செவ்வாய், ஜனவரி 12, 2010

ஆள்பவரின் மாட்சி

921 . உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதர் கொண்டொழுகு வார்.
-- 93 கள்உண்ணாமை

கலைஞர் உரை:
போதைப் பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்து போவார்கள்.
ஆட்சி புரிபவர்கள் மக்களைக் கண்டு பயப்படாமல், அவர்களை மதிக்காமல் நடந்து கொள்ள வழி கண்ட முதலமைச்சர் திரு கருணாநிதி மது விற்பனையை முடுக்கி விட்டு தமிழர்களை இழித்து வைத்திருக்கிறார்.
  • அரிசி, பருப்பு, காய்கறி விலை விண்ணுக்கு
  • மது விற்பனை வானுயர்ந்து நிற்றல்
  • தடி எடுப்பவர்கள் எல்லாம் தண்டல்காரர்களாக விளங்குதல்
'கலைஞரின்' நல்லாட்சி வேறு என்ன சாதிக்க வேண்டும்!

3 கருத்துகள்:

யுவகிருஷ்ணா சொன்னது…

அம்மா வாழ்க! :-)

அருள் சொன்னது…

அண்ணனின் அறச்சீற்றம் நாளுக்கு நாள் அதிகமாகும் பட்சத்தில் ஷங்கரின் கைவண்ணத்தில் ஒருநாள் முதல்வராகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மா சிவகுமார் சொன்னது…

யுவகிருஷ்ணா,

நீங்கள் சளைக்காமல் சொல்லும் இந்த முழக்கம் பலித்து இந்த காட்டாட்சி ஒழிந்து செல்வி ஜெயலலிதா முதலமைச்சராகி விடட்டும்.

அருள்,
ஆகியும்தான் பார்க்கலாமே!

அன்புடன்,
மா சிவகுமார்