செவ்வாய், ஏப்ரல் 14, 2009

பிரிவினை வாதி அத்வானி - தேசத் துரோகி நரேந்திர மோடி

ஒரு நாட்டை ஒருங்கிணைப்பது அந்த நாட்டின் ராணுவ வலிமையோ, அணு ஆயுத குவிப்புகளோ, பொருளாதார வெற்றிகளோ இல்லை.

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புறம் ஒன்றுடையாள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்று நாட்டில் வாழும் மக்கள் எல்லோருக்கும் சிந்தனையில் உறுதியான இழை ஒன்று ஓட வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பவர்களை எல்லாம் பிடித்து அவர்கள் மனதில் அத்தகையை சிந்தனையை திணித்து விட முடியாது. தன்னலமற்ற தொலைநோக்குடைய தலைவர்களின் சீரிய தொண்டினால் அப்படிப்பட்ட மனப்போக்கு ஒரு நாடு முழுவதும் உருவாகும். அதை உருவாக்க பல ஆண்டுகள், தலைமுறைகள் பிடிக்கலாம்.

தமக்குள் பிளவுபட்டு, நம்மில் ஒரு பகுதியினரை ஒதுக்கி வைத்து, உள்ளுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் இந்தியர் என்ற அடையாளம் அழிந்து போய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடிமைப்பட்டுக் கிடந்தது இந்த நாடு. ஆங்கிலேயர்களின் போர் வெற்றிகளால் நாடு முழுவதிலும் பரவிய ஒரு ஆட்சி நிர்வாகம் ஏற்பட்ட பிறகு மக்களின் மனதில் நாமெல்லோரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என்ற ஒற்றுமை உணர்வை உருவாக்குவதற்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்ப பத்தாண்டுகளில் உழைத்த தேசியத் தலைவர்களின் சாதனைதான் நவீன இந்தியா.

வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை

வாழ்விக்க வந்த தலைவர்கள் தமது வாழ்க்கையையும் செல்வச் செழிப்புகளையும் தியாகம் செய்து பிரிவினைவாதிகளையும், பழமைவாதிகளையும் எதிர்கொண்டு அவர்களது பூசல் உண்டாக்கும் அரசியலை மழுங்கச் செய்து சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் இன்றைய இந்தியாவின் அடித்தளத்தை நிறுவினார்கள். நேரு இந்திய அரசியல் வானிலிருந்து மறையும் போது இந்திய மக்களின் ஒவ்வொருவரின் மனதிலும், 'இது எனது நாடு, இதன் தலைவிதியை நிர்ணயிப்பதில் எனக்கு சமமான பங்கு இருக்கிறது' என்று பெருமையுடன் உணரும் நிலைமை வந்து விட்டிருந்தது.

அந்த மென்மையான உணர்வுபூர்வமான தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் அரசியல் இந்துத்துவா சக்திகளின், அவர்களது அரசியல் முன்னணி பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள். 1980களின் இறுதி ஆண்டுகளில் ஆரம்பித்து ஒவ்வொரு ஆண்டும் மிக முனைப்புடன் இந்திய மக்களை பிரித்துப் போடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி நாட்டின் அடிப்படையையே குலைத்துப் போட முயலும் அத்வானிதான் மிகப்பெரிய பிரிவினைவாதி. இந்தியர்களை ஒருவரை ஒருவர் எதிர்த்து போராடத் தூண்டும் மோடி ஒரு தேசத் துரோகி.

நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையுத் கட்டிக்காக்க இந்த தேசத்தின் பகைவர்களை வேரறுப்போம்.

40 கருத்துகள்:

sriram சொன்னது…

அன்பின் சிவகுமார்
உங்களது சில பதிவுகள் படித்து இருக்கிறேன், பிடித்து இருந்தது. ஆனால் இந்த பதிவு????
போகிற போக்கில் அத்வானி மீதும் மோடி மீதும் சேற்றை வாரி இறைக்கும் நுனிப்புல் பதிவாகவே பார்க்கிறேன்.
இன்னமும் இத்தாலியின் குடியுரிமையை விடாதவளையும் தான் படித்த படிப்பினை பற்றி பொய் சொன்ன அவளது மகனயும் விட அத்வானி எல்லா விதத்திலும் தலைமை பொறுப்புக்கு சிறப்பானவர். தலையாட்டி பொம்மை மற்றும் தேர்தலிலேயே நிற்காத பிரதமரை பற்றி பேச ஏதும் இல்லை. மேலே சொன்ன இருவரும் இன்னமும் அரசியலில் ஆரம்ப பாடம் கூட முடிக்கவில்லை, Nehru family என்பதை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை (it is stupidy that everyone is referreing them as Gandhi family).
வேறு எவராவது இப்போது ரேசில் இருந்தால் சொல்லுங்கள், விவாதிக்கலாம், அவர் சிறந்தவரா அல்லது அத்வானி சிறந்தவரா என்று. அதனால் தான் மேலே சொன்ன இருவர் பற்றி சொல்ல வேண்டியதாகிவிட்டது.
Solution சொல்லாமல் Problem பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பது வீணாய் போன communist களின் பழக்கம். அத்வானி, மோடியை வேரறுத்து விட்டு யாரை பிரதமராக ஆக்குவதாக உத்தேசம், பேரை சொல்லுங்கள், பேசுவோம்.

நீங்கள் சொல்ல மாட்டீர்கள் (என நம்புகிறேன்), ஆனால் திராவிட குஞ்சுகள் கிளம்பி பின்னாலே பின்னோட்டம் இடும் - அவனா நீ? பூணூல் நெளியுது, நீ பாப்பானா? etc etc - அவனுங்களுக்கு இது - ஆமாம் நான் அவன்தான், அதுக்கு என்ன இப்போ? முடிந்தால் கருத்துடன் மோதிப்பார், இல்லேன்னா மூடிக்குனு போ (இது ஒரு பதிவில் இந்திய கொடியை எரித்து தப்பு என்று நான் சொன்ன பொது வந்த பேச்சுக்களை கண்டதினால் வந்த கோவம்)
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston USA

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீராம்,

போகிற போக்கில் சேற்றை இறைக்கவில்லை ஸ்ரீராம். அரசியலை கவனித்து, கொஞ்சம் அலசிப் பார்க்க ஆரம்பித்த நாட்களிலிருந்தே இந்துத்துவா அரசியலின் அழிவு வழிகளை தாங்க முடியாமல்தான் உணர்ந்து வருகிறேன்.

சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும், மன்மோகன் சிங்கையும் குறை சொல்கிறீர்கள். நீங்கள் சொல்பவை உண்மைதான். அவர்கள் தலைமையில் நாட்டின் நிர்வாகத்தில் பல குறைபாடுகள் இருக்கும்.

என்னுடைய கருத்து 'நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசியல் பாஜகவின் அரசியல்' என்பது. நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள். அங்கு இது போல சமூகத்தில் வெறுப்பைத் தூண்டக் கூடிய கட்சிகள் அனுமதிக்கப் படுகின்றனவா என்ன?

மக்களாட்சி முறை இன்னும் நன்கு வேரூன்றிய ஒரு நாட்டில் பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் அரசியலில் ஈடுபடவே வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்.

பாரதீய ஜனதா கட்சி, பற்றி, இந்துத்துவா அரசியல் பற்றி நிறையவே எழுதவும் விவாதிக்கவும் செய்திருக்கிறேன்.

http://masivakumar.blogspot.com/search/label/இந்துத்துவா

அன்புடன்,
மா சிவகுமார்

மங்கை சொன்னது…

அதிகமான விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண்ட மஹ்காராஷ்டிர விதர்பா பகுதி அரசியல் வாதிகளின் சொத்து, போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கு பன்மடங்கு உயர்ந்திருக்காம்..

இந்த புள்ளி விவரம் எல்லாம் வெளியே வருது ஆனா கேட்க தான் ஆள் இலை..

ம்ம்ம்ம்

Unknown சொன்னது…

அன்புள்ள சிவாவிற்கு,

ஸ்ரீராம் சொல்லியது போல்...நீங்கள் அத்வானியை ஒரேயடியாக தூற்றுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

/--நேரு இந்திய அரசியல் வானிலிருந்து மறையும் போது இந்திய மக்களின் ஒவ்வொருவரின் மனதிலும், 'இது எனது நாடு, இதன் தலைவிதியை நிர்ணயிப்பதில் எனக்கு சமமான பங்கு இருக்கிறது' என்று பெருமையுடன் உணரும் நிலைமை வந்து விட்டிருந்தது.--/

இது தேவையில்லாமல் ஊடகம் பரப்பிய செய்தியோ என்று தோன்றுகிறது. பிரிவினை வேண்டாம் ஜின்னாவை பிரதமராக்கலாம் என காந்தி சொன்ன போது நேரு மறுத்தது ஏன்? அதிகப் படியான ஆதரவு பட்டேலுக்கு இருந்தும் நேரு பிரதமரானது எப்படி? நாட்டின் பிரிவினைக்கு ஆதி காரணம் நேரு குடும்பத்தாரின் அதிகார ஆசையோ என்று தோன்றுகிறது... அந்த ஆசை தான் அதிகப் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் தோன்றுகிறது.( சத்திய மூர்த்தி பவனில் பார்த்ததில்லையா உட்கச்சி பூசலை )

சரி இந்துத்துவா போன்ற கட்சிகள் இருப்பது இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது சரி. முஸ்லீம் லீக் கட்சிகள் என்ன மதச்சார்பற்ற கட்சியா என்ன?

இந்துக்களுக்கான அமைப்புகள் இருப்பதை கண்டிக்கும் பலர், பிற மத அமைப்புகளை அல்லது ஜாதி அரசியல் செய்கிறவர்களை, அல்லது ஒரு பிரிவை முன்னிருத்த்தி அரசியல் செய்கிறவர்களை ஏன் கண்டிப்பதில்லை?

மேலும் இந்துக்களில் முக்கால் வாசிப்பேர் நாத்திகர்கள் அல்லது சொந்த மதத்தையே கேலி செய்பவர்கள். அவர்களிடமிருந்து காப்பாற்ற ஒரு அமைப்பு இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அமைப்பைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயமோ கலவரமோ செய்தால் அது கண்டனத்திற்குரியது.

தவறிருந்தாலோ... காயப்படுத்தியிருந்தாலோ மன்னிக்கவும் சிவா.

அன்புடன்,
கிருஷ்ணப் பிரபு.

கல்வெட்டு சொன்னது…

மதங்கள்,சாதிகள்...போன்ற போதை வஸ்தாதுகள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. எப்படி வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஆடையணிந்து (உள்ளுக்குள் நிர்வாணமாய் இருந்தாலும்) வருகிறோமோ அதுபோல சாதி,மத நிர்வாணங்கள் தெருவில் அம்மணமாய் அலையவது நல்லது அல்ல. எந்த புண்ணாக்கு மதமாய்,சாதியாய் இருந்தாலும்.

**

//சரி இந்துத்துவா போன்ற கட்சிகள் இருப்பது இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது சரி. முஸ்லீம் லீக் கட்சிகள் என்ன மதச்சார்பற்ற கட்சியா என்ன?//

மதவாதக் கட்சிகள் எல்லாம் அழிக்கப்படவேண்டும். இந்துத்துவாவும் அழிய வேண்டும் முஸ்லீம் லீக்கும் அழியவேண்டும் என்று சொல்லுங்கள். அதைவிடுத்து ஒன்றின் இருப்பைக்காட்டி மற்ற ஒன்றின் இருப்பை நியாயப்படுத்தல் சரி என்றால் அது உங்களின் விருப்பம்.

**


சோனியாவோ,மாயவதியோ அல்லது ராகுலோ சொக்கத்தங்கம் அல்ல. எல்லாம் சராசரி அரசியல்வாதிகள்தான்.

சபிக்கப்பட்ட சமுதாயம் இந்தியா. :-(((

**

சோனியா இத்தாலி குடியுரிமை கொண்டவர் கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியப்பிரஜை மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். திருமணத்திற்குப்பின்னும் அவர் இத்தாலிய குடியிரிமையைவிடாமல் இருந்தது உண்மை. ஆனால் இப்போது அவர் இந்தியக் குடியிரிமை மட்டுமே கொண்டவர்.

இந்தியா இரட்டைக்குடியுரிமையை அங்கீகரிக்காத நாடு.

**

அத்வானி பற்றி....

இந்துக் கோவில் கட்டுவேன் என்ற ஒரு கொள்கையை தேர்தல் அறிக்கையாகக் கொண்ட ஒரு கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர் எப்படி மதச்சார்பில்லா நாடு என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு நாட்டின் பிரதமாராக கூச்சநாச்சம் இல்லாமல் போட்டியிடுகிறார்?

***

இவர்களின் தேர்தல் அறிக்கைய‌ப் பாருங்கள். வெளியுறவுக் கொள்கை, வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு, நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள்,சுகாதாரம்,கல்வி ...என்று எந்த விசய‌ங்களிலும் தெளிவான வழிகாட்டும் கொள்கை விளக்கங்கள் இருக்காது.

எந்த அடிப்படையில் எதற்காக போட்டியிடுகிறோம் என்ற தெளிவு இல்லாதவர்கள்.

***

அத்வானியோ,சோனியாவோ,மாயவதியோ யார் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. முட்டாள்கள் வாழும் நாட்டில் ஆகச்சிற‌ந்த முட்டாளே முதல் ரேங்க் வாங்கியவராக அறிவிக்கப்படுவார்.

***

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கிருஷ்ணபிரபு,

//தவறிருந்தாலோ... காயப்படுத்தியிருந்தாலோ//

கருத்துக்களை பரிமாறிக் கொள்ளத்தானே எழுதவும் பின்னூட்டவும் செய்கிறோம். எனக்குப் புரிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் உங்கள் புரிதல்களை எடுத்து சொல்கிறீர்கள். அதில் என்ன தவறிருக்கிறது! :-)

//இது தேவையில்லாமல் ஊடகம் பரப்பிய செய்தியோ என்று தோன்றுகிறது. பிரிவினை வேண்டாம் ஜின்னாவை பிரதமராக்கலாம் என காந்தி சொன்ன போது நேரு மறுத்தது ஏன்? அதிகப் படியான ஆதரவு பட்டேலுக்கு இருந்தும் நேரு பிரதமரானது எப்படி?//

ஊடகங்கள் பரப்பிய செய்திகள் வைத்து நான் சொல்லவில்லை. நான் பல நூல்களை படித்ததில், அந்த காலத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டதில் புரிந்து கொண்டதாகப் பட்டதைத்தான் சொன்னேன்.

நேருவுக்கு இருந்த உலகப் பார்வையும், மனிதநேய நோக்கும், பெருந்தன்மையும்தான் இந்தியாவின் பதினெட்டுக்கும் அதிகமான மொழிகள் பேசும், நான்கைந்துக்கும் அதிகமான மதங்களை பின்பற்றும் இந்திய மக்களை ஒருங்கிணைக்க உதவியது என்று கருதுகிறேன்.

தென்ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் தலைமைக்கு இணையானது நேருவின் பணி.

நேரு குடும்பத்தார் அவரளவு இல்லை என்பது உண்மை. மக்களை பிரித்தாளும் போக்கு இந்திரா காந்தியிடம் இருந்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அந்தப் போக்கு தெரியவில்லை.

பாரதீய ஜனதா கட்சி முதலான மத அடிப்படையிலான கட்சிகள் எதற்குமே மக்களாட்சி முறையில் இடம் இருக்கக் கூடாது. கல்வெட்டு சொல்வது போல அவன் செய்கிறான் அதனால் நானும் செய்வேன் என்று இரண்டு தவறுகள் ஒரு போதும் சரியாகி விட முடியாது.

//அமைப்பைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயமோ கலவரமோ செய்தால் அது கண்டனத்திற்குரியது.//

அதைத்தான் பிஜேபியும் அதன் சகோதர இயக்கங்களும் செய்து வருகின்றன என்பதை பார்க்கிறோம் அல்லவா!

கல்வெட்டு சொல்வது போல மதம் வீட்டுக்குள் இருப்பது வரை சரி, தெருவுக்கும், அரசியலுக்கும் மதம் அடிப்படையாக இருந்தால் எக்காலத்திலும் அழிவுதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் மங்கை,

//இந்த புள்ளி விவரம் எல்லாம் வெளியே வருது ஆனா கேட்க தான் ஆள் இலை..//

வருத்தமான உண்மைங்க. சீக்கிரமா விழித்துக் கொண்டால் பிழைத்தோம்.

வாங்க கல்வெட்டு,

//முட்டாள்கள் வாழும் நாட்டில் ஆகச்சிற‌ந்த முட்டாளே முதல் ரேங்க் வாங்கியவராக அறிவிக்கப்படுவார்.//

அவ்வளவு ஒட்டுமொத்தமா முத்திரை குத்திடாதீங்க பிளீஸ் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

Jawaharlal Nehru, Indian statesman (1889-1964).
A self-professed atheist, he said of India, "No country or people who are slaves to dogma and dogmatic mentality can progress." [Key Ideas in Human Thought]

கல்வெட்டு சொன்னது…

//அவ்வளவு ஒட்டுமொத்தமா முத்திரை குத்திடாதீங்க பிளீஸ் :-)//


சிவா, இது உண்மை சிவா.

சோற்றால் அடித்த பிண்டங்களாக நாம் இன்னும் இருக்கும் முட்டாள்களில் எந்த முட்டாளைத் தேர்ந்தெடுப்பது என்றுதான் பேசுகிறோம்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஈழப்பிரச்சனை ஒரு முக்கிய விசயமாக அனைவராலும் பேசப்படுகிறது. தமிழனக் காவலன் எxxxது நாங்கள் ஜெயித்தால் வெளியுறவு கேபினட் அமைச்சகத்தையும் ,இராணுவ அமைச்சகத்தையும் கேட்டுப்பெறுவோம். வெளியுறவுக் கொள்கைகளை எல்லைப்புற மாநிலங்களின் ஆதராவோடு திருத்தி அமைப்போம் என்று சொல்கிறார்களா???

**
கழக பிரியாணிக் குஞ்சுகளும் (பிரியாமணி அல்ல) நக்கிப்பிழைக்கும் நாய்களாக Why do we exist as a political party and what are our core principles என்று தெரியாமல் அவனவன் அவன் சார்ந்த தலிமை எடுத்த கூட்டணி முடிவுக்கு வக்கலாத்து வாங்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

**

வியாக்கியானம் மட்டும் பேசும் நானும் முகெலும்பில்லாத கோழைதான்.
ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணர்வது முக்கியம். இல்லை என்றால் மந்தையுடன் தான் மிச்ச வாழ்வும் இருக்கும்.

**

சென்ஷி சொன்னது…

உண்மையை சொல்லணும்னா இங்க யாருக்குமே தலைமைப்பொறுப்பு இல்லைன்னு எளிதா சொல்ல முடியுது. மாற்றா யோசிக்கணும்னு நினைக்கும்போது ஆளில்லாத வெறுந்தன்மைதான் நம்ம மனசுக்குள்ள ஓடுது..

மா.சி. உங்க கருத்து ரொம்ப சரிதான். இஸ்லாமியர்களை பத்தி தீவிரவாதிங்கற கருத்து பரப்பிட்டு இருக்கறதாலயோ, அதிகமா சொத்து சேகரிச்சு தன்னோட வாரிசுகளின் எதிர்காலத்த பத்திரப்படுத்துறவங்ககிட்டயோ நாம ஆட்சியை ஒப்படைக்க முடியாதுதான்.

ஆனால் மறுபடி நமக்கு முன்னாடி நிக்குற ஒரே கேள்வி மாற்றுன்னு நாம யாரை நம்புறது. இவனை நம்பினா அவனை விட இவன் அதிகமா கொள்ளை அடிப்பானோங்கற பயத்துல தெரிஞ்சவங்களுக்கு ஓட்டு போடுற தலையெழுத்துதான் இன்னமும் இங்க இருக்குது.

இதுக்கு தீர்வு தப்பு செய்யறவனுக்கு தண்டனை நீதித்துறை மூலமா உடனடியா கிடைக்கறா மாதிரி செய்யறதுதான். அது நிச்சயம் கடுமையானதா இருக்கவேண்டியது அவசியமாகுது. அவங்க எத்தனைப்பெரிய பதவியில இருந்தாலும் சரி.. அப்பத்தான் நமக்கு நல்ல தலைவர்கள் இல்லைங்கற கவலை தீரும். ஏன்னா இங்க தலைவங்கற பேர்ல தப்பு செய்யறவன் தப்பிக்கறதாலதான் பிரச்சினையே :-(

இப்படியே விட்டுட்டு போயிட்டு இருந்தா என்னிக்காச்சும் அமேரிக்கா இங்க வந்து நமக்குள்ள பஞ்சாயத்துக்கு உக்கார்ந்திக்க போகுது!

மா சிவகுமார் சொன்னது…

//Jawaharlal Nehru, Indian statesman (1889-1964).
A self-professed atheist, he said of India, "No country or people who are slaves to dogma and dogmatic mentality can progress." [Key Ideas in Human Thought]//

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அனானி. நேருவை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு மனதளவில் உயரமான தலைவர்கள் வேறு யாரும் சுதந்திர இந்தியாவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் மீது சொல்லப்படும் எல்லாக் குறைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க உறுதியான அடித்தளத்தை உருவாக்கிய பெருமை அவருக்குரியதே.

கல்வெட்டு,

வழக்கம் போல உங்கள் ஆணித்தரமான கருத்துக்களை தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். :-)

வாங்க சென்ஷி,

கல்வெட்டு சொல்வது போல மக்களின் தகுதிக்கேற்ற தலைமைதான் வாய்க்கும் என்பது ஒரு புறம்.

//அவனை விட இவன் அதிகமா கொள்ளை அடிப்பானோங்கற பயத்துல தெரிஞ்சவங்களுக்கு ஓட்டு போடுற தலையெழுத்துதான் இன்னமும் இங்க இருக்குது.//

கொள்ளை அடிப்பவர்களை அடுத்த ஆட்சி வந்து மாட்டி வைக்கலாம். அதற்கு அடுத்த தலைமுறையில் நேர்மையானவர்கள் தலைவர்கள் ஆகலாம். இது மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஆனால் பாஜக போன்ற கட்சிகளை இதனுடன் சேர்க்கக் கூடாது. பாஜக குறித்து எனக்குப் புரிவது, அவர்களது அரசியல் நமது அமைப்புகளையே குலைத்துப் போட்டு விடக் கூடியது என்று.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

மிக நல்ல பதிவு.

கண்டிப்ப அத்வானி பிரிவினைவாதிதான்
நரேந்திர மோ(கே)டி ஒரு தேசத் துரோகிதான். இதில் என்ன மாற்று இருக்கிறது?

கல்வெட்டு சொன்னதுபோல் மதவாதக் கட்சிகள் எல்லாம் அழிக்கப்படவேண்டும். இந்துத்துவாவும் அழிய வேண்டும் முஸ்லீம் லீக்கும் அழியவேண்டும் என்று சொல்லுங்கள்.

எனக்கு தெரிந்து, முஸ்லீம் லீக் கலவரத்தை தூண்டி மக்களை பிளவு படித்தியதாகவே கொன்றதாகவோ தெரியவில்லை.

அத்வானியும் நரேந்திர கேடியும் தானே இது எல்லாம் செய்தனர்.

@ஸ்ரீராம், அத்வானி எப்படி தலைமை பொறுப்புக்கு சிறப்பானவர் இல்லை என்பதை, நீங்களே அறிந்து கொள்ளலாம், அவர் உள்துறை அமைச்சராக இருக்கும் போதுதான், காந்தஹார் விவகாரத்தில் தாலிபான் தீவிரவாதியை பணம் கொடுத்து விடிவித்தது நடந்தது.

முஸ்லீம்கள் மற்றும் கிருத்துவர்களின் ரத்ததிலேயே அவர்கள் கட்சி வளர்க்கின்றனர்.

மன்மோகன் சிங் சிறந்த தலையாட்டி பொம்மைதான, ஆனாலும் கெட்டவனிலும் கொஞ்சம் கெட்டவனுக்கு வாக்களீப்போமே...

@கிருஷ்ணப் பிரபு, கண்டிப்ப இந்துக்களுக்கான அமைப்பு நல்லதுதான்... நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு, பல இடங்களில் மின்சாரம் இருப்பது இல்லை, நமது நாட்டில் அனைத்து சாலைகளும் மோசமாவகே இருக்கிறது, சரியான உணவு கிடைக்க வில்லை, இப்படி பல சொல்லலாம் ஆனால் நீங்கள் ஆதரிக்கும் அத்வானிக்கும் நரேந்திர மோடிக்கும் இராமர் கோயில் கட்டுவதுதான் மிக முக்கியமான வேலையாக உள்ளது, நான் வசிப்பது இராமேஸ்வரம் பக்கம்தான்... இங்கு வந்து கோயிலை பாருங்கள், இராமேஸ்வரம் போகிற வழியில் பல கோயில்கள் சிதிலடைந்து உள்ளன, அவற்றை சரி செய்யட்டும்.

சரி எப்படி இருந்தாலும், நமது ஓட்டை மற்றவர்கள் போடுவதற்கு முன், யாருக்கவது ஓட்டுபோடுங்கள்

கல்வெட்டு சொன்னதுபோல்
சபிக்கப்பட்ட சமுதாயம் இந்தியா. :-(((

நன்றியுடன்
மஸ்தான் ஒலி

Unknown சொன்னது…

/// அப்படி நாட்டின் அடிப்படையையே குலைத்துப் போட முயலும் அத்வானிதான் மிகப்பெரிய பிரிவினைவாதி. இந்தியர்களை ஒருவரை ஒருவர் எதிர்த்து போராடத் தூண்டும் மோடி ஒரு தேசத் துரோகி.
///

I am tired of projecting again and again about the dramatic development that Modi has created in Gujarat. Without a vision and capability how could he do this? How could he unite his people towards all the progresses this state has made?

I have reservations about Advani compared to Modi. But Advani is an excellent choice in comparison to white skinned sonia or pupper manmohan.

A recent survey says that 70% of educated section of indian society wants either Modi or Advani to be the PM for a stronger Hindustan

PARAMS

கல்வெட்டு சொன்னது…

//தகுதிக்கேற்ற தலைமைதான் வாய்க்கும்//

நிச்சயம் சிவா.

இருப்பது போதும் என்று நினைக்கும்போது அங்கே வளர்ச்சி தடைப்படுகிறது.

இருப்பதில் எது நல்லது என்று தேடினால் அழுகிய தக்காளிக்கூடையில் முறைந்தபட்ட அழுகலையே தேர்ந்தெடுக்கமுடியும்.

நல்ல தலைமை வேண்டும் என்று நினைக்கும் மக்கள் புதிய தலைமையை தேடவேண்டும்.

ரோட்டில் சிக்னலை மதிக்காத xxxடங்களும்,வரிசையில் எப்படி நிற்பது என்று தெரியாத xxxxகளுக்கும் கொள்ளை அடிப்பவர்களே தலைவர்களாக வருவார்கள். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

கல்வெட்டு சொன்னது…

சென்ஷி...

நீதிபதிகள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல. நாம் வாழும் சமுதாயத்தில் இருந்து ,நீதிபதியாக வேலை பார்ப்பவர்கள்தான்.

http://en.wikipedia.org/wiki/2006_Delhi_sealing_drive

//In September 2007, four Mid-Day journalists were sentenced to four months imprisonment by the Delhi High Court for contempt of court (making such allegations about an ex-judge)[4]. Vitusha Oberoi, an editor at Mid-day, said: "We have said that what we have said is the truth (in their articles relating to former Chief Justice of India Y K Sabharwal) and that is why we should not be hauled up for contempt."[5].//

சபர்வால் போல நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும் நீதித்துறையிலும்.

போக்குவரத்துதுறைபோல நீதித்துறையும் இந்தியமக்களாலே நிர்வகிக்கப்படும் ஒரு துறை.

***

நல்லவன் கக்கூசுகூட்டினாலும் அவன் வேலையை நன்றாகச் செய்வான். அயோக்கியன் அரசனாக இருந்தாலும் பதவி அவனை நல்லவனாக மாற்றாது.

எதிர்காலத்திலாவது நல்லவர்களை உருவாக்க நல்ல குழந்தைகளை உருவாக்க வேண்டும்.

கல்வெட்டு சொன்னது…

//
I am tired of projecting again and again about the dramatic development that Modi has created in Gujarat. ///

கவலப்படாதீங்க. நானும் உங்கள மாதிரிதான். இந்தப் புரியாத சோற்றால் அடித்த பிண்டங்களுக்கு தலைவர் வீரமணியைப்பற்றிச் சொல்லிச் சொல்லியே சுண்ணாம்பாகிவிட்டேன். அயோத்தியா குப்பம் வீரமணியை உங்களுத்தெரியுமா என்று தெரியவில்லை. அவர் பல ஆயிரம் மக்களுக்கு கடவுளாக இருந்தவர். அவரால் நன்மை அடைந்தவர்கள் பலர். அவர் செய்த நன்மைகள் பலருக்கு (அவரை அறியாதவர்களுக்கு) தெரியாது. நானும் அவரின் பெருமைகளை எல்லாம் மற்றவ்ர்களுக்குச் சொல்லிச் சொல்லி (நீங்கள் மோடியை பற்றிச் சொல்லி சொல்லி டயர்டாகிவிட்டதைப் போல) நானும் ட‌யர்டாகிவிட்டேன்.

**

//Without a vision and capability how could he do this? How could he unite his people towards all the progresses this state has made? //

நான் எனது வீட்டில் பல பொருட்களை வைத்துள்ளேன். எனது வீடு மற்ற வீடுகளைவிட சிறந்தது. நினைத்துப் பார்க்கவே முடியாத வசதிகள் கொண்டது. செல்வச் செழிப்பனாது.

எனக்கு உள்ள இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையைப் பிடிக்காது.அறவே பிடிக்காது. எனது குழந்தைதான் இருந்தாலும் பிடிக்காது.அவ்வப்போது அந்தக் குழந்தையை கத்தியால் குத்துவேன். நான் நல்ல தகப்பனா? நீங்கள் சொல்லுங்கள்.(சென்ற ஆண்டு சிறந்த தொழில் அதிபர் அவார்டு வாங்கியுள்ளேன் மறக்காதீர்கள்.)

***
மோடியின் நாடு பல முதலீட்டாளர்களை கவர்ந்து இருக்கலாம். அதைக் காரணம்காட்டி சக மாநில மக்களையே கொன்று குவித்த அவலத்தை மன்னிக்க முடியாது. அவர் இதுவரை அந்தச் செயலுக்காக வருத்தப்படவில்லை.

மோடி நல்ல முதல்வர் இல்லை. நல்ல மனிதன் இல்லை ஆனால், முதலீடுகளை பெறத்தெரிந்தவர்.

***

அப்புறம் எப்படி அந்த மாநில மக்கள் அவரையே தேர்ந்தெடுத்தார்கள் ..என்று நீங்கள் கேட்கலாம். xxxx கூட்டத்துக்கு ஒரு வலிமையான xxxx தலைவராக முடியும். அவர் xxxளால் தேர்டுக்கப்பட்டார் என்பதற்காக நாங்களும் தலைவராக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

நாங்கள் எலிகள். அவரைக் கண்டு அஞ்சுகிறோம், அதற்காக அவரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் இல்லை.

****

//
I have reservations about Advani compared to Modi. But Advani is an excellent choice in comparison to white skinned sonia or pupper manmohan.

A recent survey says that 70% of educated section of indian society wants either Modi or Advani to be the PM for a stronger Hindustan
//

சென்னையில் அல்லது ஏதோ ஒரு இந்திய காஸ்மாபலிட்டன் சிட்டியில் காலை நேர பீக் அவரில் ரோட்டில் நின்று பாருங்கள். சாலை விதியை மீறுபவன்,ரோட்டில் எச்சி துப்புறவன், ட்ராபிக் போலிசுக்கு இலஞ்ம் கொடுப்பவன் .....இவர்கள் எல்லாம் நீங்கள் சொல்லும் அந்த 70% எஜுகேட்டட் கம்னாட்டிகள்தான். இவர்கள் அத்வானியை தேர்ந்தெடுப்பது நியாயமானது. இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

அந்த 70% எஜுகேட்டட் கம்னாட்டிகள் உள்ள நாட்டில்தான் லஞ்சம் தலைவிரி்த்து ஆடுகிறது.

அந்த 70% எஜுகேட்டட் கம்னாட்டிகள் உள்ள நாடுதான் எஸ்ட்ஸில் சக்கைப்போடு போடுகிறது.

அந்த 70% எஜுகேட்டட் கம்னாட்டிகள் உள்ள நாடுதான் அடிப்படைச் சுகாதாரம் என்றால் என்ன என்பதுகூட தெரியாமல் இருக்கிறது.

உறையூர்காரன் சொன்னது…

மா.சி,

சரியான நேரத்தில் சரியான பதிவு. வாழ்த்துக்கள்.

பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் தீவிரவாத தாக்குதல்கள் என்கிற வரிசையில் அகமதாபாத், பெங்களூரு, ஜெய்ப்பூர், மும்பை குண்டுவெடிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு மட்டும் இடம்பெறவில்லை. இங்கு அத்வானிக்கும், மோடிக்கும் வக்காலத்து வாங்குபவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.

மேலும் குண்டு வைத்து கொன்றாலும் கொலைதான் கலவரம் என்கிற பெயரில் உயிருடன் எரித்துக் கொன்றாலும் கொலைதான். பறிக்கப் பட்டது மனித உயிர்தான். இதை உணராதவர்கள் நிச்சயமாக மனிதர்களாக இருக்க முடியாது

பெயரில்லா சொன்னது…

கடவுளுக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என சொல்லும் இந்து மதத்தில் ராமர் இங்கு தான் பிறந்தார் என்று நாட்டில் பிரிவினையை தூண்டும் அத்வானி ஒரு தேச துரோகிதான் .

பெயரில்லா சொன்னது…

//A recent survey says that 70% of educated section of indian society wants either Modi or Advani to be the PM for a stronger Hindustan

//

70 % of 3 percent? = 2.1 percent of indians??

:):)

கல்வெட்டு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கல்வெட்டு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கல்வெட்டு சொன்னது…

//கடவுளுக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என சொல்லும் இந்து மதத்தில் ராமர் இங்கு தான் பிறந்தார் என்று நாட்டில் பிரிவினையை தூண்டும் அத்வானி ஒரு தேச துரோகிதான் .//

ம்ம்ம்...

அன்னானி,
அத்வானி/மோடியின் மதச்சார்பு அரசியல் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது. இந்த அளவில் அவர்களை விமர்சிக்கலாம்.

ஜெனராலக இந்துமதம் பற்றி விமர்சிக்க வேண்டாமே.... இது அரசியல் பதிவாக இல்லாமல், மத விவாதப்பதிவாக போய்முடிய அதிக வாய்ப்பு உள்ளது.

கடவுளுக்கு உருவமே இல்லை என்று சொல்லும் இஸ்லாம்கூட தூதர் நபி மற்றும் பிற காரணங்களுக்காக மெக்காவை ஒரு குறியீடாக்குகிறது. எல்லா இடமும் கடவுளுக்கு சமம்தான் என்று சொல்லி (ஒலிம்பிக் விளையாட்டுபோல) வருடத்திற்கு ஒரு நாடு/ஊர் என்று , இந்த ஆண்டு மெக்கா அடுத்த ஆண்டு இத்தாலியில் ஒரு நாடு அதற்கு அடுத்து இந்தியாவில் இராசபாளையம் என்று நடைபெறுவது இல்லை. எப்போதும் மெக்காதான் முக்கிய இடமாக இருக்கும் இஸ்லாமியருக்கு. அதுபோலத்தான் இந்துமதமும்.இராமரை அவதாராமாக் காட்டி ஆயோத்தி அரசியல் நடத்துகிறது.

பாலஸ்தீன-‍இஸ்ரேல் அரசியலும் ஜெருசலேம் என்ற புனித ஊர் குறித்தான சண்டைகளின் நீட்சியே.

**

மதங்கள் என்பவை தனி அரசியல் குறீயீடுகள் கொண்டவை. அதற்குள் போகாமல் இந்திய ஜனநாயக அரசியலில் மத அரசியலின் கலப்பால் வரும் பிரச்சனைகளை மட்டும் பேசினால் நன்று.

மற்றபடி உங்கள் விருப்பம்.


***

அரசிலமைப்புப்படி மதச்சார்பற்ற ஒரு நாட்டிற்கு, மதவியாதிகள் மதக் கொள்கையுடன் தலைவராகக்கூடாது என்பதுதான் முக்கியம். அத்வானி/மோடியின் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை அவர்கள் வீட்டுக்குள் வைத்துக் கொண்டு, பொது வாழ்வில் எல்லா மக்களையும் சமமாக நடத்தினால் யார் அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கையை விமர்சிக்கப்போகிறார்கள்.

மணிகண்டன் சொன்னது…

இந்தியா முதல் பிரதமராக ஒரு நாத்திகரை பெற்றது இறைவன் கொடுத்த வரமே ! பிளவுபடாமல் இருக்க அது ஒரு முக்கிய காரணம்.

ஆனால் இன்று வருன் காந்தி போன்றவர்கள் தேசிய அளவில் பிரபலம் அடைய எடுக்கும் முயற்சியே பிரிவினைவாத பேச்சுக்கள். இவ்வாறான பேச்சுக்களில் வேண்டிய ஆதரவு கிடைக்கிறது. ஏன் என்று யோசிக்க வேண்டும் ? நக்சலிசம், தீவிரவாதம் என்றால் அதை கண்டிப்பதற்கு பதிலாக அதற்குரிய காரணங்களை களையவே பெரிதும் முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் இவ்வாறான மெஜாரிட்டி மதத்தை சேர்ந்த மக்களின் மனபான்மைக்குரிய காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்தது உண்டா ? பலவருடங்களாக மைனாரட்டி appeasement என்று மைனாரிட்டி மக்களை ஏமாற்றி வந்து இருக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். இல்லையேல் அவ்வாறான கண்ணோட்டம் வரும் அளவிற்கு பிரச்சாரம் செய்து வந்து உள்ளது. இதற்கு மாற்றாக ஒரு கட்சி பேச ஆரம்பித்த பிறகு அவர்களுக்கு மெஜாரிட்டி மதத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கிறது. அவர்களின் வெறி பேச்சு மெது மெதுவாக ஏற்றுக்கொள்ள படுகிறது. ஆனால் உண்மையில் மெஜாரிட்டி appeasement முன்பு இருந்த கொள்கைகளை விட அபாயகரமானது.

பி ஜே பி ஆட்சி செய்த ஐந்து வருடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட மத தீவிரவாதம் அதிகமாகவோ / குறைவாகவோ இருந்ததாக தெரியவில்லை. ஆதலால் அத்வானி ஆட்சிக்கு வந்தால் பிரிவினை தான் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அவ்வாறான ஒரு கண்ணோட்டத்தை வரவழைக்கும் முயற்சி நிச்சயமாக நடக்கும். மோடியை போன்ற ------------ இதற்கு பெரிதும் உதவுவார்கள்.

மதானியின் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கம்யூனிஸ்ட் இருக்கும்வரை பி ஜே பி க்கு தேவையற்ற ஆதரவு நிச்சயம் பெருகும். ஆனால் இன்னும் சில வருடங்களில் தேசிய கட்சிகளின் நிலை இன்னமும் தேய்ந்து பிராந்திய கட்சிகள் வலுப்பெறும். அது ஏதாவது ஒருவகையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வந்தால் நல்லதே.

உறையூர்காரன் சொன்னது…

மன்னிக்க வேண்டும் மணிகண்டன்.

//மெஜாரிட்டி மதத்தை சேர்ந்த மக்களின் மனபான்மைக்குரிய காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்தது உண்டா ? //

இந்தியாவில் மெஜாரிட்டி என எந்த ஒரு இனக்குழுவும் கிடையாது. மெஜாரிட்டி என்கிற ஒரு மாயசொல்லை பயன்படுத்தி இந்து சனாதான மதத்தை சேர்ந்த உயர்சாதியினர் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்துக்களுக்காக போராடும் அமைப்பு எனக் கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் எனப்படும் அமைப்பிற்கு தலைவர்களாக உயர்சாதியினர் (குறிப்பாக பார்ப்பன/சத்திரிய சாதியை) சேர்ந்தவர் மட்டுமே இருந்து வருகின்றவர். முதலில் இந்தியாவின் மெஜாரிட்டியான் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து ஒரு தலைவரை ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுக்கட்டும் பிறகு மெஜாரிட்டி மக்களைப் பற்றி பேசலாம்

மணிகண்டன் சொன்னது…

உறையூர்காரன்,

பி ஜே பி யின் இந்துமத பிரச்சாரத்திற்கு இந்தளவு ஆதரவு கிடைத்ததற்கான காரணம் என்ன ?

தமிழ் நாட்டில் ராமர் ஒரு பிராமணிய கடவுள். ஆனால் வேறு மாநிலங்களில் அவர் ஒரு பொதுஜன கடவுள் ! அதே போன்று, பி ஜே பி பார்ப்பனீய ஆதரவு மட்டும் வைத்து இவ்வளவு பெரிய கட்சியாக எப்படி மாற முடிந்தது ? தமிழ்நாட்டில் இருக்கும் சூழலை வைத்து இந்தியா முழுவதையும் ஆராய முடியாது.

நான் ஆர் எஸ் எஸ் பிரச்சாரம் செய்ய முயற்சி எடுக்கவில்லை. அவர்களின் தலைவனாக பிராமணரோ / சத்ரியரோ (???) இல்லாமல் வேறு ஒருவர் வந்து இதே மதப்பிரச்சாரம் செய்து ஒரு கட்சி பிரபலம் அடைந்தாலும் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது.

திராவிட மனப்பான்மையை வைத்து இந்தியா முழுதும் உள்ள சூழலை நீங்கள் அலசுகிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

இல்லையென்றால் வருண்காந்தி போன்று ஒருவர் பிதற்றும் சொற்களுக்கு ஆதரவு இருப்பது ஏன் ?
அயோத்தி பிரச்சனையை மட்டும் வைத்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த கட்சி ஆட்சியை பிடிக்க முடிந்தது ஏன் ? இவை அனைத்திற்கும் பார்ப்பனீயம் மட்டுமே காரணம் என்று உங்களால் எப்படி நம்ப முடிகிறது ?

பெயரில்லா சொன்னது…

டேய் கேனகூ______சிவா ....எந்த நாட்டுலயாவது இந்த அளவுக்கு மத்த மதத்தினருக்கு சுதந்திரம் உண்டா...... கேரளாவின் சில ஊர்களுக்கு இந்துக்கள் போககூட முடியாது...... அங்க சுததிரமா பாகிஸ்தான் கொடி பறந்திட்டிருக்கும், சோனியா வந்ததுக்கு பிறகு இந்தியாவில் மதமாற்றம் பலமடங்கு அதிகமாகி இருக்கு, நேரு குடும்பம் முழுவதும் இப்பொழுது கிறிஸ்தியன் தான், மதசார்பின்மை என்ற போர்வையில் தனிச்சிறப்பான இந்து மதம் இன்று சோனியாவின் ஆசியுடன் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது , அதற்க்கு உன்னைபோல ஒருசில சோத்துக்கு_________ தின்றும் முட்டாள் கூ________ களும் விளக்கு புடிக்கிரீங்கள், அதனால கொஞ்சம் பொத்திக்கிட்டு இருடா பொறம்போக்கு பு__________. பல நூல்கள படிச்சி இவரு கண்டுபிச்சாராம் பாஜக இந்தியாவை அழிக்கிறது என்று ..........குருட்டு கூ..............

பீர் | Peer சொன்னது…

அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி!
தலைப்பில் எந்த சந்தேகமும் இல்லை. அதை நிதரிசனமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

• குஜராத்தில் மோடி நடாத்திய தாண்டவம்.
• அண்டை மாநிலம் கர்னாடகத்தில் எடியூரப்பா (பா ஜ க) ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு நடாத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மட்டுமின்றி ராம்சேனாவின் வெறியாட்டம்…
இவைகளுக்கு கட்சி கொடுத்த ஆதரவு மற்றும் அதிகார பலம்.
இவர்கள் ஒவ்வொறு தேர்தலுக்கும் பாபரி மஸ்ஜித், இந்துத்துவா பேசியே ஆட்சியை பிடித்துவிடலாம் என பகல் கனவு காணுகிறார்கள். இவர்களின் கனவுக்கோட்டையை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதன் மூலம் தகர்த்தெறிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தான் பிரிவினையை தூண்டுகிறார்கள் என்பது என் புரிதல்.

பெயரில்லா சொன்னது…

This is how Godhra case is built against Modi. Refer to today's Times of India report.

//

Teesta sexed up Godhra affidavits Dhananjay Mahapatra | TNN



New Delhi: NGOs and social activist Teesta Setalvad added morbidity to the ghastly incidents of post-Godhra riots by cooking up macabre tales of wanton killings, the Supreme Court was told by former CBI director R K Raghavan-headed Special Investigation Team.
Many such incidents were cooked up, false charges were levelled against the then police chief P C Pandey and false witnesses were tutored to give evidence, the SIT report submitted before the court said.

POST-GODHRA RIOTS



Witnesses tutored, gave identical affidavits: SIT


New Delhi: Post-Godhra pogrom was a horror, and what made it even worse are the attempts by NGOs and activist Teetsa Setalvad to sex up documents. The SC-appointed Special Investigation Team, which submitted a report to the court, said it had been ‘alleged’ in the Gulbarg Society case that the then police chief P C Pandey, instead of taking measures to protect people facing the wrath of rioteers at Gulbarga Society, was helping the mob.
“The truth was that he was helping hospitalization of riot victims and making arrangements for police bandobast,” said Mukul Rohtagi, Gujarat counsel senior advocate. Rohtagi said 22 witnesses, who had submitted identical affidavits before various courts relating to riot incidents, were questioned by the SIT which found that they have been tutored and handed over the affidavits by Setalvad and that they had not actually witnessed the riot incidents.
The SIT also found no truth in
these following incidents widely circulated by the NGOs: A pregnant Muslim woman Kausar Banu was gangraped by a mob, who then with sharp weapons gouged out the foetus Dumping of bodies into a well at Naroda Patiya Police botching up investigation into killing of British nationals, on a visit to Gujarat and unfortunately got caught in the riots.
Armed with the report, Rohtagi tried to spruce up the image of the Modi administration, only to be reminded by the Bench that but for the SIT, many more accused would not have been brought to book.
The Bench said there was no room for ‘allegations’ and counterallegations at this late stage. “In riot cases, the more the delay, there is likelihood of falsity creeping in. So, there should be a designated court to fasttrack the trials. It also asked for suggestions from the Gujarat government, Centre, NGOs and amicus curiae Harish Salve, who said the time has come for the apex court to lift the stay on trials into several post-Godhra riot cases. //

Unknown சொன்னது…

அடிப்படையான ஒரு விஷயம் என்னவெனில்... மனிதன் என்று இடவாரியாக, சமூக வாரியாக பிரிந்தானோ அன்று முதல் பிரிவினை என்பது தவிற்க முடியாத ஒன்றாகிவிட்டது. அது மனித இனத்தின் துர் அதிர்ஷ்டம் தான்.

நான் பா.ஜா.கா வையோ அத்வானியையோ ஆதரிக்கவில்லை.

இந்து மதத்தை ஆதரிக்கிறேன். அதிலுள்ள சாரங்களை நேசிக்கிறேன். மேலும் இந்துக்களே அதிலுள்ள நல்ல விஷயங்களை கேலி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிற மதத்திலுள்ள நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டிகிறேன்.

பிற மதத்தைக் காட்டிலும் இந்துக்களில் அதிக நாத்திகம் வளருவதை தடுக்க வேண்டும் என்கிறேன்.

உழவர் திருநாளையும் ( இது தை மாதம் வருவது), தமிழ் புத்தாண்டு ( இது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரையில் வருவது) ஒரே நாளில் மாற்றியது வேறு எங்காவது இது போன்ற மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா?. அப்பொழுது நமது மூதாதையர்கள் என்ன முட்டாள்களா?

இது போன்ற செயல்களைத் தான் வெறுக்கிறேன்.நீங்கள் சொல்லியது போல் சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் ஊழல் அரசியல் இருக்கும் வரை என்ன செய்வது மஸ்தான்.

நல்ல தலைவர் இல்லையென புலம்புகிறோம்.கர்ம வீரனுக்கு எங்கு போவது?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் மஸ்தான்,

//கல்வெட்டு சொன்னதுபோல் மதவாதக் கட்சிகள் எல்லாம் அழிக்கப்படவேண்டும். இந்துத்துவாவும் அழிய வேண்டும் முஸ்லீம் லீக்கும் அழியவேண்டும் என்று சொல்லுங்கள்.//
அப்படி எல்லோரும் சொல்லும் நாளில் நாம் சிறப்பான மக்களாட்சியைப் பார்க்க முடியும்.

//எனக்கு தெரிந்து, முஸ்லீம் லீக் கலவரத்தை தூண்டி மக்களை பிளவு படித்தியதாகவே கொன்றதாகவோ தெரியவில்லை.//

மதத்தில் பேரில் வன்முறையைத் தூண்டுவது முஸ்லீம் லீகில் நடக்கவில்லையா என்ன?!

பரம்ஸ்,

கல்வெட்டு உங்கள் வாதங்களுக்கு பதில் சொல்லி விட்டார். தலைமை என்பது கெட்டிக்காரத்தனம் மட்டும் கொண்டதில்லை. இந்தியா போன்ற நாட்டின் அரசியலை வழி நடத்த மோடியின் வழிமுறைகள் எந்த வகையிலும் பொருந்தாதவை.

உறையூர்க்காரன்,

//மேலும் குண்டு வைத்து கொன்றாலும் கொலைதான் கலவரம் என்கிற பெயரில் உயிருடன் எரித்துக் கொன்றாலும் கொலைதான். பறிக்கப் பட்டது மனித உயிர்தான். இதை உணராதவர்கள் நிச்சயமாக மனிதர்களாக இருக்க முடியாது//

அப்படி உணர்ந்த மனிதர்களும் இருப்பதால்தான் அத்தகைய கொலைகாரர்கள் கட்டுக்குள் இருக்கிறார்கள். விழிப்புணர்வு அவசியம் தேவை, இல்லையென்றால் எல்லோரும் அசந்திருக்கும் போது சுருட்டிப் போட்டு விடுவார்கள்.

மணிகண்டன்,

//ஆதலால் அத்வானி ஆட்சிக்கு வந்தால் பிரிவினை தான் என்று என்னால் நம்ப முடியவில்லை.//

1. காந்தகாருக்கு தீவிரவாதியைக் கொண்டு போய் ஒப்படைத்தது தனக்குத் தெரியாமல் நடந்தது என்கிறார் அப்போது உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு.

2. அவரது கட்சி அவரது இயக்கம் ஏற்பாடு செய்து கூட்டத்தை கட்டுப்படுத்து இயலாமல், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குக்குட்பட்ட ஒரு புராதன கட்டிடம் இடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்.

அரசியலமைப்பைக் கட்டிக் காப்பதாக எப்படி உறுதி அளிக்க முடியும்.

3. குஜராத் படுகொலைகளின் போது, கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க உள்துறை அமைச்சராகவோ, தனது கட்சியின் மூலமாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.

இந்திய மக்களை பிரித்து ஆள முயலும் அவரது போக்கைத்தான் பிரிவினைவாதம் என்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

உறையூர்க்காரன்,

//இந்தியாவில் மெஜாரிட்டி என எந்த ஒரு இனக்குழுவும் கிடையாது. மெஜாரிட்டி என்கிற ஒரு மாயசொல்லை பயன்படுத்தி இந்து சனாதான மதத்தை சேர்ந்த உயர்சாதியினர் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி வருகின்றனர்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து மதத்தை வளர்க்கட்டுமே. அதை விட்டு விட்டு சூலாயுதமும் வேலாயுதமும் தூக்கி பகை வளர்க்கும் பாதகத்தைச் செய்கிறார்கள்.

//பி ஜே பி யின் இந்துமத பிரச்சாரத்திற்கு இந்தளவு ஆதரவு கிடைத்ததற்கான காரணம் என்ன ?//

ஒரு பெரு நகரம் முழுவதும் மக்கள் கூட்டத்தில் பயத்தைத் தூண்டி விடுவது நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட விரல் விட்டு எண்ணி விடக் கூடிய சிலரால் செய்து விடக் கூடியது.

பயம், நிச்சயமின்மை, சந்தேகம் இவற்றைக் கிளப்பி விட்டு சந்தடிச் சாக்கில் தமது நோக்கங்களை நிறைவேற்றுக் கொள்வதுதான் இந்தப் பிரிவினைவாத கட்சிகளின் உத்தி.

அதுதான் வடநாட்டில் நடந்தது. தமிழ்நாட்டுச் சூழலில் வேண்டுமானால், கன்னியாகுமரி மாவட்டத்தையும் குண்டு வெடிப்புக்குப் பின் கோயம்புத்தூர் நகரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகைமை எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன்.

அனானி,
//எந்த நாட்டுலயாவது இந்த அளவுக்கு மத்த மதத்தினருக்கு சுதந்திரம் உண்டா...... //

வேறு நிறைய நாடுகளில் கிடையாது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கிடைக்கின்றன.

நமது இந்தியா போல எல்லா மதத்தினரும் ஒன்று கூடி வாழும் சூழல் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பது உண்மை.

அந்தச் சூழல்தான் இந்த இந்துத்துவாவாதிகளுக்கு ஒத்து வரவில்லை. அதைக் குலைக்க முயலும் அவர்களது முயற்சிகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தேசபக்தனின் கடமையும்தானே!

//சோனியாவின் ஆசியுடன் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது//

ஒரு சோனியா காந்தியால் அழிக்கப்பட்டு விடுமளவுக்கு எங்கள் இந்து மதம் சிறுமைப்பட்டு விடவில்லை. பெருமுகத் தன்மையும், எல்லா தர்மத்தையும் அரவணைத்துச் செல்லும் வளைவும் இந்து மதத்தை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வைக்கும். அதற்கு இந்தக் கொலைகாரர்களின் சூழ்ச்சி தேவையில்லை.

வாங்க peer,
//இவர்களின் கனவுக்கோட்டையை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதன் மூலம் தகர்த்தெறிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தான் பிரிவினையை தூண்டுகிறார்கள் என்பது என் புரிதல்.//

அந்தத் திட்டத்தை புரிந்து கொண்டு நாம் ஒற்றுமையைக் கட்டிக் காத்தால் கூத்தாடிகள் அடுத்த ஊரைப் பார்க்கப் போய் விடுவார்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//This is how Godhra case is built against Modi//

அனானி, தகவலுக்கு நன்றி.

'குஜராத் படுகொலைகள் தவறு. அதை செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்' என்று பாஜக எங்காவது அறிவித்திருக்கிறதா? மோடி அப்படி சொன்னதாக ஏதாவது செய்தி இருந்தால் அதையும் அறியத் தரவும்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

எனது பயணம்,
//இந்து மதத்தை ஆதரிக்கிறேன். அதிலுள்ள சாரங்களை நேசிக்கிறேன். மேலும் இந்துக்களே அதிலுள்ள நல்ல விஷயங்களை கேலி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிற மதத்திலுள்ள நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டிகிறேன்.//

இந்து மதம் காட்டும் ஆன்மீக வழிகள் உயர்ந்தவை. இந்து மதம் கொடுக்கும் தனிமனித சுதந்திரம், காரணபூர்வமான நடத்தைகள் எனக்கும் வாழ்க்கையில் வழி காட்டி வருகின்றன.

இந்துத்துவா என்ற பெயரில் பாஜகவும் அதன் தொடர்பு இயக்கங்களும் செய்யும் நடவடிக்கைகள் இந்து மதத்தை சிறுமைப்படுத்துகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்து மதத்தை மேம்படுத்த வேண்டுமானால், இந்து சமூகத்தின் முகப்புண்ணாக விளங்கும் சாதி அமைப்பை ஒழிக்க இயக்கம் ஆரம்பிக்கட்டும். அல்லது ஆக்கபூர்வமான மற்ற பணிகளில் ஈடுபடட்டும். மற்ற மதத்தவர் மீது பகை வளர்ப்பதுதான் இந்து மதத்தைக் காக்கும் வழி என்று நடந்து கொள்ளும் இவர்களை ஆதரிப்பது பெரும்பாவம்.

அன்புடன்,
மா சிவகுமார்

மணிகண்டன் சொன்னது…

*********
மணிகண்டன்,

//ஆதலால் அத்வானி ஆட்சிக்கு வந்தால் பிரிவினை தான் என்று என்னால் நம்ப முடியவில்லை.//

1. காந்தகாருக்கு தீவிரவாதியைக் கொண்டு போய் ஒப்படைத்தது தனக்குத் தெரியாமல் நடந்தது என்கிறார் அப்போது உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு.

2. அவரது கட்சி அவரது இயக்கம் ஏற்பாடு செய்து கூட்டத்தை கட்டுப்படுத்து இயலாமல், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குக்குட்பட்ட ஒரு புராதன கட்டிடம் இடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்.

அரசியலமைப்பைக் கட்டிக் காப்பதாக எப்படி உறுதி அளிக்க முடியும்.

3. குஜராத் படுகொலைகளின் போது, கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க உள்துறை அமைச்சராகவோ, தனது கட்சியின் மூலமாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.
************************


****
1. காந்தகாருக்கு தீவிரவாதியைக் கொண்டு போய் ஒப்படைத்தது தனக்குத் தெரியாமல் நடந்தது என்கிறார் அப்போது உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு.
****

இதற்கும் பிரிவினைக்கும் சம்பந்தம் என்ன ? இந்தியாவில் தீவிரவாதத்தை கையாள ஒரு நிலையான கொள்கை கிடையாது. அன்று, விமானத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட ஒரு முடிவு. அத்வானி தனக்கு தெரியாது என்று சொல்வது அரசியல். இதற்கும் பிரிவினைவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

2. 3. ) இரண்டும் மறுக்க முடியாத உண்மைகள். தண்டிக்கபட வேண்டியது அவசியம்.

மசூதி இடிக்கப்படும் போதும், ராமர் கோவிலுக்கு அடிக்கல் (foundation) நாட்டும் போதும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். அடிக்கல் இட ஒத்துழைத்தால் இந்து வாக்கும், அதற்கு பிறகு அதை தடுத்தால் முஸ்லிம் வாக்கும் கிடைக்கும் என்று பிரிவினைவாத கணக்கு போட்டது காங்கிரஸ் அரசாங்கம்.

அவர்கள் ஆட்சியில் இருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிவினைவாத போக்கு அதிகாமகவோ / குறைந்ததாகவோ தெரியவில்லை. அதை வைத்தும் நான் சொன்ன கருத்தை பார்க்கலாம்.

பயம் வரவழைத்து ஆட்சியை பிடித்தது உண்மையாக இருக்கலாம். அந்த பயம் வர காரணமாக காங்கிரஸ் அரசாங்கத்தின் முட்டாள்தனமான கொள்கைகள் தான் காரணமாக இருக்கிறது. இதை எண்ணி பார்த்து, அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுத்தால் தான் பி ஜே பி யின் வாக்கு சதவீதம் குறையும்.

மா சிவகுமார் சொன்னது…

மணிகண்டன்,

//இதற்கும் பிரிவினைக்கும் சம்பந்தம் என்ன ? இந்தியாவில் தீவிரவாதத்தை கையாள ஒரு நிலையான கொள்கை கிடையாது. அன்று, விமானத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட ஒரு முடிவு. அத்வானி தனக்கு தெரியாது என்று சொல்வது அரசியல். இதற்கும் பிரிவினைவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//

நான் இடுகையில் எழுதியது போல, பிரிவினை மக்களின் மனதில் வேறுபாடுகளை விதைப்பது. அதைத்தான் அத்வானியின் கட்சி செய்தது, செய்து வருகிறது.

அதை நியாயப்படுத்துவதற்கு காங்கிரசின் நடவடிக்கைகளை காரணமாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆட்சியிலும் அதே மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. அதைச் சுட்டிக் காட்டவும், தனது பொறுப்பிலிருந்து அவ்வளவு எளிதாகக் கழன்று கொள்ளும் அத்வானியின் குணத்தைக் காட்டவும்தான் காந்தகார் நிகழ்ச்சியை குறிப்பிட்டேன்.

//இரண்டும் மறுக்க முடியாத உண்மைகள். தண்டிக்கபட வேண்டியது அவசியம்.//

சில நூறு கரசேவகர்களை சரியாக வழிநடத்தத் தெரியாமல் நாட்டின் அரசியலமைப்பை அவமதித்த அத்வானி எப்படி அரசுப் பொறுப்பில் அமர்ந்து அரசமைப்பைக் கட்டிக் காக்கப் போகிறார்.

காங்கிரசு செய்வது பிழைப்புக்கான அரசியல். அதை இந்துக்களுக்கு எதிரான சூழ்ச்சியாகச் சொல்லி, பல மதத்தினருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் பிரிவினை அரசியல்தானே!

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

MaSi,

this is an old mail that i had sent to thiru.Rajinder Puri who had intiated the infamous JAin-hawala case in 1995 :

"Lord Rama & L.K.Advani"

To : Mr.Rajinder Puri,

Dear Sir,

I belive in karma and dharma. Advani has been punished partlyfor his past sins in using the Ram templefanatics of VHP, etc tofurther his political career since 1980s.VHP and Co are alteast sincere andconsistent in their fanatisism.They are genuine communalists and facisits, who do not belive indemocracy. but they are honest and forthright. neverdouble dealingnor political animals. But Advaniis a crafty and cynical politician,and a'pseudo-communalist'. VHP is right in being disillusioned withhim, who carefully used thieragenda (Ram temple) to whip up apopulist mass base and votes. And due topolitical expediancy, heabandoned Ram temple later. Advani, whose ratha yatra (whichdirectly resulted inthe murder of 1000s of innocents in 1990)would have become PM, but for the Jain hawala case. (thanksto your PIL) ; and now he stands discredited and powerlesswithin his own group. Lord Rama has done justice. And Advani will neverbe PM in India.

Om tat Sat.

Regards
Athiyaman
Chennai

Renga சொன்னது…

அருமையான பதிவு.. நான் 12 வருடங்களாக இந்திய அரசியலை உற்று நோக்கி வருகிறேன்..

எனக்கு தெரிந்து.. அத்வானி ஒரு மதவாதி & பிரிவினைவாதி மட்டுமல்ல அவருக்கு இந்தியா மற்றும் இந்தியா மக்களின் நலனில் அக்கறையே கிடையாது என்று என்னால் அடித்து கூற முடியும்...

ஒரு நாளில் 10 மணி நேரம் அரசியல் பேசுகிறார் என்றால்.... 9 மணி நேரம் தீவிரவாதம் மற்றும் 1 மணி நேரம் ராமர் பற்றியே இருக்கும்.. இந்திய பொருளாதாரம், வளர்ச்சி விகிதம், வேலை வாய்ப்பு பற்றி அவர் பேசுவதே இல்லை...

பெயரில்லா சொன்னது…

//அத்வானி எப்படி தலைமை பொறுப்புக்கு சிறப்பானவர் இல்லை என்பதை, நீங்களே அறிந்து கொள்ளலாம், அவர் உள்துறை அமைச்சராக இருக்கும் போதுதான், காந்தஹார் விவகாரத்தில் தாலிபான் தீவிரவாதியை பணம் கொடுத்து விடிவித்தது நடந்தத/// HE SAVED ONLY PUBLIC NOT ANY MINISTER AND HIS FAMILY. CONGRESS ALSO DID ONCE FOR PDP FOUNDER'S DOUGHTER , WHY DON'T YOU REMEMBER

-L-L-D-a-s-u சொன்னது…

கல்வெட்டு அவர்களின் வாதம் அருமை.

ஒஸாமா கூட மிகச்சிறந்த நிர்வாகியாய் இருக்கலாம் . அதற்காக அவனை பிரதமராக ஏற்பார்களா இந்த 70% கம்னாட்டிகள் . எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் ,
கொலைகாரன் கொலைகாரந்தான் .

படித்த கம்னாட்டிகள் வாக்களிக்காததுதான் நல்லது .

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அதியமான்,

//Lord Rama has done justice. And Advani will neverbe PM in India.//

முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும் என்பது அத்வானிக்கு நிச்சயமாக பொருந்த வேண்டும்.

ரங்கா,

//இந்தியா மற்றும் இந்தியா மக்களின் நலனில் அக்கறையே கிடையாது என்று என்னால் அடித்து கூற முடியும்... //

அத்வானி மற்றும் அவரது கட்சி மற்றும் அதைச் சார்ந்த இயக்கங்களின் அக்கறையும் இந்தியா என்று வரையறையும் வேறு விதமாக இருப்பதுதான் பிரச்சனை என்று எனக்குத் தோன்றுகிறது. தாம் நினைப்பதை செயல்படுத்திக் காட்டி விட வேண்டும் என்ற உறுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களைப் பொறுத்த வரை அதுதான் சரியான பாதை. மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை அவ்வளவுதான்.

அனானி,

//HE SAVED ONLY PUBLIC NOT ANY MINISTER AND HIS FAMILY. CONGRESS ALSO DID ONCE FOR PDP FOUNDER'S DOUGHTER , WHY DON'T YOU REMEMBER//

100க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்ற அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். அதை சரி, தவறு என்று வாதாடுவது தேவையில்லைதான். எனக்கு உறுத்துவது, அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த தனக்கு முடிவில் தொடர்பே இல்லை என்று அத்வானி சொல்வதுதான்.

அன்புடன்,
மா சிவகுமார்