செவ்வாய், ஜூன் 01, 2010

தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு

தமிழகம் இழைத்த துரோகம்

பின்னூட்டத்தில் தமது உணர்வுகளை தெரிவித்த நண்பர்களுக்கும், தனியாக பதிவிட்டு தானும் புறக்கணிக்கப் போவதாகச் சொன்ன செல்லமுத்து குப்புசாமிக்கும், இன்னும் மாநாட்டு புறக்கணிப்பில் ஒப்புதல் உடைய பிற நண்பர்களுக்கும்

இந்தத் தமிழ்மாநாடு புறக்கணிப்பை இன்னும் கொஞ்சம் முனைப்பாக செய்ய முடிவெடுத்துள்ளேன்.

1. நம்முடைய தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவர்களையும் மாநாட்டைப் புறக்கணிக்கக் கேட்டுக் கொள்ளலாம்.
2. நமது வலைப்பதிவுகளில் புறக்கணிப்பு அறிவிப்பு செய்து மற்றவர்களையும் அதே போல அறிவிக்கும் படி கேட்டுக் கொள்ளலாம்.

நான் அப்படி செய்யும் முயற்சிகளை தொடர்ந்து பதிந்து வருகிறேன்.

பின்னூட்டத்தில் ஒத்த உணர்வு தெரிவித்த நண்பர்கள்.
1. ராஜநடராஜன்
2. யெஸ் பாலபாரதி
3. கோவி கண்ணன்
4. குழலி
5. நந்தா
6. தகடூர் கோபி
7. சீனு
8. நாஞ்சில் பிரதாப்
9. பெயரிலி
10. சவுக்கடி (யார் என்று தெரியவில்லை????)
11. bala
12. nt

பின்னூட்டத்தில் மாற்றுக் கருத்து தெரிவித்தவர் - யுவகிருஷ்ணா
அவரையும் கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் உணர்வை வெளிப்படுத்த புறக்கணிப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நமக்கு கட்சி சார்பு, தனி நபர் சார்பு அதிகம். சில அடிப்படை கொள்கைகளை வைத்து அதன்படி செயல்படுவது அதை விடச் சிறந்தது.

யாருமே (நம்மையும் சேர்த்து) always யோக்கியமில்லை. ஒரு கட்சி, ஒரு தலைவர் என்று அடையாளப் படுத்திக் கொள்ளும் போது, அந்தக் கட்சி, அந்தத் தலைவர் செய்வது எல்லாவற்றையும் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். நமது மனதுக்கு தவறு என்று பட்டாலும், அதை வெளியில் சொல்ல முடியாத கட்டு.

அதைத் தவிர்த்து விட்டால், குழப்பம் கொஞ்சமாவது குறையும். நமக்கு நாமே தலைவர், நமது நிலைப்பாடுகள் நமது கட்சி அவ்வளவுதான். மனதறிந்து உண்மையாக பேசி நடந்து கொள்ள முடியும். தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் ஆயிரம் நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள். அதற்கெல்லாம் நாம் கொடி பிடித்துக் கொண்டே இருக்க முடியுமா!

தனி உரையாடலில் விளக்கம் கேட்ட நண்பரையும் புறக்கணிப்பில் சேர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

4 கருத்துகள்:

யுவகிருஷ்ணா சொன்னது…

இந்த மாநாடு தமிழுக்காக நடத்தப்படுகிறதா? அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுகிறதா? என்ற விவாதம் எனக்குள்ளே சில நாட்கள் ஓடி, இறுதியான ஒரு முடிவை எட்டியிருக்கிறேன்.

ஆயினும் புறக்கணிப்பு குறித்த இந்த அழைப்பினைப் பொறுத்தவரை, இது கலைஞரால் நடத்தப்படும் மாநாடு என்ற அடிப்படையிலேயே எதிர்க்கப்படுவதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை ஜெயலலிதா நடத்தியிருந்தால் உங்கள் நிலைப்பாடு வேறுமாதிரியாக இருந்திருக்குமென்றும் கருதுகிறேன். எனவே இந்த அழைப்பை நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கிறேன்.

அழைப்புக்கு நன்றி!

மா சிவகுமார் சொன்னது…

பின்னூட்டத்துக்கு நன்றி யுவகிருஷ்ணா!

உங்கள் தகவலுக்கு :

2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் நான் உதய சூரியன் சின்னத்தில் தயாநிதி மாறனுக்கு வாக்களித்தேன். மதவாதக் கட்சிகளை ஒதுக்க வேண்டும் என்ற எனது நம்பிக்கையை பின்பற்றி வாக்களித்தேன்.

அதே போல, ஜெயலலிதா நடத்தியிருந்தால், இதே போன்ற சூழலில் இந்த புறக்கணிப்பை நிச்சயமாக செய்திருப்பேன் என்று உறுதியாக சொல்கிறேன்.

நீங்கள் சொல்வது போல தமிழ் மாநாட்டை நடத்துவதற்கான தகுதி கலைஞருக்கு இல்லை என்று நம்புகிறேன். அதனால் இந்த புறக்கணிப்பு.

அழைப்பை மறு பரீசிலனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

யுவகிருஷ்ணா,

என்னுடைய கட்சி சார்பை நீங்களே தீர்மானித்துக் கொண்டு பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது.

இன்னும் ஒரு நிகழ்வு உங்கள் தகவலுக்காக:

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு, மதிமுகவின் தாயகத்தில் வைகோவை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். கட்சி உறுப்பினர்களைத் தவிர வேறு சிலரையும் அழைத்திருந்தார்கள். அக்கட்சியில் உறுப்பினராக இருக்கும் என்னுடைய நண்பர் என்னையும் அழைத்திருந்தார்.

அந்தக் கூட்டத்தில் வைகோவின் அதிமுகவுடனான கூட்டணியை தாக்கி, அவரது நல்ல கொள்கைகளைக் கூட நீர்த்துப் போய் விடச் செய்யும் உறவைக் குறித்து நான் நிறையவே பேசினேன். அதற்கு நீண்ட பதிலும் அளித்தார் வைகோ. 50க்கும் அதிகமான கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிறர் கலந்து கொண்ட கூட்டம் அது.

அதிமுக மற்றும் அதன் தலைவி மீது எனக்கு எந்த விதமான அனுதாபமும் பற்றும் கிடையாது என்று உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.

குறிப்பிட்ட தேர்தலில் என்ன சூழல் இருக்கிறதோ அதைச் சந்திக்க யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்து பேசுகிறேன், எழுதுகிறேன். அவ்வளவுதான்.

தமிழ்நாட்டை எம்ஜிஆர் கட்சி/சிவாஜி கட்சி, எம்ஜிஆர் கட்சி / கருணாநிதி கட்சி, ரஜினி கட்சி / கமல் கட்சி என்று கட்சி கட்டி பிரித்துப் போடுவது வசதியாக இருந்தாலும் எனக்கு உடன்பாடாக இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பெயர் சொல்ல விரும்பாத நண்பரின் மின்னஞ்சல்:
=================
/தனி உரையாடலில் விளக்கம் கேட்ட நண்பரையும் புறக்கணிப்பில் சேர்ந்து கொள்ள அழைக்கிறேன்.//

உங்களாலோ அல்லது புறக்கணிப்பதாக கூறிய மற்றவர்களாலோ இது வரை ஒரு காரணம் - ஒரே ஒரு காரண்ம் கூட தர முடியவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்

என் கேள்விகள் அப்படியே உள்ளன

கேள்வி 1 : கலைஞர் ராஜினாமா செய்திருந்தால் இன்று இலங்கையில் இருக்கும் நிலைமையில் ஏதாவது ஒரு மாற்றமாவது இருந்திருக்குமா. கலைஞர் ராஜினாமா செய்து, காங்கிரஸ் தயவில் அதிகும ஆட்சியமைத்திருந்தால் இலங்கை விவகாரத்தில் என்ன மாற்றம் இருந்திருக்கும் என்று உங்களாலோ மற்றவர்களாலோ பட்டியலிட்டு கூற முடியுமா

கேள்வி 2 : ஒரு கட்சி ராஜினாமா செய்து உடனடியாகவே அடுத்த கட்சி காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தால் அவர்கள் தமிழர்களை கிள்ளுகீரையாக நடத்துவது அதிகரித்திருக்குமா, குறைந்திருக்குமா

உங்களால் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை. இரண்டாவது கேள்விக்கு விடை எளிது. ஆனால் நீங்கள் கூறவில்லை :) :)

இந்த இரு கேள்விகளையும் நீங்கள் உங்கள் தளத்தில் போடுங்கள்
முதல் கேள்விக்கு விடையான என்ன மாற்றம் வந்திருக்கும் என்று யாராவது ஒருவராவது ஒரு காரணம் தந்தால் நானும் மாநாட்டை புறக்கணிக்கிறேன்

காரணமே இல்லாமல் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது எனக்கு ஏற்புடையது அல்ல
காரணம் தந்தால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயராகவே உள்ளேன்
உங்களுடன் இந்த விவாதத்தை துவக்கியதே காரணம் கிடைக்குமா என்ற ஆசை தான்
===========