செவ்வாய், பிப்ரவரி 26, 2008

மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம்?

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6997.html

19 கருத்துகள்:

TBCD சொன்னது…

ஏன்...அவைகளை பயன்படுத்துவதில்லை ஏதேனும் காரணம் இருக்கா..?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் tbcd,

இதைப் படிச்சுப் பாருங்க. விளக்கமா அப்புறம் எழுதறேன்.

http://www.fsf.org/

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//மைக்ரோசாப்டு இணைய உலகை கண்டு கொள்ளாமல் விட்ட ஆரம்ப காலங்களுக்குப் பரிகாரமாக ஹாட்மெயில் நிறுவனத்தை வாங்கிக் கொண்டார்கள். அத்தோடு ஹாட் மெயில் கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். அவர்களது சேவை போகப் போக நலிந்து கொண்டே போய் ஜிமெயிலும் யாஹூவும் பிரபலமாகிக் கொண்டிருந்தன.//
FYI, MS bought hotmail in late 1997. Around that time Yahoo also annouced Yahoo Mail by purchasing rocketmail.

உண்மைத்தமிழன் சொன்னது…

எல்லாம் சரி.. அதைத்தான் படிச்சு முடிச்சீங்களே.. அப்படியே தமிழ்ல மொழி பெயர்த்து கொடுக்கலாமில்ல.. எங்களை மாதிரி தற்குறியெல்லாம் எப்படி தெரிஞ்சுக்கிறது..?

வவ்வால் சொன்னது…

மாசி,

//அந்த ஆதாயங்களின் அடிப்படை 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிக்கத்தின் தொடர்ச்சி, அந்த ஆதிக்கம் சிறிது சிறிதாக அரிபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவு அடித்தளம் அரித்து விட்ட பிறகு ஒரு சில வாரங்களிலேயே வேர்கள் அரிக்கப்பட்ட மரம் போல சரிந்து போகும் போதுதான் விழித்துக் கொள்வார்கள். அதற்குள் காலம் கடந்திருக்கும்.//

உங்களுக்கு தெரிந்த இந்த ரகசியம் மைக்ரோசாப்ட் நிர்வாகக்குழுவுக்கு தெரியாமல் இருக்கும்னு நினைக்கறிங்களா?

கண்டிப்பாக உங்களுக்கு முன்னரே இதனை உணர்ந்திருப்பார்கள், மாற்று நடவடிக்கையிலும் இறங்கி இருப்பார்கள், ஆனால் வளர்ச்சி என்பது எப்போதும் மேல் நோக்கியே இருக்காது , "inverted bell shape" கிராப் தான் வளர்ச்சியின் நிலை. கொஞ்ச காலம் மேலப்போகும், பின்னர் ஒரு நிலைத்த தன்மை, பின்னர் சரிவு ஏற்படும், பின்னர் அதனை சரி செய்தால் மீண்டும் மேல் கிளம்பும்.

மைக்ரோசட்டிற்கும் அதே தான் உச்சத்தைப்பார்த்தாயிற்று, இனி மென்பொருளில் புதிய ஒன்றை உற்பத்தி செய்ய வேண்டும், அல்லது புதிய வகை தொழிலில் இறங்க வேண்டும், எனவெ தான் மாற்றாக யாஹூ முயற்சி செய்கிறார்கள் போல.

பிராண்டட் கம்பியூட்டர்கள் உற்பத்தியாளர்களுடன் மைக்ரோசாப்டிற்கு ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும், அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து கம்பியூட்டர்களிலும் அதிகப்படியாக இருக்கப்போவது விண்டோஸ் தான்.

மேலும் இண்டெல் உடன் ஒரு ஒப்பந்தம் வைத்துள்ளார்கள், இண்டெல் ரெகமண்ட்ஸ் மைக்ரோசாப்ட் என்றே விளம்பரப்படுத்துவதைப்பார்த்திருக்கலாம்.

லினக்ஸ் வகை மென்பொருள்கள் எல்லாம் எங்கே அதிகம் பயன்ப்பாட்டில் இருக்கு என்று பார்த்தால் எந்த நாட்டில் கணிப்பொறி படிப்பு அதிகம் இருக்கோ அங்கே, எங்கே அதிகம் படித்தவர்கள் இருக்கார்களோ அங்கே என இருக்கும். இந்தியாவில் கூட குறைவான அளவே லினக்ஸ் பயன்படுத்துகிறார்கள்.

எனவே தான் இப்போது மைக்ரோசாப்ட் தனது கவனத்தை வளரும் நாடுகள் பக்கம் திருப்பியுள்ளது, அங்கே மார்க்கெட் பிடித்துவிட்டால் , இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு கவலை இல்லை.

பள்ளிகளுக்கு எல்லாம் இலவச கம்பியூட்டர்களை மைக்ரோசாப்ட் வழங்குவதிலும் ஒரு காரணம் இருக்கு, மைக்ரோசாப்ட் மென்பொருளில் பழகி விட்டால் பின்னர் அவர்களே படித்து பெரியவர்கள் ஆனதும் அதையே விரும்புவார்கள் என்ற ஒரு எண்ணம், 4-5 ஆண்டுகளுக்கு பின்னர் மைக்ரோசாப்டிற்கு அது கை கொடுக்கும்.

வளரும் நாடுகளின் அரசு துறை நிறுவனங்களுக்கு எல்லாம் மானிய விலையில் மென்பொருளை வழங்குவதும் இதில் அடக்கம், மேலும் பல மொழிகளிலும் மென்பொருளை வெளியிட முன்வருவதும் இத்தகைய நடவடிககையே.

எனவே மைக்ரோசாப்ட் முற்றாக அழிந்து விட வாய்ப்பு வெகு குறைவே, சட்டவிரோத திருட்டு மென்பொருள்களே மைக்ரோசாப்டிற்கு முதல் எதிரி, லினக்ஸ் அடுத்தது தான்.

வடுவூர் குமார் சொன்னது…

லினக்ஸ் முலம் எனக்கு அடித்த ஜேக் பாட்டை இங்கு பார்க்கவும்

Santhosh சொன்னது…

சிவா,
எனக்கு வவ்வால் சொன்னது சரியென்று படுகிறது. மேலும் ஆன்லைன் தேடுதலில் யாஹீ, மைக்ரோசாப்டு இருவரும் இணைந்தால் கூகுலுக்கு ஒரு மிகப்பெரும் சவாலை அளிக்க முடியும். இதுவே இவர்களின் நோக்கம்.

open sourceகளின் மிகப்பெரிய பிரச்சனையே, சரியான technical support கிடைக்காதது தான். பெரும்பாலான open source softwareகளுக்கு அனைவரும் நம்பி இருப்பது forumகளையே, இவற்றை நம்பி எப்படி தொழில் செய்ய முடியும் செல்லுங்க? இதுவே மைக்ரோசாப்டோ, ஆரகலாகவோ இருந்தால் ஓடோடி வந்து உதவி செய்வர்கள்(of course காசு வாங்கிட்டு தான்) இதனால் தான் ஓப்பன் சோர்ஸ் பெரிய அளவில் மைக்ரோசாப்டு போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக இல்லை.

அருண்மொழி சொன்னது…

//அல்லது இப்படிப்பட்ட சூழல்கள் தோன்றும் என்பதை உணர்ந்துதான் பில்கேட்ஸ் பாராசூட்டுடன் குதித்து விட்டாரோ?//

ஆம். பில் கேட்ஸ் இதை உணர்ந்தார்

//2000, 2001 ஆண்டுகள் மைக்ரோசாப்டின் உச்சக் கட்ட பருவம். அப்போது மைக்ரோசாப்டு மென்பொருளை புறக்கணிப்பது பைத்தியக்காரத்தனம் என்று பலர் பேசிக் கொண்டார்கள்.//

இப்பொழுது மைக்ரோசாப்டு மென்பொருளை Enterprise Applicationகளுக்கு உபயோகிப்பது பைத்தியக்காரத்தனம் என்று கூறுகிறார்கள்

//பிராண்டட் கம்பியூட்டர்கள் உற்பத்தியாளர்களுடன் //

அனைத்து பிராண்டட் கம்பியூட்டர்கள் உற்பத்தியாளர்களும் லினக்ஸ் தர தயாராக இருக்கிறார்கள்... முன் போல் 100 % மைக்ரோசாப்டு Domination இல்லை
--
//இந்தியாவில் கூட குறைவான அளவே லினக்ஸ் பயன்படுத்துகிறார்கள்.//

உண்மை... ஆனால் இந்த சதவிகிதம் அதிகரித்து கொண்டு வருவதும் உண்மை

//எனவே தான் இப்போது மைக்ரோசாப்ட் தனது கவனத்தை வளரும் நாடுகள் பக்கம் திருப்பியுள்ளது, அங்கே மார்க்கெட் பிடித்துவிட்டால் , இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு கவலை இல்லை.//
தமிழகத்தில் அவர்களுக்கு தோல்வி தான்.

//பள்ளிகளுக்கு எல்லாம் இலவச கம்பியூட்டர்களை மைக்ரோசாப்ட் வழங்குவதிலும் ஒரு காரணம் இருக்கு,//
தமிழகத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது Suse Linux. அதை வைத்து மைக்ரோசாப்ட் செய்த ஒரு த்ரம் தாழ்ந்த செயல் குழப்பத்தை உண்டாக்கியது. ஆனால் அதை சரி செய்து விட்டார்கள்

//வளரும் நாடுகளின் அரசு துறை நிறுவனங்களுக்கு எல்லாம் மானிய விலையில் மென்பொருளை வழங்குவதும் இதில் அடக்கம், மேலும் பல மொழிகளிலும் மென்பொருளை வெளியிட முன்வருவதும் இத்தகைய நடவடிககையே.//
உண்மை

//எனவே மைக்ரோசாப்ட் முற்றாக அழிந்து விட வாய்ப்பு வெகு குறைவே, சட்டவிரோத திருட்டு மென்பொருள்களே மைக்ரோசாப்டிற்கு முதல் எதிரி, லினக்ஸ் அடுத்தது தான்.//
இல்லை முதல் எதிரி, லினக்ஸ் தான். அதனால் தான் 1 டாலருக்கு விக்க முடிவு செய்துள்ளார்கள்

//open sourceகளின் மிகப்பெரிய பிரச்சனையே, சரியான technical support கிடைக்காதது தான்.//

Personal User : இது வரை நீங்கள் எத்தனை முறை Microsoft தொடர்பு கொண்டுள்ளீர்கள்.... நான் தொடர்பு கொண்டதெ கிடையாது

பெரும்பாலான open source softwareகளுக்கு அனைவரும் நம்பி இருப்பது forumகளையே, இவற்றை நம்பி எப்படி தொழில் செய்ய முடியும் செல்லுங்க? இதுவே மைக்ரோசாப்டோ, ஆரகலாகவோ இருந்தால் ஓடோடி வந்து உதவி செய்வர்கள்(of course காசு வாங்கிட்டு தான்) இதனால் தான் ஓப்பன் சோர்ஸ் பெரிய அளவில் மைக்ரோசாப்டு போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக இல்லை.

Enterprise Use : Suse Linux / red Hat Linux / Sun Support is better than MS Support

Of course, Oracle has a very big support.

உண்மை என்னவென்றால் Microsoft Support செலவழிக்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கில் இத்ர Support பெறலாம்

Santhosh சொன்னது…

Arunmozhi,
//Personal User : இது வரை நீங்கள் எத்தனை முறை Microsoft தொடர்பு கொண்டுள்ளீர்கள்.... நான் தொடர்பு கொண்டதெ கிடையாது//
I am talking about production and corporate level systems.

//Enterprise Use : Suse Linux / red Hat Linux / Sun Support is better than MS Support//
There are lots of other applications apart from open source for ex we wanted to migrate to mysql but the issue is if something breaks who will support it, so we dropped the thought. like wise we tried using many open source but due to the lack of support we dropped most of them.

//உண்மை என்னவென்றால் Microsoft Support செலவழிக்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கில் இத்ர Support பெறலாம்//
Even though we are ready to spend money there is a lack of support for these open source softwares. I attended one seminar on the enterprise wide application integration, in that one discussion raised on using open source systems. But majority of them told that, even though we talk about this again and again, none of the application integrator is ready to take the risk due to the lack of support and also since no one knew if it will work effeciently. so the open source has to go a long way to pose threat to microsoft atleast in the enterprise level.

அருண்மொழி சொன்னது…

//I am talking about production and corporate level systems.//

எனவே தனிப்பட்ட பயனை பொறுத்தவரை “Support” (cost of support) என்பது ஒரு வெள்ளை யானை :) :) :)

//so the open source has to go a long way to pose threat to microsoft atleast in the enterprise level.//
உண்மைதான்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,
//MS bought hotmail in late 1997. Around that time Yahoo also annouced Yahoo Mail by purchasing rocketmail.//

தகவலுக்கு நன்றி.

tbcd, உண்மைத்தமிழன்,

மென்பொருளின் மூலநிரல் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் (அறிவியல் கண்டுபிடிப்புகளின் விபரங்களைப் போல). அதன் மூலம்தான் மனித சமூகம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் சாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்ற கொள்கையில் ஏற்படுத்தப்பட்டது free software foundation.

அதற்கு எதிர்மறையாக செயல்படுவது மைக்ரோசாப்டு முதலான நிறுவனங்களின் தொழில் முறை. அதனால் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னேற்றம் பல வகைகளில் முடக்கப்பட்டது என்பது ஒரு சாராரின் கருத்து. அதனுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

அந்த விபரம் புரிந்த நாளிலிருந்து அத்தகைய மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.

இந்தக் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களும் பெருமளவில் இருக்கிறார்கள்.

தமிழில் கட்டுரைகளைப் படிக்க இந்தத் தளத்தைப் பாருங்க
http://amachu.net/

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

//உங்களுக்கு தெரிந்த இந்த ரகசியம் மைக்ரோசாப்ட் நிர்வாகக்குழுவுக்கு தெரியாமல் இருக்கும்னு நினைக்கறிங்களா?//

நிச்சயமாகத் தெரிகிறது என்பதுதான் இந்த இடுகைக்கும் அடுத்த இடுகைக்குமான கருப்பொருள். அதைத் தவிர்க்க எடுக்கும் முயற்சிகள்தான் இப்போது நடக்கும் பரபரப்புகள்.

//பிராண்டட் கம்பியூட்டர்கள் உற்பத்தியாளர்களுடன் மைக்ரோசாப்டிற்கு ஒப்பந்தம் இருக்கும் வரைக்கும், அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து கம்பியூட்டர்களிலும் அதிகப்படியாக இருக்கப்போவது விண்டோஸ் தான்.//

உண்மைதான். ஆனால் தகவல் தொழில் நுட்பத் துறையால் பிராண்டட் கணினிகளே வழக்கொழிந்து போவது நடக்காது என்று யாருக்குத் தெரியும். சில ஆண்டுகளிலேயே அது நடந்து விடலாம்.

//மைக்ரோசாப்ட் முற்றாக அழிந்து விட வாய்ப்பு வெகு குறைவே,//

எப்படிப் உருமாறிப் பிழைக்கப் போகிறார்கள் என்பது கவனித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

வணக்கம் குமார்,

//லினக்ஸ் முலம் எனக்கு அடித்த ஜேக் பாட்டை இங்கு பார்க்கவும்//

முழுகி முத்தெடுக்கும் குழுவில் நீங்க இருக்கீங்க :-)

//ஆன்லைன் தேடுதலில் யாஹீ, மைக்ரோசாப்டு இருவரும் இணைந்தால் கூகுலுக்கு ஒரு மிகப்பெரும் சவாலை அளிக்க முடியும். இதுவே இவர்களின் நோக்கம்.//

அதற்குத்தான் என்னுடைய கேள்வி, ஹாட் மெயிலை சரியாக வளர்க்கத் தெரியாதவர்கள், எம்எஸ்என் தேடுகருவியை வளர்க்கத் தெரியாதவர்கள், யாஹூ மூலம் என்ன சாதித்து விடுவார்கள்?

//open sourceகளின் மிகப்பெரிய பிரச்சனையே, சரியான technical support கிடைக்காதது தான்.//

உங்களுக்கு எந்த ஓப்பன் சோர்ஸ் பயன்பாட்டுக்கு தொழில்நுட்ப ஆதரவு வேண்டும் என்று சொல்லுங்கள். துறையில் மிகப்பெரிய நிறுவனமான ஐபிஎம் ஓப்பன் சோர்ஸ் பயன்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது. நாவல் சூசே, ரெட்ஹாட் ஆரம்பித்து நூற்றுக்கணக்கான
நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அருண்மொழி,

தெளிவுபடுத்தல்களுக்கு நன்றி.

மீண்டும் சந்தோஷூக்குக் கேள்வி? எந்த பயன்பாட்டுக்கு உங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு சேவை தேவைப்பட்டு அது கிடைக்கவில்லை?

அன்புடன்,
மா சிவகுமார்

SathyaPriyan சொன்னது…

Check this link from this months CIO magazine edition.

How the Indian state of Tamil Nadu was putting pressure on the state's technology budget?

அருண்மொழி சொன்னது…

//அந்த விபரம் புரிந்த நாளிலிருந்து அத்தகைய மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன். //

எனக்கு முதலில் புரியவில்லை. புரிந்த பின் நானும் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் விகடனில் (கற்றதும் பெற்றதும்) சுஜாதா அவர்கள் இது குறித்து எழுதியபோது உரைக்கவில்லை...

ஆனால் 15000 கம்ப்யூட்டரும் 20000 மென்பொருளும் வாங்கும் கொடுமை புரிந்த போது தான் நான் விழித்து கொண்டேன்.

எல்காட் நிர்வாக இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

வவ்வால் சொன்னது…

மா.சி,
//உண்மைதான். ஆனால் தகவல் தொழில் நுட்பத் துறையால் பிராண்டட் கணினிகளே வழக்கொழிந்து போவது நடக்காது என்று யாருக்குத் தெரியும். சில ஆண்டுகளிலேயே அது நடந்து விடலாம்.//

எல்லோருக்குமே மோனோப்போலி பிடிக்கவில்லை தான், ஆனாலும் எதார்தத்தின் அடிப்படியில் பார்க்கிறேன்.

சர்வர் பக்கம் லினக்ஸ் வேகமாக வளர்ந்தாலும், மேசைக்கணினி பக்கம் அந்தளவு லினக்ஸில் வளர்ச்சி இல்லையே, இன்னும் 90 சத மார்க்கெட் விண்டோசிடம் தான்.

எதிர்க்காலத்தில் இது குறையலாம்.

end user நிலையில்ப்பார்த்தால் அனைவரும் விண்டோச் பக்கமே போவார்கள். டெல் கொஞ்சம் லினக்ஸை மேசைக்கணி, மடிக்கணினியில் ஆதாரிக்கிறது.

மேசைக்கணி சந்தையில் லினக்ஸ் வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது.

பொதுமக்களின் தயக்கம், மேலும் விண்டோஸ் மென்பொருளை பண்டில் ஆபரில் சிஸ்டம் உடன் அளிப்பது, மேலும் விண்டோஸ் விற்பதால் வியாபாரிக்கும் கமிஷன் கிடைக்கும், லினக்ஸ் விற்பதால் மேற்கொண்டு அதில் அவருக்கு வருமானம் வரவும் வழி இல்லை.இது போன்ற காரணங்களாலேயே தனிநபர் பயன்ப்பாட்டில் விண்டோஸ் ஆதிக்கம் தொடர்கிறது.

அருண்மொழி சொன்னது…

//அப்படியே தமிழ்ல மொழி பெயர்த்து கொடுக்கலாமில்ல.//

ஒரு சிறிய கதை இங்குள்ளது
http://arunmozhi985.blogspot.com/2008/02/blog-post_9586.html

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சத்தியபிரியன், அருண்மொழி.

வவ்வால்,

//சர்வர் பக்கம் லினக்ஸ் வேகமாக வளர்ந்தாலும், மேசைக்கணினி பக்கம் அந்தளவு லினக்ஸில் வளர்ச்சி இல்லையே, இன்னும் 90 சத மார்க்கெட் விண்டோசிடம் தான்.//

மேசைக்கணினி சந்தையின் வளர்ச்சி இன்னும் எவ்வளவு காலம் தொடரும்? செல்பேசிகளின் மூலம் பெரும்பாலானோர் இணையத்தை பாவிக்க ஆரம்பித்து விட்டால், மேசைக்கணினிகளின் பயன்பாடு பல மடங்கு குறைந்து விடும்.

//இது போன்ற காரணங்களாலேயே தனிநபர் பயன்ப்பாட்டில் விண்டோஸ் ஆதிக்கம் தொடர்கிறது.//
உண்மை, ஆனால் அது ஆரோக்கியமான நிலைமை இல்லை என்பதும் உண்மை!

அன்புடன்,
மா சிவகுமார்

Pragash சொன்னது…

வணக்கம் சிவகுமார்! எனக்கு கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிமுகம் சமீபகாலமாகத்தான் ஏற்பட்டிள்ளது.ஒரு சிறிய சந்தேகம், லினக்ஸ் இயங்குதளத்தில் photoshop,corel draw போன்ற வரைகலை மென்பொருட்கள் பாவிக்க முடியுமா?, தங்களின் இடுகை ஒன்றின் பின்னூட்டத்தில் தங்களின் பெயரை செல்வகுமார் என தவறுதலாக போட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் பிரகாஷ்,

WINE என்ற மென்பொருளின் மூலம் விண்டோசில் மட்டும் இயங்கும்படி விற்கப்படும் நீங்கள் குறிப்பிட்ட மென்பொருட்களை லினக்சிலும் பயன்படுத்த முடியும்.

லினக்சிலேயே இயங்கும் மாற்று மென்பொருட்கள், அல்லது இந்த மென்பொருட்களின் லினக்சு பதிப்பு வருவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். அதுவரை வைன் பயன்படுத்தலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்
(செல்வகுமார் என்று எனக்கு ஒரு நல்ல நண்பர். அவரை நினைக்க இன்னொரு வாய்ப்பு ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி நான் சொல்ல வேண்டும் :-)