- நமது வீட்டில் அம்மா செய்யும் சமையல்,
- நமது உறவினர்கள்
- வீட்டு நிகழ்ச்சிகளில் செய்யும் சடங்குகள்
- சொந்த ஊர் பழக்கங்கள்
- நம்ம வீட்டுச் சமையல் பரம்பரை பரம்பரையாக வந்தது. அதே போன்ற சமையல் பழக்கங்கள் ஒரே சாதிக்குள் இருப்பதைப் பார்த்து உணவுப் பழக்கத்துக்கும் சாதிக்கும் தொடர்பு நம் மனதுக்கு ஏற்பட்டு விடுகிறது.
- வரையறையின்படி நமது உறவினர்கள் அனைவருமே ஒரே சாதியினராகப் போய் விடுகிறார்கள்.
- ஒரே குழுவுக்குள் உறவுகளை மட்டுப்படுத்திக் கொண்டதால் எல்லோரும் பின்பற்றும் சடங்குகள் ஒரே மாதிரியாக அமைந்து அவற்றுக்கும் சாதி முத்திரை கிடைத்து விடுகிறது.
சாதி இருந்து விட்டுப் போகட்டுமே என்று தோன்றும் போது, உண்மையில் நாம் தக்க வைக்க விரும்புவது மேலே சொன்ன பரம்பரைச் சொத்துக்களைத்தான்.
சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது
- குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் அந்தக் குடும்பம் சார்ந்த குழுவுக்குள் மட்டுமே திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு.
- குழு அடையாளத்தைப் பெற்று விட்டதால் சமூக நிலை, குழுவின் உயர்வு தாழ்ச்சிகள் தானாக அமைந்து விடுகின்றன என்ற அனுமானம்
ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது. திருமண உறவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன. அவற்றை ஒரே சாதிக்குள் மட்டும் என்று கட்டுப்படுத்துவதால் என்ன நன்மைகள், என்ன தீமைகள்?
சாதி ஒழிய வேண்டும் - 1
சாதி ஒழிய வேண்டும் - 2
3 கருத்துகள்:
புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
நன்றி, உங்களுக்கும் புத்தாண்டில் வளமும் மகிழ்ச்சியும் பெருக வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக