சனி, மார்ச் 08, 2008

பொய் சொல்லக் கூடாது பாப்பா!!!

உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் பொய் சொல்ல வேண்டியதில்லை. வானம் விழும் போது காயமில்லாமல் தப்பிப்பதற்கான கவசம் வாய்மைதான்.

உண்மை சொல்வதால் மிக மோசமான விளைவாக என்ன நடந்து விடும் என்று தயார்ப்படுத்திக் கொண்டால் போதும். உண்மையே சொல்வதால் கிடைக்கும் மனத்தெளிவும் திண்மையும் நம்மை நோக்கி வரும் பாறைகளையும் உடைத்துப் போடும் வலிமையைத் தந்து விடும்.

பொய் சொல்வதற்கு அதிகமான மன ஆற்றலை செலவழிக்க வேண்டியிருக்கும். உண்மை சொல்லும் மனம் எளிதாக, மென்மையாக மேலே மேலே உயர்வதற்கான எண்ணங்களை சிந்திக்க இடம் பெற்றிருக்கும்.

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில் பொய்யும் உண்மையாகும் என்கிறார்களே! யாருக்கு நன்மை பயக்கும்? எப்படி புரை தீர்ந்திருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாதது என்று உறுதியாக நம்பும் இன்னொரு உயிர் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்க மட்டும் பொய் உண்மையாகும்.

சொந்த நலத்துக்காக, செய்த தவறை மறைக்க விரும்பி சொல்லும் பொய்கள் எல்லாம் நம்மை அரித்து அரித்து கொன்று விடும் கரையான்களைப் போல மனதை கூடாக்கி விடும்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா.

என்ன நடந்து விடும் என்று பார்த்து விடலாம்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா.

அந்த வாய்மைதான் நமக்குத் துணை பாப்பா.

7 கருத்துகள்:

KARTHIK சொன்னது…

//பொய் சொல்வதற்கு அதிகமான மன ஆற்றலை செலவழிக்க வேண்டியிருக்கும். உண்மை சொல்லும் மனம் எளிதாக, மென்மையாக மேலே மேலே உயர்வதற்கான எண்ணங்களை சிந்திக்க இடம் பெற்றிருக்கும்.//

உண்மை அண்ணா

மா சிவகுமார் சொன்னது…

ஆமாம் கார்த்திக்,

பொய் சொல்வதற்கு திறமை அதிகமாகத் தேவைப்படும். உண்மையே சொல்வதுதான் எளிமையானது.

அன்புடன்,
மா சிவகுமார்

வால்பையன் சொன்னது…

பொய் மட்டுமல்ல குற்ற உணர்வு தரும் எந்த செயலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும்.

வால்பையன்

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

பஞ்சதந்திரம் அல்லது பிரபுதேவாவுடன் நடித்த படம்-சரியாக நினைவில்லை-கமல் சொல்லுவார்,'சும்மா,சும்மா பொய் சொல்றேன்னு சொல்லாதே,எவ்வளவு கஷ்டம் தெரியுமா,எத்தனைதான் ஞாபகம் வச்சுக்க முடியும் ஒரு மனுஷன்' என்பார் சீரியசான தொனியில் !!!
பொய் சொல்லிப் பழக் மிகுந்த மன வன்மையும் நினைவாற்றலும் வேண்டும்.
வாய்மையாகவே இருக்க சாதாரணமாக இருந்தாலே போதும் :-)
ஆனால் வாய்மையை maintain செய்ய ,நிலை நிறுத்த மிகுந்த மன வலிமை வேண்டும் !

மா சிவகுமார் சொன்னது…

வால்பையன்,
//பொய் மட்டுமல்ல குற்ற உணர்வு தரும் எந்த செயலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும்.//
உண்மை.

//ஆனால் வாய்மையை maintain செய்ய ,நிலை நிறுத்த மிகுந்த மன வலிமை வேண்டும் !//
முற்றிலும் உண்மை. ஆனால் பழகி விட்டால் மிக எளிதான ஒன்றாகி விடும்.

அன்புடன்,
மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

பாப்பா மட்டும் தான் பொய் சொல்லும் பையன் பொய் சொல்லமாட்டான் என பதிவிடும் மாசிக்கு எதிராக மகளீர் அணி திரண்டு கண்டனம் தெரிவிப்பதாக ஒரு குருவி சொல்கிறது, அது உண்மையா :-))

கொக்கரக்கோ கும்மாங்கோ !

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்!

நீங்க எப்போ நாரதர் ஆனீங்க? :-)

அன்புடன்,
சிவகுமார்