சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி
--ஔவையார்
சாதி இரண்டே இரண்டுதான். நீதி தவறாமல் வாழ்ந்து, ஈட்டிய பொருளை பொது நலனுக்காக செலவழிப்பவர் உயர் குலத்தோர். அப்படிச் செய்யாதவர்கள் தாழ்ந்தவர்கள்.
மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா
- கவிமணி தேசிக விநாயகம்
எல்லோரும் நன்றாக வாழ உழைப்பவர்கள், உயர் சாதியினர். தன் நலத்தை மட்டும் பேண பாடுபடுபவர்கள் தாழ்ந்த சாதியினர்.
4 கருத்துகள்:
எனக்கு இந்த விளக்கம் கொஞ்சம் அபத்தமாக தெரிகிறது, எப்படி வகைப்படுத்தினாலும் அதைக் குழுவாக சித்தரிக்கும் போது அது சரியான சித்தாந்தமாக அமையாது.
ஒருவனின் ஈகை குணமும்,இரக்க குணமும், அதற்கு மாறான தன்மையும் தனிமனித குணநலன் சார்ந்தவை இதைக் குழு அடையாளமாக (சாதி) மாற்றிச் சொல்வதன் மூலம் சமூகப் பயனாக அமையாது அது சாதிய அடையாளமாக மாறும். வருண சாதியிலும் குணத்தைத் தான் காரணமாகக் கூறுகிறார்கள்.
ஒவ்வையார் கூற்று அவர் காலத்திற்கு குறியது. இப்ப பொருந்தது, அப்படி பொருந்தினாலும் அது தனிமனிதருக்கு மட்டுமே தனி மனிதர்கள் குழுவல்ல.
தங்களுடைய முகப்பின் தலைப்பு பிடித்திருந்தது.... சாதியற்ற சமூகம் ஒரு நாள் நிச்சையம் உருவாகும் என்ற நம்பிக்கை என்னுள் மடியாமலிருக்கத் தங்களின் blog உதவியது.
www.prakashdevarajuscribbles.blogspot.com
வணக்கம் பிரகாஷ்,
சமூக மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மனத்தை மாற்ற தொடர்ந்த கருத்து பரப்புதல் தேவை. நமது நிலையில் உறுதியாக நின்று தொடர்ந்து உரக்கப் பேசிக் கொண்டும் இருப்போம். ஒரு நாள் கனவு நனவாகும்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக