வெள்ளி, ஜூன் 18, 2010

அமெரிக்க உயிர்களும், இந்திய உயிர்களும்

'Compared to 11 deaths reported during oil rig explosion, Bhopal's tragedy has claimed the lives of 15, 0000 men, women and children.'

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு

While the US government holds BP and its CEO Tony Heyward directly responsible for the spill; in 1984, the US embassy pushed for 'safe passage' for the then Union Carbide chief Warren Anderson.

14 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

//While the US government holds BP and its CEO Tony Heyward directly responsible for the spill; in 1984, the US embassy pushed for 'safe passage' for the then Union Carbide chief Warren Anderson.
//

சிவா,
அமெரிக்காவைக் குற்றம் சொல்லமுடியாது. எது எப்படி இருந்தாலும் அவர்கள் அவர்களின் நலனுக்காக மட்டும் போராடுவார்கள்.

கொடுமை என்னவென்றால் இந்திய அரசும் அமெரிக்காவின் நலனுக்காக போராடுவதுதான்.

கேள்வி கேட்க வேண்டியது மற்றும் குற்றம் சுமத்த வேண்டியது இந்தியா அரசாங்கமும் அதன் அல்லக்கை ஆட்சியும்.

போபார்ஸ், போபால், பிடி கத்திரிக்காய் , என்ரான் என்று எதிலும் இந்திய அரசு அமெரிக்க நலனுக்காக சொம்பெடுக்கும்.

குற்றம் சாட்டப்படவேண்டிய இலக்கை திசைதிருப்பாதீர்கள்.

**

எந்த சட்டம்/ கோர்ட் வழக்கு என்று எதுவும் இல்லாமல் உட்கார்ந்து பேசி இரண்டு நாளில் பிபி இவ்வலவு கொடுத்தாக வேன்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்தியா ??

FYI:
https://www.blogger.com/comment.g?blogID=27385378&postID=6285855449475459508

கல்வெட்டு சொன்னது…

//While the US government holds BP and its CEO Tony Heyward directly responsible for the spill; in 1984, the US embassy pushed for 'safe passage' for the then Union Carbide chief Warren Anderson.//

???????

I was under the impression that India is governed by some peoples from Indian parliament. I was wrong. :-(((

**


What happened just a week before?
Duglas Devanada is still in the Tamil Nadu police’s wanted list for a murder crime but he got red carpet welcome from India.

Now we have option to blame Srilanka for running India government.


**

We can keep doing this blame game for ever.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

இந்திய, உலக பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள்தான் இந்திய அரசுக்கு முதல் கடமை. அதற்கு பாதகம் வந்து விடக் கூடாது என்று சமூக நலத் திட்டங்களை செய்கிறார்கள்.

ராஜீவ் காந்தி காலத்தில் ஆரம்பித்த இந்த வியாபார/அரசியல் கூட்டு உறவு வேர் விட்டு தளைத்து இன்று பெரு மரமாக உயர்ந்து நிற்கிறது.

பாஜக ஆட்சியில் கூடவே மதவாத பெரும்பான்மை வாத நச்சும் சேர்ந்திருந்தது. மன்மோகன் சிங் வழிகாட்டலில் அமெரிக்காவின் (அமெரிக்க வழியின்) client stateஆக முழுவதுமாக மாறி விட்டிருக்கிறோம்.

அமெரிக்காவிலும் பெருநிறுவனங்களின் நலனுக்குத்தான் முதலிடம். இது போல நிலைமை கைவிட்டுப் போய் ஏதாவது நிறுவனம் மாட்டிக் கொள்ளும் போது முறைப்பது போல முறைத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எதையும் திசை திருப்ப முயற்சிக்கவில்லை!

அன்புடன்,
மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

.

இல்லை சிவா

நீங்கள் இட்ட தலைப்பு "அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு " :-))

அமெரிக்காவிற்கு ஒரேநிலைப்பாடுதான், அவர்களின் நன்மை.

நீங்கள் ஏன் இதை "இந்தியாவின் கையாலாகத நிலை அல்லது கேவல ஆட்சி..அமெரிக்காவின் எப்படி கையாளுகிறது பிபியை" " என்று தலைப்பிடவில்லை?

***

US nails BP for oil spill, ignores Bhopal என்று தலைப்பு வைத்துள்ள ஐபிஎன் அதற்கு பதில் "US nails BP for oil spill ஆனால் கோட்டைவிட்ட இந்தியா " என்று ஏன் தலைப்பிடவில்லை?

US nails செய்ய வேண்டியது யாருடைய கடமை?

கல்வெட்டு சொன்னது…

//அமெரிக்காவிலும் பெருநிறுவனங்களின் நலனுக்குத்தான் முதலிடம். இது போல நிலைமை கைவிட்டுப் போய் ஏதாவது நிறுவனம் மாட்டிக் கொள்ளும் போது முறைப்பது போல முறைத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.
//

இல்லை சிவா

இவர்களின் சட்ட திட்டத்திற்கு பாதகம் அல்லது பெரும்பான்மையினருக்கு பாதகம் என்றால் குறைந்த பட்சம் நடவடிக்கை எடுப்பார்கள்.

கோல்ட்மேன்சாச் பிராடில் குறைந்த பட்சம் கூப்பிட்டு விசாரித்தார்கள். லோக்கல் கம்பெனி. ஜப்பான் டோயாடாவை கூட்டிவந்து விசாரிதார்கள். இப்போது பிபி.

இந்தியாபோல அதற்கும் ஏதாவது வெளிநாட்டைக் குற்றம் சொல்லமாட்டார்கள்.

**

எல்லாநாடும் பெருநிறுவனக்களுக்கு முதலிடம் தருகிறது. ஆனால் அது அந்த நாட்டு மக்களின் நலனும் அடக்கம். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் சொந்த நாட்டின் நலன்கள் கணக்கில் கொள்ளப்படாமல் சொம்புதூக்க ரெடியாய் இருக்கும் வர்க்கம்.

:-((((

கல்வெட்டு சொன்னது…

Lawmakers grill squirming bankers at Goldman Senate hearing
http://www.google.com/#hl=en&tbs=vid%3A1&q=Goldman+Senate+hearing&aq=f&aqi=&aql=&oq=Goldman+Senate+hearing&gs_rfai=&fp=badee0dda44cb0d0

Toyoda Senate hearing
http://www.google.com/#hl=en&tbs=vid%3A1&q=toyoda+Senate+hearing&aq=&aqi=&aql=&oq=&gs_rfai=&fp=badee0dda44cb0d0

BP congress hearing
http://www.google.com/#hl=en&tbs=vid%3A1&q=BP+congress+hearing&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=&fp=badee0dda44cb0d0

மா சிவகுமார் சொன்னது…

ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் பேசுவதெல்லாம், நாங்கள்தான் மிகச்சிறந்த உத்தமர்கள், உலகம் முழுவதும் எங்க முறையைத்தான் பின்பற்ற வேண்டும். மனித உரிமை, மக்களாட்சி என்று பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள். அதற்காக வெளிநாட்டுக்கு படைகள் எல்லாம் அனுப்பி தங்கள் தர்மத்தை பரப்புகிறார்கள்.

அவர்களின் நலனுக்காக மட்டும் போராடுவார்கள் என்று எங்கும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்தானே!

அதைத்தான் இரட்டை வேடம் என்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

:-))

அமெரிக்கர்கள் எப்படியோ போகட்டும். அவர்கள் ஊரை ஏமாற்றி அவர்களை வளர்க்கிறார்கள் என்றே கொண்டாலும் அவர்கள் தன் நாட்டு மக்களை ஏமாற்றுவது இல்லை இந்தியா போல.

**

இந்தியா ஏன் கோட்டைவிட்டது என்பதுதான் கேள்வி?

அதற்கான விடை "அமெரிக்கா சொல்வதைக் கேட்டுச் செய்தது" என்றால், இந்தியாவில் பாராளுமன்ரம் எதற்கு? அமெரிக்கத்தூதரகங்களே போதுமே ஆட்சி செய்ய?

**

அமெரிக்காவை விலக்கிவிட்டு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று பேசுவது நல்லது.

கல்வெட்டு சொன்னது…

//ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் பேசுவதெல்லாம், நாங்கள்தான் மிகச்சிறந்த உத்தமர்கள், உலகம் முழுவதும் எங்க முறையைத்தான் பின்பற்ற வேண்டும். மனித உரிமை, மக்களாட்சி என்று பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள். அதற்காக வெளிநாட்டுக்கு படைகள் எல்லாம் அனுப்பி தங்கள் தர்மத்தை பரப்புகிறார்கள்//

இதை ஏன் நம்ப வேண்டும்?
என்னமோ சொல்லட்டும் , இந்தியாவிற்கு என்று ஏன் குதுகெலும்பு இல்லை?

அதுதான் முக்கியக் கேள்வி.
இப்படி சொம்பு தூக்கியாக இருந்தால் நாட்டின் வலமும் மக்களும்சூறையாடப்படும் அல்லவா?

வவ்வால் சொன்னது…

Kalvettu 100% sariya sonninga! Indiavin peraanmai enge pochu? Defacto pm sonia than karanam manmohan dummi piece ithai sonna cong allakkaikal sandaiku varum!

கல்வெட்டு சொன்னது…

//ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் பேசுவதெல்லாம், நாங்கள்தான் மிகச்சிறந்த உத்தமர்கள், உலகம் முழுவதும் எங்க முறையைத்தான் பின்பற்ற வேண்டும். மனித உரிமை, மக்களாட்சி என்று பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள்.//

ஓ இவர்கள் இப்படி சொன்னதால்தான் இந்தியா கெட்டுவிட்டது என்கிறீர்களா சிவா?

தனது நாட்டுக்கு தான் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாத ** இந்திய அரசியல்வாதிகள்?

இந்திய தூதரகத்தைக் கேட்டா அமெரிக்கா அவர்கள் நாட்டின் முடிவுகளை எடுக்கிறார்கள்?


இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அல்லது போபால் விசயத்தில் அமெரிக்காவிற்கு சொம்பெடுத்தமைக்கு இப்படி அவர்களை நல்லவர்களாக நம்பியதுதான் காரணமா?

அதை விடுங்கள். டக்ள்ஸ் தேவனாந்தாவை விட்டதுக்கும் அமெரிக்காதான் காரணமா?

**

நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று போராடும் போதே அதை சிறிதும் மதியாமல் அதே தமிழுக்கு விழா எடுப்பதற்கும் அமெரிக்காதான் காரணமா?

உணஎவு என்பது இல்லை. அடிமைத்தனம்தான் உள்ளது.

***

இந்தியா இப்படி இருப்பதற்கு இந்தியர்கள்தான் காரணம் என்ற தவறை உணராதவரை திருந்த வாய்ப்பில்லை.


**

இப்படி வந்தவன், போனவன், தூதரகம் வைத்து இருப்பவர்கள், பொட்டிக்கடை வைத்து, இருக்கும் வெளிநாட்டு மக்கள், சுற்றுலாக்கு வ‌ந்த வெளிநாட்டினர் எல்லாம் காரணம் இந்தியா கெட.

இந்திய அரசியல்வாதிகளும் அவர்கள் என்ன செய்தாலும் கேட்டுக்கொண்டு குறைந்த பட்ச போராட்டத்தைக்கூட வெளிக்காட்டாமல் "மானாட மசிராட" "சூப்ப்ரா பாடுவது யார்" என்று மட்டும் பொழுதைப் போக்கிக்கொண்டு அமெரிக்கா ஏமாத்துது என்று சொல்லிக் கொண்டும் மட்டுமே இருந்தால்...............

....அப்புறம் விடிவு என்பது அதே அமெரிக்காவாக பிச்சை போட்டல்தான் உண்டு. :-(((((


***

பெரும்பாலான மானட மயிலாட இரசிகக் கண்மணிகள் போல‌ "நாங்கள் என்ன செய்ய எல்லாம் அமெரிக்கா பகவான் செயல்?" என்று இருக்கும் செயலை நியாயப்படுத்துவது போல உள்ளது தனது இயலாமைக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்வது.

அதற்கு பாகிஸ்தான் பரவாயில்லை. வெளிப்படையாக கேட்டு வாங்கிச் சாப்பிடும் அமெரிக்காவிடம்.

:-(((

கல்வெட்டு சொன்னது…

.

வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக
http://senkodi.wordpress.com/2010/06/19/tamil-fasting/

.

பொதுப்பிரச்சனைக்காக தமிழகத்தில் போரடுபவர்கள்

வழக்குரைஞர்
மற்றும் ஆட்டோ ட்ரைவர்கள் மட்டுமே

ஆயிரம் குறை இருந்தாலும்

கதை எழுதுபவன், கருத்துச் சொல்பவன் , கவிதை எழுதுபவன், ஆயிரம் புத்தகம் படித்த அபூர்வ சிகாமணிகள் , குமாஸ்தா அப்புறம் நம்மைப் போன்ற பிளாக்கில் கருத்து விற்கும் மக்கள் யாரும் ஏதும் செய்வது இல்லை. வெட்கமாக உள்ளது.

பாருங்கள் கிழவியைத்தூக்கி மனையில் வை கதையாக இராவணனுக்கு விமர்சனம் எழுது சொம்பெடுக்க ஆரம்பித்தாகிவிட்டது பதிவகளில்.

மா சிவகுமார் சொன்னது…

அமெரிக்காவைக் குறை சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க வரவில்லை. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு என்பதுதான் இடுகை சுட்டிக் காட்டுவது.

அவர்கள் ஊரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஒரு நிலைப்பாடு (தீவிரவாதம், தொழிலக விபத்துகள்) மற்ற ஊர்களில் அதே போல நடந்தால் வேறு நிலைப்பாடு என்று தம்முடைய சுயநலத்தை மட்டும் பேணிக் கொள்கிறார்கள்.

அது தவறில்லை என்று அவர்கள் நினைத்தால் அதையே சொல்ல வேண்டும். சீனாவைப் போல, எங்களுக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் செய்வோம் என்று தெளிவாக சொல்லி விடுகிறார்கள். அமெரிக்க அரசியல்வாதிகள்தான் செய்கையில் இரட்டை நிலை, பேச்சில் உலக தர்மம் என்று முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியல்வாதிகள், தமிழ் சமூக அவலங்கள் எல்லாம் இருக்கவே செய்கின்றன. அவற்றையும் சுட்டிக் காட்டி சரி செய்து கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்தான். அதற்காக அமெரிக்கா மீது எந்தக் குறையும் சொல்லக் கூடாது என்பது சரியில்லையே!

அன்புடன்,
மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

.

சிவா,

அமெரிக்காவை இன்னும் கடுமையாக விமர்சிக்கலாம்.

1. முதலில் அணுகுண்டு போட்டவர்கள்

2. முதலில் பயோவெப்பன்களை பிரயொகித்தவர்கள்

3.தங்களின் நலனுக்காக ஏதும் செய்யத் தயங்காதவர்கள்... என்று பல.

**

இந்தியாவை அவர்களின் தூதரகம் ஆள்கிற‌து என்றால் அது இந்தியர்களின் மடத்தனம். அதைக் கண்டிக்க வேண்டும்.

அமெரிக்கா ஆயிரம் சொல்லட்டும் அதை ஏன் நம்ப வேண்டும்?

****


அமெரிக்காவிற்கு இரட்டைநிலை என்றெல்லாம்இல்லை.
அவ்ர்களுக்கு இருப்பது ஒரே நிலைதான். அது அவர்களின் நலம்.

**

அவர்களை சொல்வதை நம்பாமல் இந்தியாவை இந்தியர்கள் இந்தியாவின் நலனுக்காக ஆள்கிறார்களா ? என்று பார்க்கவும்.