டு,

இணையத்தில் போடுவதால் உண்டாகும், 'மற்ற' பலன்கள் நல்லாவே புரியுதுங்க.

//பலன் கிடைக்க வேண்டியவனுக்கு சரியான தகவல் போகிறதா என்ற அளவிலாவது கல்வியாளர்கள் கவனிக்க ஒரு எளிய வழி.//

கல்வியாளர்கள், இணையத்தில் போட்டாதான் 'validate' பண்ணுவாங்களா? அதுக்கெல்லாம் சம்பளம் குடுத்து ஆளு வச்சுருக்காங்கல்ல? புக்க படிச்சு எல்லாம் ஒழுங்கா இருக்கான்னு பாத்தப்பரம் தான அச்சுலயே ஏறும்?


இதை, ரிலீஸ் பண்ணும் போது, ஏதோ ஒரு வாத்தி சொன்னது, பசங்களுக்காக இத பண்றதாவும், 1130 பள்ளிகள்ள கம்பூயூட்டர் வரப் போவுது, அது வந்ததும், படிச்சு பசங்க யூஸ் பண்ணிப்பாங்கன்னு.

10 வருஷத்துக்கப்பரம் எல்லா பையன் கிட்டயும் ஒரு லேப்பி வந்தப்பரம், உபயோகம் இருக்கும்.
இப்ப கண்டிப்பா இல்ல.

இப்ப, 50 லட்சத்துல, கமிஷன் வாங்கின அரசியல் வியாதிக்குதான் பலன் கிடைச்சிருக்கு என்பது அடியேன் கருத்து.

மொக்கைக்காக சொல்லல. எனக்கு உண்மையில் பிரீல. இதுல எல்லாம் மொக்கையா சொல்லி எனக்கென்னா ஆகப் போவுது?

//பிளாக்கர் இலவசம் தான் ,ஆனாலும் யாரோ ஒரு நிறுவனத்திற்கு மொக்கை சர்வேக்களால் செலவுதானே?//

செலவு? வரவுங்க இதெல்லாம். ஒவ்வொரு ஹிட்டும், கூகிளின் ஸ்டாக் ப்ரைஸ $0.00000000001 வாவது ஏத்தும் :)

Unknown சொன்னது…

//கல்வியாளர்கள், இணையத்தில் போட்டாதான் 'validate' பண்ணுவாங்களா? அதுக்கெல்லாம் சம்பளம் குடுத்து ஆளு வச்சுருக்காங்கல்ல? புக்க படிச்சு எல்லாம் ஒழுங்கா இருக்கான்னு பாத்தப்பரம் தான அச்சுலயே ஏறும்?//

:-))

சம்பளம் கொடுத்து வைச்ச ஆளுகளைத் தவிர்த்து மற்ற ஆட்கள்..நம்ம ட்ராபிக் இராம்சாமி போல ஆர்வலர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் சர்வேசன்.

லக்கிலுக் சொன்னது…

கல்வெட்டு (எ) பலூன் மாமா கொஞ்ச நாட்களாக கொலைவெறியோடு பின்னூட்டங்கள் போடுவதாக தெரிகிறது :-)))))

சர்வேசன் கேட்ட கேள்வி மொக்கை தான் என்று நானும் ஒத்துக்கறேன். இணையத்தின் பயன்பாடுகளை நன்கு அறிந்த நாமே இந்த கேள்வியை கேட்பது அபத்தமானது இல்லையா சர்வேசன்?

Unknown சொன்னது…

// கல்வெட்டு (எ) பலூன் மாமா கொஞ்ச நாட்களாக கொலைவெறியோடு பின்னூட்டங்கள் போடுவதாக தெரிகிறது :-))))) //

:-)))

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

சிவபாலன் போட்டதைப் பார்த்துதான் எனக்கு விபரமே தெரியும். உடனேயே நாமும் ஒரு ஓ போட வேண்டும் என்று தொடுப்புக் கொடுத்து விட்டேன் :-)

சிவபாலன்,

விடியற்காலையில் நல்ல சேதி அறிவித்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்!

சர்வேசன்,

சுட்டியில் இருக்கும் சிவபாலனின் இடுகையில் உங்களது சந்தேகத்துக்கு வவ்வால், ரவிசங்கர் விடை சொல்லி விட்டார்கள்.

சொல்லப் போனால் இது கூடப் போதாது. html வடிவத்தில் ஒருங்குறியில் இணையத்தில் போட்டால்தான் முழு நோக்கம் நிறைவேறும். இப்போது பிடிஎஃப் வடிவில் போட்டதற்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

கணினி உள்ள வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி கால் மணி நேரத்துக்கு 5 ரூபாய் கொடுத்து இணைய மையத்துக்குப் போக முடியும் மாணவர்களுக்குக் கூடப் பயன்படும்.

அறிவுச் செல்வத்தை கட்டவிழ்த்து விடும் போது அது பரவலாகப் போய்ச் சேரும்போது விளைவுகள் எதிர்பாராத நன்மைகளை விளைவிக்கும். பாருங்களேன்.

தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து என்ற தகவலுக்கு நன்றி நக்கீரன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வெங்கட்,

எனக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பது பிடிக்கும். இப்போது கடைகளில் கிடைப்பது கூட அரிதாக இருக்கிறது. இனிமேல் கொஞ்சம் படிக்க ஆரம்பிக்கலாம்.

ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி என்ற திட்டம் ஏதோ ஒரு வடிவில் வந்து விடத்தான் போகிறது. 2000 தொலைக்காட்சி கொடுப்பவர்கள், 5000 ரூபாய் கணினி கொடுப்பதில் சிக்கல் இருக்காதுதான்.

அப்படிக் கொடுத்து இணையத்துக்கு பரவலான அணுகல் ஏற்படும் போது உருப்படியான உள்ளடக்கமும் இருக்க வேண்டும் அல்லவா! அதற்கு இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக உதவும்.

==
லக்கிலுக் வந்தாலே சிறப்பு வெளிச்சம் போட்டது போல ஆகி விடுகிறது :-) (புகைப்படத்தைச் சொல்கிறேன்

விளக்கங்களுக்கு நன்றி கல்வெட்டு.

அன்புடன்,
மா சிவகுமார்

SnackDragon சொன்னது…

This is a good thing. As we go let us hope the internet will be available for a very affordable cost. Any work in this direction should be appreciated.

Also please read one of my older post.

http://karthikramas.blogdrive.com/archive/48.html

1. இணையப் பள்ளி இன்றைய தமிழ் இணைய மற்றும் ஆஙில இணைய உலகில் சாத்தியமா என்று தோன்றியதே இந்த யோசனையின் சாராம்சம்.

2. பள்ளி பாடப்புத்தகங்களை வலைப்பக்கங்களில் தேடல் வசதியுடன் ஏற்படுத்தித் தர ஆகும் முயற்சி மிகவும் எளிதில் சாத்தியமான ஒன்றாக தோன்றுகிறது. கல்வித்துறையுடன் கைகோர்த்தால் இதை எளிதி செய்து விடலாம்.

3. ஒன்று முதல் பனிரெண்டு வரையிலான பாடபுத்தகங்களை வலையேற்றம் செய்ய வேண்டும்.

4. தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களின் துணையுடன் அரசு இவ்வ்லைப்பக்கங்களுக்கு வந்து பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படலாம்.
4.1 இம்முறையினால் பாடபுத்தகங்களை அச்சடித்து வெளியிட ஆகும் செலவு இல்லாமலாகுவதும் ,
குழந்தைகள் பாடபுத்த்கங்கள் இல்லாமலே கல்வி கற்கும் முறையையும் செயல்படுத்த முடியும்
4.2 மாணவர்களுக்கு வலைப்பக்கங்களிலேயே நோட்டுபுத்தகமும் அமைத்து கொடுத்துவிடலாம்.
4.3 தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்ய கற்றுத்தருவது பாடமாக கொள்ளலாம்.
4.4 உடனடி இணைய பேசு முறை எனப்படும் சாட் முறையை கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மிகவும் உயர்ந்த மற்றும், அதிக வருமானம் உடைய கல்வியாளர் ஒருவரை க்கொண்டு பாடம் நடத்தாலாம். இது 1 கல்வியாளருக்கு க்கு 1000 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயன் தரமுடியும்.
4.5 ஓய்வு பெற்ற சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வியாளர் தன் வீட்டிலிருந்த படியே தமிழகமெங்கும் உள்ள இணைய பள்ளிக்கு பாடம் நடத்த முடியும்.
4.6 இணையத்தில் உள்ள இலவச சேவைகளான யாகூ,காட்மெயில் போன்றவற்றை மாணவர்களின் பள்ளித் தொடர்பு சாதனமாக பயன்படுத்தாலம்.
4.7 இம்முறையில் இணையக் குழுமங்களும் பெரும் உதவியாய் அமையும்.
4.8 இணைய பக்கங்களில் தேர்வு நடத்த பெறுவதால் , தேர்வித்தாளை த்ரித்துதளை
அங்கீகாரம் பெற்ர ஒரு இணைய கல்வியாளறோ அல்லது பல இடங்களில் உள்ள பல்வேறு கல்வியாளர்களோ செய்யமுடியும்.
4.9 அங்கீகாரம் என்பது ஒரு கடவுச்சொல் தெரிந்தால் போதும் என்ற அளவிற்கு எளிமையாக்கப்படலாம்.

மா சிவகுமார் சொன்னது…

கார்த்திக்,

கனவு மெய்ப்படுகிறது. இவ்வளவு தூரம் வந்து விட்டார்கள். உங்கள் முழுத் திட்டமும் நனவாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

அதான் அப்துல் கலாம் போன்ற பெரியவர்கள் நல்லவற்றைக் குறித்துக் கனவு காண அறிவுறுத்துகிறார்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

Suka சொன்னது…

நல்ல தகவல்.

பள்ளியில் படிக்கும் போது , ஔரங்கசீப் கெட்டவன்.. ராபர்ட் கிளைவ் கெட்டவன் அந்த அளவில் புரிந்து கொண்டு அவர்களுக்கு மையில் தாடி மீசை வைத்து வில்லானாக்கிவிட்டதோடு வரலாறு பாடம் முடிந்து போனது. பின்னாளில் புதிய விஷயங்களைக் கற்கும் போது பழையதாக படித்த விஷயங்களை எடுத்து பார்க்கத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் ஆறாம் வகுப்பின் வரலாறு பாடத்தை புரிந்து கொள்ளும் அறிவு எனக்கு இப்போதுதான் வந்துள்ளதைப் போல் உணர்கிறேன்.

நண்பரிடம் இந்த பாட புத்தகங்களை வாங்கிவர சொல்லியிருந்தேன் .. இப்போது அது தேவையே இல்லாமல் போய்விட்டது :)


நன்றி
சுகா

SurveySan சொன்னது…

//சர்வேசன் கேட்ட கேள்வி மொக்கை தான் என்று நானும் ஒத்துக்கறேன். இணையத்தின் பயன்பாடுகளை நன்கு அறிந்த நாமே இந்த கேள்வியை கேட்பது அபத்தமானது இல்லையா சர்வேசன்?//

இது பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு எந்த வகையில் உதவியாய் இருக்கும்னு யாரும் தெளிவான பதில் சொல்லல.

மத்த 'பொது' பயன்பாடுகள் புரியாத அளவுக்கு மக்கு இல்ல நான் :)

இந்த திட்டம் பசங்களுக்காக பண்ணதுன்னு சொல்லிருக்காங்க. பசங்க எப்படி பயனடைவாங்கன்னு கேக்கரேன். 5 ரூபாய்க்கு ப்ரௌஸிங் சென்டர்ல போய் பய எவ்ளோ நேரம் படிப்பான்? பரீட்சைக்குப் அடிக்க புக் வாங்குது அவசியமா இருக்கும்போது, இணையத்துக்கு எங்க போய் படிக்கப் போறான்? ஏன் போய் படிக்கோணும்?

கண்டிப்பா நம்மளா மாதிரி, வெளி ஆளுகளுக்கு உதவியா இருக்கும். பசங்களுக்கு டைரக்டா உதவாது, இப்போதைக்கு. பத்து வருஷத்துக்கு அப்பாலிக்கா கத வேற :)

பெயரில்லா சொன்னது…

சிவபாலன் மாமா,

வாவ்.அப்பதியா?ஹைய்யா!ஜாலி.

பெயரில்லா சொன்னது…

ஏ அப்பா சர்வேசா, கண்ண கட்டுதே! உங்க பதிவுல ஒவ்வொரு க்ளிக்கும் என்னவா ட்ரான்ஸ்லேட் ஆவூதுன்னு இப்பல்ல புரியுது? இனிமே உங்க ஊட்டாண்ட வரதில்ல - அது என் சொந்த டிஸிஷன்!

ப்ரௌஸிங் சென்டர்ல படிக்க"ர", வீட்டுல இணையத்தில படிக்க"ர" semi-rural சின்னப் பசங்க இருக்காங்கப்போய்!

லக்கிலுக் சொன்னது…

//மத்த 'பொது' பயன்பாடுகள் புரியாத அளவுக்கு மக்கு இல்ல நான் :)//

சர்வு! உங்களை யாராவது மக்குன்னு சொன்னாங்களா? உங்கள் கேள்விகள் மொக்கைன்னு தானே சொன்னாங்க!

//இது பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு எந்த வகையில் உதவியாய் இருக்கும்னு யாரும் தெளிவான பதில் சொல்லல.//

நம் பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு இப்போதைக்கு (கவனிக்கவும் இப்போதைக்கு) பாடநூல்களே போதும்.

ஆயினும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்கவும், தமிழ்நாட்டு கல்வியினை பற்றிய அறிமுகம் பெறவும் இது நிச்சயம் உதவும்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு இத்திட்டத்தின் அருமை புரியும். ஏனென்றால் சூடு, சொரணை கொண்ட தமிழனாக அவர்களாவது குறைந்தபட்சம் வாழுகிறார்கள்!

SurveySan சொன்னது…

லக்ஸ்,

//நம் பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு இப்போதைக்கு (கவனிக்கவும் இப்போதைக்கு) பாடநூல்களே போதும்.
//

இத்தேதான் நானும் சொல்றேன்.

ஆனா, இவங்க திட்டத்த தொடங்கி வைக்கும்போது, நம்ம பள்ளிப் பசங்களுக்காக பண்ணதுன்னு பில்ட்-அப் குடுக்கறாங்க.

அததான் தப்புன்னேன்.

எனிவே, ஏதாவது நல்லது நடந்தா சரி!
:)

?!!!@#%* சொன்னது…

ellarukkum vankomnga.

ellarum oru vishayatha maranthudureenga.

ivanga entha thittam pottalum tholai nokku parvai kidayathunga.

ethu priority nnu theriyanumnga.

Nan "SurveyNEsan" kooda othu poranga.

Neengallam paratarathala intha thittam ippo avasiyama nu theriyala.

Mathavangalukku buku venumna avanga poi thedi vangi padikkattum.

Pasangallu ithu kandippa payan illai nnu sollalam. (1% panakkara pasanga la vittudunga)


Apparum.. intha thittam varappora varushangalla thodarumannu poruthu irunthu parunga..

Ellam innikki nerathuku stunt nga.

thazhmayyudan.

sahridhayan
(Sorry for my tanglish,learning)

ஜோ/Joe சொன்னது…

//Sorry for my tanglish,learning//

உன்னை மாதிரி ஆளுங்களுக்கு பயனுள்ளதா இருக்கும் .அந்த பக்கத்துல போய் 1-ஆம் வகுப்பு தமிழ் பாடநூலை தரவிறக்கி படிக்கவும்.

வந்துட்டானுங்க குறை சொல்லுறதுக்கு!

ஜோ/Joe சொன்னது…

சர்வேசன் ஐயா,
இதுனால மாணவர்கள் கெட்டுப் போயிடுவாங்க-ன்னு சொல்லாம உட்டீங்களே ! அதுக்கு மிக்க நன்றி!

லக்கிலுக் சொன்னது…

சர்வ்ஸ்!

//ஆனா, இவங்க திட்டத்த தொடங்கி வைக்கும்போது, நம்ம பள்ளிப் பசங்களுக்காக பண்ணதுன்னு பில்ட்-அப் குடுக்கறாங்க//

அவங்க பாடப்புத்தகங்களை இணையத்தில் ஏற்றியிருக்கோம்னு தான் சொல்றாங்களே தவிர பள்ளி பசங்களுக்குன்னெல்லாம் பில்டப் கொடுத்ததா தெரியலை. தங்கம் தென்னரசு அதுமாதிரி பேசியிருந்தா சொல்லுங்களேன் பாப்போம்.


//அததான் தப்புன்னேன். //

இவங்க எதை பண்ணாலும் தப்பு தான்னு நீங்க சொல்லுவீங்கன்னு எனக்கும் தெரியும்ணேன்.

லக்கிலுக் சொன்னது…

//சர்வேசன் ஐயா,
இதுனால மாணவர்கள் கெட்டுப் போயிடுவாங்க-ன்னு சொல்லாம உட்டீங்களே ! அதுக்கு மிக்க நன்றி!//

இந்த பின்னூட்டம் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் பின்னூட்ட பாலா ஸ்டைலில் இருக்கிறது. ஜோ தான் பின்னூட்ட பாலாவா? :-)

ஜோ/Joe சொன்னது…

//ஜோ தான் பின்னூட்ட பாலாவா? :-)//

உங்க லொல்ளுக்கு ஒரு அளவே இல்லியா :))

SurveySan சொன்னது…

லக்ஸ்,

//புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,
தற்போது 1150 மேனிலைப்பள்ளிகளிலும், 1500 உயர்நிலைப்பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்கப்பட உள்ளன.
அவற்றில் இந்த பாட நூல்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்கலாம்//

சிவபாலன் சைட்ல இருந்து எடுத்துப் போட்டேன்.
ஒரு திட்டம் எதுக்காக போடறோம் எதுக்காக செயல்படுத்தறோம் அதனால யாருக்கு என்ன பயன்னு தெரியாம போடறாங்க.
அதத்தான் சொல்ல வரேன் :)

//இவங்க எதை பண்ணாலும் தப்பு தான்னு நீங்க சொல்லுவீங்கன்னு எனக்கும் தெரியும்ணேன்.//

அது சரி. நீங்களே முடிவு பண்ணிட்டீங்க. நான் என்னத்த சொல்றது.

தமில்ல பேரு வச்சா வரிவிலக்கு; இலவசக் கலர் டிவி, கடல்ல பள்ளம் போடரது - இந்த மாதிரி திட்டமெல்லாம் தப்புங்கறேன்;

இலவச புத்தகம் குடுத்தா, கை தட்டறேன். ;)

SurveySan சொன்னது…

Joe ஐயா,

//சர்வேசன் ஐயா,
இதுனால மாணவர்கள் கெட்டுப் போயிடுவாங்க-ன்னு சொல்லாம உட்டீங்களே ! அதுக்கு மிக்க நன்றி!//

கெட்டெல்லாம் போக மாட்டாங்க, ஏன்னா அவங்களுக்குத்தான் இணையத்துக்கு போற வசதியே இல்லியே; கவலைய வுடுங்க.

;)

பெயரில்லா சொன்னது…

MaSi,
NCERT books also available at their site in pdf form.
regds

VSK சொன்னது…

சர்வேசன் கேட்டது ஒரு நியாயமான கேள்வி.

அதற்குப் பதில் சொல்வதை விடுத்து, அவருக்கு ஆப்பு வைக்க முயல்வது நம் கலாச்சாரம்.

இது இப்போதைய மாணவர்களுக்கு, குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு, சிறிதும் பயனளிக்காத ஒரு நிகழ்வு என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்?

30 ஆண்டு தமிழர் நல ஆட்சிக்குப் பின்னரும் இதுதான் நம் நிலைமை என்பது வெட்கக்கேடான விஷயம்!

VSK சொன்னது…

இப்போதாவது நிகழ்கிறதே என பெருமைப் படுங்கள் என ஒரு குரல் வரலாம்!
அதுதான் இன்னும் வெட்கக்கேடான விஷயம்!
சாகற காலத்தில் சங்கரா சங்கரா!

லக்கிலுக் சொன்னது…

சர்வ்வு!

//ஒரு திட்டம் எதுக்காக போடறோம் எதுக்காக செயல்படுத்தறோம் அதனால யாருக்கு என்ன பயன்னு தெரியாம போடறாங்க. //

உங்க லெவலுக்கு கல்வித்துறை அதிகாரிகளால திங்க் பண்ண முடியலை பாவம். உட்டுடுங்க :-))))


//தமில்ல பேரு வச்சா வரிவிலக்கு; இலவசக் கலர் டிவி, கடல்ல பள்ளம் போடரது - இந்த மாதிரி திட்டமெல்லாம் தப்புங்கறேன்//

ஆமாம். அதெல்லாம் நடந்து, தமிழன் முன்னேறிட்டான்னா நம்ம மணியாட்டுற பொழைப்பு நாறிப்போயிடும் இல்லையா? தப்பு.. தப்பு.. ரொம்ப தப்பு...

//இலவச புத்தகம் குடுத்தா, கை தட்டறேன். ;)//

ரொம்ப வருஷமா அரசு பள்ளிகளுக்கு இலவசமா தானுங்க புக்கு கொடுத்துக்கிட்டிருக்காங்க. அந்த இலவச கலாச்சாரத்துக்கும் இப்போ ஆளுற கெழவன் தாங்க காரணம்....

லக்கிலுக் சொன்னது…

வீ.எஸ்.கே. அய்யா!

//இது இப்போதைய மாணவர்களுக்கு, குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு, சிறிதும் பயனளிக்காத ஒரு நிகழ்வு என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்?//

கிராமப்புற மாணவர்களுக்கான திட்டம் இது என்று உங்களுக்கு யாரோ தப்பா சொல்லி கொடுத்துட்டாங்க



//30 ஆண்டு தமிழர் நல ஆட்சிக்குப் பின்னரும் இதுதான் நம் நிலைமை என்பது வெட்கக்கேடான விஷயம்!//

அதுக்கு முன்னாடி நடந்தது தமிழர் நல ஆட்சி அல்ல என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.


//இப்போதாவது நிகழ்கிறதே என பெருமைப் படுங்கள் என ஒரு குரல் வரலாம்!
அதுதான் இன்னும் வெட்கக்கேடான விஷயம்!//

21 வயசு பொண்ணுக்கு இப்போவாவது கல்யாணம் பண்ணுறியே.. வெட்கப்படு.. எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி பண்ணியிருக்க வாணாமான்னு கேக்குற மாதிரி இருக்கு.

K.R.அதியமான் சொன்னது…

Surveysan,

These e-books can be printed out, xeroxed and distributed cheaply and easily as and when needed. no need for computers or net connection for all. or the relevent chapters alone can be printed, xeroxed and distributed in emergency. that is the basic purposes of e-books...

TN govt could have done it much earlier...

மா சிவகுமார் சொன்னது…

சர்வேசன், லக்கிலுக், ஜோ, சுகா, விஎஸ்கே ஐயா,

நல்ல ஒரு விவாதத்தில் தாமதமாகவேனும் கலந்து கொள்ள முயல்கிறேன்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு செல் தொலைபேசிகளை அனுமதித்த போது 'இருக்கிற காசில் கிராமப்புறங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுக்காமல், இது என்ன ஆடம்பரம், நகர வாசிகள், பணக்காரர்கள், படித்தவர்களுக்கு மட்டும்தான் இது பயன்படும்' என்று விவாதித்திருக்கலாம்.

இன்றைக்கு செல் தொலைபேசிகள் எல்லா தரப்பினருக்கும் வாழ்வாதாரமாகப் பயன்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் உருவாக்கப்பட்ட இணையம் இன்றைக்கு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது!!

இது போன்ற புதிய கட்டமைப்புகள், அறிவுச் செல்வத்தை புதிய முறைகளில் வினியோகிக்க முயல்வது மக்களின் ஆக்கத் திறமைக்கு விருந்தாக அமையும். நாம் நினைத்துப் பார்க்க முடியாத கோணத்தில் யாரோ ஒருவர் இந்த இணையக் கோப்புகளை ஏழை மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் வெளியிட ஆரம்பிக்கலாம்.

உதாரணமாக, அதியமான் சொல்வது போல குறைந்த செலவில் நகல் எடுத்து வினியோகிக்க தன்னார்வலர்கள் முன் வரலாம்.

மலேசிய பள்ளிகளில் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவு இல்லாமல் தவிப்பதாக வெற்றி என்ற ஒரு ஆசிரியர் மடற்குழுக்களுக்கு எழுதிக் கொண்டிருப்பார். அவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.

தனித் தேர்வு எழுத விரும்புபவர்கள் கடைகளுக்கு அலைந்து கொண்டிருக்காமல் எளிதாகக் கிடைக்கும் பக்கங்களை அச்சிட்டு வைத்துக் கொள்ளலாம்.

சொல்லப் போனால், எங்கள் வீட்டு அருகில் இருக்கும் மளிகைக் கடையில் வேலை செய்யும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்ணுக்குத் தனித் தேர்வில் கலந்து கொள்ள புத்தகம் தேடினால் கடைகளில் கிடைக்கவில்லை. எந்தப் பள்ளிக்குப் போய்க் கேட்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கூடுதல் செலவானாலும் தகவிறக்கி அச்சடித்து கையில் கொடுத்து விடலாம்.

இதைத் தவிர ரவிசங்கர் சிவபாலனின் பதிவில் பட்டியலிட்ட பலன்கள்:
QUOTE
1. சிவபாலன் சொன்னது போல், பாடப்புத்தகம் தாமதமாகும் போது இதில் பெற்றுக் கொள்ளலாம்.
2. பாடத்திட்டத்தில் திருத்தங்களை இங்கு உடனுக்குடன் வெளியிடலாம்.
3. cbse, matric முறையில் இருப்போர் தங்கள் பாடத்திட்டம் தவிர, பிற பாடத்திட்டங்களைக் கலந்தாலோசிக்க விரும்புவோர் அதற்காக காசு கொடுத்து புத்தகம் வாங்காமல் இணையத்தில் பார்க்கலாம். state boardல் 1st groupல் படிப்போர் கூட அடுத்த பிரிவின் முழுமையான தாவரவியல், விலங்கியல் பாடங்களைப் புரட்டிப் பார்க்கலாம்.
4. சென்ற ஆண்டுப் பாடங்களைப் பார்க்க விரும்புவோருக்கு உதவும்.
5. பிற மாநிலப் பாடத்திட்டக் குழுவுக்கு நம் பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். குறிப்பாகப், பிற மாநிலங்களில் தமிழ்ப் பாடம் நடத்துவோர் நம் பாடங்களைப் பார்த்துக் கொள்ள முடியும்.
6. இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முழுக்கத் தமிழ் வழியக் கல்வி பயில்வோர் நம்மோடு ஒப்பு நோக்கியும் ஒருங்கிணைந்தும் செயல்பட உதவும். கலைச்சொல்லாக்கத்தில் ஒத்திசைவு, பாடத்திட்ட இற்றைப்படுத்தத்துக்கு உதவும்.
7. புலம்பெயர்ந்த தமிழர், இந்தியாவில் பிற மாநிலத்தில் உள்ள தமிழர் தங்கள் பள்ளிப் பாடங்களைத் திருப்பிப் பார்க்கவும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழில் கற்பிக்கவும் உதவும்.
8. இணையத்தில் இது குறிப்பிடத்தக்க தமிழ் உள்ளடக்கம். பொழுதுபோக்கு, செய்திகள் தவிர தமிழில் தகவலுக்காகவும் இணையத்தை அணுகுவார்கள். பயனுள்ள உள்ளடக்கம் இல்லாமல் இணையத்தில் பயன் குறைவானதே.
9. என்னைப் போல் ஆங்கில வழியத்தில் பயின்ற பலருக்குத் தமிழில் கலைச்சொற்களைக் கற்க உதவும். விக்கிபீடியா போன்ற தளங்களில் கட்டுரை எழுதுவோருக்கு பெரிதும் உதவும்.
10. முக்கியமாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் மக்கள் சொத்து. அது உலகில் உள்ள எந்த ஒரு தமிழனுக்கும் இலவசமாகக் கிடைப்பதாக இருப்பது மிகப் பொருத்தம்.
UNQUOTE

அன்புடன்,
மா சிவகுமார்

லக்கிலுக் சொன்னது…

நன்றி மாசி!

அப்படியே இந்தப் பதிவுக்கான கமெண்ட் பாக்ஸை மூடிவிட்டீர்களேயானால் நன்றாக இருக்கும். முடியலை... தாவு தீருது... :-(

மா சிவகுமார் சொன்னது…

டென்ஷனாகாதீங்க லக்கி :-)

அரசியல் சார்பா விவாதிப்பதாக தோன்றினாலும் இது போன்ற கேள்விகளை வெளியில் கேட்காமல் இருப்பவர்களுக்கும் விடையளிப்பதாக அமைந்து விட்டதுதானே.

சர்வேசன் கேள்வி எழுப்பியிருக்கா விட்டால் ரவிசங்கரின் அருமையான விளக்கம் கிடைத்திருக்குமா!

அன்புடன்,
மா சிவகுமார்

SurveySan சொன்னது…

லக்ஸ், ஏன்னு கேள்வி கேட்கும்போது, சரியான பதில் சொல்ல முடியலன்னா தாவு தீறத்தான் செய்யும் ;)

மா.சி,

இணையத்தில் புக்ஸ் ஏத்தரது ரொம்ப நல்ல முயற்சி. அதனால் பலன்கள் இல்லாமல் இல்லை. பல ஆயிரம் பேர் பலன் பெறப்போவது உறுதி.
இலங்கை, மலேஷியா, மற்ற நாடுகள், தொலைக் கல்வி படிக்கும் மாணவர்கள்னு இதனால் பலன் கிடைக்கும் நபர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

என் கேள்வி எழுந்ததுக்கு காரணம் - இந்த திட்டத்த தொடங்கி வச்ச அமைச்சருக்கு, இதன் உண்மையான immediate தேவை என்னன்னு சரியா தெரியலேன்ற எரிச்சல் தான்.
அட்லீஸ்ட், விஷயத்த கேட்டு தெரிஞ்சுட்டாவது ஸ்பீச்சியிருக்கலாம்.

50 லட்சத்த செலவு பண்ண வேண்டியது, சைட்ல கொஞ்சம் பாக்க வேண்டியது, காசு செலவு பண்ணி வேலய எதுக்கு செய்யராங்க, ஒழுங்கா செய்யறாங்களன்னெல்லாம் பாக்காம கேப்ல விடரது.

இதூவே பொழப்பா போச்சு ;)

ஒரு ஏழை மாணவனுக்கு இது ப்ரயோஜனமா இருந்தாலும் எனக்கு சந்தோஷமே!

இனி, பின்னூட்டப் பெட்டிய மூடிடலாம்.:)

வாய்ப்பளித்தமைக்கு நன்னி நன்னி!

மா சிவகுமார் சொன்னது…

//இந்த திட்டத்த தொடங்கி வச்ச அமைச்சருக்கு, இதன் உண்மையான immediate தேவை என்னன்னு சரியா தெரியலேன்ற எரிச்சல் தான்.
அட்லீஸ்ட், விஷயத்த கேட்டு தெரிஞ்சுட்டாவது ஸ்பீச்சியிருக்கலாம்.//

இதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் கருத்துத் தெளிவாகப் புரிந்திருக்கும். :-)

அன்புடன்,
மா சிவகுமார்