புதன், ஜூன் 30, 2010

எரிபொருள் விலை உயர்வு

டெக்கான் குரோனிக்கிளில் ஜெயதி கோஷ் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து

1. எரிபொருள் விற்கும் நிறுவனங்களுக்கு இழப்பு என்று அரசு காரணம் சொன்னாலும், அந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளில் நல்ல ஆதாயம் ஈட்டியதாகத்தான் வருகிறது. ஆதாயம் குறைவதை இழப்பு என்று சொல்கிறார்கள்.

2. உலகச் சந்தையின் விலையுடன் உள்நாட்டு விலையை இணைப்பது தேவையில்லாமல் ஏற்ற இறக்கங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

3. இந்த விலை ஏற்றம் தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு அதிக ஆதாயம் கிடைப்பதற்காக செய்யப்பட்டிருக்கிறது.

4. எரிபொருள் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அரசு எரிபொருள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்க நேரிடும்.

11 கருத்துகள்:

vasu சொன்னது…

@"எரிபொருள் விற்கும் நிறுவனங்களுக்கு இழப்பு என்று அரசு காரணம் சொன்னாலும், அந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளில் நல்ல ஆதாயம் ஈட்டியதாகத்தான் வருகிறது. ஆதாயம் குறைவதை இழப்பு என்று சொல்கிறார்கள்."
இதற்கான பதில் http://thamizmani.blogspot.com/2008/06/blog-post.html இந்த பதிவில் இருப்பதாக நினைக்கின்றேன்.
(ஆனால் இதில் பயன்படுத்தபட்டுள்ள வார்த்தைகளில் எனக்கு உடன்பாடில்லை.
)

பாலா சொன்னது…

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் குணம் அரசியல் வாதிகளுக்கு. ஏற்கனவே இந்திய மண்ணில் எடுக்கப்படும் எரிபொருளுக்கு அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டதை(நீ அடிப்பது மாதிரி அடி) அனைவரும் பார்த்தோம். இப்போது நெய்வேலி சுரங்கத்தையும் தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. ஒன்று மட்டும் நிச்சயம் காங்கிரஸ்காரர்கள் இருந்தால் ஜான் ஏற்றி முழம் சறுக்க வைப்பதில் கில்லாடிக்காரர்கள். இந்தியாவின் சுதந்திரத்தில் காங்கிரசுக்கு பங்கு இருந்தது போல அழிவிலும் முக்கிய பங்கு இருக்கும்..

மா சிவகுமார் சொன்னது…

A. கட்டுரையின் சுட்டி இங்கே

B. வாசு,

1. நீங்கள் சொல்வது போல மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்களை விரலுக்கு வந்தபடி திட்டுவதுதான் தமிழ்மணியின் நோக்கமாக படுகிறது.

2. அவரது செலவுக் கணக்கில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. ஐரோப்பாவில் 1.5 யூரோவும் இந்தியாவில் 100 ரூபாயும் ஒப்பிடக் கூடியவை இல்லை.

சராசரியாக மாத வருமானம் 1500 யூரோ ஈட்டும் ஐரோப்பியருக்கு, 1 லிட்டர் பெட்ரோல் அவரது வருமானத்தில் 1%. இந்தியாவில் 10,000 ரூபாய் மாத வருமானம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் 100 ரூபாய் விலையில் அந்த வீதம் அமைந்து வரும்.

மண்ணெண்ணெய் மற்றும் டீசல் பயனாளர்களின் பொருளாதார நிலைமை இன்னும் தாழ்ந்தது.

3. கச்சா எண்ணையை பகுக்கும் போது பல பொருட்கள் கிடைக்கின்றன. மற்ற பொருட்களுக்கு என்ன விலை வைக்கிறோம் என்பதைப் பொறுத்து குறிப்பிட்ட பொருளின் விலை மாறும்.

உதாரணமாக, கச்சா எண்ணெய் ஒரு அலகுக்கு 100 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம் அதிலிருந்து பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், மண்ணெண்ணெய், தொழிலகங்களில் பயன்படும் மூலப்பொருள் என்று 5 பொருட்கள் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். (உண்மையில் எண்ணெய் பகுத்தலில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பொருட்கள் கிடைக்கின்றன)

இந்த 100 ரூபாய்+பகுக்கும் செலவுகள்+ நிறுவன ஆதாயம் சேர்த்து 150 ரூபாய் செலவு என்று வைத்துக் கொண்டால் 5 பொருட்களில் ஒவ்வொன்றுக்கும் என்ன விலை நிர்ணயிக்க வேண்டும்?

பெட்ரோல் - 50
டீசல் - 30
மண்ணெண்ணெய் - 15
விமான எரிபொருள் - 50
தொழிற்சாலை பயன்பொருள் - 5

என்று வைத்துக் கொள்ளலாம் அல்லது
பெட்ரோல் 30
டீசல் - 20
மண்ணெண்ணய் - 5
விமான எரிபொருள் - 50
தொழிற்சாலை பயன்பொருள் - 35

என்று வைத்துக் கொள்ளலாம். இதை நிர்ணயிப்பது சந்தை தேவைகளும், அரசு கொள்கை முடிவுகளுமாக இருக்கலாம்.

இதை உலகச் சந்தை விலையுடன் எப்படி இணைக்கிறார்கள்? இந்தக் கணக்கீடை பொதுவில் பகிர்ந்து கொள்வார்களா?

4. எந்த எண்ணெய் நிறுவனங்களும் இழப்பு என்று தமது நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததாக நினைவில்ல. IBP மட்டும் இழப்பு காட்டும் விளிம்பில் இருப்பதாக ஒரு ஆண்டு முன்பு ஒரு செய்தி படித்திருந்தேன்.

C. பாலா,

இயற்கை வளங்கள் எல்லாமே அரசாங்கத்துக்கு (சமூகத்துக்கு) சொந்தம் என்று நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையிலும் ஒரு நாட்டின் இயற்கை வளங்களை தனி மனிதர் அல்லது தனியார் நிறுவனம் அதீத லாபம் ஈட்ட பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஒருவருக்குக் கிடைக்கும் வருமானம் அவரது உழைப்புக்கு கிடைப்பதாக இருக்க வேண்டும். மண்ணுக்கு உள்ளிருக்கும் வளத்தில் ஒருவர் ஏன் பணக்காரர் ஆக வேண்டும்?

பணம் என்பது திறமையின் வெளிப்பாடா?

இயற்கை வளங்கள் பொதுத்துறையில்தான் இருக்க வேண்டும்.

வவ்வால் சொன்னது…

Masi,

eriporul vayatherichal porul aagiduchu.

Petro company kitta therthal nithi vaangi votes vilaiku vaangiduvanga politician.

Alternative fuel than ore vazhi. Veli natila hybride fuel vaagana thayaripila theeviram aagitanga.

Honda hydrogen fuel car commercial stage kondu vanthachu,solar cars aayvukal nalla result tharuthu.

Viraivil kuraintha vilaiku santhaiku vara vaaypu irukku.

Indiala innum thoongitu irukanga.avanga kandupidicha copy adikalam en waiting pola!

கல்வெட்டு சொன்னது…

பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்
http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html

vasu சொன்னது…

வருமானத்தில் எத்தனை சதவீதம் என்பது தனிநபர் வருமான வீதத்தை பொருத்தது. ஐரோப்பிய நாடுகளின் அளவிற்கு இந்தியாவில் தனிநபர் வருமானம் வளரவில்லை என்பதுதானே உண்மை..

மா சிவகுமார் சொன்னது…

//ஐரோப்பிய நாடுகளின் அளவிற்கு இந்தியாவில் தனிநபர் வருமானம் வளரவில்லை என்பதுதானே உண்மை..//

உண்மைதான் வாசு. அதனால்தான் ஐரோப்பிய விலையையும் இந்திய விலையையும் ஒப்பிடுவது சரியாகாது என்றேன்.

நான் கொடுத்த கணக்கில் ஒரு திருத்தம். 1.5 யூரோ என்றது 1500 யூரோ வருமானத்தில் 0.1%. இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாய் லிட்டருக்கு என்று விற்றால் இதே வீதம் மாதச் சம்பளம் 1 லட்சம் வாங்குபவருக்கு மட்டும்தான் பொருந்தும்.

vasu சொன்னது…

அரசு மானியம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு தான் செலவாகின்றது? மானியம் எவ்வளவு?

மா சிவகுமார் சொன்னது…

வாசு,

கல்வெட்டு மேலே கொடுத்திருக்கும் wethepeopleindia சுட்டியைப் படித்துப் பாருங்கள். தேவையான எல்லா புள்ளி விபரங்களும் இருக்கின்றன.

பெட்ரோல் விலையும், மானியம் என்னும் மாயையும்

vasu சொன்னது…

அதில் கச்சா எண்ணையை சுத்திகரிக்க ஆகும் செலவு பற்றி எந்த விவரமும் இல்லையே. அதையும் சேர்த்தால் தானே மொத்த உற்பத்தி செலவு தெரியும். உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி....
முடிந்தால் இந்த விவரங்களையும் கொடுக்கவும்....

பாலா சொன்னது…

எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்பது பொய் பிரசாரம்: வைகோ
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அந்த நஷ்டத்தைக் குறைக்கவே எரிபொருள்களின் விலையை உயர்த்தியதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் எவ்வித உண்மையும் இல்லை.
கடந்த ஆண்டில் மட்டும் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. மேலும், நமது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாடுகளில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன. எனவே, தனியாருக்கு கொள்ளை லாபம் கிடைக்கச் செய்யும் நோக்கிலேயே எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது என்றார் வைகோ.