திங்கள், ஆகஸ்ட் 13, 2007

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற

13 கருத்துகள்:

யோசிப்பவர் சொன்னது…

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

;-)

Thamizhan சொன்னது…

அமெரிக்காவில்,கலிபோர்னியா மாநிலத்தில் பெர்க்கிலி பல்கலைக் கழகம் மிகவும் பெயர் பெற்றது.அங்கே தென்கிழக்கு ஆசியப் பிரிவில் தமிழ்துறைத் தலைவராக பேராசிரியர் ஜியார்ஜ் ஃகார்ட் என்ற அமெரிக்கர் உள்ளார்.இவர் ஃகார்வேர்டு பல்கலைக் கழகத்தில் சமசுகிருதம் படித்தவர்.மதுரைக்கு வந்து தமிழ் படித்தவர்.பல தமிழ் மொழி பெயர்ப்புக்கள்,புறநானூறு,செய்துள்ளார்.

அவர் சிகாகோவில் நடக்கும் தமிழ் பள்ளிக்கு வந்திருந்த போது அவருக்கு மிகவும் பிடித்த திருக்குறளைச் சொல்லச் சொன்னபோது
மனத்துக்கண் மாசிலன்...குறளைச் சொன்னார்.இதைவிட வேறு எங்கும் இவ்வளவு அழகாகச் சொல்லப் பட வில்லை என்று சொன்னார்.
அறன் என்ற சொல்லே மிகவும் பொருள் மிக்கத் தனித் தமிழ் சொல்.
அசை போட்டுப் பாருங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி யோசிப்பவர் :-).

தமிழன்,

நல்ல தகவலுக்கு நன்றி. பேராசிரியர் ஹார்ட் சொல்வது போல இந்தக் குறளுக்கு இணையான சொற்றொடர்கள் எந்த மொழியிலும் அரிதாகவே கிடைக்கும்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் புதுப் புது முகம் காட்டும் பெண் குழந்தை போல மகிழ்வூட்டுகிறது, குறள்.

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

my favourite kural :

ஓதியும் உணர்ந்தும் பிறற்குரைத்தும் தான் அடங்கா பேதையின் பேதை இல்

suits me well !!

Shiva,

Can you write about your experiances in China ? and about your trips to Europe ? your perceptions of Chinese life style,
work ethics, values and culture ?

பெயரில்லா சொன்னது…

நான் பல ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் சபரிமலை செல்லும்போதெல்லாம் எங்கள் குழு பாட்டும் கூத்துமாகச் செல்லும்,ஆனால் தூய மனத்துடன்.அப்போதெல்லாம் நான் சொல்லும் குறள் இதுதான்.

பெயரில்லா சொன்னது…

நான் பல ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் சபரிமலை செல்லும்போதெல்லாம் எங்கள் குழு பாட்டும் கூத்துமாகச் செல்லும்,ஆனால் தூய மனத்துடன்.அப்போதெல்லாம் நான் சொல்லும் குறள் இதுதான்.

மா சிவகுமார் சொன்னது…

//Can you write about your experiances in China ?//

நேரம் கிடைக்கும் போது சீனா பற்றி எழுத ஆரம்பிக்கிறேன் அதிமான்.

மதுரை சொக்கன்,

பல சபரி மலை பாடல்களில் கூட சுத்தமான மனம் குறித்து வருவது நினைவிருக்கிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

சிறில் அலெக்ஸ் சொன்னது…

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சிறில்,

குறளை ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கிட்டீங்களா, என்ன? :-)
அன்புடன்,
மா சிவகுமார்

சிறில் அலெக்ஸ் சொன்னது…

no it has to be written this way
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

ஆகுல நீர பிற - are the last three words

சிறில் அலெக்ஸ் சொன்னது…

also check out the discussions in this post of mine

http://cyrilalex.com/?p=393

VSK சொன்னது…

மனத்துக்கண் "மாசி"லன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

:))

மா சிவகுமார் சொன்னது…

சிறில்,

திருத்தி விட்டேன்.

எஸ்கே ஐயா,
ஆஹா...

முதல் வாசிப்பில் சிறில் சொன்னதை உறுதி செய்கிறீர்கள் என்று மட்டும் நினைத்தேன். அதற்குள்ளும் ஒரு கொக்கி வைத்திருக்கிறீர்களே :-) நன்றி.

அன்புடன்,
சிவகுமார்