திங்கள், ஆகஸ்ட் 06, 2007

பட்டறை - வினை முடித்த இனிமை

மனம் நிறைந்து விட்டால் உடல் வலிகள் படுத்துவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலைக்குச் சுற்றுலா போனோம். இறங்கும் போது கால்நடையாக, ஒற்றை அடிப் பாதை வழியாக இறங்கலாம் என்று முடிவு செய்து முட்புதர்களையும், தலையில் விறகு சுமந்து இறங்கும் உள்ளூர் வாசிகளையும் கடந்து நான்கைந்து பேராக வந்தோம். கால்கள் வலி உச்சக்கட்டத்தில். மலையை விட்டு இறங்கிய பிறகான ஓரிரு கிலோமீட்டர்களை கடக்க முடியவில்லை. இன்னும் நான்கு நாட்களுக்கு எழுந்திருக்கவே முடியாத சோர்வு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக எழுந்து விட முடிந்தது.

அதே புத்துணர்ச்சி இப்போதும். மலை ஏறி இறங்கிய உழைப்பும் களைப்பும் மனதில் ஏற்பட்ட நிறைவினால் ஈடு கட்டப்பட்டிருக்கின்றன. பதிவர் பட்டறை முடிந்ததும் இந்த உணர்வு.

8 கருத்துகள்:

aynthinai சொன்னது…

sir,
today there were a news of the event on CNN.IBN chanel.
my hearty congrates to you and your team.
Vivek.

கோவி.கண்ணன் சொன்னது…

பட்டரைக்கு உழைத்த பெரும் 'தலைகளில்' ஒருவரான உங்களுக்கு பாராட்டுக்கள்

கோபிநாத் சொன்னது…

சிவா சார்

அருமையான நிகழ்ச்சி...உங்கள் அனைவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை ;-))

சுந்தர் / Sundar சொன்னது…

கலக்கீட்டிங்க போங்க !

வாழ்த்துக்கள் !

பெயரில்லா சொன்னது…

//கலக்கீட்டிங்க போங்க ! //

சுந்தர் கலக்கிட்டோம்னு சொல்லுங்க.

முந்தின நாள் காகிதப் பை பேக்கிங் முதற்கொண்டு, அருள் அலுவலகம் சென்று காஃபி மேக்கர் எடுத்துக் கொடு வந்து, தொடர்ந்து சிஸ்டம் இன்ஸ்டல்லேஷன் என்று நீங்கள் பங்கு பெற்றிருக்கிறீர்கள்.

பட்டறை நாள் முழுதும் முதல் மாடிப் பொறுப்பில் இருந்தவர்களில் நீங்களும் ஒருவர்...

கலக்கிட்டோம்னு சொல்லுங்க.

Boston Bala சொன்னது…

பாராட்டுகள் மா.சி.! :)

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

பாராட்டுகள், சிவகுமார்!

மா சிவகுமார் சொன்னது…

தகவலுக்கு நன்றி விவேக். நம்ம ஜெய் படம் பிடித்துப் போட்டு விட்டார், இங்கே

கோவி அவர்களே,

தலை (உடம்பை விட) கொஞ்சம் பெரிசுதான் :-) பாராட்டுக்களுக்கு நன்றி.

வாங்க கோபிநாத்,

பாராட்டுக்களுக்கு நன்றி.

சுந்தர்,

நீங்கள் ஓசைப்படாமல் செய்த பங்களிப்பும் சேர்ந்துதான் கலக்கல். அதான் நந்தாவும் சொல்றார் பாருங்க

பாலா,

உங்க தொகுப்புதான் எல்லாருக்கும் இப்போ நுழைவாயில். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்