இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
வெள்ளி, ஜனவரி 15, 2010
உள்ளுவதெல்லாம்.....
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (661)
செய்ய வேண்டியதை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை, அதை கையில் எடுத்த ஒருவனின் மன உறுதியை அடிப்படையாகக் கொண்டது. மற்றவை எல்லாம் துணைப் பொருட்கள்தான்.
//செய்ய வேண்டியதை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை, அதை கையில் எடுத்த ஒருவனின் மன உறுதியை அடிப்படையாகக் கொண்டது. மற்றவை எல்லாம் துணைப் பொருட்கள்தான்.//
ஆமென்
**
என்ன ஒரே குறளா இருக்கு சிவா ? ஏதாவது புத்தகம் போடப் போறிங்களா?
பள்ளியில் ஆண்டுக்கு 20, 30, 40 குறள்களாக புகட்டி வளர்ந்த நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். அன்றைக்கு இருந்த உலக நோக்கில் சாதாரணமாகத் தெரிந்தாலும், இப்போது இந்தக் கடுகுக்குள் இருக்கும் கடல் பிரமிக்க வைத்து விடுகிறது!
5 கருத்துகள்:

:-)))))
வணக்கம் கல்வெட்டு,
புத்தகம் போடும் திட்டம் எல்லாம் இப்போதைக்கு இல்லை. சொந்தமாக உருப்படியாக எழுதின பிறகுதான் அது :-)
அலுவலக அறிவுப்புப் பலகையில் ஓரிரு நாட்களுக்கு ஒரு முறை ஒரு குறளை படித்து, பொருள் எழுதுகிறேன். அதை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!
அன்புடன்,
மா சிவகுமார்
ரெண்டு வரில எவ்ளோ பெரிய விசயத்தை வச்சுருக்காரு வள்ளுவர்,
நன்றி சார்...
கணக்குப்பார்த்தால் ஒன்னே முக்கால்தான்.
'சுருக்'கமாச் சொல்லிட்டுப்போயிட்டார் தாடிக்காரர்.
வணக்கம் நாஞ்சில் பிரதாப்,
வணக்கம் துளசி அக்கா,

கருத்துரையிடுக