ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

மத்தியில் இப்படி ஒரு அரசு அமையுமா!

உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்தது இந்தியா முழுவதிலும் இன்றைக்கு நடக்கும் என்று வைத்துக் கொண்டால், இந்த தேர்தலில் பத்திரிகைகளின் ஒருமித்த கணிப்பான காங்கிரசு, பாரதீய ஜனதா கட்சி இரண்டும் தலா ஏறக்குறைய 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது கணிப்பாகவே இருந்து விட வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் நடந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் எல்லா பெரிய கட்சிகளும் (சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசு கட்சி) தனித்து போட்டியிட்டன. பெரும்பாலான தொகுதிகளில் நான்கு முனை போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் 'எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, யார் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள், காங்கிரசு யாரை ஆதரிக்கும், பிஜேபி என்ன நிலை எடுக்கும் என்றெல்லாம் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளும் கருத்துக் கட்டுரைகளும் வெளியிட்டன.

நான்காவது பகுதி தேர்தல் முடிந்த பிறகு என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவின் படி கட்சி நிலவரம் இப்படி இருக்கும் என்றார்கள்.
  • BSP - 131 to 141 (98)
  • BJP - 91 to 101 (107)
  • SP - 109 to 119 ()
  • Congress - 33 to 43 (25)
மற்ற கருத்துக் கணிப்புகளிலும் ஏறக்குறைய இப்படித்தான் கருத்து வெளியானது. அந்தந்த ஊடக நிறுவனத்தின் கட்சி அனுதாபத்தின் அடிப்படையில் பிஜேபியின் வெற்றி வாய்ப்புகள் ஏறி அல்லது இறங்கிக் காணப்பட்டன.

இது இன்னொரு பார்வை.
  • BSP - 150 to 160 (98)
  • BJP - 95 to 105 (107)
  • SP - less than 100 ()
  • Congress - 25 to 30 (25)
ஆனால் கடைசியில் மக்கள் என்ன தீர்ப்பளித்தார்கள்?
  • BSP - 206 (98)
  • BJP - 50 (107)
  • SP - 97 (
  • Congress - 22 (25)
இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படி ஒரு மௌனப் புரட்சி காத்திருக்கிறதா? காத்திருக்க வேண்டும் என்று ஆசை. தமிழ்நாட்டிலும் தென் மாநிலங்களிலும் பெரிய தாக்கம் எதுவும் தெரியா விட்டாலும், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் போன்ற இந்தி மொழி பேசும் பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் தேர்தல் முடிந்த பிறகுதான் தெரிய வரும்.

மும்பையிலும், தில்லியிலும் தத்தமது பாரம்பரிய சூழல்களில் மூழ்கிப் போயிருக்கும் ஊடகங்கள் இப்படி ஒரு உள் நீரோட்டம் இருந்தாலும் அதை எதிர்நோக்காமல் போய் விடுவது ஆச்சரியத்துக்குரியதில்லைதான்.

எனது ஆசை:
  1. காங்கிரசு - 90
  2. பாரதீய ஜனதா கட்சி - 95
  3. பகுஜன் சமாஜ் கட்சி - 140
  4. கம்யூனிச கட்சிகள் - 40
  5. சோஷியலிச கட்சிகள் (எஸ்பி, ஆர் ஜே டி, பிஜேடி, ஜேடி-யூ முதலானவர்கள்) - 100
  6. மற்றவர்கள் - 70+
என்று முடிவுகள் வந்து பிஎஸ்பி மற்றும் இடது சாரிக் கட்சிகள் காங்கிரசு ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும். சோஷலிச கட்சிகளில் லாலு, முலாயம் தவிர்த்த பிற கட்சிகள் இத்தகைய ஒரு ஆட்சிக்கு ஆதரவு தருவதும் நடந்தால் காங்கிரசை நம்பி காலம் தள்ள வேண்டியதையும் தவிர்க்கலாம்.

5 கருத்துகள்:

Arun SAG சொன்னது…

BSP 140? is that really possible ? i doubt that.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அருண்,

படித்த கேட்ட தகவல்களின் படி என்னாலும் நம்ப முடியவில்லைதான். அதனால்தான் ஆசை என்று குறிப்பிட்டேன். போன உபி தேர்தலில் நிகழ்ந்ததை சார்ந்து கணக்குப் போட்டேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

Boston Bala சொன்னது…

140 - வாய்ப்பே கிடையாது. 50-60 கிடைத்தாலே போதும். அடுத்த முதல்வர் மாயாவதி என்று சொல்லலாம்.

புருனோ Bruno சொன்னது…

:)

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் பாலா,

காங்கிரசுக்கு 140 என்று கணிப்புகள் சொல்லும் அதே வாய்ப்பு பகுஜன் சமாஜ் கட்சிக்கு இருக்கலாம் அல்லவா!

இரண்டு கட்சிகளுக்குமே ஒரே மாதிரியான ஆதரவுக் குழுக்கள். தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், மேல்நிலை சாதியினர். குறிப்பிட்ட தொகுதியில் எந்த வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கின்றதோ வாக்குகள் அந்த வேட்பாளர் பக்கம் சாயும் போக்கு உண்டு.

மகாராஷ்டிராவில் ரிபப்ளிகன் கட்சி சுத்தமாக தேய்ந்து போய் விட்டதாம். போன தேர்தலிலும் காங்கிரசுக்குப் போக வேண்டிய வாக்குகளை பிரித்து பகுஜன் சமாஜ் கட்சி தனது முக்கியத்துவத்தைக் காட்டியிருக்கிறது. இந்த தேர்தலில் சில தொகுதிகளில் காங்கிரசு வேட்பாளரை விட தமது வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று காண்பித்து விட்டால் வாக்குகள் திசை திரும்பி பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்று விடும்.

இதே நிலைமை தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் இருக்கலாம்.

இதெல்லாம் ஆசைக்குக் கற்பிக்கும் காரணங்கள் :-)

டாக்டர் புருனோ!

உங்கள் சிரிப்பின் உள்ளடக்கம் நன்றாகத் தெரிகிறது :-). கனவு காண்பதற்காவது உரிமை இருக்கத்தானே செய்கிறது.

அன்புடன்,
மா சிவகுமார்