செவ்வாய், ஜனவரி 02, 2007

தமிழரின் சாபக்கேடுகள்

தமிழ்ச் சமூகத்தைப் பிடித்துள்ள நோய்கள்
  1. சாதிப் பிரிவுகள்
  2. தமது நிறம் குறித்த தாழ்வுணர்ச்சி
  3. தமது மொழியை இரண்டாந்தரமாகக் கருதுவது
  4. தமது உணவுப் பழக்கங்களை அவமானமாகக் கருதுவது
  5. தமது பெயரைக் கூட விட்டுக் கொடுத்து விட்டது.

10 கருத்துகள்:

VSK சொன்னது…

இதில் சாதிப்பிரிவுகள் பாரதமெங்கும் பரவிக் கிடக்கிறது.

மற்ற நாலும் கண்டிப்பாக தமிழனுக்கே உரித்தான அடையாளங்கள்!

சல்மான் சொன்னது…

// தமது உணவுப் பழக்கங்களை அவமானமாகக் கருதுவது
//

இது எங்கிருந்து வந்தது என தெரியவில்லை :)
பாஸ்ட் புட் மோகத்தினை சொல்லுகிறீர்களா?

// தமது பெயரைக் கூட விட்டுக் கொடுத்து விட்டது.
//

எதையோ முன்மாதிரியாக வைத்து சொல்லியது போல உள்ளது. எதைக் கொண்டு இந்த சிந்தனை விளைந்தது என அறிய ஆவல்.

சல்மான்

bala சொன்னது…

//தமது பெயரைக் கூட விட்டுக் கொடுத்து விட்டது//

சிவகுமார் அய்யா,

சல்மான் அய்யா கேட்ட படி எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள்?
நம்ம கலைஞர் அய்யா மகனுக்கு ஸ்டாலின் னு பேர்வச்சதையா, அல்லது சில NRI கள் தங்கள் பெயரை சுருக்கி ஆங்கிலத்தனமாக்கிக் கொள்வதையா?

நம்ம நாட்டிலீயே சொல்லணும்னா இது பஞ்சாபிகளிடையே அதிகம் காணப்படுவது..pinkie/tinku/rosie /twinkle என்றெல்லாம் பெயர் வைப்பார்கள்.

பாலா

வெற்றி சொன்னது…

சிவகுமார்,
[1]சாதிப் பிரிவுகள்

தமிழினத்தில் மட்டுமல்ல உலகின் பல பழமை வாய்ந்த கலாச்சாரங்களிலும் இப் பிரச்சனை உண்டு. குறிப்பாக ஆபிரிக்க இன மக்களிடமும் இப்படியான வேறுபாடுகள் உண்டு. சாதிப் பிரிவுகள் ஒழிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிச்சயமாக இவை களையப்பட வேண்டியவையே.
இது உண்மையில் எமது சாபக்கேடுதான்.

[2]நிறம் குறித்த தாழ்வுணர்ச்சி:

இது குறித்து உங்களிடம் ஏதாவது தரவுகள் உண்டா[கருத்துக் கணிப்புகள்]?
இது எந்தளவில் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஒரு சிலருக்கு இப்படியான தாழ்வு மனப்பாண்மை இருக்கலாம். ஆனால் இது முழுத் தமிழினத்திற்குமே உரியது என்று சொல்வது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். ஆனால் எம்மினத்தில் சிலர் திருமணம் செய்யும் போது fair skin உடைய துணையே தேவை என்று சொல்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் மேற்குலகில் பிறந்து வளரும் எம்மினச் சந்ததியிடம் இப் பாகுபாடு இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் வெகு குறைவாகத்தான் இருக்குமென நம்புகிறேன்.

உதாரணத்திற்கு என்னைப் பார்த்து யாரும் தமிழன் என்று இலகுவில் சொல்ல மாட்டார்கள். ஈழத் தமிழர்கள் கூட நான் யாரோ பாகிஸ்தான்காரனோ அல்லது வட இந்தியனோ என்று தான் சொல்வார்கள். காரணம் எனது தோலின் நிறம்[மிகவும் fair], கண்களின் நிறம்[பச்சை].இதனால் எனக்கு தன்னம்பிக்கை அதிகம் என்று சொல்ல முடியாது. அதே நேரம் எனக்குத் தெரிந்த பல தமிழ் நண்பர்கள் நிறத்தில் குறைவாக இருந்தாலும், அவர்களிடம் தாழ்வு மனப்பாண்மை இல்லை. ஆக இது தனிப்பட்ட ஒருவரின் மனோநிலையே தவிர ஒட்டு மொத்த இனத்தின் சாபக்கேடு என்று சொல்லலாமா தெரியவில்லை. இத் தாழ்வு மனப்பாண்மை தமிழர்களுக்கு மட்டும்தான் உள்ளது என்றும் சொல்ல முடியாது. இதே பிரச்சனை ஒரு தெலுங்கருக்கும் இருக்கலாம். மலையாளிக்கும் இருக்கலாம். ஆக இது தமிழினத்தின் சாபக்கேடு என்று எப்படிச் சொல்லலாம் எனத் தெரியவில்லை.

[3]தமது மொழியை இரண்டாந்தரமாகக் கருதுவது

இது ஓரளவு உண்மைதான். தமது பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாதென்பதைப் பெருமையாகச் சொல்லித் திரியும் சில தமிழ்ப் பெற்றோர்களை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக தமிழகத்தில், தமிழக உறவுகள் சிலர் தமக்கு தமிழைவிட ஆங்கிலம் தெரியும் எனக் காட்டுவதற்காகவே பல ஆங்கிலச் சொற்களை தமிழில் கலந்தும், தமிழ்ச் சொற்கள் போலப் பேசி வருவதையும் பல தொலக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பார்த்திருக்கிறேன். இது கண்டிப்பாக எமது சாபக்கேடு தான்.

[4]தமது உணவுப் பழக்கங்களை அவமானமாகக் கருதுவது

இது எங்கிருந்து வந்ததென்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை இப்படி ஒரு பிரச்சனையை நான் அறியவில்லை.

[5]தமது பெயரைக் கூட விட்டுக் கொடுத்து விட்டது.

இதுவும் உண்மைதான். குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு எண் சாத்திர முறை, மற்ற இனத்தவர்களும் உச்சரிக்கக் கூடிய பெயர்களாக வைக்க வேண்டும் என எண்ணி, சும்மா டயானா, எலிசெபத் , றோசி அப்பிடி இப்பிடிப் பெயர் வைப்பதை நான் அறிந்திருக்கிறேன். இதில் ஒரு சிரிப்புக்கிடமான சங்கதி என்னவென்றால், எனக்குத் தெரிந்த என்னுடைய தமிழ் நண்பர்கள் பலர் வேற்று இனப் பெண்களை மணந்து இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தமிழிலேயே பெயர் வைக்கிறர்கள். ஆனால் தமிழக் குடும்பங்கள் பல வேற்றுக் கலாச்சாரப் பெயர்களை வைக்கிறார்கள். இதனால் தானோ என்னவோ அன்றே எமது முன்னோர் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் எஸ் கே ஐயா,

பாரதம் முழுதும் பரவிக் கிடந்தாலும் நாம் நம்முடைய அளவில்தானே ஆரம்பிக்க வேண்டும். தமிழில் எழுதும் போது தமிழரைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதுவதுதானே பொருத்தம்.

மேலும், உலகில் எத்தனை இடங்களில் இத்தகைய பிரிவுகள் நடைமுறையில் இருந்தாலும் அது நம்முடைய சமூகத்துக்கு ஒரு சாக்காக எடுத்துக் கொள்ள முடியாது. சாதி ஒழியத்தான் வேண்டும்.


அன்புடன்,

மா சிவகுமார்

நற்கீரன் சொன்னது…

நீங்கள் தமிழ் சமூகம் என்று தனியாக சொல்லவில்லை என்று எடுத்துக்கொள்கின்றேன்.

சாதிப்பிரிவுகள் நான் நினைத்ததை விட இறுக்கமாக இருக்கின்றது. திருமணம் மூலம் நிலைத்து நிற்கின்றது. இது பிறப்பின் மூலம் என்பதால், வர்க்க பிரச்சினையை விட ஆபத்தானது.

நிறம். இருக்கின்றது. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்று நினைக்கின்றேன். எவ்வளவு Cosmopolitan ஆக இருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுயை கேள்வி என்று நினைக்கின்றேன். கறுப்பின மக்களை கண்டுவிட்டு இன்னும் நிறம் பற்றி பேசுவது முற்றும் பொருந்தவில்லை.

மொழி. இது சூழ்நிலையைப் பொறுத்தது. இது ஒரு வர்க்க கேள்வி கூட இல்லை. உயர்வர்க்க தமிழர்களுக்கு தமிழ் மீது ஈடுபாடு ஒரு தலைமுறை கடந்தாவது இருக்கின்றது. கீழிருந்து மேலே வருபவனுக்கு ஆங்கிலம் அத்தியாவசியம், இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் இரண்டாம் நிலையிலேயே பல இடங்களில் பயன்படுவதால் அல்லது பயன்படாமல் இருப்பதால் இந்தத் தோற்றத்தை தரலாம். தமிழ் பல இடங்களில் தற்கால சிந்தனைகளை வெளிப்படுத்த சிரமப்படுகின்றது என்பதையும் நாம் ஒத்துக்கொண்டாக வேண்டும்.

தமிழர் சமையல். முற்றிலும் மறுக்கின்றேன். என்னத்தை துறந்தாலும், தமிழர் உணவுப் பழக்கங்களை இலகுவில் விடுவதில்லை, விடவும் முடியாது.

தமிழ்ப் பெயர். இது ஒரு குழப்பம் தரும் விடயம். நீண்ட பெயர்களை வைத்திருப்பது இப்போது விரும்பப்படுவதில்லை. தமிழை வெறுத்து பெயர் வைக்கின்றார்கள் என்றும் சொல்ல முடியாது. மாற்றாக எதோ எதோ (மூட)நம்பிக்கைகளில் எல்லாம் பெயர் வைக்கின்றார்கள்.

வேறும் சிலவும் குறிப்பிடலாம்.

ஒற்றுமையின்மை. (யப்பானிஸ் ஒப்பீடு)

சமத்துவம் வேண்டாதல். (lack of egalitarian sprit)

...

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சல்மான்,

//இது எங்கிருந்து வந்தது என தெரியவில்லை :)
பாஸ்ட் புட் மோகத்தினை சொல்லுகிறீர்களா?//

அரிசிச் சோறு கெடுதல். கையால் பிசைந்து சாப்பிடுவது அநாகரீகம் (விரல்களால், அல்லது கரண்டியால்தான் சாப்பிட வேண்டுமாம்)

இன்னும் பல இருக்கிறது :-)

//எதைக் கொண்டு இந்த சிந்தனை விளைந்தது என அறிய ஆவல்.//

1. எந்த படிவத்திலும் பெயர் என்றால் பெயர்/குடும்பப்பெயர் என்றுதான் வடிவமைத்திருக்கிறார்கள். இந்திய கடவுச் சீட்டு உட்பட.

2. தமிழில் கையெழுத்து போடுவோம்

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பாலா,

மேலே சொன்னது போல தென்னிந்திய பெயர்கள், முதலெழுத்து - பெயர் என்ற அமைப்புடையவை. ஐரோப்பிய, வட இந்திய பெயர்களில்தான் முதல் பெயர் - குடும்பப் பெயர் என்ற வடிவம் இருக்கிறது.

அதே வடிவத்தை ஒரே மாதிரியாக நம் மீதும் சுமத்தி - மா சிவகுமார் என்பதை என்னுடைய கடவுச் சீட்டு விண்ணப்பத்தில் எழுத முடியாத படி - No Initials Allowed - என்று தந்தை பெயரையும் நம் பெயரில் விரித்து எழுத கட்டாயப்படுத்துகிறார்கள்.

K முத்துக் குமார் என்ற பெயர் வெளிநாட்டில் போய் வேலை பார்க்கும் போது முத்துக்குமார் கிருஷ்ணமூர்த்தி என்று உருவெடுத்து, பல நேரங்களில் மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி என்றே அழைக்கிறார்கள்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் தென்னிந்தியர்கள் எல்லோரும் இதைச் சந்தித்திருக்கலாம்

நாம் உறுதியாக நம்முடைய பழக்கத்தை அரசு ஆவணங்களில் அங்கீகரிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வெற்றி,

//தமிழினத்தில் மட்டுமல்ல உலகின் பல பழமை வாய்ந்த கலாச்சாரங்களிலும் இப் பிரச்சனை உண்டு.//

மேலே சொன்னது போல், நம்மிடம் இருக்கும் பிரிவுகளை அகற்றிக் கொள்வது நமது முன்னேற்றத்துக்கு அவசியம். நீங்கள் வலியுறுத்துவது போல், மற்றவர்களிடமும் அதே குறை இருக்கிறது என்பது நமது குறையை நீக்க வேண்டிய அவசியத்தைக் குறைத்து விடாதுதானே!

//இது குறித்து உங்களிடம் ஏதாவது தரவுகள் உண்டா//

நீங்கள் சொன்ன திருமணப் பொருத்தம் பார்ப்பதிலிருந்து ஆரம்பித்து, சின்ன குழந்தைகள் மனதிலேயே நான் கறுப்பு, அவள் சிவப்பு என்று ஊட்டுவது, முகப்பூச்சுக்களா ஏராளம் விற்பனையாவது, சிகப்பழகு களிம்புகளை வைத்து முட்டாளாக்கும் நிறுவனங்களின் வெற்றி என்று சொந்த அவதானங்களைத் தவிர்த்து தரவுகள் எதுவும் இல்லை.

ஆனால், வெள்ளைத் தோல் என்றால் உசத்தி, கறுப்பு என்றால் தாழ்ச்சி என்பது நான் பொதுவாக என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் பார்க்கும் உண்மை.

//இது ஓரளவு உண்மைதான். //
தமிழ், இலக்கியமும், அரசியல் வாதமும் புரிய மட்டும்தான் உதவும். தமிழில் அறிவியலும், நவீன மேலாண்மையும் பேச முடியாது என்று தமிழில் அழகாக எழுதும் சில வலைப்பதிவர்கள் கூட சொல்வதைப் பார்த்திருக்கிறேன். பொது உலகில் நிலைமை இன்னும் மோசம்தான்.

//இது எங்கிருந்து வந்ததென்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை இப்படி ஒரு பிரச்சனையை நான் அறியவில்லை.//

எங்கள் ஊரில் நன்றாகப் பிசைந்து உருட்டி சாப்பிடா விட்டால் திட்டுவார்கள். சாம்பார் சோற்றை அப்படித்தான் சாப்பிட முடியும். விரலால்தான் எடுத்து உண்ண வேண்டும், பட்டிக்காட்டான்தான் உள்ளங்கையில் பட சாப்பிடுவான் என்று மூளைச்சலவை செய்ததில் ஆரம்பித்து, அரிசிச் சாப்பாட்டை இரண்டாம் நிலைக்குத் தள்ளியது வரை மேல்தட்டு, நடுத்தர மக்களிடையே பல அறிவு பூர்வ கருத்துக்கள் பரவி இருப்பதைப் பார்க்கிறேன்.

//இதனால் தானோ என்னவோ அன்றே எமது முன்னோர் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்கள்.//
சரியாகச் சொன்னீர்கள். நான் நினைத்து எழதியது வேறு ஒரு பிரச்சனையை. ஆனால், நீங்கள் குறிப்பிடும் போக்கு இன்னும் வருந்துதற்குரியதுதான்.


அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் நற்கீரன்,

//நீங்கள் தமிழ் சமூகம் என்று தனியாக சொல்லவில்லை என்று எடுத்துக்கொள்கின்றேன். //

நாம் தமிழ் சமூகத்தைத்தானே முதலில் மாற்ற முடியும் :-)

என்ன சூழலில் இருந்தாலும் தாய்மொழி வழிக் கல்வி என்பது தேவை என்றும், ஆங்கிலப் புலமையை தனியாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எனக்குப் படுகிறது.

ஒற்றுமையின்மையின் அடிக் காரணம் சாதிப்பிரிவுகள்தாம் என்று நினைக்கிறேன். சமத்துவம் வேண்டுதல் என்ற உயர்ந்த நோக்கம் உட்பிரிவுகளை ஒழித்து தன்னம்பிக்கை வளர ஆரம்பித்தால்தான் வரும்.


அன்புடன்,

மா சிவகுமார்