வியாழன், ஏப்ரல் 12, 2007

ஆர் எஸ் எஸ் என்ற அபாயம்

போன நாடாளுமன்ற தேர்தலின் போது நான் ஏபிஎன் அம்ரோ வங்கியின் சென்னை அலுவலகத்தில் சிலருக்கு சீன மொழிக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்த ஞாயிற்றுக்கிழமை வகுப்புக்குச் சென்று போது பல கட்டங்களாக நடந்து கொண்டிருந்த தேர்தல் பற்றியும், அன்று சென்னையில் நடக்கப் போகின்ற வாக்கெடுப்பு பற்றியும் பேச்சு வந்தது. அந்தக் குழுவின் மேலாளர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

'யாராயிருந்தாலும், தேசிய முன்னேற்றக் கூட்டணி ஆட்சிக்கு வர உதவுபவர்களாகப் பார்த்து வாக்களியுங்கள்' என்று சொன்னார்.

அதிகமாகப் பேசாத நான், பொதுவாக இது போன்ற சூழல்களில் மட்டுறுத்தியே கருத்து சொல்லும் நான்

'இந்த தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால், இது போன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இது கடைசி முறையாகப் போய் விடலாம். அவர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் உட்கார்ந்து விட்டால், இந்திய அரசியலமைப்பையே சீர்குலைத்து தமது நோக்கத்துக்கேற்ப மாற்றி விடும் சாத்தியங்கள் இருக்கின்றன' என்று வேகமாகச் சொன்னேன்.

இன்றைக்கு குஜராத் இந்துத்துவா சக்திகளுக்கு சோதனைக்களமாக இருப்பது போல கன்னியாகுமாரி மாவட்டம் 1980களில் சோதனைக் களமாக திகழ்ந்தது. அன்று விதைத்த விதைகளின் பலன்களை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்துத்துவா இயக்கத்தினர். மாவட்டத்தின் உழைக்கும், வியாபார வர்க்கத்தினரின் (சாதியினரின்) மத பாகுபாடுகளைக் கடந்து ஒன்று பட்ட நிலைப்பாட்டினால் இந்து நடுத்தர வர்க்க படித்த கூட்டத்தால் (சாதியினரால்) தூக்கி நிறுத்தப்பட்ட ஆர் எஸ் எஸ் முன்னணி இயக்கங்களின் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவனாக நான் பிந்தைய வகையில் இருந்தேன். நான் படித்த பள்ளி இந்துப் பள்ளி, அதை நடத்தும் சமுதாயத்தின் வெளிப்படையான ஆதரவில் இந்து இயக்கங்கள் தமது நடவடிக்கைகளை நடத்தி வந்த இடம். வகுப்பறையில் தேசபக்த பாடல்கள் என்று ஆர்எஸ்எஸ் இயக்கக் கொள்கைகளைக் கற்றுத் தந்த ஆசிரியரும் உண்டு.

எங்கள் வீட்டில் விஜயபாரதம் என்ற இதழ் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை விளக்கங்களை தாங்கி வரும். ஒரு விடுமுறைக் காலத்தில் ஆர்எஸ்எஸ்ஸால் நடத்தப்பட்ட 4 நாட்கள் முகாமில் பங்கு கொள்ள என் சித்தப்பா அழைத்துப் போனார். நாகராஜா கோயிலில் இந்து முன்னணி நடத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.

இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு என்று நடந்த மாநாட்டில் குடும்பத்தோடு கட்டுச் சாதம் கட்டிக் கொண்டு போய்க் கலந்து கொண்டிருக்கிறோம். ஆர்எஸ்எஸின் தேச பக்த நடவடிக்கைகளைப் போற்றும் துக்ளக் சோவின் ரசிகனாக இருந்திருக்கிறேன்.

எப்படியோ, எனக்குப் புரிந்த வரையில் ஆர்எஸ்எஸ், அதன் கொள்கைகள், அதனைச் சேர்ந்த இயக்கங்கள் பயங்கரமானவை.

'நமக்கு வேறு யாரும் எதிரியில்லை. அந்த ஆழ்வார்க்கடியான்தான் முதல் எதிரி. தேள், நட்டுவாக்கல்லி, பாம்பைப் பார்த்தால் எப்படி அடித்துக் கொல்வோமோ, அப்படி அடித்துக் கொன்று விடுங்கள்.' என்று ரவிதாசன் பாண்டிய நாட்டு ஆபத்துதவி கூட்டத்தில் முதல் மந்திரி அநிருத்தரின் சீடனான திருமலை என்ற ஆழ்வார்க்கடியானைக் குறித்து சொல்லுவான்.

அப்படி இரக்கம் இல்லாமல் ஒதுக்கப்பட வேண்டிய இயக்கம் ஆர்எஸ்எஸ். வெளிப்படையாகத் தெரியும் அபாயங்களை விடப் பலமடங்கு கொடியது அவர்களது வழிமுறை. ரஷ்யாவின் ஸ்டாலினிசத்தையும், இத்தாலியின் ஃபாசிசத்தையும், சீனாவின் மாவோயிசத்தையும் மிஞ்சி விடக் கூடிய கொடுமைகளுக்கு வழி வகுத்து விடக் கூடியவை ஆர்எஸ்ஸின் கொள்கைகளும், நடவடிக்கைகளும்.

ஆர்எஸ்எஸின் முதல் அபாயம், அதன் ஊழியர்களின் அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை. என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியரிலிருந்து, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரை, எல் கே அத்வானியிலிருந்து, எல் கணேசன் வரை மிகத் தூய்மையான ஒழுக்கமான மனிதர்கள் ஆர்எஸ்எஸ் செயல் உறுப்பினர்கள்.

27 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

சிவகுமார்,
ஆர்.எஸ்.எஸ்-ன் அராகஜத்தை நமது மாவட்டத்தில் நேரடியாக அனுபவப்பட்டவன் என்ற முறையில் இந்த பதிவுக்கு நன்றி!

// எல் கணேசன் வரை மிகத் தூய்மையான ஒழுக்கமான மனிதர்கள்//
இது உள்குத்தா இல்லையா தெரியவில்லை .இல கணேசன் திருமணமாகாதவர் .ஆனால் .....பல கேள்விப்பட்டிருக்கிறேன்.

நந்தா சொன்னது…

எனக்குத் தெரியாத பல விஷயங்களை இப்பதிவு எனக்கு தந்திருக்கிறது.

//'நமக்கு வேறு யாரும் எதிரியில்லை. அந்த ஆழ்வார்க்கடியான்தான் முதல் எதிரி. தேள், நட்டுவாக்கல்லி, பாம்பைப் பார்த்தால் எப்படி அடித்துக் கொல்வோமோ, அப்படி அடித்துக் கொன்று விடுங்கள்.' என்று ரவிதாசன் பாண்டிய நாட்டு ஆபத்துதவி கூட்டத்தில் முதல் மந்திரி அநிருத்தரின் சீடனான திருமலை என்ற ஆழ்வார்க்கடியானைக் குறித்து சொல்லுவான்.//

எனக்கு ஒரு டவுட்ங்க. இது பாலகுமாரனுடைய "உடையார்" ல வருமா அல்லது "பொன்னியின் செல்வன்" ல வருமா?

அசுரன் சொன்னது…

மா. சிவகுமார்,

//இந்து நடுத்தர வர்க்க படித்த கூட்டத்தால் (சாதியினரால்) தூக்கி நிறுத்தப்பட்ட ஆர் எஸ் எஸ் முன்னணி இயக்கங்களின் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
//

நல்ல அவதனிப்பு.

ஆனால் மா.சி, பல்லாயிரம் உழைக்கும் மக்களை கொலை செய்த ஒரு அமைப்பின் பிரதிநிதி அரவிந்தன் நீலகண்டனை கடற்கன்னி பதிவில் சேர்த்துள்ளீர்களே அந்த வெட்கங்கெட்ட செயலை என்ன வகையில் சேர்ப்பது?

பகைவருடன் படுத்துறங்குவது என்றா?

அல்லது நடுத்தர வர்க்க அல்பைத்தனம் என்றா?

ஒரு வேளை அல் உம்மாவின் பிரதிநிதி தன்னை குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு கடற்கன்னியில் இடம் கெட்டால் கொடுக்கப்படுமா? கொடுக்கப்பட்டால் அதனை எதிர்த்து என்னவெல்லாம் நடக்கும் இங்கு?

ஏன் மாசி உங்க காந்திய தத்துவம் இப்படித்தான் பகைவரை, மனித குல விரோதியை அங்கீகரிக்க சொல்லி அறிவுறுத்துகீறதா?

கடற்கன்னியின் இந்த ஈனத்தனமான செயலை கண்டித்து அங்கே நீங்கள் ஏதேனும் போராடினீர்களா?

இங்கு இப்படி எழுத வேண்டியது? அப்புறம் ரத்தகறை படிந்த அரவிந்தனுடன் உறவாடுவது எந்த வகை பண்பாடு?
************

ஸ்டாலினிசத்தையும், மாவோவின் சீனா குறித்தும் உங்களுக்கு என்ன தெரியும் என்று இங்கு அதனை குறிப்பிட்டுள்ளீர்கள்?

இந்த லிங்குகளை படித்து விட்டு பிறகு ஏகாதிபத்திய புரளிகளை வாந்தியெடுக்கும் முன்பு அதன் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்த வேண்டிய தேவையை உணருங்கள். அல்லது எனக்கு தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டிய தார்மீக கடமை உங்களுக்குள்ளது. வாஸ்தவம்தான் அது உங்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் அது உங்களது நேர்மை குறித்தான எமது மதிப்பீடிற்க்கு அளவுகோலாகும்.

http://www.monthlyreview.org/0906ball.htm

http://www.tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html

அசுரன்

பெயரில்லா சொன்னது…

எல்லாம் புரிந்தது...கடைசி பத்தி பயங்கர குழப்பமாக இருக்கிறது...உள்குத்தாக இருக்குமோ !!!

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நந்தா,
அது பொ.செ தான்..

சிவகுமார்,
சூஊஊடா இருக்கு பதிவு.. அரவிந்தன் இன்னும் இந்தப்பக்கம் வரவில்லையா?! :)

அசுரன் சொன்னது…

இதையும் படியுங்கள்.

http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_30.html

பெயரில்லா சொன்னது…

RSS ஒரு விஷ பாம்பு

பெயரில்லா சொன்னது…

அரைடவுசர்கள்தான் பாபர் மசூதியை இடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள். அதனை நாம் இங்கே குறிப்பிட்டுச் சொன்னால் அரைவிந்தர்களுக்குக் கோபம் வரும்!

பெயரில்லா சொன்னது…

//
ரஷ்யாவின் ஸ்டாலினிசத்தையும், இத்தாலியின் ஃபாசிசத்தையும், சீனாவின் மாவோயிசத்தையும் மிஞ்சி விடக் கூடிய கொடுமைகளுக்கு வழி வகுத்து விடக் கூடியவை ஆர்எஸ்ஸின் கொள்கைகளும், நடவடிக்கைகளும்.
//

Show me one example.

You have been repeatedly accusing without giving arguments.

The discussion will go nofurther than like minded butt kickers comming and vomiting their tirade against RSS.

RSS is not what you think it to be. By projecting your faulty view point, whome are you going to please ? What are you going to achieve ?

Give links and arguments that can prove RSS is what you think and not what it is.

Even Wikipedia article on RSS is very good and unbiased. you better start from there. Or here http://www.rediff.com/news/2002/may/02arvind.htm

..
Oh speak chinese! ?

பெயரில்லா சொன்னது…

அப்படி என்னதான் rss செய்தது ? ராஜ்வனஜ் போல நானும் அங்கிருந்தவன் என்று பொய் சொல்லாமல் உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் ,

மாவோயிசமோ மாமாயிசமோ எந்த சித்தாந்தமும் வாழவைத்ததில்லை , கொலைதான் செய்துள்ளது ,

ஆனால் rss என்ன செய்தது என்று விளக்கமாக சொல்லுங்கள்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஜோ,

எண்பதுகளின் பிற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்த பலருக்கும் இது பற்றிய புரிதல்கள் நிறையவே இருக்கும் என்று நினைக்கிறேன்.
பொதுவாக இயக்கத்தினர் நேர்மையானவர் என்றுதான் என் அனுபவம். இல கணேசனைப் பற்றி வதந்திகள் கேள்விப்பட்டதில்லை.

நந்தா,

பொன்ஸ் சொன்னது போல இது பொன்னியின் செல்வனில் வருவதுதான்.

இன்னும் தொடர்ந்து எழுத உத்தேசம் இருக்கிறது.

அசுரன்,

இந்தப் பதிவில் விவாதம் திசை திரும்ப வேண்டாம். சீனாவில் மாவோயிச கட்சியினரும் சோவியத் யூனியனில் ஸ்டாலினிஸ்டு கட்சியினரும் நடத்திய அரசியலை தனியாக விவாதிக்கலாம்.

கடல் கன்னியை ஆரம்பித்து நடத்துபவர் சிறில் அலெக்ஸ். நான் உறுப்பினன் மட்டுமே. எனது பார்வையில் அரவிந்தன் நீலகண்டன் அதில் உறுப்பினராக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. கருத்துகள் மாறுபடுவதாலேயே ஒருவரை ஒதுக்கியே வைக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

நன்றி செந்தழல் ரவி,

உள்குத்து எல்லாம் இல்லை. எனக்கு சரியெனப் பட்டதை மட்டும்தான் எழுதினேன் :-)

பொன்ஸ்,

இந்தச் சூடெல்லாம் இயக்கத்தைச் சார்ந்தவர்களை ஒன்றும் செய்யாது என்றுதான் நினைக்கிறேன். இந்தப் பதிவுகளை நடுநிலை மக்களுக்கு தகவல் அறிவிக்கும் நோக்கத்தில்தான் எழுதுகிறேன். வேறு போர்வை போர்த்துக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்க இந்துத்துவா இயக்கங்கள் முயற்சி செய்யும் போது விழிப்புணர்வு பெரிதும் தேவைப்படும்.

வெற்றிவேல்

இன்னும் விளக்கமாக என்னுடைய அனுபவங்களை, எப்படி பொது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவார்கள் என்று எழுதுகிறேன். நெருப்பு சுடும் என்பதற்கு நான் பக்கம் பக்கமாகப் படிக்கவோ, சுட்டிகளைக் கொடுக்கவோ தேவையில்லை. ஒரு தடவை பட்ட அனுபவமே போதும். குஜராத்திலும், உத்தரபிரதேசத்திலும் நடக்கும் அரசியல் நாகர்கோவில் அரசியலிலிருந்து பெரிதளவு மாறுபடவில்லை என்று நம்புகிறேன்.

என்னுடைய கருத்துகளை எழுதுவதன் நோக்கம் சாதுவாகப் போர்த்திக் கொண்டு இந்துத்துவா இயக்கங்கள் தேர்தலில் வாக்கு கேட்க வரும் போது நடுநிலை மக்களுக்கு எல்லா பக்க உண்மைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

கரு மூர்த்தி,

நான் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இணைந்ததில்லை. ஆனால் அவர்களது சோதனைக் களத்தில் ஒரு சோதனை விலங்காக இருந்த அனுபவம் உண்டு.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

ராஜாவனஜ் அங்கிருந்தவர் என பொய் சொல்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்.

http://islamiccollections.blogspot.com/2006_12_01_archive.html

இங்கே ஒரு தலித் புட்டு வைக்கிறாரே. அதற்கு என்ன பதில்?

பெயரில்லா சொன்னது…

ஆர் எஸ் எஸ் வன்முறைக் கூடாரமாகவே இருக்கட்டும், நீங்க மத்த வன்முறை கூடாரங்களைப் பற்றி ஏன் எழுதவில்லை. மேலும், கடந்த 3-4 வருடங்களில் ஏற்பட்ட விலைவாசி, இண்ட்ரஸ்ட் ஏற்றம் பி.ஜெ.பியின் 5 வருடங்களில் இல்லையே ஏன்.

இதில் கொடுமை இங்குள்ள காம்ரேட்கள் பண்ணும் வியாபாரம்...இதையெல்லாம் பார்க்கையில் பி ஜெ.பி பரவாயில்லை.

அசுரன் சொன்னது…

எது கருத்துக்கள் மாறுபடுவது?

உங்களுக்கும் எனக்கும் இருப்பது கருத்து வேறுபாடு. எனக்கும் சிறில் அலெக்ஸுக்கும் இருப்பது கருத்து வேறுபாடு.

ஆனால் பார்ப்ப்னிய பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிக்கும் ஜன்நாயக சக்திகளாகிய நமக்கும் இருப்பது கருத்து வேறுபாடா?

கருத்து வேறுபாடென்றால் விவாதத்துக்கு வருவார்கள். ஏன் இது வரை அவர்கள் எங்குமே விவாதத்து வரவில்லை?

காரணம் எவன் எத்தனை முறை அவர்களை பொய்யர்கள் என்று அம்பலப்படுத்தினாலும், மக்களின் பலவீனங்களை பயன்படுத்தி தமது பயங்கரவாத கனவை நிறைவேற்றிவிடுவோம் என்ற அவர்களின் நம்பிககைதானே காரணம்.

அப்படியெனில் அந்த அயோக்கியர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது என்பது உண்மையில் அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக நாமும் இயங்குவதாகத்தானே அர்த்தம்?

அரவிந்தன் நீலகண்டன் என்பவர் ஒரு சாதாரண பார்ப்பனிய பிரதிநிதி அல்ல. அவர் பார்ப்ப்னிய பயங்கரவாதத்தை நிலை நிறுத்த சூழைரைத்து களப்பணி செய்து வரும் ஒரு பயங்கரவாதி என்பதை உண்ர்கிறீர்களா?

காந்தி கூட பார்ப்ப்னியத்தின் பிரதிநிதிதான். ஆயின் காந்தியுடனான முரன்பாடும், RSSவுடனான முரன்பாடும் ஒன்றா?

பார்ப்பின்யத்தை சுவிகரிக்காத அத்தனை ஜனநாயக சகதிகளையும் திரி சூலத்துக்கு பலியாக்கும் ஒரு வெறி கும்பலின் பிரதிநிதியை அங்கீகரிக்கும் தளத்தில் நீஙக்ளும் இருப்பது என்பது என்ன வகை பண்பாடு?

இது பொதுவில் ஜன்நாயக சக்திகளின் முகத்தில் மூத்திரம் அடிக்கும் ஒரு அசிங்கம் என்பதிருக்க,

குறைந்த பட்சம் இது இஸ்லாமிய அன்பர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடுத்தர வர்க்க அல்பைத்தனம் என்று உங்களுக்கு தோனவில்லையா?

குறைந்த பட்சம்,
மனித குலம் முழுவதும் காறி உமிழ வேண்டிய ஒரு செயலை செய்த்வரை ஏதோ கருத்து வேறுபாடு என்ற அளவில் சுருக்கி மன்னிக்கும் ஒரு கேடு கெட்ட செயல் என்று உங்களுக்கு புரியவில்லையா?

அல்லது RSSக்கும் ஜனநாயகத்தை வாரி வழங்க வேண்டும் அதனையும் அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

ஒரு சாதாரண பார்ப்ப்னிய ஆதரவாளரை கடற்கன்னியில் சேர்ப்பது என்பது வேறு. ஆனால் ஒரு மனித குல விரோதியை சேர்ப்பதும் அதே தளத்தில் நீங்களும் சேர்ந்து அந்த பொறுக்கித் தனத்துக்கு புனித வட்டம் கட்டுவதும் எந்த வகை நீதி?

உங்களது இந்த செயல் நேர்மையற்ற செயல். இங்கு RSSயை எதிர்த்து எழுதிவிட்டு அங்கு அவர்களுடன் கூத்தாடுவது சுத்தமாக அறிவு நாணயமற்ற செயல்.

**********

ஸ்டாலின் குறித்தும் மாவோ குறித்தும் நான் எதுவும் ஆதரம் கொடுக்கவில்லை என்று கேட்டவர்களே,

ஸ்டாலின் குறித்தும் மாவோ குறித்தும் ஆதரப்பூர்வாமன் மூன்று சுட்டிகள் எனது முந்தைய பின்னூட்டத்தில்யே கொடுத்துள்ளேன். கண் தெரியாதவ்ரகள் கேள்விகளை எழுப்புவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். கொஞ்சம் மூளையை திறந்த கெட்டித் தட்டிய மண்டைச் சுரப்பை வடிய விடுங்கள். குறைந்த பட்சம் தேங்கி அழுகிய சிந்தனை ஊற்றை தூர் வாராவாவது அடிக்கடி சிந்தியுங்கள். கொடுத்துள்ள லிங்குகள் எதில் வேண்டுமானாலும் உங்களது ஆதாரப்பூர்வமான வாதத்தை வைக்கலாம். வாதம் முடியும் போது இலவச பேண்டேஜ் கொடுக்கப்படும். இங்கு இது குறித்து பேசுவது ஏற்கனவே மாசி குறிப்பிட்டது போல பதிவின் நோக்கத்திற்க்கு ஊறானது.

அசுரன்

அசுரன் சொன்னது…

Ma Si,

//வேறு போர்வை போர்த்துக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்க இந்துத்துவா இயக்கங்கள் முயற்சி செய்யும் போது விழிப்புணர்வு பெரிதும் தேவைப்படும்.
//

Do you really mean what did you say to Pons?

Don't you understand "kadarKanni' Will also a accidental "போர்வை" for RSS?

Don't you realise you are helping the 'போர்வை' become strong?

Asuran

அசுரன் சொன்னது…

Arvindan need not write any RSS stuffs in "kadarKanni'

But don't you understand the Democratic platform like 'KadarKanni' will act as a
Visiting card to RSS thugs?

And do you understand by restricting political writtings in 'KadarKanni' - Which will restrict the democratic force from questioning Arvindan stands on other platform and at the same time allowing a Facist to write there, 'KadarKanni' become Twice sharppened Knife at the hands of RSS?

And don't you understand 'KadarKanni' may become a life line for RSS, as it will face severe criticism in other platforms and immune to such criticism in KadarKanni? thus will it become a Safe temprorary haven for RSS?

Are you going to encourage this at the same time here in your page, yuo are preaching other people to be aware of RSS?

What an irony?

Asuran

கால்கரி சிவா சொன்னது…

//ஆர்எஸ்எஸின் முதல் அபாயம், அதன் ஊழியர்களின் அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை. என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியரிலிருந்து, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரை, எல் கே அத்வானியிலிருந்து, எல் கணேசன் வரை மிகத் தூய்மையான ஒழுக்கமான மனிதர்கள் ஆர்எஸ்எஸ் செயல் உறுப்பினர்கள்.//
புரியவில்லை... தனி வாழ்க்கையில் தூய பழக்க வழகங்கள் கொண்டவர்கள் பயங்கரவாதிகளா?

ஆர் எஸ் எஸ் செயத தீவிரவாதம் செ கொலைகள், கொள்ளைகள் மற்றும் கற்பழிப்புகள் போன்றவைகளை பட்டியலிட்டால் நன்றாய் இருக்கும். என்னை போன்ற ஆர் எஸ் எஸ் அபிமானிகளின் மனம் மாறுமில்லையா?.

அசுரன் சொன்னது…

//ஆர்எஸ்எஸின் முதல் அபாயம், அதன் ஊழியர்களின் அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை.//


பாராளுமன்றத்தில் பணம் வாங்கிய அப்பழுக்கற்ற செயலா?

ராணுவ லஞ்ச ஊழலா?

தெஹல்காவால் லஞ்சம் வாங்கி அம்பலமான அழகா?

அசுரன்

பெயரில்லா சொன்னது…

பதிவுக்கு சம்பந்தமில்லாத அல்லது உள்ள பின்னூட்டம் ,

டியர் அசுரன் , எதை சொன்னாலும் அளவா சொல்லுங்க , ஏன் இப்படி வார்த்தைகளை இரைக்கிறீர்கள் ? நான்கு வரியில் சொல்ல முடியாததையா 400 வரியில் சொல்ல முடியும் ?

பதிவை விட நீங்கள் போடும் பின்னூட்டம் நீண்டுவிடுகிரது,

பெயரில்லா சொன்னது…

///ஆர்எஸ்எஸின் முதல் அபாயம், அதன் ஊழியர்களின் அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை.///
//
பாராளுமன்றத்தில் பணம் வாங்கிய அப்பழுக்கற்ற செயலா?

ராணுவ லஞ்ச ஊழலா?

தெஹல்காவால் லஞ்சம் வாங்கி அம்பலமான அழகா?

அசுரன் //

இல்லை உமாபாரதியா-கோவிந்தாச்சார்யா விவகாரமா, இல்லை சஞ்சய் ஜோஷி CDயா. நாறிப் போய் கிடக்கிறது RSS

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//இதையெல்லாம் பார்க்கையில் பி ஜெ.பி பரவாயில்லை.//

ஒரு இயக்கத்தின் குறையைச் சொன்னால் அவன் செய்கிறான், நாங்களும் செய்கிறோம் என்று பதில் சொல்லாதீர்கள். இரண்டு தவறுகள் எப்போதும் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுவதில்லை. இரண்டுமே தவறுதான்.

அசுரன்,

காந்தி-நேரு உருவாக்கிய இந்திய அரசமைப்பு, சமூகக் களத்தில் ஆர்எஸ்எஸ்சும் இருக்கலாம் மார்க்சீசியவாதிகளும் இருக்கலாம், காந்தீய வாதிகளும் இருக்கலாம், இசுலாமிய கட்சிகளும் இருக்கலாம். அதுதான் எமது நாட்டின் பெருமை. ஒத்தக் கருத்துடையவர்கள் மட்டும்தான் நாட்டில் வாழலாம், மற்றவர்கள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற தேவை நமக்கு இல்லை. அந்த பன்முகத் தன்மையைப் பாதுகாக்கத்தான் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

கடல் கன்னியில் அரவிந்தன் இருப்பது அவர் சார்ந்த இயக்கத்துக்கு பயன்படலாம் என்பது உங்களது கருத்து. அப்படி இல்லாமல் பார்த்துக் கொள்வது கன்னியாகுமரி மாவட்ட நண்பர்கள் சேர்ந்து இயங்கும் அந்தப் பதிவின் பொறுப்பு.

கால்கரி சிவா,

தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்கள் நாட்டின் பெயரில் அடிப்படைவாதக் கொள்கைகளின் படி இயங்குவது பயங்கரவாதம்தான். இதைத் தொடர்ந்து எழுதும் போது உங்கள் கேள்விகளுக்கு விடை எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

அசுரன்/அனானி,

காங்கிரசு ஊழல் கட்சி என்றால் உடனே இன்னார் ஊழல் செய்வதில்லை என்று சுட்டிக் காட்டலாம். அது போல ஆர்எஸ்எஸ் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது என்றால் நீங்கள் சொல்வது போல எதிர் உதாரணங்களைக் காட்டலாம். எனக்குத் தெரிந்த வரை நான் சந்தித்த ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியர்கள் நேர்மையானவர்களாகவே இருக்கிறார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

ஜடாயு சொன்னது…

மா.சிவகுமார்,

ஸ்டாலின் போன்ற மனிதகுல விரோதிகளை சரியாக அடையாளம் காட்டியதற்கு நன்றி.

இவர்களை விட ஆபத்தான ஆர்.எஸ்.எஸ் என்று சும்மா முத்திரை குத்தினால் போதுமா? நான்கு வயது சிறுவர்கள் கூட மைதானத்தில் போய் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் கலந்து கொள்கிறார்கள். ஏராளமான பெண்கள் சங்கம் மற்றும் அதன் சகோதர நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு, கலாசார, சேவை இயக்கங்களில் பங்கு பெறுகிறார்கள். இவற்றில் பலவற்றுக்கு அரசு உதவிகள் கூட கிடைக்கின்றன (காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தரப்பட்ட உதவிகள்). உலகின் மிகப் பெரிய தன்னார்வ இயக்கங்களில் ஒன்று என்ற பெருமையையும் நெடுநாளாகத் தக்க வைத்து வந்திருக்கிறது.

இப்படி இருக்கும் ஒரு இயக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்கு உருப்படியான காரணங்கள் எதையும் நீங்கள் தரவில்லையே ?

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஜடாயு,

//இவர்களை விட ஆபத்தான ஆர்.எஸ்.எஸ் என்று சும்மா முத்திரை குத்தினால் போதுமா?//

தொடரும் இடுகைகளில் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். வெறுப்பை உமிழ்வதாக நினைக்கவில்லை. எனக்குப் புரிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

நீங்கள் சொல்லும் சிறுவர், பெண்கள் பங்கேற்பு என்பது இயல்பான இந்து சமய வழிபாட்டுத் தலங்களை நிகழ்ச்சிகளை இந்துத்துவா இயக்கங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு கணக்கிடுவதுதான் என்று நினைக்கிறேன். இது பற்றிய மேல் விபரங்கள் அறிய ஆவலாக இருக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

ஜடாயு சொன்னது…

// இந்து சமய வழிபாட்டுத் தலங்களை நிகழ்ச்சிகளை இந்துத்துவா இயக்கங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு கணக்கிடுவதுதான் என்று நினைக்கிறேன். இது பற்றிய மேல் விபரங்கள் அறிய ஆவலாக இருக்கிறேன். //

நன்றி சிவகுமார்.

நீங்கள் சொல்வது காமெடியாக இருக்கிறது. இந்துக் கோவில்களில் இந்து இயக்கங்கள் பணி செய்யாமல் பின்னர் முஸ்லீம் இயக்கங்கள் பணி செய்ய வேண்டும் என்கிறீர்களா? என்னய்யா கொடுமை இது?

பைதிவே, இது ஆக்கிரமிப்பு அல்ல, பங்களிப்பு. காங்கிரஸ் தொண்டர்கள் கோயிலுக்கு போய் பணி செய்தால் அதை யார் ஆட்சேபிப்பார்கள்? சுதந்திர போராட்ட காலத்தில் அது நடந்தது தானே? எல்லா சேவா கிராமத்திலும் "ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்" பாடுவார்கள், கீதை படிப்பார்கள். சொல்லப் போனால் எங்கள் வீட்டின் காந்திய சூழல் தான் என்னை இந்துமத, இந்துத்துவப் பற்றாளனாகவே ஆக்கியது. எனக்குத் தெரிந்தே எத்தனையோ காந்தியக் குடும்பங்கள் இன்று சங்கத்தில் இணைந்திருக்கின்றன.சர்வோதய இயக்கத் தலைவர் சுஷிலா தேஷ்பாண்டே வெளிப்படையாக பல இந்து இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பின்னர், காங்கிரஸ் வேண்டுமென்றே கேடுகெட்ட செக்யுலர் பாதையில் போய், சிறுபான்மை ஒட்டுக்காக சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள ஆரம்பித்தது. இப்போது பல வட மானிலங்களில் இந்தப் பெருந்தவறை சரி செய்யவும் கடுமையாக முயன்று வருகிறது.

இதற்கும் இந்து இயக்கங்களை ஏன் குறை சொல்கிறீர்கள்?

மா சிவகுமார் சொன்னது…

ஜடாயு,

இந்து வழிபாட்டுத் தலங்களில் இந்து பக்தர்களும் இந்து ஆன்மீக வாதிகளும் இடம் பெற வேண்டும். அரசியல் செய்பவர்களும் இந்துக்களை வாக்கு வங்கிகளாக உருவாக்க முனைபவர்களுக்கு கோயில்களில் இடம் இருக்கக் கூடாது என்று கருதுகிறேன்.

செக்யூலர் பாதைதான் இந்தியாவின் உண்மையான தருமம் ஆயிரம் ஆண்டுகளாக. பல மதங்களின் நல்ல கருத்துக்களையும் உள்ளடக்கி தனிமனித உரிமை, சுதந்திரம் வலியுறுத்தி வளர்ந்த பண்பாடுதான் பாரதப் பண்பாடு. அதை இயக்கம் சார்ந்ததாக்கி, ஆயதம் தாங்கிப் போராட வைப்பது மேற்கை நகல் செய்வதுதான். அதற்குப் பதிலாக மேற்கத்திய மதங்களேயே ஏற்றுக் கொண்டு போய் விடலாம்.

அதை வலியுறுத்தத்தான் ராமகிருஷ்ணரின், சாது தேளை தண்ணீரில் இருந்து காப்பாற்றி கையில் கொட்டினாலும் தனது இயல்பை மாற்றிக் கொள்ளாத கதையைக் குறிப்பிட்டேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

ஜடாயு சொன்னது…

// அரசியல் செய்பவர்களும் இந்துக்களை வாக்கு வங்கிகளாக உருவாக்க முனைபவர்களுக்கு கோயில்களில் இடம் இருக்கக் கூடாது என்று கருதுகிறேன். //

உங்களை பொறுத்தவரையில் சாதி ஓட்டுவங்கி இருக்கலாம், இஸ்லாமிய, கிறித்தவ ஓட்டுவங்கி இருக்கலாம்.. ஆனால் 85% பாரத மக்களை ஒன்றாகப் பார்க்கும் இந்து வாக்கு வங்கி என்பது இருக்கக் கூடாது.. இல்லையா?

நான் எந்தவிதமான ஓட்டுவங்கிகளையும் ஆதரிப்பவன் அல்ல. இதை ஒரு தர்க்கத்துக்காக கேட்கிறேன், அவ்வளவே.

மற்றபடி, சமூக (இதில் அரசியலும் அடங்கும்) இந்துக்கள் மட்டும் ஒருங்கிணையக் கூடாது என்று சொல்வது அனியாயம்.

// செக்யூலர் பாதைதான் இந்தியாவின் உண்மையான தருமம் ஆயிரம் ஆண்டுகளாக. //

இந்து ஆன்மிகமும், இந்து வீரமும் கொஞ்சம் மிச்சம் இருந்ததால் தான் அந்த 1000 ஆண்டுகளில் இடிபாட்டு கலாசாரமாக ஆகிவிடாமல் இன்றும் உயிர்த்துடிப்புள்ள கலாசாரமாக வாழ்ந்து வருகிறது.. இதற்கு பெயர் செக்யுலர் பாதையா?

// அதை இயக்கம் சார்ந்ததாக்கி, ஆயதம் தாங்கிப் போராட வைப்பது மேற்கை நகல் செய்வதுதான். //

இது தவறு. கீதையில், புராணங்களில், சந்திரகுப்தன் வரலாற்றில், வீர சிவாஜி, விஜயநகர மன்னர்கள், ஜான்சி ராணி, குரு கோவிந்த சிங் வரையில் தர்மத்திற்காக போர் செய்தல் என்ற பாரம்பரியம் பாரதத்தில் உள்ளது. சொல்லப் போனால் இருபதாம் நூற்றாண்டின் தேசபக்தியைக் கிளர்ந்தெழச் செய்தது இந்த நினைவுகள் தான். இதோடு மாஜினி போன்ற ஐரோப்பிய புரட்சிகளின் உந்துதலும் இணைத்து பார்த்து தான் இந்திய தேசிய இயக்கம் வளர்ந்தது.

// தனது இயல்பை மாற்றிக் கொள்ளாத கதையைக் குறிப்பிட்டேன். //

ஆமாம், ஒத்துக் கொள்கிறேன்.

நீங்கள் சொல்கிறீர்கள் திம்மியாக, ஒற்றுமையில்லாமல் இருப்பது தான் இந்துவின் இயல்பு என்று. இல்லையா?

விவேகானந்தர் என்ன சொல்கிறார் -

Mark me, then and then alone you are a Hindu when the very name sends through you a galvanic shock of strength.

Then and then alone you are a Hindu when every man who bears the name, from any country, speaking our language or any other language, becomes at once nearest and the dearest to you. Then and then alone you are a Hindu when the distress of anyone bearing that name comes to your heart and makes you feel as if your own son were in distress.”

இந்து இயக்கங்கள் எழுச்சி நாயகர் விவேகானந்தரின் வாக்கையே இந்துவின் உண்மை இயல்பு என்று ஏற்றுள்ளன.

மா சிவகுமார் சொன்னது…

ஒன்றைத் தவறு என்று சொன்னால் அதைத் தவறைச் செய்யும் பிறரைச் சுட்டாமல் தவறைக் களைய முனைவதுதானே சரியாக இருக்க முடியும் ஜடாயு! 'இந்துவின் உண்மை இயல்பு என்ன?' என்று தனியாக பத்து நிமிடம் உட்கார்ந்து உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்கும். வெளியில் கிடைக்கும் பிரச்சாரங்களை உள்ளேற்றுக் கொண்டு அப்பொருட்களின் மெய்ப்பொருளை நீங்களே தீர்மானியுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்