வியாழன், ஏப்ரல் 09, 2009

நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய குரல்கள்

நாடாளுமன்றத்துக்கு எந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். அதே இழையில் இன்னும் சில சிந்தனைகள்:

தவிர்க்க வேண்டிய கட்சிகள் - 3

மனிதகுலத்துக்கே எதிரான குற்றங்கள் என்று வரையறுக்கப்படுபவை பாசிசக் கோட்பாடுகள்.

பெரும்பான்மை மதத்தினர், பெரும்பான்மை மொழி பேசுபவர், பெரும்பான்மை சாதியினர் விரும்புவது எல்லாம் மற்றவர்கள் மீது திணிக்கப்பட வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று பேசும் பாசிசக் கட்சிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

'இவர்கள் வந்தால் தொழில் துறைக்கு நல்லது நடக்கும்.'
'ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள்'
'பரிநிரல் (open source) மென்பொருள்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள்'
'தனிப்பட்ட முறையில் ஊழல் செய்யாதவர்கள்'

என்று பட்டியலிட பல இருந்தாலும், எந்த காரணத்துக்காகவும் வேரூன்றக் விட்டு விடக் கூடாத கட்சி பாரதீய ஜனதா கட்சி. கன்னியாகுமரி, கோயம்புத்தூர் போன்ற தொகுதிகளில் மற்ற கட்சிகள் வாக்குகளை தமக்குள் பகிர்ந்து கொண்டு விட வெற்றி பெறும் சாத்தியங்கள் இருக்கிறது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

'தேள், நட்டுவாக்களி, பாம்பு இவற்றைக் கண்டதும் எப்படி ஒழித்துக் கட்டுவீர்களோ அப்படி ஆழ்வார்க்கடியானைக் கண்டாலும் அழித்து விடுங்கள்' என்று பொன்னியின் செல்வனில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் சொன்னது போல, எந்த காரணத்துக்காகவும் உள்ளே விட்டு விடக் கூடாத கட்சி பாரதீய ஜனதா கட்சி.

இதே குணங்கள் இருக்கும் ஆனால் குறுகிய கால நோக்கில் அதிகாரத்தைப் பிடித்து விடச் சாத்தியமில்லாத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
தேர்தலுக்குப் பிறகு நேராக பாரதீய ஜனதா கட்சிக்கு குடை பிடிக்கத் தயாராக இருக்கும் அஇஅதிமுக கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்சிகள் - 2

1. தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டு, இன்றைக்கும் காவல் நிலையங்களிலும் அதிகார மட்டங்களிலும் நியாயம் கொடுக்கப்படாமல் இருக்கும் மக்களின் பிரதிநிதியாக நிற்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சி வேட்பாளர்களின் குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிப்பது தமிழகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும். அதிகாரத்துக்கு பெண்களும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் வருவது சமூக அமைப்பினால் அடக்கப்பட்டு இருக்கும் பிரிவினருக்கு உண்மையான விடுதலையைக் கொண்டு வரும்.

ஈழத் தமிழரின் துயரங்களை அரசியல் லாபங்களுக்கு என்றில்லாமல் உண்மையான உறவுடன் பார்ப்பவர்கள், தீர்வுக்கு போராடுபவர்கள் என்ற விதத்திலும் விசிகே தகுதி பெறுகிறது.

2. 'பணம் இருப்பவன்தான் அரசியல்வாதி, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்று மாறிவரும் அரசியல் சூழலில் கொள்கைப் பிடிப்போடு உழைக்கும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று இயங்கும் கம்யூனிச கட்சிகளின் பிரதிநிதிகள் அரசமைக்கும் கூட்டணியில் வலிமையான குரல் பெறுவது தேவை.

'அவர்களது பொருளாதாரக் கொள்கைகள் காலாவதி ஆகிவிட்டன. ரஷ்யாவைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள்' என்று குற்றம் சாட்டுபவர்கள் அமெரிக்காவின், ஐரோப்பாவின் பொருளாதார நிலைமையை அலசிப் பார்த்து விடுவது நல்லது.

உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்ற கம்யூனிசப் புரட்சிக்கு சாத்தியமில்லாத நாடாளுமன்ற ஆட்சி முறையில் இந்தக் கட்சியினரின் பங்களிப்பு நலிந்த பிரிவினர்களின் குரலாக ஒலிக்கும்.

ஒதுக்கப்பட வேண்டிய கட்சிகள் - 2

'கொலை கூடச் செய்து விட்டு வெள்ளை வேட்டியுடன், கழுத்தில் தடித்த தங்கச் சங்கிலியுடன் உலா வரலாம்.'
'ஒரு நாளிதழின் அலுவலகத்தை எரித்துப் போட்டு இரண்டு பேரைக் கொல்லக் காரணமாக இருந்தவர் அடுத்த தேர்தலில் வேட்பாளர் ஆகலாம்'

திராவிட இயக்கத்தின் இறுதிச் சடங்குகளை இனிதே செய்து வரும் கருணாநிதி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குண்டர்கள், பணமுதலைகள் எல்லோரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.

ஏழைகள், கிராமங்கள், சிறுபான்மையினர் என்று பேசிக் கொண்டு அவ்வப்போது ரொட்டித் துண்டுகளை வீசி விட்டு பரம்பரை ஆளும் வர்க்கத்தினரின் நலன்களை பேணும் காங்கிரசு கட்சி. கூப்பிடு தூரத்தில் நடக்கும் இனப்படுகொலைக்காக சுண்டுவிரலைக் கூட அசைக்காத கொலைகார பாதகர்கள் மறக்க முடியாத பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வேறு வழியில்லா விட்டால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்சி - 1

தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

13 கருத்துகள்:

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//'ஒரு நாளிதழின் அலுவலகத்தை எரித்துப் போட்டு இரண்டு பேரைக் கொல்லக் காரணமாக இருந்தவர் அடுத்த தேர்தலில் வேட்பாளர் ஆகலாம்'//

அண்ணே... இரண்டு அல்ல மூன்று!

கடைசியாக ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கீங்களே..

//வேறு வழியில்லா விட்டால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்சி - 1

தேசிய முன்னேற்ற திராவிட கழகம்.//

வேறு வினையே வேண்டாம்.. மற்ற திராவிட கட்சிகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல தே.மு.தி.க.

ஊழல், அடாவடி, அராஜகம்.. என எல்லா வற்றிலும் பழைய திராவிட கட்சிகளை விட ஒரு படி மேலேயே இருக்கிறது இது.

கடந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த முகப்பு செய்தியை படிக்கவில்லையா நீங்கள்? எனெக்கென்னமோ.. எதிரிகளை விட துரோகிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றே படுகிறது. இவர்களை கடைசியில் சொல்லப்பட்டவர்கள் என்பதை தனியாக சொல்லவேண்டாம்.

veerani2001 சொன்னது…

What is the problem with BJP? First remove family politics and curruption politics then their shouldn't be any violance in the country. Every one engaging caste politics for their benefit, can u stop that?

பெயரில்லா சொன்னது…

What about congress..??! u havent talked anything abt congress!! What is ur view opnion on Alliance between VC and DMK?!!?

Unknown சொன்னது…

MR...'இவர்கள் வந்தால் தொழில் துறைக்கு நல்லது நடக்கும்.'
'ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள்'
'பரிநிரல் (open source) மென்பொருள்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள்'
'தனிப்பட்ட முறையில் ஊழல் செய்யாதவர்கள்'

என்று பட்டியலிட பல இருந்தாலும், எந்த காரணத்துக்காகவும் வேரூன்றக் விட்டு விடக் கூடாத கட்சி பாரதீய ஜனதா கட்சி. கன்னியாகுமரி, கோயம்புத்தூர் போன்ற தொகுதிகளில் மற்ற கட்சிகள் வாக்குகளை தமக்குள் பகிர்ந்து கொண்டு விட வெற்றி பெறும் சாத்தியங்கள் இருக்கிறது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

tHATS SURE IN OUR KANYAKUMARI dist THIS TIME bjp will come to power....so dont come to vex why you want avoid BJP...... U ONLY TOLD IN OUR INDIA
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.

BJP ONLY TELLING THIS HOW YOU KNOW.....ONE NATION EVERY PERSON HAVE ONE LAW....ALL PERSONS ARE INDIANS IF ANY PERSONS WILL DO THE MISTAKE EVEN HINDU,MUSLIM,CHRISTIAN..ETC.....BRAHMIN, NAIR, NAIDU, NADAR,....ETC ALL PERSONS HAVE ONE RULE NO NEED....WHO HAVE TALENT HE WILL GET THE CHANCE TO STUDY AND JOB.... SUBSIDY WILL GIVE THE BASIS OF ECONOMY NOT LIKE AS A RELEGION COMMUNITY...EVERY COMMUNITY HAVE POOR PERSONS ALSO...EVERY PERSONS NEED THE COMMON CIVIL RULES AND REGULATION...THAT TIME ONLY OUR INDIA WILL COME UP....OK SO DONT WRITE YOURS "SYCO" THOUGTS HERE... YOU ALSO KNOW BJP WILL COME TO POWER INDIA WILL GO UP...... BUT YOURS NEGATIVE THOUGRS AND INFURIARITY COMPLEX NEVER WILL ACCEPT THIS SO THINK DEEPLY...... WHT EVER U TELL NO PROBLEM THIS TIME ELECTION RESULT FAVOUR OF US IN TAMILNADU ALSO WE WILL GET ATLEAST 2 SEATS HERE(KANYAKUMARI 110%) SURE YOU DNT KNOW ASK ANY KANYAKUMARI FRIEDS....BYE GOD BLESS YOU

கவிதா | Kavitha சொன்னது…

தேசிய முன்னேற்ற திராவிட கழகம்.//

கடைசியில இந்த கட்சிய ரெஃபர் செய்துட்டீங்களே... என்ன ஆச்சி சிவாகுமார்ஜி???? டிஸ்அப்பாயிண்டட்

மாண்புமிகு பொதுஜனம் சொன்னது…

ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பணம் ஒன்றே குறி. என்ன,....எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குக் கமிசன் குறைவாகக் கிடைக்கும்.தோற்றவர்களோ அடுத்து எப்போது சான்ஸ் கிடைக்கும் நாம் மேலேறலாம்,சம்பாதிக்கலாம் என்று வெறியோடு இருக்கிறார்கள்.இதில் யோக்கியன் எந்தக் கட்சியிலும் இல்லை.

இதில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது?
மொள்ளமாறியையா?முடிச்சவுக்கியையா?

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//வேறு வழியில்லா விட்டால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்சி - 1

தேசிய முன்னேற்ற திராவிட கழகம்.//

அடடா.. இப்பதான் கவனிச்சேன். தேசிய முற்போக்கு திராவிடகழகம்-னு நினைச்சு சொல்லிட்டேன். ஆமா.. இது யார் கட்சி தல!?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் பாலா,

//இரண்டு அல்ல மூன்று!//
:-(

//கடைசியாக ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கீங்களே..//

திமுக, அதிமுக, தேமுதிக இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? மற்ற திராவிடக் கட்சிகளுக்கு சளைத்ததல்ல என்பது அனுமானம். ஏற்கனவே ஊழல், அடாவடி, அராஜகம் செய்து காட்டி விட்ட கட்சிகளுக்கு வாக்களிப்பது அதை மேலும் ஊக்குவிப்பது போலாகி விடுகிறது.

//தேசிய முற்போக்கு திராவிடகழகம்-னு நினைச்சு சொல்லிட்டேன். ஆமா.. இது யார் கட்சி தல!?//

(கட்சியில் பெயரைத் திருத்திக் கொண்டேன் :-). சுட்டிக் காட்டியதற்கு நன்றி)

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

veerani2001,

பிஜேபியின் அடிப்படையே தவறு. அவர்களது நடவடிக்கைகள் மக்களுக்கிடையே பேதங்களை வளர்த்து பெரும்பான்மை அரசியலுக்கு துணை போவதாக இருக்கின்றன.

அனானி,

காங்கிரசு ஒதுக்கப்பட வேண்டிய கட்சி என்று எழுதியிருந்தேன். பெயரை தெளிவாகக் குறிப்பிடவில்லையோ!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்றிருந்தால் அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கும். ஆட்சி அமைப்பதில் பங்கிருக்குமாறு அமையும் கூட்டணிகளில் மட்டுமே இடம் பெற வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் மாயாவதியின் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது போல தமிழகத்திலும் நடக்க வாய்ப்புகள் ஏற்படலாம்.

இப்போது திமுகவுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் பெரிதாக சாதித்து விட முடியாதுதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

சுபாஷ்,

பிஜேபி கூட்டத்தினர் அதிகாரத்துக்கு வந்தால் இந்திய நாட்டின் அடிப்படையே தகர்ந்து போகும். நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரும் நீங்கள் சொல்லும்
'THIS TIME bjp will come to powe' நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நானும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். வசதியும் வாய்ப்பும் இருந்தால் இறுதிக் கட்டங்களில் அங்கு வந்து தேர்தல் பணி செய்யலாம் என்று கூட நினைப்பு இருக்கிறது. (பிஜேபி வெற்றி பெற்று விடாமல் தடுப்பதற்கு)

கவிதா,

//கடைசியில இந்த கட்சிய ரெஃபர் செய்துட்டீங்களே.//

மாண்புமிகு பொதுஜனம் சொன்னது போல
//யோக்கியன் எந்தக் கட்சியிலும் இல்லை.
இதில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது?//
என்ற நிலைமை வரும் போது அடாவடி அராஜகம் செய்து கொண்டிருக்கும் கட்சிகளை தவிர்ப்பது குறைந்த பட்சத் தேவை. மற்றவர்களுக்கு அதனால் ஒரு நிதானம் வரலாம். அவ்வளவுதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

வெட்டிப்பயல் சொன்னது…

விஜயகாந்தை தேர்ந்தெடுக்க நீங்க சொல்ற காரணம் ஒரு விதத்துல நியாயமாத்தான் படுது...

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

இத்தனை வருடங்களில் , காங்கிரஸ் ஆட்சி எதனை வருடம், காங்கிரஸ் ஆட்சி இல்லாத பொழுது கூட, காங்கிரஸ் ஆதரவு கொடுத்து ஆட்சி புரிந்தது எத்தனை முறை , நீங்கள் சொன்ன பி ஜே பி , எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தது , நீங்கள் சொன்ன அதே மத கலவரம் யார், யார் ஆட்சியில் எத்தனை முறை, ...என்று ஒரு கனக்கு எடுத்து பார்த்தால், உங்களுக்கே உண்மை தெரியம். சிவ சேனாவை வளர்த்தி விட்டது யார், உண்மையான சிவ சேனா ஆட்கள் , இப்பொழுது, சிவ சேனாவை விட, காங்கிரெஸ்ல் தான் நிறைய. .... மைனாரிட்டி appesment policy உள்ள வரை, அதற்க்கு தகுந்த பதிலும் கிடைத்து கொண்டு தான் இருக்கும், இம்முறை இதன் பெயர் பி ஜே பி, நாளை வேறு ஏதாவது பெயரில் இருக்கும். .... அவனை நிறுத்த சொல் , பின் நான் நிறுத்துகிறேன் .

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வெட்டிப்பயல்,
//விஜயகாந்தை தேர்ந்தெடுக்க நீங்க சொல்ற காரணம் ஒரு விதத்துல நியாயமாத்தான் படுது...//

இவங்களும் வாய்ப்பு கிடைச்சா தப்பு செய்வாங்க, அதனால ஏற்கனவே தப்பு செய்தவர்களுக்கே வாய்ப்பு கொடுப்போம் என்பது சரியில்லைதானே. தேர்ந்தெடுத்துப் பார்ப்போம்.

வாங்க அது ஒரு கனாக்காலம்,

5 ஆண்டு கால ஆட்சியில் அதற்கு முந்தைய 10 ஆண்டு கால வளர்ச்சியில் நாட்டை மனதளவில் துண்டாடி விட்ட பாதகர்கள் பிஜேபி கட்சியினர். அவர்களுக்கு இன்னும் ஒரு முறை அதிகாரம் கிடைத்து விட்டால் இந்தியா சிதறிப் போவதில்தான் முடியும்.

நாட்டுப் பற்று உள்ள ஒவ்வொருவரும் அதைத் தவிர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்